Sunday, February 7, 2010

4, தற்போதுள்ள பற்பல எதிர்கட்சிகள் குறித்து கம்யூனிஸ்டுகளின் நிலை

4, தற்போதுள்ள பற்பல எதிர்கட்சிகள் குறித்து கம்யூனிஸ்டுகளின் நிலை
- மார்க்ஸ் - எங்கெல்ஸ்
[கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை]


இங்கிலாந்திலுள்ள சார்ட்டிஸ்டுகளையும் அமெரிக்காவிலுள்ள நிலச் சீர்திருத்தாளர்களையும் போல் தற்போதுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்டுகளுடைய உறவுநிலை இரண்டாவது பிரிவில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

கம்யூனிஸ்டுகள் தொழிலாளி வர்க்கத்தின் உடனடி நோக்கங்கள் சித்தி பெறுவதற்காக, உடனடி நலன்கள் நிறை வேற்றம் பெறுவதற்காகப் போராடுகிறார்கள், ஆனால் தற்காலத்திய இயக்கத்தில் இந்த இயக்கத்தின் எதிர்காலத்தையும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்து பேணிப் பாதுகாக்கின்றனர். பிரான்சில் கம்யூனிஸ்டுகள் பழமைவாத, தீவிரவாத முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு எதிராய் சமூச - ஜனநாயகவாதிகளுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள், ஆனால் மாபெரும் புரட்சியிடமிருந்து மரவு வழியில் வந்துள்ள தொடர்கள் குறித்தும் பிரமைகள் குறித்தும் விமர்சனப் பார்வை கொண்ட ஒரு நிலையை ஏற்பதற்காண உரிமையை விட்டுவிடாமல் தம் கையில் வைத்திருக்கிறார்கள்.

சுவிட்ஸர்லாந்தில் அவர்கள் தீவிரவாதிகளை ஆதரிக்கிறார்கள், அதேபோது தீவிரவாதக் கட்சி பிரெஞ்சு நாட்டு அர்த்தத்தில் ஜனநாயக சோஷலிஸ்டுகளாகிய ஒரு பகுதியும் தீவிரவாத முதலாளித்துவ வர்க்கத்தாராகிய ஒரு பகுதியுமான ஒன்றுக்கொன்று பகைமையான இரு கூறுகளைக் கொண்டிருப்பதை அவர்கள் தவறாமல் கவனத்தில் வைத்திருக்கிறார்கள்.

போலந்தில் சே விடுதலைக்கு விவசாய நிலவுடைமையிலான புரட்சி தலையாய முந்நிபந்தனையென வற்புறுத்தும் கட்சியை, 1846ஆம் ஆண்டு கிராக்கோவ் எழுச்சியை உசுப்பிவிட்ட கட்சியை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.

ஜெர்மனியில் முதலாளித்துவ வர்க்கம் எதேச்சாதிகார முடியாட்சியையும் பிரபுத்துவ நிலவேந்தர் அமைப்பையும் பிற்போக்குவாதக் குட்டிமுதலாளித்துவப் பகுதிகளையும் எதிர்த்துப் புரட்சிகரமாய்ச் செயல்படும் போதெல்லாம், அவர்கள் அதனுடன் சேர்ந்து நின்று போராடுகிறார்கள்.

ஆனால் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலுள்ள தீராப் பகைமை குறித்து கணப்பொழுதும் ஓயாமல் அவர்கள் சாத்தியமான முழு அளவுக்குத் தொழிலாளர்களுக்கு உணர்வூட்டுகிறார்கள், முதலாளித்துவ வர்க்கம் தனது மேலாண்மையுடன் கூடவே தவிர்க்க முடியாதபடி கொண்டு வந்தாக வேண்டியிருக்கும் சமூக, அரசியல் நிலைமைகளை ஜெர்மன் தொழிலாளர்கள் அப்படியே நேரே முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான ஆயுதங்களாய்ப் பயன்படுத்தும் பொருட்டும், ஜெர்மனியில் பிற்போக்கு வர்க்கங்கள் வீழ்ச்சியுற்றதும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான போராட்டம் உடனடியாகவே ஆரம்பமாகிவிடும் பொருட்டும் அவர்கள் இப்படித் தொழிலாளர்களுக்கு உணர்வூட்டுகிறார்கள்.

கம்யூனிஸ்டுகள் பிரதானமாய் ஜெர்மனியிடம் முக்கிய கவனம் செலுத்துகிறார்கள். எனெனில் ஜெர்மனியானது முதலாளித்துவப் புரட்சி நடைபெறும் தறுவாயில் இருக்கிறது, இங்கு இந்த முதலாளித்துவப் புரட்சி ஐரோப்பிய நாகரிகம் அதிகம் முன்னேறியிருக்கும் நிலைமைகளிலும், பதினேழாம் பிரான்சிலும் இருந்ததைக் காட்டிலும் மி அதிக வளர்ச்சி பெற்றுள்ள ஒரு பாட்டாளி வர்க்கம் இருந்து வரும் சூழலிலும் நடைபெறவிருக்கிறது என்பதுடன், ஜெர்மனியில் முதலாளித்துவப் புரட்சியானது அதை உடனடியாகவே பின்தொடரும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான ஒத்திகையே ஆகும்.

சுருங்கக் கூறின், கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் நிலைவரங்களது அமைப்பு முறையை எதிர்த்து நடைபெறும் புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதரிப்பவர்கள் ஆவர்.

இந்த இயக்கங்கள் யாவற்றிலும் அவர்கள் சொத்துடைமைப் பிரச்சினையை, இதுவரை அது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், தலைமையான பிரச்சினையாய் முன்னிலைக்குக் கொண்டுவருகிறார்கள்.

முடிவில், எல்லா நாடுகளையும் சேர்ந்த ஜனநாயகக் கட்சிகளது ஒற்றுமைக்காகவும் அவற்றினிடையிலான உடன்பாட்டுக்காகவும் அவர்கள் பாடுபடுகிறார்கள்.

கம்யூனிஸ்டுகள் தமது கருத்துகளையும் நோக்கங்களையும் மூடிமறைக்க மனம் ஒப்பாதவர்கள். இன்றுள்ள சமுதாயத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலவந்தமாய் வீழ்த்த வேண்டும், அப்போதுதான் தமது இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்டுகள் ஒளிவுமறைவின்றி பறைசாற்றுகிறார்கள், அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள், கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று. பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் வென்று பெறுவதற்கு அனைத்து உலகும் இருக்கிறது.

உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!

3, சோஷலிச, கம்யூனிச இலக்கியம்

3, சோஷலிச, கம்யூனிச இலக்கியம்
- மார்க்ஸ் - எங்கெல்ஸ்
[கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை]

1, பிற்போக்கு சோஷலிசம்

[அ] பிரபுத்துவ சோஷலிசம்

பிரான்சையும் இங்கிலாந்தையும் சேர்ந்த பிரபுக் குலத்தோருக்கு வரலாற்று வழியில் ஏற்பட்ட நிலையின் காரணமாய், நவீன முதலாளித்துவ சமுதாயத்தை எதிர்த்து, பிரசுரங்கள் எழுதுவது அவர்களது வாழ்க்கை பணியாயிற்று. 1830 ஜுலையில் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியிலும், இங்கிலாந்துப் பாராளுமன்றச் சீர்திருத்தக் கிளர்ச்சியிலும் இந்தப் பிரபுக் குலத்தோர் திடீர் ஏற்றம் கண்டுவிட்ட வெறுக்கத்தக்க புதுப் பணக்கார அற்பர்களால் திரும்பவும் தோற்கடிக்கப்பட்டார்கள். இதற்குப் பிற்பாடு மெய்யான அரசியல் போராட்டத்துக்கு வழி இல்லாமற் போயிற்று. இனி சாத்தியமானது எல்லாம் இலக்கியப் போர் ஒன்றுதான். ஆனால் இலக்கியத் துறையிலுங்கூட முடியாட்சி மீட்சிக் காலத்திய பழைய கூப்பாடுகளை எழுப்பபுவது சாத்திய மற்றதாகிவிட்டது.

பிரபுக் குலத்தோர் தம்மீது அனுதாபம் உண்டாகும்படி செய்யும் பொருட்டு, வெளிப் பார்வைக்குத் தமது சொந்த நலன்களை மறந்து, சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை மட்டுமே கருதுவோராய் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தமது குற்றச்சாட்டை வகுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இவ்விதம் பிரபுக் குலத்தோர் தமது புதிய எஜமானர்கள் மீது வசை பொழிந்தும், நெருங்கிவரும் பெருங்கேடு குறித்து அச்சம்தரும் ஆரூடங்களை அவர்கள் காதுக்குள் முணுமுணுத்தும் வஞ்சம் தீர்த்துக் கொண்டார்கள்.

இவ்வாறுதான் உதயமாயிற்று பிரபுத்துவ சோஷலிசம்: பாதி புலம்பலாகவும், பாதி வசைப் பாட்டாகவும், பாதி கடந்த காலத்தின் எதிரொலியாகவும், பாதி எதிர் காலத்தைப் பற்றிய மிரட்டலாகவும், சில நேரங்களில் அதன் கசப்பான, கிண்டலான, சுருக்கெனத் தைக்கும்படியான விமர்சனத்தின் மூலம் முதலாளித்துவ வர்க்கத்தின் நெஞ்சின் நடுமையத்துள் தாக்குவதாகவும், ஆனால் தற்கால வரலாற்றின் போக்கைப் புரிந்து கொள்ளும் திறன் கொஞ்சமும் இல்லாததால் எப்போதுமே கோமாளித்தனமான விளைவை உண்டாக்குதவதாகவுமே இருந்தது.

மக்களைத் தம் பக்கத்தில் திரளச் செய்யும் பொருட்டு பிரபுக் குலத்தோர் பாட்டாளியின் பிச்சைத் தட்டினைக் கொடிபோல் தமக்கு முன்னால் உயர்த்திக் காட்டினார். ஆனால் மக்கள்அவர்களோடு சேர்ந்த போதெல்லாம் அவர்களது முதுகுப் புறத்தில் பழைய பிரபுத்துவக் குல இலட்சினைகள் இருக்கக் கண்டார்கள், உடனே மரியாதையின்றி வாய் விட்டுச் சிரித்தவாறு அவர்களிடமிருந்து தூர ஓடினார்கள்.

பிரெஞ்சு மரபுவழி முறை முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டல் முறையிலிருந்து மாறுபட்டிருந்ததைச் சுட்டிக் காட்டும் பிரபுத்துவவாதிகள், முற்றிலும் வேறுவகைப்பட்ட சூழலிலும் நிலைமைகளிலும் தாம் சுரண்டியதையும், இவை தற்போது காலங் கடந்தனவாகிவிட்டதையும் மறந்துவிடுகிறார்கள். தங்களுடைய ஆட்சியில் நவீனப் பாட்டாளி வர்க்கம் இருந்ததில்லை என்பதை எடுத்துரைக்கும் இவர்கள், தங்களுடைய சமூக அமைப்பு தவிர்க்க முடியாதபடி பெற்றெடுத்ததே நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

மற்றபடி இவர்கள் தமது விமர்சனத்தின் பிற்போக்குத் தன்மையை மூடிமறைக்க முயற்சி செய்யவில்லை, இவர்களது விமர்சனத்தில் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டாய்க் கூறப்படுவது என்னவெனில், பழைய சமுதாய அமைப்பு முறையினை வேரோடு வெட்டி வீழ்த்துவதற்கென்றே விதிக்கப்பட்ட ஒரு வர்க்கத்தை இந்த முதலாளித்துவ ஆட்சி வளர்ந்துயரச் செய்கிறது என்பது தான்.

பாட்டாளி வர்க்கத்தை உருவாக்குகிறது என்பதுகூட அவ்வளவாய்க் காரணமல்ல, புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தை அல்லவா உருவாக்கிறது என்று முதலாளித்துவ வர்க்கத்தை இவர்கள் நிந்தனை செய்கிறார்கள்.

ஆகவே இவர்கள் அரசியல் நடைமுறையில் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான எல்லா அடக்குமுறை நடவடிக்கைகளிலும் சேர்ந்து கொள்கின்றார்கள். இவர்களுடைய ஆடம்பரமான வாய்ப்பேச்சுகள் எப்படி இருப்பினும், அன்றாட நடைமுறை வாழ்க்கையில் இவர்கள் தயங்காது குனிற்து, தொழில் துறை மரத்திலிருந்து விழும் பொற்கனிகளைப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறார்கள், ஆட்டு ரோமத்திலும் வள்ளிக் கிழங்கு சர்க்கரையிலும் உருளைக் கிழங்கு சாராயத்திலுமான வாணிபத்தில் கிடைக்கும் ஆதாயத்துக்காக வாய்மையையும் அன்பையும் கண்யத்தையும் விலைக்கு விற்கிறார்கள்.

எப்படிச் சமயகுரு எப்போதுமே நிலப்பிரபுவுடன் கை கோத்துச் செயல்பட்டு வந்திருக்கிறரோ, அதே போல் சமயவாத சோஷலிசமும் பிரபுத்துவ சோஷலிசத்துடன் சேர்ந்து நடைபோட்டு வந்திருக்கிறது.

கிறிஸ்தவத் துறவு மனப்பான்மைக்கு சோஷலிசச் சாயமிட்டுக் காட்டுவதைவிட எளியது எதுவும் இல்லை. தனிச் சொத்தையும் திருமணத்தையும் அரசையும் எதிர்த்துக் கிறிஸ்தவம் கண்டன முழக்கமிடவில்லையா? இவற்றுக்குப் பதில் அது பரோபகாரத்தையும் வறுமையையும், பிரம்மசரியத்தையும் ஊன் ஒடுக்கத்தையும், மடாலய வாழ்க்கையையும் புனித மாதாவாகிய சமயச் சபையையும் போற்றி உபன்யாசம் புரியவில்லையா? பிரபுத்துவக் கோமானுடைய மனப் புகைச்சலைப் புனிதம் பெறச் செய்வதற்காக சமயகுரு தெளித்திடும் புனித தீர்த்தமே கிறிஸ்தவ சோஷலிசம்.

[ஆ] குட்டிமுதலாளித்துவ சோஷலிசம்

முதலாளித்துவ வர்க்கத்தால் நாசத்துக்கு உள்ளாக்கப்பட்டது பிரபுத்துவக் கோமான்களது வர்க்கம் மட்டுமலல; நவீன முதலாளிதுவ சமுதாயத்தின் சூழலில் வாட்டமுற்று நசித்தவை இந்தப் பிரபுத்துவ வர்க்கத்தின் வாழ் நிலைமைகள் மட்டும் அல்ல. மத்திய கால நகரத்தாரும் சிறு விவசாய உடைமையாளர்களும் தான் நவீன முதலாளித்துவ வர்க்கத்தின் முன்னோடிகளாவர். தொழில் துறையிலும் வாணிபத் துறையிலும் சொற்ப அளவே வளர்ச பெற்றுள்ள நாடுகளில் இவ்விரு வர்க்கங்களும் உதித்தெழுந்து வரும் முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கத்தில் செயலிழந்த வரும் முதலாளித்துவ வர்க்கங்களும் உதித்தெழுந்து வரும் முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கத்தில் செயலிழந்து நிலையில் இன்னமும் காலமோட்டிக் கொண்டிருக்கின்றன.

நவீன நாகரிகம் முழு அளவுக்கு வளர்ந்துவிட்ட நாடுகளில் குட்டிமுதலாளித்துவப் பகுதியோராலான ஒரு புதிய வர்க்கம் உருவாகியிருக்கிறது. இவ்வர்க்கம் பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது, முதலாளித்துவ சமுதாயத்தின் வால் பகுதியாய் ஓயாமல் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவ்வர்க்கத்தின் தனிப்பட்ட உறுப்பினர்கள் போட்டியினது செயற்பாட்டால் இடையறாது வீழ்த்தப்பட்டுப் பாட்டாளி வர்க்கத்தினுள் தள்ளப்படுடிகின்றனர். நவீனத் தொழில் துறை வளர்வதைத் தொடர்ந்து நவீன சமுதயத்தில் இவர்கள் சுயேச்சையான ஒரு பிரிவாய் நீடிக்க முடியாமல் அறவே மறைந்து போய், வாணிபத்திலும் தொழிலிலும் விவசாயத்திலும் தம்மிடத்தில் மேலாளர்களும் சம்பள அலுவலர்களும் அமர்த்தப்பட்டுவிடும் காலம் நெருங்கி வருவதைப் பார்க்கின்றனர்.

தேச மக்களில் பாதிக்கு மேற்பட்டோர் விவசாயிகளாய் இருக்கும் பிரான்சு போன்ற நாடுகளில், முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராய்ப் பாட்டாளி வர்க்கத்தை ஆதரித்த எழுத்தாளர்கள், முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான தமது விமர்சனத்தில் விவசாயிகளும் குட்டிமுதலாளித்துவப் பகுதியோருமானவர்களது பார்வையைப் பயன்படுத்த நேர்வதும், இந்த இடைத்தட்டு வர்க்கங்களது நோக்குநிலையிலிருந்து தொழிலாளி வர்க்கத்துக்காக வாதாட முற்படுவதும் இயற்கையே. இவ்வாறுததான் எழுந்தது குட்டிமுதலாளித்துவ சோஷலிசம். பிரான்சில் மட்டுமின்றி தலைமை இங்கிலாந்திலும் இவ்வகையினருக்கு சிஸ்மொண்டீ தலைமை தாங்கினார்.

இவ்வகைப்பட்ட சோஷலிசம் நவீனப் பொருளுற்பத்தி உறவுகளிலுள்ள முரண்பாடுகளைக் கண்டு மிகுந்த மதிநுட்பத்துடன் அவற்றை விவரித்தது. பொருளியலாளர்களுடைய கபடமான நியாயவாதங்களை அது அம்பலப்படுத்திற்று. இயந்திரங்களும் உழைப்புப் பிரிவினையும் உண்டாக்கும் நாசகர விளைவுகயும் மூலதனமும் நிலமும் ஒருசிலரின் கைகளில் குவிவதையும் அமித உற்பத்தியையும் நெருக்கடிகளையும் அது மறுக்கமுடியாத வகையில் நிரூபித்துக் காட்டிற்று. குட்டிமுதலாளித்துவப் பகுதியோருக்கும் விவசாயிகளுக்கும் தவிர்க்க முடியாதவாறு ஏற்படும் அழிவையும், பாட்டாளி வர்க்கத்தின் கொடுந் துன்பத்தையும், பொருளுற்பத்தியில் நிலவும் அராஜகத்தையும், செல்வத்தின் வினியோகத்தில் ஏற்படும் படுமோசமான ஏற்றத்தாழ்வுகயையும், தேசங்களிடையிலான படுநாசத் தொழில் துறைப் போரையும், பழைய ஒழுக்கநெறியும் பழைய குடும்ப உறவுகளும் பழைய தேசிய இனங்களும் குலைந்து செல்வதையும் அது எடுத்துரைத்தது.

ஆயினும் இவ்வகைப்பட்ட சோஷலிசம் அதன் நேர்முகக் குறிக்கோள்களைப் பொறுத்தவரை, பழைய உற்பத்தி, பரிவர்த்தனைச் சானங்களையும் அவற்றுடன் கூடவே பழைய சொத்துடைமை உறவுகளையும் பழைய சமுதாயத்தையும் மீட்டமைக்கவே விரும்புகிறது; அல்லது நவீன உற்பத்தி, பரிவர்த்னைச் சாதனைங்களை அவற்றால் தகர்த்தெறியப் பட்டே ஆக வேண்டிய பழைய சொத்துடைமை உறவுகளின் கட்டுக்கோப்பினுள் இருத்திவைத்து அடைத்திடவே விரும்புகிறது. இவை இரண்டில் எது அதன் விருப்பமாயினும், இவ்வகைப்பட்ட சோஷலிசம் ஒருங்கே பிற்போக்கானதும் கற்பனாவாதத் தன்மையதுமே ஆகும்.

தொழில் அரங்கில் ஒருங்கிணைந்த கைவினைச் சங்கங்கள், விவாசாயத்தில் தந்தைவழிச் சமூக உறவுகள் - இவையே அதன் இறுதி முடிவான முழக்கங்கள்.

முடிவில், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள முயலுவதன் மதமயக்கங்களை எல்லாம் முரட்டுப் பிடிவாதம் கொண்ட வரலாற்று உண்மைகள் சிதறியோடச் செய்ததும், இவ்வகைப்பட்ட சோஷலிசம் பரிதாபத்துக்குரிய மனச் சோர்விலும் வேதனையிலும் மூழ்கி முடிவு எய்துகிறது.

[இ] ஜெர்மானிய, அல்லது "மெய்யான" சோஷலிசம்

பிரெஞ்சு நாட்டு சோஷலிச, கம்யூனிச இலக்கியமானது ஆட்சியதிகாரம் செலுத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் ஒடுக்குமுறையின் பலனாய் உருவாகி எழுந்தது, இந்த ஆட்சியதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின் வெளிப்பாடாய் விளங்கிற்று. ஜெர்மனியில் வரைமுறையற்ற பிரபுத்துவ ஆதிக்கத்தை எதிர்த்து முதலாளித்துவ வர்க்கம் தனது போராட்டத்தை அப்போதுதான் ஆரம்பித்திருந்த ஒரு நேரத்தில் இந்த இலக்கியம் இந்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

ஜெர்மன் தத்துவவியலாளர்களும் அரைவேக்காட்டுத் தத்துவவியலாளர்களும் ஆடம்பர அடுக்குமொழிப் பித்தர்களும் இந்த இலக்கியத்தை ஆவலுடன் கட்டித் தழுவிக் கொண்டனர், ஆனால் பிரெஞ்சு நாட்டிலிருந்து இந்த எழுத்துகள் ஜெர்மனிக்குள் இடம்பெயர்ந்து வந்தபோது பிரெஞ்சு நாட்டுச் சமூக நிலைமைகளும் அவற்றுடன் சேர்ந்து இடம் பெர்ந்து வரவில்லை என்பதை அவர்கள் நினையில் கொண்டார்கள் இல்லை. ஜெர்மனியில் நிலவிய சமூக நிலைமைகளில் இந்த பிரெஞ்சு இலக்கியம் அதன் உடனடி நடைமுறை முக்கியத்துவத்தை அறவே இழந்து முழுக்க முழுழுக்க இலக்கியத் தன்மையதான ஒரு போக்காய்த் திரியலாயிற்று. இவ்விதம், பதினெட்டாம் நூற்றாண்டின் ஜெர்மன் தத்துவவியலாளர்களுக்கு, முதலாவது பிரெஞ்சுப் புரட்சியின் கோரிக்கைகள் பொதுவான "நடைமுறை வழியிலான பகுத்தறிவின்" கோரிக்கைகளேயன்றி வேறல்ல என்றாயின, புரட்சிகர பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தினது சித்தத்தின் வெளிப் பாடானது அவர்களுடைய கண்களுக்குத் தூய சித்தத்தின்- எத்தகையதாய் இருந்தாக வேண்டுமோ அத்தகைய சித்தத்தின், பொதுப்படையான உண்மை மனித சித்தத்தின்- விதிகளைக் குறிப்பனவாயின.

ஜெர்மன் இலக்கிய விற்பன்னர்களது பணி, புதிய பிரெஞ்சுக் கருத்துகளைத் தமது கண்டைத் தத்துவவியல் மனச் சான்றுக்கு இசைவாய் வகுத்திடுவதில், அல்லது இன்னும் கறாராய்ச் சொல்தெனில் தமது சொந்தத் தத்துவவியல் கண்ணோட்டத்தைத் துறந்துவிடாமல் பிரெஞ்சுக் கருத்துகளைக் கிரகித்துக் கொள்வதில் அடங்கிவிடுவதாகியது.

இந்தக் கிரகிப்பு அயல் மொழி ஒன்று எப்படி கிரகிக்கப்படுகிறதோ அதே வழியில், அதாவது மொழியெர்ப்பு மூலமாய் நடந்தேறியது.

பண்டைக் காலப் புறச்சமயத்தாரின் முதுபெரும் இலக்கியங்கள் தீட்டப் பெற்றிருந்த எழுத்துச் சுவடிகளில் மேல் மடாலயத் துறவிகள் கத்தோலிக்கப் புனிதர்களது வாழ்க்கை வரலாறு பற்றிய அசட்டுக் குறிப்புகளை எழுதி வைத்ததை நாம் நன்கறிவோம். இதே செயல் முறையைத்தான் ஜெர்மன் இலக்கியத் துறையினர் அனாசார பிரெஞ்சு இலக்கியம் சம்பந்தமாய் நேர் எதிர்த் திசையில் செய்து முடித்தார்கள். பிரெஞ்சு மூலத்துக்கு அடியில் அவர்கள் தமது தத்துவவியல் அபத்த்தை எழுதினால்கள். எடுத்துக்காட்டாய், பணத்தின் பொருளாதாரச் செயற்பாடுகளைப் பற்றிய பிரெஞ்சு விமர்சனத்துக்கு அடியில் அவர்கள் "மனிதத்தன்மை அன்னியமாதல்" என்று எழுதினார்கள், முதலாளித்துவ அரசு பற்றிய பிரெஞ்சு விமர்சனத்துக்கு அடியில் "பொதுமை எனும் கருத்தினம் அரியாசனத்திலிருந்து அகற்றப்படுதல்" என்றும், இன்ன பலவாறாகவும் எழுதினார்கள்.

பிரெஞ்சு வரலாற்றியல் விமர்சனங்களுக்கு அடியில் இப்படி இந்தத் தத்துவவியல் பதங்களைப் புகுத்துவதற்குத்தான் அவர்கள் "செய்ல துஐற தத்துவவியல்", "மெய்யான சோஷலிசம்", "ஜெர்மன் சோஷலிச விஞ்ஞானம்", "சோஷலிசத்தின் தத்துவவியல் அடிப்படை" என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொண்டனர்.

பிரெஞ்சு சோஷலிஸ்டு, கம்யூனிஸ்டு இலக்கியம் இவ்வாறு அறவே ஆண்மையிழக்க நேர்ந்தது. ஜெர்மானியரின்கைக்கு வந்ததும் இப்படி அது ஒரு வர்க்கம் பிறிதொன்றை எதிர்த்து நடத்தும் போராட்டத்தின் வெளிப்பாடாய் இருக்கும் தன்மையை இழந்துவிட்டதால், அவர் "பிரெஞ்சுக்காரருடைய ஒருசாரார்பினைக்" கடந்துமுன்செல்கிறோமென நினைத்துக் கொண்டார், உண்மையான தேவைகளுக்குப் பதிலாய் உண்மையின் தேவைகளை, பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்குப் பதிலாய் மனிதசாரத்தன்மையின் நலன்களை, எந்த வர்க்கத்தையும் சேராமல், எதார்த்தத்தில் இல்லாமல், தத்தவவியல் கற்பனையின் பனிமூட்டத்தில் மட்டும் இருக்கக் கூடிய பொதுப்படையான மனிதனின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறோமென எண்ணிக் கொண்டார்.

இந்த ஜெர்மன் சோஷலிசம், பள்ளிக்கூட மாணவனது பாடத்துக்கு ஒப்பானதை அத்தனை மகத்தான காரியமாய்க் கொண்டு தனது அவலச் சரக்கை அவ்வளவு பிரமாதமாய் விளம்பரப்படுத்தி வந்த அது, பகட்டுப் புலமை வாய்ந்த தனது அப்பாவித்தனத்தை படிப்படியாய் இழக்க வேண்டியதாயிற்று.

பிரபுத்துவக் கோமான்களையும் வரம்பில்லா முயாட்சியையும் எதிர்த்து ஜெர்மன் முதலாளித்துவ வர்க்கமும், குறிப்பாய் பிரஷ்ய முதலாளித்துவ வர்க்கமும் நடத்திய போராட்டம், அதாவது மிதவாத இயக்கம் சூடு பிடித்து மும்முரமாயிற்று.

இதன் மூலம் "மெய்யான" ஜெர்மன் சோஷலிசத்துக்கு நெடுநாளாய் அது விருமிபிக் காத்திருந்த வாய்ப்பு கிட்டிற்று, அரசியல் இயக்கத்துக்கு எதிராக சோஷலிஸ்டுக் கோரிக்கைகளை எழுப்புவதற்கும், மிதவாதத்துfகு எதிராகவும், பிரதிநிதித்துவ அரசாங்கத்துக்கு எதிராவும், முதலாளித்துவப் போட்டிக்கும் முதலாளித்துவப் பத்திரிகை சுதந்திரத்துக்கும் முதலாளித்துவ சட்ட நெறிக்கும் முதலாளித்துவச் சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிராகவும் வழக்கமான சாபங்களைப் பொழிவதற்கும் அதற்கு வாய்ப்பு கிட்டிற்று. மக்கள் திரளினர்இந்த முதலாளித்துவ இயக்கத்தின மூலம் யாவற்றையும் இழக்க வேண்டியிருக்குமே தவிர எந்த ஆதாயமும் பெற முடியாது என்று அவர்களுக்கு உபதேசிப்பதற்கு வாய்ப்பு கிட்டிற்று. ஆனால் சரியான தருணத்தில் ஜெர்மன் சோஷலிசத்துக்கு மறதி ஏற்பட்டுவிட்டது. அது எதனுடைய அசட்டு எதிரொரியாய் இருந்ததோ, அந்தப் பிரெஞ்சு விமர்சனமானது நவீன முதலாளித்துவ சமுதாயம் அதற்குரிய பொருளாதார வாழ் நிலைமைகளோடும் அதற்கு ஏற்றதாகிய அரசியல் அமைப்போடும் ஏற்கனவே நிலவுவதையே, அதாவது ஜெர்மனியில் நடைபெறவிருந்த போராட்டம் எதைச் சாதிக்க நினைத்ததோ அது ஏற்கனவே நிலவுவதையே தனது அடிப்படை முற்கோளாய்க் கொண்டிருந்தது என்பது குறித்து மறதி ஏற்பட்டுவிட்டது.

எதேச்சாதிகார அரசாங்கங்களுக்கும் அவற்றின் பாதிரிமார்களுக்கும் பேராசியர்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும்
அதிகாரிகளுக்கும், தம்மை அச்சுறுத்திய முதலாளித்துவ வர்க்கத்திடம் காட்டி மிரட்டுவதற்கு ஏற்ற கிலியூட்டும் பொம்மையாய் இந்த ஜெர்மன் சோஷலிசம்பயன்பட்டது.

இதே அரசாங்கங்கள் சரியாய் இதே காலத்தில் ஜெர்மன் தொழிலாளி வர்க்க எழுச்சிகளை அடக்குவதற்காக உபயோகித்த கசப்பு மருந்துகளாகிய கசையடிகளுக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் பிற்பாடு இந்த ஜெர்மன் பிலிஸ்தியர்களது நலத்தின் நேரடிப் பிரதிநிதியாகவும் விளங்கிற்று. ஜெர்மனியில் குட்டிமுதலாளித்துவ வர்க்கமானது, பதினாறாம் நூற்றாண்டின் மிச்சச் கூறுகளாய் அமைந்து, அது முதலாய்ப் பல்வேறு வடிவங்களில் இடைவிடாமல் தலைகாட்டி வருகிறது, தற்போதுள்ள நிலைவரங்களுக்கு தலைகாட்டி வருகிறது, தற்போதுள்ள நிலைவரங்களுக்கு இந்த வர்க்கம் தான் மெய்யான சமூக அடித்தளமாய் இருக்கிறது.

இந்த வர்க்கம் அழியாது நீடித்த வேண்டுமாயின் ஜெர்மனியின் தற்போதைய நிலைவரங்கள் அப்படியே நீடித்தாக வேண்டும். முதலாளித்துவ வர்க்கம் தொழில் துறையிலும் அரசியலும் செலுத்தும் மேலாண்மையானது இந்தவர்க்கம் நிச்சயமாய் அழிந்து போகும்படியான அபாயத்தை உண்டாக்குகிறது - ஒரு புறத்தில் மூலதனம் ஒருசிலரிடம் குவிவதன் மூலமும், மறுபுறத்தில் அதற்கு இந்த அபாயம் ஏற்படுகிறது. "மெய்யான" சோஷலிசம் ஒரே கல்லால் இந்த இரண்டையும் அடித்து வீழ்த்தக் கூடியதாய்த் தோன்றிற்று. உடனே கொள்ளை நோய் போல் அது பல்கிப்பரவிற்று.

கற்பிதச் சிலந்தி வலை அங்கி, சொல்லோவியப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது, பிணி கொண்ட பசப்புணர்ச்சிக் கண்ணீரில் தோய்ந்தது - அறிவெல்லைக்கு அப்பாற்பட்ட இந்த அங்கியால் தான ஜெர்மன் சோஷலிஸ்டுகள் எலும்பும் தோலுமாய் அவல உருக் கொண்ட தமது "நிரந்தர உண்மைகளை" மூடிப் போர்த்தியிருந்தனர். இந்த அங்கி அவர்களது சரக்குகளின் விற்பனையை இம்மாதிரியான குட்டிமுதலாளித்துவக் கூறுகளிடத்தே ஏகமாய் பெருகச் செய்வதற்கு உதவியாய் இருந்தது.

ஜெர்மன் சோஷலிசத்தைப் பொறுத்தவரை அது குட்டி முதலாளித்துவ பிலிஸ்தியர்களது படாடோபமான பிரதிநிதியாய் விளங்குவதே தனக்குரிய பணி என்பதை மேலும் மேலும் நன்றாகவே உணர்ந்து கொண்டது.

ஜெர்மன் தேசமே முன்மாதிரியான தேசம், ஜெர்மனியின் பிலிஸ்திய அற்பனே முன்னுதாரணமான மனிதன் என்பதாய் அது பறைசாற்றிற்று. இந்த முன்னுதாரண மனிதனின் இழிகுணம் ஒவ்வொன்றுக்கும் அதன் உண்மைப் பண்புக்கு நேர்விரோதமாய், மறைபொருளான மகோன்னத சோஷலிசத் தன்மையதான விளக்கம் தந்தது. கடைகோடி நிலைக்குச் செல்ல வேண்டுமென்று அது கம்யூனிசத்தின் "முரட்டுத் தனமான நாசப்" போக்கை நேர்நின்று எதிர்த்தது, எல்லா வர்க்கப் போராட்டங்களையும் வெறுத்து ஒதுக்கி யாவற்றுக்கும் மேம்பட்டதான வாரபட்சமற்ற தனது உன்னத நிலையைப் பிரகடனம் செய்தது. சோஷலிஸ்டு, கம்மயூனிஸ்டு வெளியீடுகள் என்பதாய்க் கூறிக் கொண்டு தற்போது [1847] ஜெர்மனியில் வினியோகமாகி வருபவை யாவும் - விதிவிலக்காய்ஒருசிலவற்றை தவிர்த்து - அறவே வலுவிழக்கச் செய்யும் இந்தக் கேடுகெட்ட இலக்கிய வகையினைச் சேர்ந்தவையே.

2. பழமைவாத, அல்லது முதலாளித்துவ சோஷலிசம்

முதலாளித்துவ வர்க்கத்தில் ஒரு பகுதி, முதலாளித்துவ சமுதாயம் தொடர்ந்து நிலவும்படி உறுதி செய்து கொள்ளும் பொருட்டு சமூகக் குறைபாடுகளை அகற்ற விரும்புகிறா.

இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே பொருளியலாளர்களும், கொடைவள்ளல்களும், மனிதாபிமானிகளும், உழைப்பாளி மக்களுடைய நிலைமையை மேம்படுத்துவோரும், தருமப் பணித் துறையாளரும், ஜீவகாருண்ய சங்கத்தாரும், மதுக் குறைப்பு வீரர்களும், எல்லா விதமான துக்கடாச் சீர்திருத்தக்கார்களும். இந்த முதலாளித்துவ சோஷலிசம் முழுநிறைத் தத்துவ அமைப்புகளாகவே உருவாக்கப் பட்டிருகின்றன.

புரூதோனின் "வறுமையின் தத்துவம்" என்ற புத்தகத்தை இவ்வகை சோஷலிசத்துக்கு ஓர் உதாரணமாய்க் குறிப்பிடலாம்.

சோஷலிச நாட்டங் கொண்ட முதலாளிமார்கள் நவீன சமூக நிலைமைகளின் எல்லா உனுகூலங்களும் வேண்டும், ஆனால் இந்நிலைமைகளின் தவிர்க்க முடியாத விளைவுகளாகிய போராட்டங்களும் அபாயங்களும் இருfகக் கூடாது என்று ஆசைப்படுகிறார்கள். தற்போதுள்ள சமூக முறையை அப்படியே வைத்துக் கொண்டு அதன் புரட்சிகரக் கூறுகளையும் சிதைவுக் கூறுகளையும் மட்டும் நீக்க வேண்டுமென்பதே இவர்களது விருப்பம். பாட்டாளி வர்க்கம் இல்லாமல் முதலாளித்துவ வர்க்கம் மட்டும் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். முதலாளித்துவ வர்க்கம்தான் அதிபதியாய் அமைந்திருக்கும் உலகே யாவற்றிலும் சிறந்ததென இயல்பாகவே கருதுகின்றது. இந்த வசதியான கருத்தை முதலாளித்துவ சோஷலிசம் அதிகமாகவோ குறைவாகவோ நிறைவு பெற்ற தத்துவ அமைப்பாய் வளர்த்திடுகிறது. இம்மாதிரியான அமைப்பைப் பாட்டாளி வர்க்கம் செயல்படுத்தி இவ்வழியில் நேரே ஒரு புதிய சமூக ஜெரூசலத்தை நோக்கி நடைபோட வேண்டுமென கோருவதன் மூலம் உண்மையில் அது கேட்பது என்னவெனில், பாட்டாளி வர்க்கம் தற்போதுள்ள சமுதாயத்தின் வரம்புகளுக்கு உட்பட்டதாய்த் தொடர்ந்து இருந்து கொண்டு, அதேபோது முதலாளித்துவ வர்க்த்தைப் பற்றி அதற்குள்ள வெறுக்கத்தக்க கருத்துகளை எல்லாம் விட்டொழித்துவிட வேண்டும் என்பதும்தான்.

இவ்வகை சோஷலிசத்தின் இன்னொரு வடிவம் குறைவாகவே முறைப்படுத்தப்பட்டது, ஆனால் அதிகமாய் நடைமுறைத் தன்மை வாய்ந்தது. தொழிலாளி வர்க்கத்துக்கு அனுகூலமாய்இருக்கக் கூடியது பொருளாயத வாழ் நிலைமைகளில், பொருளாதார உறவுகளில் ஏற்படும் மாறுதல் மட்டுமேதான், வெறும் அரசியல் சீர்திருத்த்தால் பயன் ஏதுமில்லை என்று எடுத்துரைப்பதன் மூலம், தொழிலாளி வர்க்கத்தின் கண்களில் எவ்விதமான புரட்சி இயக்கமும் மதிப்பிழந்துவிடும்படிச் செய்ய முயன்றது இது. ஆனால் பொருளாயத வாழ் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதன் மூலம் இவ்வகைப்பட்ட சோஷலிசம் எவ்வகையிலும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளின் ஒழிப்பை, புரட்சியால் மட்டுமே சாதிக்கப்படக் கூடிய ஈந்த ஒழிப்பைக் குறிக்கவில்லை, நிர்வாகச் சீர்திருத்தங்களையே குறிக்கிறது. இந்த நிர்வாகச் சீர்திருத்தங்கள் முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகள் தொடர்ந்து நீடிப்பதை அடிப்படையாய்க் கொண்டவை, ஆகவே மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான உறவுகளை எவ்விதத்திலும் பாதிக்காதவை, அரசாங்கத்தின் செலவுகளைக் குறைப்பதற்கும் நிர்வாகப் பணியை எளிமையாக்குவதற்கும் மேல் அதிகமாய் ஒன்றும் செய்ய முடியாதவை.

முதலாளித்துவ சோஷலிசம் வெறும் சொல் அலங்காரமாகும் போது மட்டுமே அது தன்னைச் சரியானபடி வெளிப்படுத்திக் கொள்கிறது.

தடையில்லா வாணிபம், தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக. காப்புச் சுங்க வரிகள், தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக. சிறைச் சீர்திருத்தம், தொழிலாளி வர்க்க நலனுக்காக, இதுதான் முதலாளித்துவ சோஷலிசத்தன் இறுதிநிலையைக் குறிக்கும் சொல், விளையாட்டாய் அமையாத ஒரே சொல்.

3. விமர்சன - கற்பனாவாத சோஷலிசமும் கம்யூனிசமும்

பாபெஃபின் எழுத்துகளையும் ஏனையோரது எழுத்துகளையும் போல் நவீன காலத்தின் மாபெரும் புரட்சி ஒவ்வொன்றிலும் பாட்டாளி வர்க்கக் கோரிக்கைகளின் குரலாய் எப்போதும் ஒலித்திருக்கும் இலக்கியத்தை இங்கு நாம் குறிப்பிடவில்லை.

பிரபுத்துவச் சமுதாயம் வீழ்த்தப்படுகையில் எங்கும் ஒரே பரபரப்பு மிகுந்திருந்த காலங்களில் பாட்டாளி வர்க்கம் தனது சொந்த நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வதற்காக முதன்முதலாய் நேரடியாய்மேற்கொண்ட முயற்சிகள் தவிர்க்க முடியாதபடி தோல்வியுற வேண்டியதாயிற்று, ஏனெனில், பாட்டாளி வர்க்கம் அப்போது வளர்ச்சியுறாத நிலையிலே இருந்தது என்பதுடன், அது விடுதலை பெறுவதற்குத் தேவையான பொருளாதார நிலைமைகள் இன்னமும் தோன்றியாகவில்லை. இந்த நிலைமைகள் பிற்பாடுதான் தோன்றியாகவில்லை. இந்த நிலைமைகள் பிற்பாடுதான் தோள்றுவிக்கப்பட விருந்தன, வரவிருந்த முதலாளித்துவச் சகாப்தத்தால் மட்டுமே இந்த நிலைமைகள் தோற்றுவிக்கப் படக்கூடியவை. பாட்டாளி வர்க்கத்தின் இந்த ஆரம்பத் கால இயக்கங்களின் உடன் பிறப்பாய் எழுந்த புரட்சி இலக்கியமானது தவிர்க்க முடியாதவாறு ஒருவித பிற்போக்குத் தன்மை கொண்டதாகவே இருந்தது. அனைவரும் துறவி மனப்பாங்கு கொள்ள வேண்டுமென்றும், கொச்சையான முரட்டு வழியில் சமுதாயம் சமனமாக்கப்பட வேண்டுமென்றும் அது போதித்தது.

சரியானபடி சோஷலிச, கம்யூனிச கருத்தமைப்புகள் என்பதாய்க் கூறத்தக்கவை, செயின்ட்-சிமோனும் ஃபூரியேயும் ஓவனும் ஏனையோரும் எடுத்துரைத்த இவை, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டத்தின் மேலே விவரிக்கப்பட்ட வளர்ச்சியறாத ஆரம்பக்காலக்கூறில் உருவாகி எழுந்தவையே [பிரிவ I, "முதலாளிகளும் பாட்டாளிகளும்" என்பதைப் பார்க்கவும்]

இந்த அமைப்புகளின் மூலவர்கள் அன்றைய சமுதாயத்தினுள் இருக்கும் வர்க்கப் பகைமைகளையும் சிதைவு உண்டாக்கும் கூறுகளின் செயலையும் கண்ணுறுவத மெய்தான். ஆனால் இன்னமும் பிள்ளைப் பருவத்திலேயே இருந்த பாட்டாளி வர்க்கம் வரலாறு படைக்கும் முன்முயற்கியோ, சுயேச்சையான அரசியல் இயக்கப்பாடோ சிறிதும் இல்லாத ஒரு வர்க்கமாகவே அவர்களுக்குத் தோற்றமளிக்கிறது.

வர்க்கப் பமைகையின் வளர்ச்சியானது தொழில் வளர்ச்சியுடன் சேர்ந்து அதே வேகத்தில் நடைபபோடுவதால், அவர்கள் கண்ணுறும் பொருளாதாரச் சூழ்நிலை பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு வேண்டிய பொருளாயத நிலைமைகளை இன்னும் அவர்களுக்குத் தெரியும்படி வெளிப்படுத்தவில்லை. ஆகவே அவர்கள் இந்த நிலைமைகளைத் தோற்றுவிக்கக் கூடிய ஒரு புதிய சமூக விஞ்ஞானத்தை, புதிய சமூக விதிகளை தேடிச் செல்கிறார்கள்.

வரலாற்று வழிப்பட்ட செயல் சொந்த முறையிலான அவர்களது கண்டுபிடிப்புச் செயலுக்கும், விடுதலைக்காக வரலாற்று வழியில் உருவான நிலைமைகள் கற்பனை முறையில் வகுப்பட்ட நிலைமைகளுக்கும், பாட்டாளி வர்க்கத்தின் படிப்படியான, தன்னியல்பான வர்க்க ஒழுங்கமைப்பு இந்தக் கண்டுபிடிப்பாளர்கள் இதற்கென புனைந்தளிக்கும் சமூக ஒழுங்கமைப்புக்கும் அடியணிய வேண்டும்என்றாகியது. இவர்களது கண்களுக்கு, இவர்களுடைய சமூகத் திட்டங்களுக்கான பிரசாரமும், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான பிரசாரமும், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைப் பணியும்தான் வருங்கால வரலாறு என்றாகிவிடுகிறது.

ஏனையவற்றைவிட மிக அதிகமாய்த் துன்புறும் வர்க்கமாய் இருக்கும் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களில் தான் தாலையா கருத்து செலுத்த வேண்டும் என்ற உணர்வோடு இவர்கள் தமது திட்டங்களை வகுத்தமைக்கிறார்கள். இவர்களுக்குப் பாட்டாளி வர்க்கம் என்பதாய் ஒன்று இருக்கிறதெனில், அது மிக அதிகமாய்த் துன்புறும் வர்க்கம் என்ற வகையில் மடடும்தான்.

வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி பெறாத நிலையும், அதோடு சோஷலிஸ்டுகளுடைய சுற்றுச்சாப்புகளும் இவர்களை வர்க்கப் பகைமைகள் யாவற்றுக்கும் தாம் மிகவும் மேலானோராய் இருப்பதாய்க் கருதிக் கொள்ளச் செய்கின்றன. இவர்கள் சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் நிலையையும், மிகவும் சலுகை படைத்தவர்களின் நிலையையுங்கூட மேம்படுத்த விரும்புகிறார்கள். ஆகவே வழக்கமாய் இவர்கள் வர்க்க பேதம் கருதாமலே, ஒட்டுமொத்தமாய் சமுதாயம் முழுமைக்கும் வேண்டுகோள் விடுக்கிறார்கள், அது மட்டுமின்றி, எல்லோருfகும் முதலாய் ஆளும் வர்க்கத்துக்கே வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் எடுத்துரைக்கும் அமைப்பினைப் புரிந்து கொள்ளும் எவரும் சமுதாயத்தின் சாத்தியமான மிகச் சிறந்த நிலைக்குரிய சாத்தியமான மிகச் சிறந்த திட்டமாகும் இந்த அமைப்பு என்பதைக் காணத் தவறவும் முடியுமோ?

எனவே இவர்கள் எல்லா அரசியல் செயற்பாட்டையும், முக்கியமாய் எல்லாப் புரட்சிகரச் செயற்பாட்டையும் நிராக்கிறார்கள். சமாதான வழிகளில் இவர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறார்கள், அற்பமான சோதனைகள் மூலமும் - நிச்சயம் தோல்வியுறவே செய்யும் என்னும்படியான இவற்றின் மூலமும் - முன்னுதாரணத்தின் சக்தி மூலமும் இவர்கள் இந்தப் புதிய சமூக ஷேவதத்துக்குப் பாதையைச் செப்பனிட முயலுகிறார்கள்.

வருங்கால சமுதாயத்தைப் பற்றிய இப்படிப்பட்ட கற்பனைச் சித்திரங்கள், பாட்டாளி வர்க்கம் இன்னமும் வளர்ச்சி பெறாததாய் இருந்து கொண்டு தனக்குரிய நிலை குறித்து கற்பனைப் புனைவான கருத்தோட்டத்தையே பெற்றிருக்கும் ஒருகாலத்தில் தீட்டப் பெற்ற இந்தச் சித்திரங்கள், பொதுவாய் சமுதாயத்தைத் திருத்தியமைக்க வேண்டுமென்று அந்த வர்க்கத்துக்கு உள்ளுணர்வாய் எழும் அந்த ஆரம்பக் கால ஆர்வங்களுக்கு ஏற்பவே அமைந்திருக்கின்றன.

ஆனால் இந்த சோஷஸ்டு, கம்யூனிஸ்டு வெளியீடுகளில் விமர்சனக் கூறும் ஒன்று அடங்கியிருக்கிறது. நடப்பிலுள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு அடிப்படை ஏற்பாட்டையும் இந்த வெளியீடுகள் தாக்குகின்றன. ஆகவே தொழிலாளி வர்க்கம் அறிவொளி பெறுவதற்கு அவற்றில் மதிப்பிடற்கரிய விவரப் பொருள்கள் நிறைந்திருக்கின்றன. ஆகவே தொழிலாளி வர்க்கம் அறிவொளி பெறுவதற்கு அவற்றில் மதிப்பிடற்கதரிய விவரப் பொருள்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் முன்மொழியப்பட்டிருக்கும் நடைமுறைத் திட்டங்கள் யாவும் - நகரத்துக்கும் கிராமப்புறத்துக்குமுள்ள பாகுபாட்டையும், குடும்ப அமைப்பையும், தனியாட்களின் நலனுக்காகத் தொழில்கள் நடத்தப்படுவதையும், கூலியுழைப்பு முறையையும் ஒழித்தல், சமுதாயத்தின் ஒருங்கிசைவைப் பிரபடனம் செய்தல், அரசின் செயற்பாடுகளைப் பொருளுற்பத்தியை மேற்பார்வையிடுதலாய் மட்டும் மாற்றிடுதல் ஆகிய இத்தகைய திட்டங்கள் யாவும் - வர்க்கப் பகைமைகள் மறைந்து போவதை மட்டும் குறிப்பானவாய் இருக்கின்றன. இந்த வர்க்கப் பகைமைகள் அக்காலத்தில் அப்போதுதான் தலை தூக்கிக் கொண்டிருந்தன, இவற்றின் ஆரம்பக்க காலத்துக்குரிய தெளிவற்ற, வரையறை செய்யப்படாத வடிவங்களில் மட்டுமே இந்த வெளியீடுகள் இவற்றைக் குறிப்பிடுகின்றன. எனவே இந்த முன்மொழிவுகள் முற்றிலும் கற்பனாவாதத் தன்மையனவாகவே இருக்கின்றன.

விமர்சன - கற்பனாவாத சோஷலிசம், கம்யூனிசம் ஆகியவற்றின் முக்கியத்துவம் வரலாற்று வளர்ச்சியுடன் எதிர் விகிதச் சார்புறவு கொண்டதாகும். நவீன கால வர்க்கப் போராட்டம் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று திட்டவட்டமான உருவம் பெறுகிறதோ, போராட்டத்திலிருந்து கற்பிதமாய விலகி நிற்பதும், கற்பிதமாய் அதனைத் தாக்குவதும்அந்த அளவுக்கு நடைமுறை மதிப்பையும் தத்துவார்த்த நியாயத்தையும் முற்றும் இழந்துவிடுகின்றன. ஆகவே இந்த அமைப்புகளின் மூலவர்கள் பல விதத்திலும் புரட்சிகரமானோராய் இருந்திருப்பினுங்கூட, இவர்களது சீடர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெறும் பிற்போக்குக் குறுங் குழுக்களாகவே அமைந்திருக்கிறார்கள். பாட்டாளி வர்க்கத்தின் முற்போக்கான வரலாற்று வழி வளர்ச்சிக்கு எதிராய், அவர்தகள் தமது ஆசிரியர்களுடைய மூலக் கருத்துகளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் வர்ககப் போராட்டத்தை மழுக்கடிக்கவும் வர்க்கப் பகைமைகளுக்கு இணக்கம் காணவும் முயலுகின்றனர். அதுவும் முரணின்றி முறையாய் முயலுகின்றனர். தமது கற்பனாவாத சமூகத் திட்டங்களைச் சோதனை முயற்சிகள் மூலம் சித்திபெறச் செய்யலாமென்று, தனிப்பட்ட சில "பலான்ஸ்டேர்களையும்," "உள்நாட்டுக் குடியேற்றங்களையும்", "சிறுஐகேரியாவையும்"- புதிய ஜெரூசலத்தின் இந்தக் குட்டிப் பதிப்புகளை - அமைத்திடலாமென்று இன்னமும் கனவு காண்கிறார்கள். இந்த ஆகாயக் கோட்டைகளை எல்லாம் சித்திபெறச் செய்வதற்காக இவர்களது முதலாளிமார்கள்து பரிவு உணர்ச்சியையும் பணத்தையும் எதிர்பார்த்து வேண்டுகோள் விடுக்கும்படியான நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. படிப்படியாய் இவர்கள் மேலே விவரிக்கப்பட்ட பிற்போக்குப் பழமைவாத சோஷலிஸ்டுகளது பிரிவுக்குத் தாழ்ந்து விடுகிறார்கள். இவர்களது பகட்டுப் புலமை அதிகமாய் முறைப்படுத்தப்பட்டதாய் இருக்கிறது என்பதும், இவர்கள் தமது சமூக விஞ்ஞானத்தின் அதிசய சக்தியில் வெறித்தனமான மூடநம்பிக்கை கொண்டவர்கள் என்பதும்தான் மேலே விவரிக்கப்பட்டோருக்கும் இவர்களுக்குமுள்ள ஒரே வித்தியாசம்.

எனவே இவர்கள் தொழிலாளி வர்க்கம் மேற்கொள்ளும் எந்த அரசியல் நடவடிக்கையையும் கடுமையாய் எதிர்க்கின்றனர். புதிய வேதத்தில் குருட்டுத்தனமாய்க் கொண்டுள்ள அவநம்பிக்கையின் விளைவாகவே இம்மாதிரியான நடவடிக்கை எழுகிறதெனக் கருதுகின்றனர்.

இங்கிலாந்தில் ஓவனியர்களும் பிரான்சில் ஃபூரியேயர்களும் முறையே சார்ட்டிஸ்டிகளையும் La Reforme ஆதரவாளர்களையும் எதிர்க்கின்றனர்.

2, பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்

2, பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்
- மார்க்ஸ் - எங்கெல்ஸ்
[கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை]


ஒட்டுமொத்தமாய்ப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கும் உறவு என்ன?

கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்க கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாய் இருக்கவில்லை.

அவர்கள் பாட்டாளி வாக்கம் அனைத்துக்குமுள்ள நலன்களை அன்னியில் தனிப்பட்ட நலன்கள் எவையும் இல்லாதவர்கள்.

ஏனைய தொழிலாளி வாக்கக் கட்சிகளிடமிருந்து, கம்யூனிஸ்டுகளை வேறுபடுத்திக் காட்டுகிறவை பின்வருவன மட்டுமே தான் : 1. வெவ்வேறு நாடுகளிலும் தேச அளவில் பாட்டாளிகள் நடத்தும்போராட்டங்களில் அவர்கள் தேசிய இனம் கடந்து பாட்டாளி வர்க்கம் அனைத்தும் உரித்தான் பொது நலன்களைச் சுட்டிக்காட்டி முன்னிலைக்குக் கொண்டு வருகிறார்கள். 2. முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கப் போராட்டம்கடந்து செல்ல வேண்டியிருக்கும் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும் அவர்கள் எப்போதும் எங்கும் இயக்கம் அனைத்துக்குமான நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்கிறார்கள்.

ஆகவே நடைமுறையில் கம்யூனிஸ்டுகள் எல்லா நாடுகளிலும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளது மிகவும் முன்னேறிய, மிகவும் வைராக்கியமான பகுதியாய், ஏனைய எல்லோரையும் முன்னோக்கி உந்தித் தள்ளும் பகுதியாய் இருக்கிறார்கள்; தத்துவார்த்தத்தில் அவர்கள் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வழிநடப்பையும் பொதுவான இறுதிவிளைவுகளையும் தெளிவாய்ப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தை, பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத அனுகூலத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

கம்யூனிஸ்களுடைய உடனடி நோக்கம் ஏனைய எல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளது உடனடி நோக்கம் என்னவே அதுவேதான்: பாட்டாளிகளை ஒரு வர்க்கமாய் உருப் பெறச் செய்வதும், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துவதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரம் வென்று கொள்வதும் தான்.

கம்யூனிஸ்களுடைய தத்துவார்த்த முடிவுகள் உலகைப் புத்தமைக்க நினைக்கும் இந்த அல்லது அந்தச் சீர்திருத்தாளர் புனைந்தமைத்தோ, கண்டுபிடித்தோ கூறிய கருத்துகளை அல்லது கோட்பாடுகளை எவ்வகையிலும் அடிப்படையாய்க் கொண்டவையல்ல.

நடப்பிலுள்ள வர்க்கப் போராட்டத்திலிருந்து, நம் கண்ணெதிரே நடைபெற்று வரும் வரலாற்று இயக்கத்திலிருந்து உதிக்கும் மெய்யான உறவுகளையே இந்த முடிவுகள் பொதுப்பட எடுத்துரைக்கின்றன. நடப்பிலுள்ள சொத்துடைமை உறவுகளை ஒழிப்பது எவ்விதத்திலும் கம்யூனிசத்துக்கு உரித்தான ஒரு தனிச் சிறப்பல்ல.

வரலாற்று நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாய்ச் சொத்துடைமை உறவுகள் யாவும் கடந்த காலத்தில் தொடர்ந்தாற்போல் வரலாற்று வழியில் மாற்றமடைந்தே வந்திருக்கின்றன.

எடுத்துக்காட்டாய் பிரெஞ்சுப் புரட்சியானது பிரபுத்துவச் சொத்துடைமையை ஒழித்து அதனிடத்தில் முதலாளித்துவச் சொத்துடைமையை நிலைநாட்டிற்று.

பொதுப்பட சொத்துடைமையை ஒழிப்பதல்ல, முதலாளித்துவச் சொத்துடைமையை ஒழிப்பதே கம்யூனிசத்திற்குரிய சிறப்பியல்பு. ஆனால் நவீன முதலாளித்துவத் தனிச் சொத்துடைமையானது வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில், ஒருசிலர் மிகப் பலரைச் சுரண்டுவதன் அடிப்படையில் பொருள்களை உற்பத்தி செய்தற்கும் சுவீகரிப்பதற்குமான அமைப்பின் இறுதியான, மிகவும் நிறைவான வெளிப்பாடாகும்.

இந்த அர்த்தத்தில் கம்யூனிஸ்டுகளுடைய தத்துவத்தை இரத்தனச் சுருக்கமாய், தனிச் சொத்துடைமையை ஒழித்திடல் என்பதாய்க் கூறலாம்.

ஒருவர் தமது சொந்த உழைப்பின் பயனாய்ப் பெறுவதைத் தமது தனிச் சொத்தாக்கிக் கொள்ளும் உரிமையைக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் ஒழிக்க விரும்புவதாய் எங்களை ஏசுகிறார்கள்; இந்தத் தனிச் சொத்துதான் தனியாளின் சுதந்திரம், செயற்பாடு, சுயேச்சை வாழ்வு ஆகியவற்றுக்கு எல்லாம் அடிநிலை என்கிறார்கள்.

பாடுபட்டுப் பெற்ற, சொந்த முயற்சியால் சேர்த்த, சுயமாய்ச் சம்பாதித்த சொத்தாம் இது! இங்கே நீங்கள் குறிப்பிடுவது எந்தச் சொத்து? சிறு கைவினைஞர், சிறு விவசாயி ஆகியோரது சொத்தா? அதாவது முதலாளித்துவச் சொத்து வடிவத்துக்கு முற்பட்டதாகிய சொத்து வடிவமா? இம்மாதிரியான சொத்தை இழிக்கத் தேவை இல்லை; தொழில் வளர்ச்சியானது இதை ஏற்கனவே பெருமளவுக்கு அழித்து விட்டது, இனியும் தொடர்ந்து நாள்தோறும் அழித்து வருகிறது.

அல்லது நவீன கால முதலாளித்துவத் தனிச் சொத்தையா குறிப்பிடுகிறீர்கள்?

ஆனால் கூலியுழைப்பானது பாட்டாளிக்குச் சொத்தையா படைத்தளிக்கிறது? இல்லவே இல்லை. அது படைப்பது மூலதனம்தான்; அதாவது கூலியுழைப்பைச் சுரண்ருவதும், புதிதாய்ச் சுரண்டுவதற்குப் புதிதாய்க் கூலியுழைப்பு கிடைக்காவிடில் அதிகரிக்க முடியாததுமாகிய சொத்து வகைதான். சொத்தானது அதன் தற்கால வடிவில் மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்கும் இடையிலான பகைமையை அடிப்படையாய்க் கொண்டதாகும். இந்தப் பகைமையின் இரு தரப்புகளையும் பரிசீலிப்போம்.

முதலாளியாய் இருப்பதற்கு அர்த்தம் பொருளுற்பத்தியில் தனியாள் வழியில் மட்டுமின்றி சமூக வழியிலுமான அந்தஸ்து வகிப்பதாகும். மூலதனமானது கூட்டுச் செயற்பாட்டினால் விளைவதாகும்; சமுதாயத்தின் பல உறுப்பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே, இறுதியாய்ப் பார்க்குமிடத்து சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே அதை இயங்க வைக்க முடியும்.

எனவே மூலதனம் தனியாளின் சக்தியல்ல, சமூக சக்தி.

ஆகவே மூலதனமானது பொதுச் சொத்தாய், சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களுக்குமான சொத்தாய் மாற்றப்படும் போது, தனியாளின் சொத்து அதன் மூலம் சமூகச் சொத்தாய் மாற்றப்படவில்லை. சொத்தின் சமூகத் தன்மை தான் மாற்றப்படுகிறது. சொத்தானது அதன் வர்க்கத்தன்மையை இழந்துவிடுகிறது.

இனி கூலியுழைப்பைப் பரிசீலிப்போம்.

கூலியுழைப்பின் சாராசரி விலைதான் குறைந்தபட்சக் கூலி, அதாவது தொழிலாளி தொழிலாளியாய்த் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமாய்த் தேவைப்படும் பிழைப்புச் சாதனங்களின் மொத்த அளவு. ஆகவே கூலித் தொழிலாளி தமது உழைப்பின் மூலம் சுவீகரித்துக் கொள்வது எல்லாம், தொடர்ந்து உயிர் வாழ்வதற்கும் இவ்வாழ்வினைப் புனருற்பத்தி செய்வதற்கும் மட்டும்தான் போதுமானது. உழைப்பின் உற்பத்திப் பொருsகளிலான இந்தத் தனியாள் சுவீகரிப்பை, மனித உயிர் வாழ்வின் பராமரிப்புக்காகவும் புனருற்பத்திக்காகவும் வேண்டியதை மட்டும் அளித்து, ஏனையோரது உழைப்பின் மீது ஆண்மை செலுத்த உபரியாய் எதையும் விட்டு வைக்காத இந்தச் சுவீகரிப்பை ஒழிக்க வேண்டுமென்ற விருப்பம் எங்களுக்குக் கிஞ்சித்தும் இல்லை. இந்தச் சுவீகரிப்பின் இழவான தன்மையைத்தான், மூலதனத்தைப் பெருகச் செய்வதற்கு மட்டுமே தொழிலாளி வாழ்கிறான், ஆளும் வர்க்கத்தின் நலனுக்குத் தேவைப்படும்வரை மட்டுமே தொழிலாளிக்கு வாழ அனுமதி உண்டு என்ற இந்த இழிவான தன்மையைத்தான் நாங்கள் ஒழித்திட விரும்புகிறோம்.

முதலாளித்துவ சமுதாயத்தில் உயிருள்ள உழைப்பு சேமித்துத் திரட்டப்பட்ட உழைப்பைப் பெருகச் செய்வதற்குரிய ஒரு சாதனமாகவே இருந்து வருகிறது. கம்யூனிச சமுதாயத்தில் சேமித்துத் திரட்டப்பட்ட உழைப்பானது தொழிலாளியின் வாழ்வை விரிவுபெற்று வளமடைந்து ஓங்கச் செய்வதற்கான ஒரு சாதனமாகவே இருக்கும்.

ஆகவே முதலாளித்துவ சமுதாயத்தில் கடந்த காலம் நிகழ் காலத்தின் மீது ஆதிக்கம் புரிகிறது; கம்யூனிச சமுதாயத்தில் நிகழ் காலம் கடந்த காலத்தின் மீது ஆதிக்கம் புரியும். முதலாளித்துவ சமுதாயத்தில் மூலதனம் சுயேச்சையானதாய், தனித்தன்மை கொண்டதாய் இருக்கிறது; அதேபோது உயிருள்ள ஆள் சுயேச்சையற்றவனாய், தனித்தன்மை இல்லாதவனாய் இருக்கின்றான்.

இப்படிப்பட்ட உறவுகளை ஒழிப்பதைத்தான் தனியாளது தனித்தன்மையின் ஒழிப்பாய், சுதந்திரத்தின் ஒழிப்பாய்க் கூறுகிறார்கள் முதலாளிகள்! சந்தேகம் வேண்டாம், முதலாளித்துவத் தனித்தன்மையையும் முதலாளித்துவ சுயேச்சையையும் முதலாளித்துவ சுதந்திரத்தையும் ஒழிப்பதுதான் குறிக்கோள்.

தற்போதுள்ள முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளில், சுதந்திரம் என்பதற்குசுதந்திரமான வாணிபம், சுதந்திரமான விற்பனையும் வாங்குதலும் என்றே அர்த்தம்.

ஆனால் விற்பனையும் வாங்குதலும் மறையும் போது சுதந்திரமான விற்பனையும் வாங்குதலும் கூடவே மறைந்துபோகும். சுதந்திரமான விற்பனை, வாங்குதல் என்ற பேச்சுக்கும் பொதுப்பட சுதந்திரத்தை பற்றிய நமது முதலாளித்துவ வர்க்கத்தாரது ஏனைய எல்லாத் "தீரச் சொல்வீச்சுகளுக்கும்" எதாவது அர்த்தம் இருfகுமாயின், அது மத்திய காலத்திய கட்டுண்ட விற்பனையுடனும் வாங்குதலுடனும் வணிகர்களுடனும் ஒப்பிடும்போது மட்டும்தான். ஆனால் விற்பனையும் வாங்குதலும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளும், இவற்றோடு முதலாளித்துவ வர்க்கமுங்கூட கம்யூனிசத்தின் மூலம் ஒழிக்கப்படுவதற்கு எதிராய் முன்வைக்கப்படுகையில் இந்தப் பேச்சுகள் யாவும் அர்த்தமற்றுப் போகின்றன.

தனிச்சொத்தை நாங்கள் ஒழித்துக் கட்ட விரும்புகிறோம் என்று நீங்கள் கிலி கொண்டு பதறுகிறீர்கள். ஆனால் தற்போதுள்ள உங்களுடைய சமுதாயத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்குத் தனிச் சொத்து ஏற்கனவே இல்லாமல் ஒழிக்கப்பட்விட்டது; ஒருசிலரிடத்தே தனிச் சொத்து இருப்பதற்கே காரணம் இந்தப் பத்தில் ஒன்பது பங்கானோரிடத்தே அது இல்லாது ஒழிந்ததுதான். ஆக சமுதாயத்தின் மிகப் பெரும் பகுதியோரிடம் எந்தச் சொத்தும் இல்லா தொழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாய்க் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று எங்களை ஏசுகிறீர்கள்.

சுருங்கச் சொல்வதெனில், உங்களுடைய சொத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று ஏசுகிறீர்கள். ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம்.

எத்தருணம் முதல் உழைப்பை மூலதனமாய், பணமாய், நிலவாடகையாய் - ஏகபோகமாக்கிக் கொண்டுவிடுவதற்கு ஏற்ற ஒரு சமூக சக்தியாய் - மாற்ற முடியாமற் போகிறதோ, அதாவது எத்தருணம் முதல் தனியாளின் சொத்தினை முதலாத்துவச் சொத்தாய், மூலதனமாய் மாற்ற முடியாமற் போகிறதோ, அத்தருணம் முதற்கொண்டே தனியாளின் தனித்தன்மை மறைந்து விடுவதாய் நீங்கள் கூறுகிறீர்கள்.

ஆதலார் "தனியாள்" என்னும் போது நீங்கள் முதலாளியையே தவிர, மத்தியதர வர்க்கச் சொத்துடைமையாளரையே தவிர, வேறு யாரையும் குறிப்பிடவில்லை எனபதை நீங்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். இம்மாதிரியான தனியாள் மெய்யாகவே மறையத்தான் வேண்டும். இம்மாதிரியான தனியாள் மெய்யாகவே மறையத்தான் வேண்டும், இருக்க முடியாதபடிச் செய்யப்படத்தான் வேண்டும்.

சமுதாயத்தின் உற்பத்திப் பொருள்களைச் சுவீகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பைக் கம்யூனிசம் எம்மனிதனிடமிருந்தும் பறிக்கவில்லை; இப்படிச் சுவீகரித்துக் கொள்வதன் மூலம் அவன் ஏனையோரது உழைப்பை அடிமைப் படுத்துகிறவனாகும் வாய்ப்பைத்தான் அது அவனிடமிருந்து பறிக்கிறது.

தனிச் சொத்தை ஒழித்ததும் எல்லாச் செயற்பாடுகளும் நின்று போய்விடும், அனைத்து மக்களும் சோம்பேறித்தனத்தால் பீடிக்கப்படுவர் என்பதாய் ஆட்சேபம் கூறப்படுகிறது.

இது மெய்யானல், முதலாளித்துவ சமுதாயம் நெடுநாட்களுக்கு முன்பே முழுச் சோம்பேறித்தனத்தில் மூழ்கி மடிந்திருக்கவேண்டும். ஏனெனில் முதலாளித்துவ சமுதாயத்தின் உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேர்ப்பதில்லை, சொத்து சேர்ப்போர் உழைப்பதில்லை. மூலதனம் இல்லாமற் போகும் போது கூலியுழைப்பு இருக்க முடியாதென்ற ஓருண்மையையே திருப்பித் திருப்பிப் பலவாறாய்ச் சொல்லும் கூற்றே ஆகும் இந்த ஆட்சேபம் அனைத்தும்.

பொருளாயதப் படைப்புகளின் உற்பத்திக்கும் சுவீகரிப்புக்குமான கம்யூனிச வழிமுறைக்கு எதிராய் எழுப்பப்படும் எல்லா ஆட்சேபங்களும், அறிவுத் துறைப் படைப்புகளின் உற்பத்திக்கும் சுவீகரிப்புக்குமான கம்யூனிச வழிமுறைக்கு எதிராகவும் எழுப்பப்படுகின்றன. எப்படி வர்க்கச் சொத்துடைமையின் மறைவு முதலாளிக்குப் பொருளுற்பத்தியே மறைந்து போவதைக் குறிப்பதாகின்றதோ, அதே போல வர்க்கக் கலாசாரத்தின் மறைவு அவருக்கு எல்லாக் கலாசாரமுமே மறைவதற்கு ஒப்பானதாகின்றது.

அழிந்து விடுமென அவர் அழுது புலம்பும் அந்தக் கலாசாரம் மிகப் பெருவாரியான மக்களுக்கு இயந்திரமாய்ச் செயல்படுவதற்கு வேண்டிய பயிற்சியாகவே இருந்து வருகிறது.

ஆனால் முதலாளித்துவச் சொத்துடைமையின் ஒழிப்பை நீங்கள் சுதந்திரத்தையும் கலாசாரத்தையும் சட்டநெறியையும் இன்ன பிறவற்றையும் பற்றிய உங்களது முதலாளித்துவக் கருத்துகளைப் பிரமாணமாய்க் கொண்டு மதிப்பீடு செய்யும் வரை எங்களுடன் சர்ச்சைக்கு வர வேண்டாம். உங்களுடைய சட்டநெறி உங்கள் வர்க்கத்தின் சித்தத்தை எல்லாருக்குமான சட்டமாய் விதித்திடுவதுதான்; உங்களது இந்தச் சித்தத்தின் சாரத்தன்மையும் போக்கும் உங்களது வர்க்கம் நிலவுதற்கு வேண்டிய பொருளாதார நிலைமைகளால் தீர்மானிக்கப்படுகிறவைதாம். இதே போல் உங்கள் கருத்துகள் எல்லாமே உங்களது முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவச் சொத்துடைமைக்கும் வேண்டிய நிலைமைகளிலிருந்து பிறந்தெழுகிறவைதாம்.

தற்போதுள்ள உங்களுடைய பொருளுற்பத்தி முறையிலிருந்தும் சொத்துடைமை வடிவிலிருந்தும் உதித்தெழும் சமூக அமைப்பு வடிவங்களை, பொருளுற்பத்தியின் முன்னேற்றத்தின் போது வரலாற்று வழியில் தோன்றி மறைந்து போகம் உறவுகளாகிய இவற்றை, என்றும் நிலையான சாசுவத இயற்கை விதிகளாகவும் பகுத்தறிவு விதிகளாகவும் மாற்றும்படி உங்களது தவறான தன்னலக் கருத்தோட்டம் உங்களைத் தூண்டுகிறது. இந்தத் தவறான கருத்தோட்டம் உங்களுக்கு மட்டும் உரியதன்று, உங்களுக்கு முன்பிருந்த ஆளும் வர்க்கங்கள் யாவற்றுக்குமே உரியதாய் இருந்தது தான். பண்டைக்காலத்துச் சொத்துடைமையைப் பொறுத்தவரை நீங்கள் தெட்டத்தெளிவாய் காண்பதை, பிரபுத்துவச் சொத்துடைமை சம்பந்தமாய் நீங்கள் ஒத்துக் கொள்வதை, உங்களுடைய முதலாளித்துவச் சொத்துடைமை குறித்து உங்களால் ஒத்துக் கொள்ள முடிவதே இல்லை, நீங்கள் தடுக்கப்பட்டுவிடுகிறீர்கள்.

குடும்பத்தை ஒழிப்பதாவது! கம்யூனிஸ்களுடைய இந்தக் கேடுகெட்ட முன்மொழிவை எதிர்த்து அதிதீவிரவாதிகளுங்கூட கொதித்தெழுகிறார்கள்.

இக்காலத்துக் குடும்பத்துக்கு, முதலாளித்துவக் குடும்பத்துக்கு, அடிப்படையாய் அமைவது எது? மூலதனம் தான், தனியார் இலாபம் தான். இந்தக் குடும்பம் அதன் முழுவளர்ச்சியிலுமான வடிவில் முதலாளித்துவ வர்ககத்தாரிடையே மட்டும்தான் இருந்து வருகிறது. ஆனால் இந்நிலைமையின் உடன்நிகழ்வாய் குடும்பவாழ்வு பாட்டாளிகளிடத்தே அனேகமாய் அற்றுப் போயிருப்பதையும், பொது நிலையிலான விபசாரத்தையும் காண்கிறோம்.

முதலாளித்துவக் குடும்பத்தின் உடன்நிகழ்வு மறையும் போது கூடவே முதலாளித்துவக் குடும்பமும் இயல்பாகவே மறைந்து போகும், மூலதனம் மறையும் போது இரண்டும் மறைந்துவிடும்.

குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரால் சுரண்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்றா எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? நாங்கள் இந்தக் குற்றத்தைப் புரிகிறவர்கள்தான், ஒப்புக் கொள்கிறோம்.

ஆனால் வீட்டுக் கல்விக்குப் பதிலாய் நாங்கள் சமூக முறையிலான கல்வியைப் புகுத்தி மனிதர்களிடையிலான உறவுகளிலேயே மிகப் புனிதமானவற்றை நாசமாக்க விரும்புகிறோம் என்பீர்கள்.

உங்களுடைய கல்வி இருக்கிறதே, அது மட்டும் என்னவாம்? அதுவும் சமூக முறையிலான கல்விதானே? எந்தச் சமூக நிலைமைகளில் நீங்கள் கல்வி போதிக்கிறீர்களோ அந்த நிலைமைகளாலும், பற்றிக்கூடங்கள் மூலமும் இன்ன பிறவற்றின் மூலமும் சமுதாயத்தின் நேரடியான அல்லது மறைமுகமான தலையீட்டாலும் தீர்மானிக்கப்பட்டதுதானே அது? கல்வியில் சமுதாயம் தலையிடும் என்பது கம்யூனிஸ்டுகளுடைய கண்டு பிடிப்பு அல்ல; இந்தத் தலையீட்டின் இயல்பினை மாற்றவும், ஆளும் வர்க்கத்தினுடைய செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவிக்கவுமே கம்யூனிஸ்டுகள் முயலுகிறார்கள்.

குடும்பம், கல்வி என்றும், பெற்றோருக்கும் குழந்தைக்குமுள்ள புனித உறவு என்றும் பேசப்படும் முதலாளித்துவப் பகட்டுப் பேச்சுகள் மேலும் மேலும் அருவருக்கத்தக்கனவாகி வருகின்றன; ஏனெனில் நவீனத் தொழில் துறையின் செயலால் பாட்டாளிகளிடையே குடும்பப் பந்தங்கள் மேலும் மேலும் துண்டிக்கப்பட்டு, பாட்டாளிகளது குழந்தைகள் சாதாரண வாணிபச் சரக்குகளாகவும் உழைப்புக் கருவிகளாகவும் மாற்றப்படுகிறார்கள்.

ஆனால் கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் பெண்களை எல்லார்க்கும் பொதுவாக்கிவிடுவீர்களே என்று முதலாளித்துவ வர்க்கம் அனைத்துமாய்ச் சேர்ந்து கூக்குரலிடுகிறது.

முதலாளியாய் இருப்பவர் தனது மனையியை வெறும் உற்பத்திக் கருவியாகவே பாவிக்கிறார். உற்பத்திக் கருவிகள் எல்லார்க்கும் பொதுவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படக் போவதாய்க் கேள்விப்பட்டதும், உடனே அவர் எல்லார்க்கும் பொதுவாகிவிடும் இதே கதிதான் பெண்களுக்கும் ஏற்படப் போகிறதென்று இயற்கையாகவே முடிவு செய்து கொண்டுவிடுகிறார்.

பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளின் நிலையில் இருத்தப்பட்டிருப்பதை ஒழிக்க வேண்டும், உண்மையில் இதுதான் நோக்கம் என்பது அவருக்குக் கனவிலும் கருத முடியாத ஒன்றாகும்.

இருப்பினும், பெண்களைக் கம்யூனிஸ்டுகள் பகிரங்கமாகவும் அதிகார பூர்வமாகவும் எல்லார்க்கும் போதுவாக்கப் போகிறார்களென நமது முதலாளிமார்கள் புரளி பண்ணி நல்லொழுக்கச் சீலர்களாய் சீற்றம் கொள்கிறார்களே, அதைக் காட்டிலும் நகைக்கத்தக்கது எதுவும் இருக்க முடியாது. பெண்களை எல்லார்க்கும் பொதுவாக்கும் கைங்கரியத்தைக் கம்யூனிஸ்டுகள் செய்யத் தேவையில்லை, நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே இது செய்யப்பட்டு வருகிறது.

நமது முதலாளிமார்கள் சாதாரண விபசாரிகளிடம் செல்வதைச் சொல்லவே வேண்டாம், அதோடு அவர்கள் தமது பிடியிலுள்ள பாட்டாளிகளது மனைவியரும் பெண்டிரும் போதாமல் தமக்குள் ஒருவர் மனைவியை ஒருவர் வசப்படுத்திக் கள்ளவொழுக்கம் கொள்வதில் ஆகப் பெரிய இன்பம் காண்கிறார்கள்.

முதலாளித்துவத் திருமணமானது உண்மையில் மனைவியரைப் பொதுவாக்கிக் கொள்ளும் ஒரு முறையே ஆகும். ஆகவே கள்ளத்தனமாய்த் திரைமறைவில் பெண்களை எல்லார்க்கும் பொதுவாக்கி வைக்கும் முறைக்குப் பதில், ஒளிவு மறைவற்ற சட்டபூர்வ முறையைக் கொண்டுவர விரும்புகிறார்கள் கம்யூனிஸ்டுகள என்று இவர்கள் கண்டிக்கலாமே தவிர அதிகமாய் ஒன்றும் சொல்வதற்கில்லை. எப்படியும், இன்றைய பொருளுற்பத்தி அமைப்பு ஒழிக்கப்படும் போது, இந்த அமைப்பிலிருந்து எழும் பொதுப் பெண்டிர் முறையும் - அதாவது பகிரங்கப் பொது விபசாரமும் இரகசியத் தனி விபசாரமும்- கூடவே ஒழிந்தே ஆகவேண்டும் என்பது தெளிவு.

மேலும் தாய்நாட்டையும் தேசியத் தன்மையையும் இல்லாதொழிக்க விரும்புவதாகவும் கம்யூனிஸ்டுகள் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

தொழிலாளர்களுக்குத் தாய்நாடு இல்லை. அவர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடமிருந்து பிடுங்குவது முடியாதகாரியம். பாட்டாளி வர்க்கம் யாவற்றுக்கும் முதலாய் அரசியல் மேலாண்மை பெற்றாக வேண்டும், தேசத்தன் தலைமையான வர்க்கமாய் உயர்ந்தாக வேண்டும், தன்னையே தேசமாக்கிக் கொண்டாக வேண்டும். அதுவரை பாட்டாளிவர்க்கம் தேசியத் தன்மை கொண்டாகவே இருக்கிறது, ஆனால் இச்சொல்லுக்குரிய முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல.

முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சி, வாணிபச் சுதந்திரம், அனைத்துலகச் சந்தை, பொருளுற்பத்தி முறையிலும் இம்முறைக்கு உரித்தான வாழ்க்கை நிலைமைகளிலும் நாடுகள் ஒருபடித்தானவை ஆதல் - இவற்றின் காரணமாய் வெவ்வேறு நாடுகளது மக்களுக்கும் இடையிலுள்ள தேசிய வேறுபாடுகளும் பகைமைகளும் நாள்தோறும் மேலும் மேலும் மறைந்து வருகின்றன.

பாட்டாளி வர்க்க மேலாண்மையானது இவற்றை மேலும் துரிதமாய் மாறயச் செய்யும். குறைந்தது தலைமையான நாகரிக நாடுகளின் அளவிலாவது அமைந்த செயல் ஒற்றுமை, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு வேண்டிய தலையாய நிபந்தனைகளில் ஒன்றாகும்.

தனியொருவர் பிறர் ஒருவரைச் சுரண்டுதல் எந்த அளவுக்கு ஒழிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு ஒரு தேசம் பிறிதொன்றைச் சுரண்டுதலும் ஒழிக்கப்படும். தேசத்தினுள் வர்க்கங்களுக்கிடையிலான பகைநிலை எந்த அளவுக்கு மறைகிறதோ, அதே அளவுக்குத் தேசங்களுக்கிடையிலான பகைமையும் இல்லாதொழியும்.

சமயத்தின், தத்துவவியலின், பொதுவாய்ச் சித்தாந்தத்தின் நோக்குநிலையிலிருந்து கம்யூனிசத்துக்கு எதிராய்க் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விவரமாய்ப் பரிசீலிக்கத் தக்கவையல்ல.

மனிதனது கருத்துகளும் நினைப்புகளும் கண்ணோட்டங்களும் - சுருங்கச் சொன்னால் மனிதனது உணர்வானது- அவனது பொருளாயத வாழ்நிலைமைகளிலும் சமூக உறவுகளிலும் சமூக வாழ்விலும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுடனும் சேர்ந்து மாறிச் செல்வதைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த ஞானம் பேண்டுமா, என்ன?

பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத் துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது - கருத்துகளின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு என்னவாம்? ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆத்கிகம் செலுத்தும் கருத்துகள் அந்தச் சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தினுடைய கருத்துகளாகத்தானே எப்போதுமே இருந்திருக்கின்றன.

சமுதாயத்தைப் புரட்சிகர முறையில் மாற்றிடும் கருத்துகள் என்பதாய்ச் சொல்கிறார்களே, அவர்கள் உண்மையில் குறிப்பிடுவது என்ன? பழைய சமுதாயத்தினுள் புதியதன் கூறுகள் படைத்துரவாக்கப்பட்டுவிட்டன, பழைய வாழ்நிலைமைகள் சிதைவதற்கு ஒத்தபடி பழைய கருத்துகளும் கூடவே சிதைகின்றன என்ற உண்மையைத்தான் அவர்கள் குறிப்பிடுகிறர்கள்.

பண்டைய உலகு அதன் அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது பண்டைய சமயங்களை கிறிஸ்தவ சமயம் வெற்றி கொண்டது. பிறகு 18ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சமயக் கருத்துகள் அறிவொளி இயக்கக் கருத்துகளுக்கு அடிபணிந்து அரங்கை விட்டகன்ற போது அக்காலத்திய புரட்சிவர்ககமான முதலாளித்துவ வர்க்கத்துடன் பிரபுத்துவ சமுதாயம் முதலாளித்துவ வர்க்கத்துடன் பிரபுத்துவ சமுதாயம் தனது மரணப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. சமயத் துறை சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம் ஆகிய கருத்துகள் கட்டற்ற சுந்திரப் போட்டியின் ஆதிக்கத்தினது அறிவு உலகப் பிரதிமைகளே ஆகும்.

"வரலாற்று வளர்ச்சியின் போது சமயம், ஒழுக்கநெறி, தத்துவவியல், சட்டநெறி இவை சம்பந்தமான கருத்துகள் உருத்திரிந்தது மெய்தான். ஆனால் சமயமும் ஒழுக்கநெறியும் தத்துவவியலும் அரசியல் விஞ்ஞானமும் சட்டமும் இந்த மாற்றங்களால் ஆழிந்துபடாது எப்போதுமே இவற்றைச் சமாளித்து வந்திருக்கின்றன" என்று நம்மிடம் கூறுவார்கள்.

"இதன்றி சுதந்திரம், நீதி என்பன போன்ற சாசுவத உண்மைகள் இருக்கின்றன, இவை சமுதாயத்தின் எல்லாக் கட்டங்களுக்கும் பொதுவானவை. ஆனால் கம்யூனிசமானது சாசுவத உண்மைகளை இல்லாதொழியச் செய்கிறது; சமயம், ஒழுக்கநெறி ஆகிய அனைத்தையும் புதிய அடிப்படையில் அமைப்பதற்குப் பதில் இவற்றை ஒழித்துக் கட்டிவிடுகிறது. ஆகவே கம்யூனிசம் கடந்த கால வரலாற்று அனுபவம் அனைத்துக்கும் முரணாய்ச் செயல்படுகிறது."

இந்தக் குற்றச்சாட்டில் அடிங்கியுள்ள சாரப்பொருள் என்ன? கடந்த கால சமுரயம் அனைத்தின் வரலாறும் வர்க்கப் பகைமைகளில் இயக்கமாய் இருந்திருக்கிறது, இந்தப் பகைமைகள் வெவ்வேறு சகாப்தங்களில் வெவ்வேறு வடிவங்களை ஏற்று வந்திருக்கின்றன.

ஆனால் இந்த வர்க்கப் பகைமைகள் ஏற்ற வடிவம் எதுவானாலும், சமுதாயத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியால் சுரண்டப்பட்டு வந்தது என்பது கடந்த சகாப்தங்கள் யாவற்றுக்கும் பொதுவான உண்மையாகும். எனவே, கடந்த சகாப்தங்களது சமூக உணர்வு எவ்வளவுதான் பல்வேறுபட்டதாகவும் பலவிதமானதாகவும் இருந்திருப்பினும், வர்க்கப் பகைமைகள் அறவே மறைந்தாலொழிய முற்றிலும் கரைந்துவிட முடியாத குறிப்பிட்ட சில பொது வடிவங்கள் அல்லது பொதுவான கருத்துகளின் வட்டத்தினுள்ளே தான் அந்த சமூக உணர்வு இயங்கி வந்திருக்கிறது, இதில் வியப்பு ஏதுமில்லை.

கம்யூனிசப் புரட்சி பாரம்பரியச் சொத்துடைமை உறவுகளிலிருந்து மிகவும் தீவிரமாய்த் துண்டித்துக் கொண்டுவிடும் புரட்சியாகும், ஆகவே இந்தப் புரட்சியினது வளர்ச்சியின் போது பாரம்பரியக் கருத்துகளிடமிருந்து மிகவும் தீவிரமாய்த் துண்டித்துக் கொள்ளும்படி நேர்வதில் வியப்புக்கு இடமில்லை.

போதும், கம்யூனிசத்தை எதிர்த்து எழுப்பப்படும் முதலாளித்துவ ஆட்சேபங்களை இத்துடன் முடித்துக் கொள்வோம்.

பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயரச் செய்வதுதான், ஐனநாயத்துக்கான போரில் வெற்றி ஈட்டுவதுதான், தொழிலாளி வர்ககம் நடத்தும் புரட்சியின் முதலாவது படி என்பதை மேலே கண்டோம்.

பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும்; உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்ககமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்தத் தொகையைச் சாத்தியமான முழுவேகத்தில் அதிகமாக்கும்.

ஆரம்பத்தில் இந்தப் பணியினைச் சொத்துடைமை உரிமைகளிலும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளிலும் எதேச்சாதிகார முறையில் குறுக்கிட்டுச் செயல்படுவதன் மூலம்தான் நிறைவேற்ற முடியும். அதாவது, பொருளாதார வழியில் போதாமலும் வலுக் குறைவாகவும் தோன்றும் நடவடிக்கைகளாய் இருப்பினும், இயக்கப் போக்கின் போது தம்மை மிஞ்சிச் சென்றுவிடுகிறவையும் பழைய சமூக அமைப்பினுள் மேலும் குறுக்கிடும்படியான அவசியத்தை உண்டாக்குகிறவையுமாகிய நடவடிக்கைகள் மூலம்தான், பொருளுற்பத்தி முறையைப் புரட்சிகரமாய அடியோடு மாற்றியமைத்திடும் பாதையில் தவிர்க்க முடியாதவையாகிய இந்நடவடிக்கைகள் மூலம்தான், இந்தப் பணியினை நிறைவேற்ற முடியும்.

இந்த நடவடிக்கைகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறானவையாகவே இருக்கும்.

ஆயினும் மிகவும் வளர்ந்து முன்னேறிய நாடுகளுக்குப் பொதுவாய்ப் பெருமளவுக்குப் பொருந்தக் கூடிய நடவடிக்கைககள் வருமாறு:

1. நிலத்தில் சொத்துடைமையை ஒழித்தலும் நிலவாடகைகள் அனைத்தையும் பொதுக் காரியங்களுக்காகப் பயன்படுத்தலும்.

2. கடுமையான வளர்வீத அல்லது படித்தர வருமான வரி.

3. பரம்பரை வாரிசாய்ச் சொத்துடைமை பெறும் உரிமை அமைத்தையும் ஒழித்தல்.

4. நாட்டைவிட்டு வெளியேறிவிடுவோர், கலகக்காரர்கள் ஆகியோர் எல்லோரது சொத்தையும் பறிமுதல் செதல்.

5. அரசு மூலதனத்துடன் தனியுரிமையான ஏகபோகம் கொண்ட தேசிய வங்கியின் மூலமாய், கடன் செலாவணியை அரசிய் கைகளில் ஒருசேர மையப்படுத்தல்.

6. செய்தித் தொடர்பு, போக்குவரத்துச் சாதனங்களை அரசின் கைகளில் ஒருசேர மையப்படுத்தல்.

7. பொதுத் திட்டத்தின் பிரசாரம் ஆலைகளையும் உற்பத்திக் கருவிகளையும் விரிவாக்குதலும், தரிசு நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டுவருதலும், பொதுவாய் மண் வளத்தை உயர்த்தலும்.

8. உழைப்பைச் சரிசமமாய் எல்லாருக்கும் உரிய கடமையாக்குதல், முக்கியமாய் விவசாயத் துறைக்காகத் தொழிற் பட்டாளங்களை நிறுவுதல்.

9. விவசாயத்தைத் தொழில் துறையுடன் இணைத்தல், தேச மக்களை மேலும் சீரான முறையில் நாடெங்கும் பரவியமையச் செய்வதன் மூலம் நகரத்துக்கும் கிரமப்புறத்துக்கும் இடையிலான பாகுபாட்டைப் படிப்படியாய் அகற்றுதல்.

10. எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுப் பள்ளிக்கூடங்களில் இலவசக் கல்வி அளித்தல். ஆலைகளில் குழந்தைகளது உழைப்பின் தற்போதைய வடிவை ஒழித்திடல். கல்வியைப் பொருள் உற்பத்தியுடன் இணைத்தல், இன்ன பிற.

வளர்ச்சியின் போது வர்க்க பேதங்கள் மறைந்துவிடும் போதும், தேச மக்கள் அனைவராலுமான மாபெரும் கூட்டமைப்பின் கைகளில் பொருளுற்பத்தி அனைத்தும் ஒருசேர மையமுற்றுவிடும் போதும், பொது ஆட்சியதிகாரம் அதன் அரசியல் தன்மையை இழந்துவிடும். அரசியல் ஆட்சியதிகாரம் என்பது அதன் சரியான பொருளில், ஒரு வர்க்கத்தை ஒடுக்குவதற்காக அமைந்த பலவந்த அதிகாரத்தையே குறிக்கின்றது. முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் சந்தர்ப்பங்களது நிர்ப்பந்தம் காரணமாய்த் தன்னை ஒரு வர்க்கமாய ஒழுங்கமைத்துக் கொள்கிறதெனில், புரட்சியின் மூலம் தன்னை ஆளும் வர்க்கமாக்கிக் கொள்கிறதெனில், ஆளும் வர்க்கம் என்ற முறையில் பழைய பொருளுற்பத்தி உறவுகளைப் பலவந்தமாய் ஒழித்திடுகிறதெனில், அப்போது அது இந்தப் பழைய பொருளுற்பத்தி உறவுகளுடன் கூடவே வர்க்கப் பகைமைகளும் பொதுவாய் வர்க்கங்களும் நிலவுதற்குரிய நிலைமைகளையும் ஒழித்திடுவதாகிறது, அதன் மூலம் அது ஒரு வர்க்கமாய்த் தனக்குள்ள மேலாண்மையையும் ஒழித்திடுவதாகிறது.

வர்க்கங்களையும் வர்க்கப் பகைமைகளையும் கொண்டிருந்த பழைய முதலாளித்துவ சமுதாயத்துக்குப் பதிலாய், ஒவ்வொருவரும் தங்குதடையின்றி சுதந்திரமாய் வளர்வதையே எல்லாரும் தங்குதடையின்றி சுதந்திரமாய் வளர்வதற்குகான நிபந்தனையாய்க் கொண்ட மக்கட்கூட்டு ஒன்று எழுந்துவிடும்.

1, முதலாளிகளும் பாட்டாளிகளும்

1, முதலாளிகளும் பாட்டாளிகளும்
- மார்க்ஸ் - எங்கெல்ஸ்
[கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை]

இதுநாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும்** வர்க்கப் போராட்டங்களது வரலாறே ஆகும்.
சுதந்திரமுடையானும் அடிமையும், பட்ரீஷிய உயர்குலச் சீமானும் பிலெபியப் பாமரக் குடியோனும், நிலப்புரவும் பண்ணையடிமையும் பணியாளனும், சுருங்கக் கூறுமிடத்து ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும்ஒருவருக்கொருவர் தீராப்பகை கொண்டோராய், ஒரு நேரம் மறைவாகவும் ஒரு நேரம் பகிரங்கமாகவும், இடையறாப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதன் புரட்சிகரப் புத்தமைப்பிலோ, அல்லது போராடும் வர்க்கங்களதுபொது அழிவிலோதான் எப்போதும் முடிவுறலாயிற்று.
வரலாற்றின் முந்திய சகாப்தங்களில் அனேகமாய் எங்குமே பலவேறு வகுப்புகளாலாகிய சிக்கலான சமூகப் பாகுபாடு, சமூக அந்தஸ்தின் பன்மடிப் படிநிலை அமைவு இருக்கக் காண்கிறோம். பண்டைய ரோமாபுரியில்: சீமான்கள், வீரமறவர், பாமரக் குடியோர், அடிமைகள், மத்திய காலத்தில், பிரபுத்துவக் கோமான்கள், மான்யக்காரர்கள், கைவினைச் சங்க ஆண்டான்கள், கைவினைப் பணியாளர்கள், பண்ணையடிமைகள். இந்த வகுப்புகளில் அனேகமாய் ஒவ்வொன்றிலும் படிநிலை உட்பிரிவுகளும் இருக்கக் காண்கிறோம்.
பிரபுத்துவ சமுதாயத்தின் இடிபாடுகளிலிருந்து முளைத்தெழுந்துள்ள தற்கால முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளுக்கு முடிவுகட்டி விடவில்லை; பழையவற்றின் இடத்தில் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் நிலைநாட்டியிருக்கிறதே அன்றி வேறில்லை.
ஆயினும் நமது சகாப்தமாகிய இந்த முதலாளித்துவ வர்க்கச் சகாப்தத்தின் ஒரு தனி இயல்பு என்னவெனில், வர்க்கப் பகைமைகளை இது சுருக்கி எளிமையாக்கியுள்ள, சமுதாயம் மேலும் மேலும் இரு பெரும் பகை முகாம்களாய், எதிரும் புதிருமான இரு பெரும் வர்க்கங்களாய் - முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாய் - பிளவுண்டு வருகிறது.
மத்திய காலத்துப் பண்ணையடிமைகளிடமிருந்து ஆதி நகரங்களின் சுதந்திர நகரத்தார் உதித்தெழுந்தார்கள். இந்த நகரத்தாரிடமிருந்து முதலாளித்துவ வர்க்கத்தின் ஆரம்பக் கூறுகள் வளரலாயின.
அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டதாலும், ஆப்பிரிக்க நன்னம்பிக்கை முனையிச் சுற்றிச் செல்லும் கடல்வழி கண்டறியப்பட்டதாலும், தலைதூக்கி வந்த முதலாளித்துவ வர்க்கத்துக்குப் புதிய வாய்ப்புகள் கிடைத்தன. கிழக்கு இந்திய, சீனச் சந்தைகள், அமெரிக்காவில் குடியேற்றம், காலனிகளுடனான வாணிபம், பரிவர்த்தனைச் சாதனங்களிலும் பொதுவாய்ப் பரிவர்த்தனைப் பண்டங்களிலும் ஏற்பட்ட பெருக்கம் ஆகிய இவை எல்லாம் வாணிபத்துக்கும் கப்பல் போக்குவரத்துக்கும் தொழில் துறைக்கும் இதன்முன் என்றும் கண்டிராத அளவுக்கு ஊக்கமூட்டின, ஆட்டங்கண்டுவிட்ட பிரபுத்துவ சமுதாயத்தில் புரட்சிகரக் கூறு வேகமாய் வளர்வதற்கு இவ்விதம் இவை தூண்டுதல் அளித்தன.

பிரபுத்துவ முறையில் அமைந்த தொழில் அமைப்பில் தொழிற் பண்டங்களது உற்பத்தியானது தனியுரிமை பெற்ற கைவினைச் சங்கங்களின் ஏகபோகமாய் இருந்தது. இப்போது இந்தப் பிரபுத்துவத் தொழில் அமைப்பு புதிய சந்தைகளின் வளர்ந்து பெருகும் தேவைகளுக்கு ஒவ்வாததாகியது. இதன் இடத்தில் பட்டறைத் தொழில் முறை வளரலாயிற்று. கைவினைச் சங்க ஆண்டான்களைப் பட்டறைத் தொழில் மத்தியதர வர்க்கத்தார் அப்புறப்படுத்தினர். பல்வேறு கூட்டிணைவுகளாய் அமைந்த கைவினைச் சங்கங்களுக்கு இடையிலான உழைப்புப் பிரிவினை தனித்தனி தொழிலகத்திலுமான உழைப்புப் பிரிவினையின் முனனால் நிற்க முடியாமல் மறைந்தொழிந்தது.

இதற்கிடையில் சந்தைகள் தொடர்ந்து மேன்மேலும் வளர்ந்து விரிவடைந்தன, தேவை மேன்மேலும் உயர்ந்து சென்றது. பட்டறைத் தொழில் முறையுங்கூட இப்போது போதாததாகியது. இந்நிைரயில் தான் நீராவியும் இயந்திரங்களும் தொழிற் பட்டறைத் தொழில்முறை போய் அதனிடத்தில் பிரம்மாண்டமான நவீனத் தொழில் துறை எழுந்தது, பட்டறைத் தொழில் மத்தியதர வர்க்கத்தாரின் இடத்தில் கோடீஸ்வரத் தொழிலதிபர்கள், பெரும் பெரும் தொழில் துறைப் பொருளுற்பத்திச் சேனைகளது அதிபதிகள், தற்காலத்து பொருளுற்பத்திச் சேனைகளது அதிபதிகள், தற்காலத்து முதலாளிகள் உருவாயினர்.

நவீனத் தொழில் துறை அனைத்து உலகச் சந்தையை நிறுவியிருக்றிது, அமெரிக்கா கண்டுவிடிக்கப்பட்டதானது இதற்குப் பாதையைச் செப்பனிட்டது. வாணிபத்தையும் கடல்வழிப் போக்குவரத்தையும் நிலவழிப் போக்குவரத்தையும் அனைத்து உலகச் சந்தை பிரமாதமாய் வளரச் செய்திருக்கிறது. இந்த வளர்ச்சி அதன் பங்கிற்கு மீண்டும் தொழில் துறையின் விரிவகற்சியை ஊக்குவித்தது. எந்த அளவுக்குத் தொழில் துறையும் வாணிபமும் கப்பல் போக்குவரத்தும் ரயில்பாதைகளும் விரிவடைந்து சென்றனவோ, அதே அளவுக்கு முதலாளித்துவ வர்க்கமும் வளர்ச்சியுற்று ஓங்கிற்று, தனது மூலதனத்தைப் பெருகச் சென்று கொண்டது, மத்திய காலம் விட்டுச் சென்றிருந்த ஒவ்வொரு வர்க்கத்தையும் பின்னிலைக்குத் தள்ளிற்று.

இவ்வாறு, நவீன முதலாளித்துவ வர்க்கம் நீண்ட தொரு வளர்ச்சிப் போக்கின் விளைவாய், உற்பத்தி முளைகளிலும் பரிவர்த்தனை முறைகளிலும் வரிசையாய் ஏற்பட்ட புரட்சிகளின் விளைவாய் உருவானதே என்பதைக் காண்கிறோம்.

முதலாளித்துவ வர்க்கம் அதனுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு படிக்கும் ஏற்றவாறு அரசியல் வெற்றிகளும் அடைந்தது. பிரபுத்துவக் கோமான்களது ஆதிக்கத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு வகுப்பாகவும், மத்திய காலக் கம்யூனில் ஆயுதமேந்திய தன்னாட்சிக் கழகமாகவும் இருந்தது, இங்கே [இத்தாலியிலும் ஜெர்மனியிலும் காணப்பட்டது போல்] சுயேச்சை நகரக் குடியரசாகவும், அங்கே [பிரான்சில் காணப் பட்டது போல] வரிக்குரிய "மூன்றாவது ஆதீன" மாகவும் விளங்கிற்று, பிற்பாடு பட்டறைத் தொழில் மேலோங்கிய காலத்தில் பிரபுத்துவக் கோமான்களுக்கு எதிராய் அரைப் பிரபுத்துவ முடியரசுக்கோ, வரம்பிலா முடியரசுக்கோ துணை நின்றது, மொத்தத்தில் முடிப் பேரரசுகளுக்கு ஆதாரத் தூணாயிற்று, முடிவில் நவீனத் தொழில் துறையும் அனைத்து உலகச் சந்தையும் நவீனத் தொழில் துறையும் அனைத்து உலகச் சந்தையும் நிறுவப்பட்டதும் தனக்கு நவீன காலப் பிரதிநிதித்துவ அரசினில் ஏகபோக அரசியல் ஆதிக்கம் வென்று கொண்டது. நவீன கால அரசின் ஆட்சியதிகாரமானது முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்குமான பொது விவகாரங்களை நிர்வகிக்கும் குழுவே அன்றி வேறல்ல.

வரலாற்று அரங்கில் முதலாளித்துவ வர்க்கம் மிகவும் புரட்சிகரமான பங்கு ஆற்றியிருக்கிறது.

எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலை பெற்றதோ, அங்கெல்லாம் அது எல்லாப் பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், கிராமாந்திரப் பாரம்பரிய உறவுகளுக்கும் முடிவு கட்டியது. மனிதனை "இயற்கையாகவே மேலானோருக்குக்" கீழ்ப்படுத்திக் கட்டிப் போட்ட பல்வேறு வகையான பிரபுத்துவ வந்தங்களையும் ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்துவிட்டு, மனிதனுக்கும் மனிதனுக்கும் அப்பட்டமான தன்னலத்தைத் தவிர, பரிவு உணர்ச்சியில்லாப் "பணப் பட்டுவாடா"வைத் தவிர வேறு ஒட்டுமில்லை உறவுமில்லை என்றாக்கிற்று. சமயத் துறைப் பக்திப் பரவசம், பேராண்மையின் வீராவேசம், சிறு மதியோரது உணர்ச்சிப் பசப்பு ஆகிய புனிதப் பேரானந்தங்களை எல்லாம் தன்னலக் கணிப்பெனும் உறைபனிக் குளிர் நீரில் மூழ்கடித்துள்ளது. மனிதனது மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறது. சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்ட விலக்கவோ துறக்கவோ முடியாத எண்ணிடங்காச் சுதந்திரங்களுக்குப் பதிலாய், வெட்கங் கெட்ட வாணிபச் சுதந்திரமெனும் ஒரேயொரு சுதந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது. சுருங்கச் சொல்வதெனில் சமயத் துறைப் பிரமைகளாலும் அரசியல் பிரமைகளாலும் திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாய், முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற அம்மணமான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலைநாட்டியிருக்கிறது.

இதுகாறும் போற்றிப் பாராட்டப்பட்டு, பணிவுக்கும் பக்திக்குமுரியதாய்க் கருதப்பட்ட ஒவ்வொரு பணித் துறையையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துள்ளது. மருத்துவரையும் வழக்கறிஞரையும் சமய குருவையும் கவிஞரையும் விஞ்ஞானியையும் அது தனது கூலியுழைப்பாளர்கள் ஆக்கிவிட்டது.

குடும்பத்திடமிருந்து முதலாளித்துவ வர்க்கம் அதன் உணர்ச்சி நய முகத்திரையைக் கிழிக்தெறிந்து, குடும்ப உறவை வெறும் காசுபண உறவாய்ச் சிறுமையுறச் செய்து விட்டது.

பிற்போக்கர்கள் போற்றிப் பாராட்டுகிறார்களே மத்திய காலத்துப் பேராண்மையின் முரட்டுக் கூத்து, அது எவ்வளவு மூடத்தனமான செயலின்மையைத் தனது உற்ற துணையாய்க் கொண்டிருந்தது என்பதை முதலாளித்துவ வர்க்கம் நிதர்சனமாக்கியிருக்கிறது. மனிதச் செயற்பாடு என்னவெல்லாம் செய்ய வல்லது என்பதை முதன்முதலாய்த் தெரியப்படுத்தியது முதலாளித்துவ வர்க்கம் தான். எதிப்திய பிரமிடுகளையும் ரோமானியக் கட்டுக்கால் வாய்களையும் கோதிக் தேவாலயங்களையும் மிஞ்சிய மாபெரும் அதிசயங்களை அது சாதித்திருக்கிறது, முற்காலத்துக் குடிப் பெயர்ச்சிப் பயணங்களும் சிலுவைப் போர்ப் பயணங்களும் அற்ப காரியங்களாய்த் தோன்றும்படியான தீரப் பயணங்களை நடத்தியிருக்கிறது.

முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும், இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது. ஆனால் இதற்கு முந்திய தொழில் வர்க்கங்களுக்கு எல்லாம் பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் வாழ்வதற்குரிய முதலாவது நிபந்தனையாய் இருந்தது. ஓயாது ஒழியாது உற்பத்தியில் ஏற்படும் புரட்சிகர மாற்றங்களும் சமூக உறவுகள் யாவும் இடையறாது அமைதி குலைதலும் முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும் கொந்தளிப்பும் முதலாளித்துவச் சகாப்தத்தை அதற்கு முந்திய எல்லாச் சகாப்தங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலையான, இறுகிக் கெட்டிப் பிடித்துப் போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்த பழங் காலத் தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன, புதிதாய் உருவாகியவை எல்லாம் இறுகிக் கெட்டியாவதற்கு முன்பே பழமைப்பட்டு விடுகின்றன. கெட்டியானவை யாவும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் இழக்கின்றன, முடிவில் மனிதன் தெளிந்த புத்தியுடன் தனது வாழ்க்கையின் மெய்யான நிலைமைகளையும் தனது சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் நேர் நின்று உற்று நோக்க வேண்டியதாகிறது.

முதலாளித்துவ வர்க்கத்தின் உற்பத்திப்பொருள்களுக்குத் தொடர்ந்து மேலும் மேலும் விரிவடைந்து செல்லும் சந்தை அவசியமாகும். இற்த அவசியம் முதலாளித்துவ வர்க்ககத்தைப் புவிப்பரப்பு முழுதும் செல்லும்படி விரட்டுகிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று ஒட்டிக் கொள்ள வேண்டியதாகிறது, எல்லா இடங்களிலும் குடியேற வேண்டியதாகிறது, எல்லா இடங்களிலும் தொடர்புகள் நிறுவிக் கொள்ள வேண்டியதாகிறது.

அனைத்து உலகச் சந்தையைப் பயன்படுத்திச் செயல்படுவதன் மூலம் முதலாளித்து வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியையும் நுகர்வையும் அனைத்துலகத் தன்மை பெறச் செய்திருக்கிறது. பிற்போக்கர்கள் கடுங் கோபங் கொள்ளும் படி அது தொழில்களது காலுக்கு அடியிலிருந்து அவற்றின் தேசிய அடிநிலத்தை அகள்ளியுள்ளது. நெடுங் காலமாய் நாட்டிலே இருந்துள்ள தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன, அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை அப்புறப்படுத்தப்படுகின்றன. இந்தப் புதிய தொழில்களைத் தோன்றச் செய்வது நாகரிக நாடுகள் யாவற்றுக்கம் ஜுவ மரணப் பிரச்சினையாகிவிடுகிறது. முன்பிருந்தவற்றைப் போல் இந்தப் புதிய தொழில்கள் உள்நாட்டு மூலப் பொருsகளை மட்டும் உபயோகிப்பவை அல்ல, தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து தருவிக்கப்படும் மூலப் பொருள்களை உபயோகிப்பவை. இவற்றின் உற்பத்திப் பொருள்கள் தாய்நாட்டில் மட்டுமின்றி, உலகெங்கும் எடுத்துச் செல்லப்ட்டு எல்லாப் பகுதிகளிலும் நுகரப்படுகிறவை. தாய்நாட்டு உற்பத்திப் பொருள்களால் பூர்த்தி செய்யப்பட்ட பழைய தேவைகளுக்குப் பதில், தொலைதூர நாடுகள், மண்டலங்களது உற்பத்திப் பொருள்களால் பூர்த்தி செய்யப்படும் புதிய தேவைகள் எழுகின்றன. வட்டாரங்கள், நாடுகள் இவற்றின் பழைய ஒதுக்க நிலைக்கும் தன்னிறைவுக்கும் பதில், எல்லாத் திசைகளிலுமான நெருங்கிய தொடர்பும் உலக அளவில் நாடுகளுக்கிடையிலான சார்புடைமயும் ஏற்படுகின்றன. பொருள் உற்பத்தியில் எப்படியோ அப்படியேதான் அறிவுத் துறை உற்பதிதியிலும். தனித் தனி நாடுகளுடைய அறிவுத் துறைப் படைப்புகள் எல்லா நாடுகளுக்குமான பொதுச் சொத்தாகின்றன. தேசிய ஒருதலைபட்ச பார்வையும் குறுகிய மனப்பாங்கும் மேலும் மேலும் இயலாதனவாகின்றன. நாட்டளவிலும் மண்டல அளவிலுமான எத்தனையோ பல இலக்கியங்களிலிருந்து ஓர் அனைத்துலக இலக்கியம் உருவாகின்றது.

உற்பத்திக் கருவிகள் அனைத்தின் அதிவேக அபிவிருத்தியின் மூலமும், போக்குவரத்துச் சாதனங்களின் பிரமாதமான மேம்பாட்டின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் எல்லாத் தேசங்களையும், மிகவும் அநாகரிக்கக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைகளை அது சக்திவாய்ந்த பீரங்கிகளாய்க் கொண்டு, சீன மதிலை ஒத்த எல்லாத் தடைமதில்களையும் தகர்த்திடுகிறது, அநாகரிக்கக் கட்டத்தில் இருப்போருக்கு அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாத வெறுப்பைப் பணிய வைக்கிறது. ஏற்காவிடில் அழியவே நேருமெனற நிர்ப்பந்தத்தின் மூலம் அது எல்லாத் தேசங்களையும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையை ஏற்கச் செய்கிறது, நாகரிகம் என்பதாய்த் தான் கூறிக் கொள்வதைத் தழுவும்படி, அதாவது முதலாளித்துவமயமாகும்படி எல்லாத் தேசங்களையும் பலவந்தம் செய்கிறது. சுருங்க் கூறுமிடத்து, அப்படியே தன்னை உரித்து வைத்தாற் போன்றதோர் உலகைப் படைத்திடுகிறது அது.

முதலாளித்துவ வர்க்கம் நாட்டுப்புறத்தை நகரங்கள்து ஆட்சிக்குக் கீழ்ப்படச் செய்துள்ளது, மாபெரும் நகரங்களை அது உதித்தெழ வைத்திருக்கிறது, கிராம மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நகர மக்கள் தொகையை வெகுவாய் அதிகரிக்கச் செய்திருக்கிறது, இவ்விதம் மக்களில் ஒரு கணிசப் பகுதியோரை கிராம வாழ்க்கையின் மடமையிலிருந்து மீட்டிருக்கிறது. எப்படி அது நாட்டுப்புறத்தை நகரங்களைச் சார்ந்திருக்கச் செய்துள்ளதோ, அதே போல அநாகரிக நிலையிலும் குறை நாகரிக நிலையிலுமுள்ள நாடுகளை நாகரிக நாடுகளையும், விவசாயிகளது நாடுகளை முதலாளிகளது நாடுகளையும், கிழக்கு நாடுகளை மேற்கு நாடுகளையும் சார்ந்திருக்கச் செய்துள்ளது.

மக்கள் தொகை, உற்பத்திச் சாதனங்கள், சொத்து இவற்றின் சிதறுண்ட நிலைக்கு முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் முடிவு கட்டி வருகிறது. மக்கள் தொகையை அது அடர்ந்து திரட்சி பெறச் செய்திருக்கிறது, உற்பத்திச் சாதனங்களை மையப்படுத்தியிருக்கிறது, சொத்துகளை ஒருசிலர் கையில் குவிய வைத்திருக்கிறது. இதன் தவிர்க்கவொண்ணாத விளைவு என்னவெனில், அரசியல் அதிகாரமும் மையப்படுத்தப்பட்டது. தனித்தனி நலன்களும் சட்டங்களும் அரசாங்கங்களும் வரிவிதிப்பு முறைகளும் கொண்டனவாய்ச் சுயேச்சையாகவோ, அல்லது தளர்ந்த இணைப்புடனோ இருந்த மாநிலங்கள் ஒரே அரசாங்கத்தையும் ஒரே சட்டத் தொகுப்பையும் தேச அளவிலான ஒரே வர்க்க நலனையும் ஒரே தேச எல்லையையும் ஒரே சுங்கவரி முறையும் கொண்ட ஒரே தேசமாய் ஒருசேர இணைக்கப்பட்டன.

முதலாளித்துவ வர்க்கம் ஒரு நூறாண்டுகூட நிறைவுறாத அதன் ஆட்சிக் காலத்தில், இதற்கு முந்திய எல்லாத் தலைமுறைகளுமாய்ச் சேர்ந்து உருவாக்கியதைக் காட்டிலும் மலைப்பு தட்டும்படியான பிரம்மாண்ட உற்பத்தி சக்திகளைப் படைத்தமைத்திருகன்றன. இயற்கை சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல், இயந்திரச் சாதனங்கள், தொழில் துறையிலும் விவசாயத்திலும் இரசாயனத்தைப் பயன்படுத்தல், நீராவிக் கப்பல் போக்குவரத்து, ரயில்பாதைகள், மினிவிசைத் தந்தி, முழுமுழு கண்டங்களைத் திருத்திச் சாகுபடிக்குச் செப்பனிடுதல், ஆறுகளைக் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றனவாய் இடங்களில் மாயவித்தை புரிந்தாற்போல் பெரும் பெரும் தொகுதிகளிலான மக்களைக் குடியேற்றுவித்தல் - இம்மாதிரியான பொருளுற்பத்தி சக்திகள் சமூக உழைப்பின் மடியில் சயனம் புரியுமென இதற்கு முந்திய எந்த நூற்றாண்டாவது கனவிலும் நினைத்திருக்குமா?

ஆக நாம் காண்பது என்னவெனில், முதலாளித்துவ வர்க்கம் உருப்பெற்று எழுவதற்கு அடிப்படையாய் இருந்த பொருளுற்பத்தி, பரிவர்த்தனைச் சாதனங்கள் பிரபுத்துவ சமுதாயத்தில் ஜனித்தவை. இந்தப் பொருளுற்பத்தி, பரிவர்த்தனைச் சாதனங்களது வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், பிரபுத்துவ சமுதாயத்தின் பொருளுற்பத்தி, பரிவர்த்தனை உறவுகளை, விவசாயத்துக்கும் பட்டறைத் தொழிலுக்குமான பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள்- வளர்ச்சியுற்றுவிட்ட உற்பத்தி சக்திகளுக்கு ஒவ்வாதனவாயின, அவை பொருளுற்பத்திக்குப் பூட்டப்பட்ட கால் விலங்குகளாய் மாறின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்தது, அவை உடைத்தெறியப்பட்டன.

அவற்றின் இடத்தில் தடையில்லாப் போட்டியும், அதனுடன் கூடவே அதற்குத் தகவமைந்த சமூக, அரசியல் அமைப்பும் முதலாளித்துவ வர்க்கத்தினுடைய பொருளாதார, அரசியல் ஆதிக்கமும் வந்தமர்ந்து கொண்டன.

இதைப் போன்றதோர் இயக்கம் இப்போது நம் கண்ணெதிரே நடைபெற்று வருகிறது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி, பரிவர்த்தனை உறவுகளையும் முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளையும் கொண்டதாகிய நவீன முதலாளித்துவ சமுதாயம், மாயவித்தை புரிந்து தோற்றிவித்தாற் போல் இவ்வளவு பிரம்மாண்டப் பொருளுற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் தோற்றுவித்திருக்கும் இச்சமுதாயம், பாதாள உலகிலிருந்து தனது மந்திரத்தின் வலிமையால் தருவித்த சக்திகளை அடக்கியாள முடியாமற் போன மந்திரவாதியின் நிலையில் இருக்கக் காண்கிறோம். கடந்த சில பத்தாண்டுகளது தொழில், வாணிப வரலாறே, நவீனப் பொருளுற்பத்தி சக்திகள் நவீனப் பொருளுற்பத்தி உறவுகளை எதிர்த்து, முதலாளித்துவ வர்க்கமும் அதனுடைய ஆதிக்கமும் நிலவுதற்கு அவசியமான நிலைமைகளாகிய சொத்துடைமை உறவுகளை எதிர்த்துப் புரிந்திடும் கலகத்தின் வரலாறுதான். இதைத் தெளிவுபடுத்த, கால அலைவட்ட முறையில் திரும்பத் திரும்ப எழும் வாணிப நெருக்கடிகளைக் குறிப்பிட்டால் போதும் - திரும்பத் திரும்ப எழுந்து, ஒவ்வொரு தரமும் முன்னிலும் அபாயகரமான முறையில் இந்நெருக்கடிகள் முதலாளித்துவ சமுதாயம் அனைத்தின் நிலவுதலை ஆட்சேபக் கேள்விக்குரியதாக்குகின்றன. இந்த வாணிப நெருக்கடிகளின் போது ஒவ்வொரு தரமும் இருப்பிலுள்ள உற்பத்திப் பொருள்களில் மட்டுமின்றி, ஏற்கனவே உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளிலும் ஒரு பெரும் பகுதி அழிக்கப்படுகிறது. இந்த நெருக்கடிகளின் போது, இதற்கு முந்திய எல்லாச் சகாப்தங்களிலும் அடி முட்டாள்தனமாய்த் தோன்றியிருக்கும் படியான ஒரு கொள்ளை நோய் - அமித உற்பத்தி என்னும் கொள்ளை நோய் - மூண்டு விடுகிறது. பெரும் பஞ்சம், சர்வநாச முழுநிறைப் போர் ஏற்பட்டு வாழ்க்கைத் தேவைப் பொருள்கள் எவையும் கிடைக்காதபடி செய்துவிட்டாற் போலாகிறது, தொழிலும் வாணிபமும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டதாய்த் தோன்றுகிறது - ஏன் இப்படி? ஏனென்றால் நாகரிகம் மிதமிஞ்சிவிட்டது, வாழ்க்கைத் தேவைப் பொருக்கள் அளவு மீறிவிட்டன, தொழிலும் வாணிபமும் எல்லை கடந்துவிட்டன. சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள் முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சிக்கு இனி உதவுவதாய் இல்லை. மாறாக, அவை இந்த உறவுகளுக்குப் பொருந்தாத படி அளவுமீறி வலிமை மிக்கவையாகிவிட்டன, இந்த உறவுகள் அவற்றின் வளர்ச்சிக்குத் தடையாகிவிட்டன. பொருளுற்பத்தி சக்திகள் இந்தத் தடைகளைக் கடக்க முற்பட்டதும் அவை முதாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் உண்டாக்குகின்றன, முதலாளித்துவச் சொத்துடைமை நிலவுதற்கே அபாயத்தை ஏற்படுத்துகின்றன. அவை உற்பத்தி செய்யும் செல்வத்துக்குத் தம்முள் இடம் போதாதபடி முதலாளித்துவச் சமூக உறவுகள் குறுகலாயிருக்கின்றன. இந்த நெருக்கடிகளை முதலாளித்துவ வர்க்கம் எப்படிச் சமாளிக்கிறது? ஒரு புறத்தில், வலுக்கட்டாயமாய் உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும் பகுதியை அழிப்பதன் மூலமும், மறு புறத்தில் புதிய சந்தைகளை வென்று கைப்பற்றுவதன் மூலமும் பழைய சந்தைகளை இன்னும் அழுத்திப் பிழிவதன் மூலமும் - அதாவது மேலும் விரிவான, மேலும் நாசகரமான நெருக்கடிகளுக்கு வழி கோலுவதன் மூலமும் நெருக்கடிகளைத் தடுப்பதற்கான வழிதுறைகளைக் குறைப்பதன் மூலமும்.

எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் பிரபுத்துவத்தை வீழ்த்திற்றோ, அதே ஆயுதங்கள் இப்பொழுது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராய்த் திருப்பப்படுகின்றன.

முதலாளித்துவ வர்க்கம் தன்னை அழித்தொழிக்கப் போகும் ஆயுதங்களை வார்த்தெடுத்திருப்தோடு அன்னியில், அந்த ஆயுதங்களைப் பிரயோகிப்பதற்குரிய ஆட்களையும் - பாட்டாளிகளாகிய நவீனத் தொலாளி வர்க்கத்தையும் - தோன்றியெழச் செய்திருக்கிறது.

எந்த அளவுக்கு முதலாளித்துவ வர்க்கம், அதாவது மூலதனம் வளர்கிறதோ, பாட்டாளி வர்க்கமாகிய நவீனத் தொழிலாளி வர்க்கமும் அதே அளவுக்கு வளர்கிறது. இந்தத் தொழிலாளர்கள் தமக்கு வேலை தேடிக் கொள்ள முடிகிறவரைதான் வாழ முடியும், தமது உழைப்பு மூலதனத்தைப் பெருகச் செய்யும் வரைதான் வேலை தேடிக் கொள்ள முடியும். சிறுகச் சிறுகத் தம்மைத் தாமே விலைக்கு விற்க வேண்டிய நிலையிலுள்ள இந்தத் தொழிலாளர்கள், ஏனைய எல்லா விற்பனைப் பொருள்களையும் போல் தாமும் ஒரு பரிவர்த்தனைப் பண்டமாகவே இருக்கிறர்கள், ஆகவே போட்டா போட்டியின் எல்லா அசம்பாவிதங்களுக்கும், சந்தையின் எல்லா ஏற்றயிறக்க அலைவுகளுக்கும் இலக்காகிறார்கள்.

விரிந்த அளவில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதன் விளைவாகவும், உழைப்புப் பிரிவினையின் விளைவாகவும் பாட்டாளிகளுடைய வேலையானது தனித்தன்மையை முற்றும் இழந்துவிட்டது, அதலால் தொழிலாளிக்கு அவரது வேலை அறவே சுவையற்றதாகிவிட்டது. இயந்திரத்தின் துணையுறுப்பு ஆகிவிடுகிறார் அவர், மிகவும் எளிமையானதும், அலுப்புத் தட்டும்படியாய் ஒரே விதமானதும், ஆகவே சுலபமாய்ப் பெறத் தக்கதுமாகிய கைத்திறன்தான் அவருக்கு வேண்டியிருக்கிறது. எனவே தொழிலாளியினது உற்பத்திச் செலவு அனேகமாய் முற்றிலும்அவரது பராமரிப்புக்கு அவரது இன விருத்திக்கும் தேவையான பிழைப்புச் சாதனங்களுக்கு மேற்படாதபடி குறுகிவிடுகிறது. ஆனால் பரிவர்த்தனைப் பண்டத்தின் விலை - ஆகவே உழைப்பின் விலை - அதன் உற்பத்திச் செலவுக்குச் சமமாகும். இதனால் வேலை எவ்வளவுக்கு எவ்வளவு வெறுக்கத் தக்கதாய் அமைகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கூலியும் குறைகிறது. அது மட்டுமல்ல, இயந்திரங்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுவதும் உழைப்புப் பிரிவினையும் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு வேலைப் பளுவும் அதிகமாகிறது - வேலை நேரத்தை அதிகமாக்குவதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலையைக் கூடுதலாக்குவதன் மூலமோ, இயந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலமோ, இன்ன பிற வழிகளிலோ இது நடந்தோறுகிறது.

நவீனத் தொழில் துறையானது தந்தைவழிக் குடும்ப ஆண்டானுடைய சிறிய தொழிற்கூடத்தைத் தொழில் முதலாளியினது பெரிய தொழிற்சாலையாய் மாற்றியுள்ளது. தொழிற்சாலையினுள் நெருக்கமாய்க் கூட்டப்பட்டிருக்கும் திரளான தொழிலாளர்கள் படையாட்களைப் போல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள். தொழில் துறைச் சேனையின் படையாட்களாகிய இவர்கள், ஆபீசர்கள் என்றும் சார் ஜெண்டுகள் என்றும் முற்றும் படிநிலைக் கிரமத்தில் அமைந்த படைத்தலையின் கீழ் இருத்தப்படுகிறார்கள். இவர்கள் அடிமைகளாய் இருப்பது முதலாளித்துவ வர்க்கத்துக்கும் முதலாளித்துவ அரசுக்கும் மட்டுமல்ல, நாள் தோறும் மணிதோறும் இயந்திரத்தாலும், மேலாளர்களாலும், யாவருக்கும் முதலாய்த் தனித்தனி தலாளித்துவ ஆலையதிபராலும் இவர்கள் அடிமைகளாக்கப்படுகிறார்கள். இந்தக் கொடுங்கோன்மை எவ்வளவுக்கு எவ்வளவு பகிரங்கமாய் இலாபத்தைத் தனது இறுதி முடிவாகவும் குறிக்கோளாகவும் பிரகடனம் செய்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாய் இது இழிவானதாய், வெறுக்கத்தக்கதாய், கசப்பூட்டுவதாய் இருக்கிறது.

உடலுழைப்புக்கு வேண்டிய திறமையும் உடல் வலிவும் குறையக் குறைய, அதாவது நவீனத் தொழில் துறையின் வளர்ச்சி மட்டம் உயர உயர, ஆடவரின் உழைப்பு மேலும் மேலும் அகற்றப்பட்டு அதனிடத்தில் பெண்களின் உழைப்பு அமர்த்தப்படுகிறது. வயது வேறுபாடும் ஆண், பெண் வித்தியாசமும் இனி தொழிலாளி வர்க்கத்துக்குத் தனியான எந்த சமூக முக்கியத்துவமும் இல்லாமற் போய்விட்டன. எல்லோருமே உழைப்புக் கருவிகள் தான், உபயோகித்துக் கொள்வதற்கு ஆகும் செலவுதான் வயதுக்கும் பாலுக்கும் ஏற்ப அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறது.

ஆலை முதலாளியால் இதுவரை சுரண்டப்பட்ட தொழிலாளி, இந்தச் சுரண்டல் முடிவுற்று தனது கூலியைப் பணவடிவில் பெற்றுக் கொண்டவுடனே, முதலாளித்துவ வர்க்கத்தின் பிற பகுதியோரான வீட்டுச் சொந்தக்காரராலும் கடைக்காரராலும் அடகு வட்டிக்கடைக்காரராலும் இன்ன பிறராலும் தாக்கப்படுகிறார்.

மத்தியதர வர்க்கத்தின் கீழ்த் தட்டுகளைச் சேர்ந்த சிறு உற்பத்தியாளர்கள், கடைக்காரர்கள், சிறு வாடகை, வட்டி வருவாயினர், கைவினைஞர்கள், விவசாயிகள் ஆகிய எல்லோரும் சிறிது சிறிதாய்த் தாழ்வுற்று பாட்டாளி வர்க்கத்தை வந்தடைகிறார்கள். காரணம் என்னவெனில், முதலாவதாக அவர்களிடமுள்ள சொற்ப அளவு மூலதனம் நவீனத் தொழிலின் வீச்சுக்கும் போதாமல் பெரிய முதலாளிகளுடைய போட்டிக்குப் பலியாகிவிடுகிறது, இரண்டாவதாக அவர்களுடைய தனித் தேர்ச்சியானது பொருளுற்பத்தியின் புதிய முறைகளால் மதிப்பற்றதர்க்கப்படுகிறது. இவ்விதம் தேச மக்கள் தொகுதியைச் சேர்ந்த எல்லா வர்க்கங்களிடமிருந்தும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆட்கள் திரட்டப்படுகிறார்கள்.

பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பல்வேறு கட்டங்களைக் கொண்டதாகும். பிறந்ததுமே அது முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துத் தனது போராட்டத்தைத் துவக்கிவிடுகிறது. ஆரம்பத்தில் இத்தப் போராட்டத்தைத் தனிப்பட்ட தொழிலாளர்களும், அடுத்து ஓர் அலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்கிளையைச் சேர்ந்த தொழிலாளர்களும் தம்மை நேரடியாய்ச் சுரண்டும் தனிப்பட்ட முதலாளிகளை எதிர்த்து நடத்துகிறார்கள். முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளை எதிர்த்து அவர்கள் தமது தாக்குதல்களைத் தொடுக்கவில்லை, உற்பத்திக் கருவிகளையே தாக்குகிறார்கள். தமது உழைப்புக்குப் போட்டியாய் வந்த இறக்குமதிப் பொருள்களை அவர்கள் அழிக்கிறார்கள், இயந்திரங்களைச் சுக்கு நூறாய்த் தகர்க்கிறார்கள், ஆலைகளுக்குத் தீவைத்து எரிக்கிறார்கள், மறைந்து விட்ட மத்திய காலத்துத் தொழிலாளி நிலையை வன்முறையின் மூலம் மீட்டமைக்க முயலுகிறார்கள்.

இந்தக் கட்டத்தில் தொழிலாளர்கள் இன்னமும் தம்மிடையே தொடர்பின்றி நாடெங்கிலும் சிதறியமைந்த திரளினராய் இருக்கிறர்கள், தம்மிடையிலான போட்டியால் பிளபட்டிருக்கிறார்கள். எங்காவது ஒன்றுபட்டு முன்னிலும் ஒருங்கிணைந்த தொகுப்புகள் ஆகிறார்கள் என்றால், இன்னமும் அது அவர்களது செயல் திறன் மிக்க சொந்த ஒற்றுமையால் ஏற்பட்டதாகவே இருக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தனது சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு பாட்டாளி வர்க்கம் அனைத்தையும் இயங்கவைக்க வேண்டியிருக்கிறது, சிறிது காலத்துக்கு அதனால் இப்படி இயங்க வைக்கவும் முடிகிறது. ஆகவே இந்தக் கட்டத்தில் பாட்டாளிகள் தமது பகைவர்களை எதிர்த்துப் போராடவில்லை, பகைவர்களின் பகைவர்களாகிய எதேச்சாதிகார முடியாட்சியின் மீதமிச்சக் கூறுகளையும் நிலச்சுவான்தார்களையும் தொழில் துறையைச் சேராத முதலாளிகளையும் குட்டிமுதலாளித்துவப் பிரிவோரையும் தான் எதிர்த்துப் போராடுகிறார்கள். இவ்விதம் வரலாறு வழிப்பட்ட இந்த இயக்கம் முற்றிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைக்குள் இருக்கிறது, இவ்வழியில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றியும் முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றியாகிறது.

ஆனால் தொழில்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவதோடுகூட, மேலும் மேலும் பெருந் திரள்களாய் ஒன்றுகுவிகிறது, அதன் பலம் கூடுதலாகிச் செல்கிறது, அது இந்தப் பலத்தை மேன்மேலும் உணர்கின்றது. இயந்திரச் சாதனங்கள் உழைப்பின் இடையிலான பாகுபாடுகளை ஒழித்து அனேகமாய் எங்கும் கூலி விகிதங்களைக் கீழ்நிலையிலான ஒரே மட்த்துக்குக் குறையச் செய்வதற்கு ஏற்ப, பாட்டாளி வர்க்க அணிகளினுள் வெவ்வேறு நலன்களும் வாழ்க்கை நிலைமைகளும் மேலும் மேலும் வேகமாய் வளர்ந்து பெருகுவதானது, அவர்களுடைய பிழைப்பை மேன்மேலும் நிலையற்றுச் சரியச் செய்கிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையில் எழும் மோதல்கள் மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. இதனால் தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராய் இணைவுகள் [தொழிற் சங்கங்கள்] அமைத்துக் கொள்ள முற்படுகிறார்கள், கூலிகள் குறையாதவாறு பாதுகாத்துக் கொள்ள அவர்கள் ஒன்றிணைகிறார்கள், அவ்வப்போது மூண்டுவிடும் இந்த மோதல்களுக்கு முன்னேற்பாடாய் நிரந்தரமான சங்கங்களை நிறுவிக் கொள்கிறார்கள். சிற்சில இடங்களில் இந்தப் போராட்டம் கலகங்களாய் வெடிக்கின்றன.

சிற்சில சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் வெற்றியடைகிறார்கள், ஆனால் இவ்வெற்றிகள் சிறிது காலத்துக்கு மேல் நீடிப்பதில்லை. அவர்களுடைய போராட்டங்களது மெய்யான பலன் உடனடி விளைவில் அல்ல, தொழிலாளர்களது இடையறாது விரிவடையும் ஒற்றுமையில் காணக்கிடக்கிறது. நவீனத் தொழில் துறையால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் வளர்ச்சியுற்ற போக்குவரத்துச் சாதனங்கள், வெவ்வேறு வட்டாரங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை ஒருவரோடொருவர் தொடர்பு பெறச் செய்து இந்த ஒற்றுமைக்குத் துணை புரிகின்றன. யாவும் ஒரே தன்மையனவாய் இருக்கும் எண்ணற்ற வட்டாரப் போராட்டங்களை வர்க்கங்களுக்கு இடையே தேச அளவில் நடைபெறும் ஒருமித்த போராட்டமாய் மையப்படுத்த இந்தத்தொடர்புதான் தேவையாய்இருந்தது. வர்க்கப் போராட்டம் ஒவ்வொன்றும் ஓர் அரசியல் போராட்டமாகும். மத்திய கால நகரத்தார் அக்காலத்திய படுமோசமான சாலைகளின் துணை கொண்டு பெறுவதற்குப் பன்னூறு ஆண்டுகள் தேவைப்பட்ட அந்த ஒற்றுமையை நவீனப் பாட்டாளிகள் ரயில் பாதைகளின் துணை கொண்டு ஒருசில ஆண்டுகளிலேயே பெறுகிறார்கள்.

பாட்டாளிகள் இவ்விதம் ஒரு வர்க்கமாகவும், ஆகவே ஒர் அரசியல் கட்சியாகவும் ஒழுங்கமைப்பு பெறும் நிகழ்வானது தொழிலாளர்களிடத்தே ஏற்படும் போட்டியால் ஓயாமல் மீண்டும் குலைக்கப்படுகிறது. ஆயினும் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிவும் உறுதியும் சக்தியும்ம மிக்கதாய்த் திரும்பத் திரும்ப உயர்ந்து எழுகிறது. இது முதலாளித்துவ வர்க்கத்தாரிடம் செய்து, தொழிலாளர்களுக்குரிய தனி நலன்களுக்குச் சட்ட அங்கீகாரம் பெறுகிறது. இங்கிலாந்தில் பத்து மணி நேர வேலை நாள் மசோதா இவ்வாறுதான் சட்டமாய் நிறைவேற்றப்பட்டது.

பொதுவாய்ப் பேசுமிடத்து, தொழிலாளி வர்க்க வளர்ச்சிப் போக்குக்குப் பழைய சமுதாயத்தின் வர்க்கங்களிடையே எழும் மோதல்கள் பல வழிகளிலும் உதவியாய் இருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் இடையறாத போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கிறது, ஆரம்பத்தில் பிரபுக் குலத்தோருடனும், பிற்பாடு முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த சில பகுதிகளின் நலன்கள் தொழில் முன்னேற்றத்துக்கு விரோதமாகிவிடும் போது இந்தப் பகுதிகளுடனும், எக்காலத்துமே அன்னிய நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்துடனும் அதுபோராட வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டங்களின் போது முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்கத்தை அணுகி வேண்டுகோள் விடுக்கும்படியும், அவ்வர்க்கத்தின் உதவியை நாடும்படியும், இவ்விதம் அதை அரசியல் அரங்கில் பிரவேசிக்குமாறு இழுக்கும்படியும் நேருகிறது. ஆகவே முதலாளித்துவ வர்க்கமே பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டிய அரசியல் கல்வி, பொதுக் கல்வி ஆகியவற்றின் கூறுகளை அதற்கு அளித்திடுகிறது, அதாவது, தன்னையே எதிர்த்துப் போராடுவதற்கான ஆயுதங்களை அது பாட்டாளி வர்க்கத்துக்கு வழங்குகிறது.

தவிரவும், மேலே நாம் கண்ணுற்றது போல், தொழில் முன்னேற்றத்தின் விளைவாய் ஆளும் வர்க்கங்களில் முழுமுழுப் பிரிவுகள் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்படுகின்றன, அல்லது குறைந்தது அவை தமது வாழ்வு நிலைமைகளை இழக்கும்படியான ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. இப்பிரிவுகளும் பாட்டாளி வர்க்கம் அறிவொளி பெறுவதற்கும் முன்னேறுவதற்கும் பல புதிய கூறுகளை வழங்குகின்றன.

இறுதியில், வர்க்கப் போராட்டம் முடிவு கட்டும் நிலையை நெருங்கும் நேரத்தில் ஆளும் வர்ககத்தினுள்ளும் பழைய சமுதாயம் அனைத்தினுள்ளும் நடந்தேறும் சிதைவுப் போக்கானது அவ்வளவு உக்கிரமுற்றுப் பட்டவததனமாகிவிடுவதால், ஆளும் வர்க்கத்திலிருந்து ஒரு சிறு பிரிவு துண்டித்துக் கொண்டு அதனிடமிருந்து விலகி எதிர்காலத்தைத் தன் பிடியில் கொண்டிருக்கும் வர்க்கமாகிய புரட்சி வர்க்கத்துடன் சேருகிறது. இதற்கு முந்திய காலத்தில் எப்படிப் பிரபுக்களில் ஒரு பிரிவினர் முதலாளித்துவ வர்க்கத்தின் தரப்புக்குச் செல்கின்றனர், குறிப்பாய் முதலாளித்துவச் சித்தாந்தவாதிகளில் வரலாற்று இயக்கத்தை ஒட்டுமொத்தமாய்த் தத்துவார்த்த வழியில் புரிந்து கொள்ளும் நிலைக்கு உயர்ந்துவிட்ட ஒரு பிரிவினர் பாட்டாளி வர்க்கத் தரப்புக்குச் செல்கின்றனர்.

இன்று முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் எல்லா வர்க்கங்களிலும் பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் மெய்யாகவே புரட்சிகரமான வர்க்கமாகும். ஏனைய வர்க்கங்கள் நவீனத் தொழிலினது வளர்ச்சியின் முன்னால் நலிவுற்றுச் சிதைந்து முடிவில் மறைந்து போகின்றது, பாட்டாளி வர்க்கம் மட்டும் தான் நவீனத் தொழிலுக்கே உரித்தான அதன் நேரடி விளைவாய் அமைகிறது.

மத்தியதர வர்க்கத்தின் கீழ்ப் பகுதிகளாகிய சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் எல்லாரும் தொடர்ந்து தாம் மத்தியதர வகுப்பினராய் நீடித்திருப்பதற்காக முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆகவே இவர்கள் பழமைப் பற்றாளர்களே அன்றி புரட்சித்தன்மை வாய்ந்தோரல்லர். அது மட்டுமல்ல, இவர்கள் பிற்போக்கானவர்களும் கூட, ஏனெனில் வரலாற்றின் சக்கரத்தை இவர்கள் பின்னோக்கி உருளச் செய்யமுயலுகிறார்கள். சந்தர்ப்பவசமாய்ப் புரட்சிகரமாய் இருப்பார்களாயின், இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குப் போய்விடும் தறுவாயில் இருக்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம், இவ்வாறு இவர்கள் பாதுகாப்பது தமது எதிர்கால நலன்களையே அன்றி நிகழ்கால நலன்களை அல்ல, பாட்டாளி வர்க்கத்தின் நோக்குநிலையைக் கைவிடுகிறார்கள்.

பழைய சமுதாயத்தின் அடிமட்டத்து அடுக்குகளிலிருந்து எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கசடாகிய "அபாயகரமான வர்க்கம்" பாட்டாளி வர்க்கப் புரட்சியால் எங்கேனும் ஒருசில இடங்களில் இயக்கத்துக்குள் இழுக்கப்படலாம். ஆனால் அதன் வாழ்க்கை நிலைமைகள் பிற்போக்குச் சதியின் கைக்கருவியாய் லஞ்சம் பெற்று ஊழியம் புரியவே மிகப் பெரும் அளவுக்கு அதைத் தயார் செய்கின்றன.

பாட்டாளி வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளில் பழைய சமுதாயத்தின வாழ்க்கை நிலைமைகள் ஏற்கனவே அனகேமாய்ப் புதையுண்டு விடுகின்றன. பாட்டாளிக்குச் சொத்து ஏதும் இல்லை, மனைவி மக்களிடத்து அவனுக்குள்ள உறவுக்கும் முதலாளித்துவக் குடும்ப உறவுகளுக்கும் பொதுவானது இப்போது எதுவும் இல்லை. பிரான்சில் எப்படியோ அதே போல் இங்கிலாந்திலும், ஜெர்மனியில் எப்படியோ அதே போல் அமெரிக்காவிலும், நவீனத் தொழில் துறை உழைப்பானது, மூலதனத்துக்குக் கீழ்ப்பட்டிருக்கும் நவீன அடிமை நிலையானது, பாட்டாளியிடமிருந்து தேசியத் தனித் தன்மையில் எந்தச் சாயலையும் விட்டு வைக்காமல் துடைத்தெடுத்து விட்டது. இந்தப் பாட்டாளிக்கு, சட்டம், ஒழுக்க நெறி, சமயம் ஆகியவை அத்தனையும் அத்தனை விதமான முதலாளித்துவ நலன்கள் பதுங்கிக்கொண்டிருக்கும் முதலாளித்துவத் தப்பெண்ணங்களே அன்றி வேறல்ல.

மேலாதிக்கம் பெற்ற முந்திய வர்க்கங்கள் யாவும் வாழ்க்கையில் ஏற்கனவே தாம் அடைந்திருந்த உயர் நிலைக்கு அரண் அமைத்துக் கொள்ளும் பொருட்டுத் தமது சுவீகரிப்பு முறைக்கு சமுதாயம் முழுவதையும் கீழ்ப்படுத்த முற்பட்டன. ஆனால் பாட்டாளிகள் தமது முந்திய சுவீகரிப்பு முறைகள் யாவற்றையும் ஒழித்திடாமல் சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளுக்கு எஜமானர்களாக முடியாது. அவர்கள் பாதுகாத்துக்கொள்ளவும் அரண் அமைத்துக் கொள்ளவும் சொந்தத்தில் ஏதும் இல்லாதவர்கள், தனியார் சொத்துடைமைக்கு இதன் முன்பிருந்த பாதுகாப்புகளையும் காப்புறுதிகளையும் தகர்த்து ஒழிப்பதே அவர்களது இலட்சியப் பணி.

முந்திய வரலாற்று இயக்கங்கள் எல்லாம் சிறுபான்மையோரது இயக்கங்களே, அல்லது சிறுபான்மையோரது நலனுக்கான இயக்கங்களே ஆகும். ஆனால் பாட்டாளி வர்க்க இயக்கம் மிகப் பெருவாரியானோரது நலனுக்காக மிகப் பெருவாரியானோர் தன்னுணர்வோடு நடத்தும் சுயேச்சையான இயக்கமாகும். தற்கால சமுதாயத்தின் அடிமட்டத்து அடுக்காகிய பாட்டாளி வர்க்கமானது அங்கீகாரம் பெற்ற சமுதாயத்தில் மேலமைந்த அத்தனை அடுக்குகளையும் காற்றிலே பறந்தெழச் செய்யாமல் அசையவோ நிமிர்ந்து நிற்கவோ முடியாது.

முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளிவர்க்கம் நடத்தும் போராட்டம், உள்ளடக்கத்தில் இல்லையேனும் எப்படியும் வடிவத்தில், ஆரம்பத்தில் தேசியப் போராட்டமாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் தனது நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன்தான் முதலின் கணக்கு தீர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பாட்டாளி வர்க்கத்தினது வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களை விவரித்த நாம், தற்கால சமுதாயத்தில் ஏறக்குறைய திரை மறைவில் நடைபெறும் உள்நாட்டுப் போரை, அது பகிரங்கப் புரட்சியாய் வெடித்து, முதலாளித்துவ வர்க்கம் பலாத்காரமாய் வீழ்த்தப்படுவதன் மூலம் பாட்டாளி வர்க்க ஆட்சியதிகாரத்துக்கு அடித்தளம் இடப்படும் நிலை வரையில் உருவரை தீட்டிக் காட்டினோம்.

இதுகாறும் சமூக அமைப்பு ஒவ்வொன்றும், ஏற்கனவே நாம் கண்ணுற்றது போல், ஒடுக்கும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையையே அடிப்படையாய்க் கொண்டிருந்தது. ஆனால் ஒரு வர்க்கத்தை ஒடுக்கி வைக்க வேண்டுமாயின், அந்த வர்க்கம் தொடர்ந்து தனது அடிமை நிலையிலாவது நீடிப்பதற்கு அவசியமான குறிப்பிட்ட நிலைமைகளை அதற்கு உத்தரவாதம் செய்து தந்தாக வேண்டும். பண்ணையடிமை முறை நிலவிய காலத்தில் பண்ணையடிமை தன்னை நகர சமுதாய உறுப்பினனாய் உயர்த்திக் கொள்ள முடிந்தது, அதே போல் பிரபுத்துவ எதேச்சாதிகாரத்தின் ஒடுக்குமுறையில் குட்டிமுதலாளித்துவப் பிரிவினர் முதலாளியாய் வளர முடிந்தது. ஆனால் நவீன காலத்தின் தொழிலாளி இதற்கு மாறாய், தொழில் முன்னேற்றத்துடன் கூடவே உயர்ந்து செல்வதற்குப் பதில், தனது வர்க்கம் நிலவுதற்கு அவசியமான நிலைமைகளுக்கும் கீழே மேலும் மேலும் தாழ்ந்து செல்கிறான். அவன் ஓட்டாண்டியாகி ஏதும் இல்லாதான் ஆகின்றான், மக்கள் தொகைகையும் செல்வத்தையும் காட்டிலும் இல்லாமை அதிவேகமாய் அதிகரிக்கிறது. ஆகவே இப்போது தெட்டத் தெளிவாய்த் தெரிகிறது - முதலாளித்துவ வர்க்கம் இனி சமுதாயத்தின் ஆளும் வர்க்கமாய் இருக்கத் தகுதியற்றது, தான் நீடித்து நிலவுதற்கு வேண்டிய நிலைமைகளை யாவற்றுக்கும் மேலான சட்டவிதியாய் இனியும் சமுதாயத்தின் மீது பலவந்தமாய் இருத்தத் தகுதியற்றது என்பது தெட்டத் தெளிவாய்த் தெரிகிறது. அது ஆளத் தகுதியற்றதாகிறது - ஏனெனில் அதன் அடிமை அவனது அடிமை நிலையில் தொடர்ந்து வாழ்வதற்கு அதனால் வகை செய்ய முடியவில்லை, அவன் அதற்கு உண்டி அளிப்பதற்குப் பதில் அது அவனுக்கு உண்டி அளிக்க வேண்டிய ஒரு நிலைக்கு அதன் அடிமை தாழ்ந்து செல்வதை அதனால் தடுக்க முடியவில்லை. சமுதாயம் இனி இந்த முதலாளித்துவ வர்க்கத்துக்குப் பணிந்து வாழ முடியாது, அதாவது முதலாளித்துவ வர்க்கம் இனியும் தொடர்ந்து நீடிப்பது சமுதாயத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது.

மூலதனம் உருவாதலும் பெருகிச் செல்லுதலும் தான் முதலாளித்துவ வர்க்கம் நிலவுதற்கும் ஆதிக்கம் புரிவதற்குமான அத்தியாவசிய நிபந்தனை. கூலியுழைப்புதான் இந்த மூலதனத்துக்கு அத்தியாவசிய நிபந்தனையாய் அமைகிறது. கூலியுழைப்பானது தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியையே ஆதாரமாய்க் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஊக்குவிக்க வேண்டியிருக்கும் தொழில் முன்னேற்றமானது, தொழிலாளர்களிடையே போட்டியின் விளைவான தனிமைப்பாட்டை நீக்கி, ஒற்றுமையின் விளைவான புரட்சிகர இணைவை உண்டாக்குகிறது. இவ்விதம் நவீனப் பெருவீததத் தொழிலின் வளர்ச்சியானது, எந்த அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கம் பொருள்களை உற்பத்தி செய்தும் சுவீகரித்தும் வருகிறதோ அந்த அடிப்படைக்கே உலை வைக்கிறது. ஆகவே முதலாளித்துவ வர்க்கம் தனக்கும் சவக்குழி தோண்டுவோரையே அனைத்துக்கும் மேலாய் உற்பத்தி செய்கிறது. இவ்வர்க்கத்தின் வீழ்ச்சியும், அதேபோல் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் தவிர்க்கவொண்ணாதவை.

கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை - மார்க்ஸ் - எங்கெல்ஸ்

கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை - மார்க்ஸ் - எங்கெல்ஸ்

ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் - கம்யூனிசம் என்னும் பூதம். போப்பாண்டவரும் ஜாரரசனும், மெட்டர்னிஹும் கிஸோவும், பிரெஞ்சுத் தீவிரவாதிகளும் ஜெர்மன் உளவாளிகளுமாய், பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஒட்டுவதற்காகப் புனிதக் கூட்டு சேர்ந்திருக்கின்றன.
ஆட்சியிலுள்ள தனது எதிராளிகளால் கம்யூனிஸ்டு என்று ஏசப்படாத எதிர்க் கட்சி எங்கேனும் உண்டா? கம்யூனிசம் என்று இடித்துரைத்துத் தன்னிலும் முன்னேறிய எதிர்த்தரப்பாருக்கும், மற்றும் பிற்போக்கான தனது எதிராளிகளுக்கும் பதிலடி கொடுக்காத எதிர்க் கட்சிதான் உண்டா?
இரண்டு முடிவுகள் இவ்வுண்மையிலிருந்து எழுகின்றன:
1. கம்யூனசிமானது ஒரு தனிப்பெரும் சக்திகாயகிவிட்டதை ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுவிட்டன.
2. பகிரங்கமாய் அனைத்து உலகும் அறியும் வண்ணம் கம்யூனிஸ்டுகள் தமது கருத்துகளையும் நேரடியாய்க் கட்சியின் அறிக்கை மூலம் கம்யூனிசப் பூதமெனும் இந்தக் குழந்தைப் பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
இந்த நோக்கத்துடன், பல்வேறு தேசிய இனங்களையும் சேர்ந்த கம்யூனிஸ்டுகள் லண்டனில் கூடி, அடியிற் கண்ட அறிக்கையை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஃபிளெமிஷ், டேனிஷ் மொழிகளில் வெளியிடுவதற்காக வகுத்திட்டனர்.

மகாருஷ்யர்களின் தேசிய இனப் பெருமிதம் பற்றி - லெனின்

மகாருஷ்யர்களின் தேசிய இனப் பெருமிதம் பற்றி - லெனின்


தேசிய இனத்தைப் பற்றியும் தாய்நாட்டைப் பற்றியும் எவ்வளவு பேச்சும் வாதமும் கூச்சலும் இன்று காணப்படுகின்றன! இங்கிலாந்தில் மிதவாத மந்திரிகளும் தீவிரவாத மந்திரிகளும், பிரான்சில் "முற்போக்கான" பத்திரிகை எழுத்தாளர்கள் பலரும் "இவர்கள் பிற்போக்கான பத்திரிகை எழுத்தாளர்கள் சொல்வதை எல்லாம் பூர்ணமாக ஏற்றுக் கொள்கிறார்கள்", ருஷ்யாவின் அதிகார பூர்வமனா, காடேட்டு, முற்போக்கான [சில நரோத்னிக்குகளும் "மார்க்சியவாதிகளும்" சேர்ந்த] பேனா ஓட்டிகளின் கும்பல் - எல்லோருமே தங்களது "தாய் நாட்டின்" விடுதலையையும் சுதந்திரத்தையும், தேசிய இன சுதந்திரக் கோட்பாட்டின் சிறப்பையும் ஆயிரம் ஆயிரம் விதமான சுருதிகளில் போற்றிப் புகழ்கிறார்கள். இவர்களில் கொலைகார நிக்கோலஸ் ரொமாபனவையும், நீக்ரோக்கள், இந்தியர்கள் கியோரைச் சித்திரவதை செய்பவர்களையும் கூலிக்காகத்துதிபாடுபவர்கள் எங்கே முடிகிளார்கள், தமது முட்டாள்தனத்தினாலும் மனவுறுதியின்மையினாலும் "வெள்ளப் போக்கில்" தம் வசமின்றி அடித்துச் செல்லப்படும் சாதாரண பிலிஸ்டைன்கள் எங்கே துவங்குகின்றார்கள் என்பதை நம்மால் வேறுபடுத்திக் கண்டுபிடிக்க இயலாது. இந்த வேறுபாடு முக்கியமானதுமல்ல. ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனங்களின் நிலப்பிரபுக்கள், முதலாளிகளின் நலன்களுடன் உறுதியாக இணந்திருக்கும் மிக பரவலானதும் மிக ஆழப்பதிந்ததுமான ஒரு சித்தாந்தப் போக்கை நாம் காண்கிறோம். இவ்வர்க்கங்களுக்குச் சாதகமான கருத்துகளைப் பரிசாரம் செய்வதற்குக் கோடி, பத்துக்கோடிக் கணக்கிலும் பணம் ஒவ்வொரு ஆண்டும்
செலவிடப்படுகிறது, மேன்ஷிக்கவ் போன்ற திடமான தேசியவெறியர்களிலிருந்து தங்களது சர்தர்ப்பவாதத்தினால் அல்லது மனவுறுதியின்மையினால் தேசியவெறியர்களாகிவிட்ட பிளெஹானவ், மாஸ்லவ், ருபனோவிச், ஸ்மிர்னோவ், கிரொபோட்கின், பூர்த்ஸெவ் போன்றவர்கள் வரை எல்லா ஊற்றுக்கண்களிலிருந்தும் நீரைப் பெற்றுக்கொள்ளும் பெரிய அரைவை மில் இது.

இந்தச் சித்தாதந்தப் போக்கைப் பற்றி மகாருஷ்ய சமூக - ஜனநாயகவாதிகளாகிய நாமும் நமது கொள்கையை விளக்குவோம். ஐரோப்பாவின் கிழக்குக் கோடியிலும் ஆசியாவின் ஒரு பெரும் பரப்பிலும் ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனத்தின் பிரதிநிதிகளாகிய நாம் தேசிய இனப் பிரச்சினையின் மாபெரும் முக்கியத்துவத்தை மறப்பது அழகல்ல, - அதுவும் "மக்களினங்களின் சிறைச் சாலை" என்று மிகப் பொருத்தமாக அழைக்கப்படும் ஒருநாட்டில், - ஐரோப்பாவின் கிழக்குக் கோடியிலும் ஆசியாவிலும் முதலாளித்துவமானது பல "புதிய" பெரிய, சிறிய தேசிய இனங்களுக்கு உயிரும் உணர்வும் ஊட்டி எழுப்பிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், -ஐய்கியப் பிரபுக்களின்கவுன்சிலின் நலன்களுக்கும், குச்கோவ்கள், கிரேஸ்தோவ்னிக்கவ்கள், தல்கரூக்கவ்கள், குத்லெர்கள், ரோதிச்செவ்கள் ஆகியோரது நலன்களுக்கும் உகந்த வகையில் பல தேசிய இனப் பிரச்சினைகளைத் "தீர்ப்பதற்கு வேண்டி" லட்சக்கணக்கான மாகாருஷ்யர்களையும் "வேற்று இனத்தவர்களையும்" ஜாரிஸ முடியாட்சியானது ஆயுதம் தந்து தயாராக வைத்திருக்கையில் அதை நாம் மறப்பது அழகல்ல.

வர்க்க உணர்வு கொண்ட மகாருஷ்யப் பாட்டாளிகளாகிய நடக்குத் தேசிய இனப்பெருமிதம் அப்பாற் பட்டதா? இல்லை , நிச்சயமாக இல்லை! நாம் நமது மொழியையும் தாய்நாட்டையும் நேசிக்கிறோம், அதன் உழைக்கும் மக்களை [அதன் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் பத்தில் ஒன்பது பங்கு] ஜனநாயகவாதிகள், சோஷலிஸ்டுகளின் உணர்வு பூர்வமான வாழ்க்கைத் தரத்துக்கு உயர்த்துவதற்கு நம்மால் இயன்றதனைத்தையும் செய்கிறோம். ஜாரிஸக் கொலையாளிகளும் பிரவுக்களும் முதலாளிகளும் நமது அருமையான தாய்நாட்டுக்குச் செய்யும் வன்முறைச் செயல்களையும் கொடுமைகளையும் அவமதிப்பிகளையும் கண்டு உணரும் பொழுது மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக நாம் வேதனைப்படுகிறோம். மகாருஷ்யர்களாகிய நமது மத்தியில் இச்கொடுமைகளை எதிர்த்துப் போராடுபவர்கள் இருக்கத்தான் வய்கிறார்கள் என்பதும், அதே நம்மிடையிலிருந்துதான் ரடிஷ்செவ், டிசம்பரிஸ்டுகள், 1870 க்களைச் சேர்ந்த புரட்சிகர ராஸ்னச்சீன்த்ஸிகள் ஆகியோர் தோன்றினார்கள் என்பதும், 1905ல் மகாருஷ்யத் தொழிலாளி வர்க்கம் ஒரு பெரும் வலிமை வாய்ந்த, வெகுஜனப் புரட்சிக் கட்சியை உருவாக்கியது என்பதும், அதே சமயத்தில் மகாருஷ்ய விவசாயி ஜனநாயகவாதியாகத் தொடங்கி, மத குருமார்களையும் நிலப்பிரபுக்களையும் துரத்தியடிக்கக் கிளம்பினான் என்பதும் ஆகிய இவற்றைக் கண்டு நாம் பெருமிதப்படுகிறோம்.

தமது வாழ்நாளைப் புரட்சிக்காகவே அர்ப்பணித்த மகாருஷ்ய ஜனநாயகவாதியான செர்னிஷேவ்ஸ்கி அரை நுற்றாண்டுக்கு முன்பு கூறிய நம் ஞாபகத்துக்கு வருகிறது. "துயரம் நிறைந்த ஒரு தேசிய இனம்,. அடிமைகள் வாழும் ஒரு தேசிய இனம், உச்சியிலிருநு்து அடிவரை எல்லோரும் அடிமைகள்" என்றார் அவர். வெளிப்படையாகவும் மறைவாகவும் அடிமைகளாக [ஜாரிஸ முடியாட்சியின் அடிமைகளாக] இருக்கும் மகாருஷ்யர்களுக்கு இவ்வர்த்தைகளை நினைவுகூர்வது பிடிப்தில்லை. ஆனால் நம்மைப் பொருத்தவரை, நமது நாட்டின் மீதுள்ள உண்மையான அன்பை வெளிப்பத்தும் வார்த்தைகள் இவை, மகாருஷ்யப் பொதுஜனங்களிடையில் புரட்சி உணர்வு இல்லையே என்ற துயரம் தோய்ந்த அன்பு அது. இந்தப் புரட்சி உணர்வு அன்று காணப்படவில்லை. இன்று அது குறைவாகக் காணப்படுகிறது, ஆனால் கட்டாயமாக நிலவுகிறது. நமது மகாருஷ்ய தேசிய இனமும் கூட ஒரு புரட்சிகரமான வர்க்கத்தை உருவாக்கியிருக்கிறது என்பதால், கொலைகாரக் கலகங்களையும், வரிசை வரிசையாகத் தூக்குமரங்களையும், கொடுஞ்சிறைகளையும், பெரும் பஞ்சங்களையும், மதகுருக்களுக்கும் ஜார்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் அடிமை ஊழியம் செய்வதை மட்டுமின்றி, சுதந்திரத்துக்கும் சோஷலிசத்துக்குமான போராட்டத்தையும் பேருதாரணங்களாக மனித இனத்துக்கு நமது தேசிய இனம் கூடத் தர முடியும் என நிரூபித்திருப்பதால் நம்முள்ளத்தில் ஒரு தேசிய இனம் பெருமித உணர்வு ஊற்றெடுக்கிறது.

நம்மை ஒரு தேசிய இனப் பெருமித உணர்வு ஆட்கொள்ளுகிறது. அதே காரணத்தினால் நாம் நமது அடிமைத்தனம் நிறைந்த கடந்த காலத்தைக் குறிப்பாக வெகுவாக வெறுக்கிறோம் [அப்பொழுதுதான் ஹங்கேரி, போலந்து, பாரசீகம், சீனா ஆகியவற்றின் சுதந்திரத்தை நசுக்குவதற்காக நிலப்பிரபுக்கள் விவசாயிகளைப் போக்களத்திற்குத் தள்ளினார்கள்], அதே காரணத்தினால் அடிமைத்தனம் நிறைந்த இக்காலத்தையும் நாம் வெறுக்கிறோம். இப்பொழுது போலந்தையும் உக்ரேனியாவையும் குரல்வளையைப் பிடித்து நெறிப்பதற்காகவம், பாரசீகத்திலும் சீனாவிலும் ஜனநாயக இயக்கத்தை நசுக்குவதற்காகவும், நமது மகாருஷ்ய தேசிய இனக் ககௌரவத்துக்கு இழுக்காக விளங்கும் ரொமானவ்கள், பப்ரீன்ஸ்கிகள், புரிஷ்கேவிச்சுகளின் கும்பலைப் பலப்படுத்துவதற்காகவும் அதே நிலப்பிரபுக்கள், முதலாளிகளின் ஆதரவுடன், நம்மைப் போர்க் களத்திற்குத் தள்ளினார்கள். ஒரு மனிதன் அடிமையாகப் பிறந்தால் அது அவனுடைய குற்றம் அல்ல, ஆனால் தனது விடுதலைக்குப் போராட விருமி்பாதது மட்டுமின்றி, தனது அடிமைத்தனத்தை ஆதரித்து அதை அழகுபட வர்ணிக்கும் [உதாரணமாக, போலந்து, உக்ரேனியா போன்றவற்றின் கழுத்தை நெரிப்பது மகாருஷ்யர்களின் "தாய்நாட்டைக் காப்பதாகும்" என்று கூறும்] ஒரு அடிமை அடிவரடி, கீழ்மகன், அவனைக் கண்டால் நியாயமான சீற்றமும் வெறுப்பும் அருவருப்பும் நம் மனதில் எழுகின்றன.

"பிற தேசிய இனங்களை ஒடுக்குகிற என்த ஒரு தேசிய இனமும் சுதந்திரமாயிருக்க முடியாது" பத்தொன்பதாம் நூற்றாண்டின் முரண்பாடுகளற்ற ஜனநாயத்தின் மாபெரும் பிரதிநிதிகளாக விளங்கியவர்களும், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின்ஆசான்களுமான மார்க்ஸ், எங்கெலஸ்சின் வாக்கு இது. தேசிய இனப் பெருமித உணர்வு நிறைந்த மகாருஷ்யத் தொழிலாளர்களாகிய நாம், என்ன நேரினும் சரியே, ஒரு கட்டற்ற, சுதந்திரமான, சுயேச்சையான, ஜனநாயக ரீதியான, குடியரசான, பெருமிதம் மிக்க மகாருஷ்யாவை விரும்புகிறோம், சமத்துவம் என்ற மனிதத் தன்மை மிக்க கோட்பாட்டின் அடிப்படையில் - ஒரு பெரும் தேசிய இனத்துக்கு இழுக்கைத் தரும் விசேஷ உரிமைகள் என்ற நிலப்பிரபுத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் அல்லாமல் - அண்டை நாடுகளுடன் தனது உறவுகளை அமைத்துக் கொள்ளும் மகாருஷ்யாவை நாம் பிரும்புகிறோம். இதை நாம் விரும்புகிற காரணத்தினால் நாம் கூறுகிறோம், இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் [ஐரோப்பாவின் கீழ்க் கோயிலும் கூடத்தான்] "தாய்நாட்டைக் காப்பது" என்பது முடியாட்டிசியை, நமது தாய்நாட்டின் நிலப்பிரபுக்களை, முதலாளிகளை - நமது நாட்டின் இப்படுமோசமான எதிரிகளை எதிர்த்து எல்லாவிதமான புரட்சிகரமான முறைகளையும் உபயோகித்துப் போராடுவதன்றி வேறுவிதத்தில் சாத்தியமில்லை- எந்தப் பாரிலும் ஜாரிஸத்தின் தோல்வியை, மகாருஷ்யாவின் பத்தில் ஒன்பது குடிமக்களுக்கு ஆகக் குறைந்த தீமை என்ற வகையில், விரும்பாமல் மகாருஷ்யர்கள் "தாதாய்நாட்டைக் காப்பது" சாத்தியம் அல்ல என்று நாம் கூறுகிறோம். ஏனென்றால் ஜாரிஸம் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் இந்தப் பத்தில் ஒன்பது பேரை ஒடுக்குகிறது என்பது மட்டுமல்ல, மேலும் மற்ற தேசிய இனங்களை ஒடுக்கும்படியும், இந்த அவமானத்தை நயவஞ்சகமான, நாட்டுப்பற்று மிக்கவை போல் தோன்றுகின்ற போலி நாட்டுப்பற்றுச் சொற்களைக் கொண்டு மூடிமறைக்கும்படியும் அவர்களுக்கு ஜாரிஸம் கற்றுக் கொடுத்து அவர்களை ஒழுக்க நெறிபிறழச் செய்கிறது, இழிவு படுத்துகிறது, மானங்கெடுக்கிறது, வேசிகளாக்குகிறது.

ஜாரிஸம் மட்டுமின்றி, அதனுடைய பாதுகாவலின் கீழ் மற்றொரு வரலாற்று பூர்வமான சக்தியும் தோன்றி வலுப் பெற்றுள்ளது என்று சிலர் ஆட்சேபிக்கக் கூடும், அதுதான் மகாருஷ்ய முதலாளித்துவம், அது பரந்த பிரதேசங்களைப் பொருளாதார ரீதியிலி ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவந்து ஒன்றுபடுத்தி ஒருமுற்போக்குச் செயலைச் செய்துவருகிறது. ஆனால் இந்த ஆட்சேபத்தை முன்வைத்து நமது சோஷலிஸ்டு தேசியவெறியர்களின் போக்கிற்கு நியாயம் கற்பித்து விட முடியாது, அதற்கு மாறாக அமலும் பலமாக அவர்களுடைய போக்கு கண்டனத்துக்கே உள்ளாகிறது. இந்த சோஷலிஸ்டு தேசியவெறியர்களை நாம் ஜாரிஸ புரிஷ்கேவிச் சோஷலிஸ்டுகள் என்று அழைக்க வேண்டும்.[லஸ்ஸால் வாதிகளை ராஜவிசுவாசமுள்ள பிரஷ்ய சோஷலிஸ்டுகள் என்று மார்க்ஸ் அழைத்தாரல்லவா, அதைப் போல]. ஆதிக்கம் வகிக்கும் மகாருஷ்ய முதலாளித்துவத்துக்குச் சாதகமாகவும் பற்பல சிறு தேசிய இனங்களுக்குப் பாதகமாகவும் இப் பிரச்சினையை வரலாறு முழுவதும் வன்முறை, கொள்ளை, குருதி, புன்மை ஆகியவற்றின் வரலாறுதான். எப்படி இருந்தாலும் சிறு தேசிய இனங்களை வைத்துக்காக்க வேண்டும் என்ற கொள்கையை நாம் ஆதரிக்கவில்லை, மற்ற நிலைமைகள் சமமாக இருக்குமேயானால் அதிகார மையப்பாட்டையே நாம் நிச்சயம் ஆதிக்கிறோம், கூட்டாட்சி உறவுகள் என்ற அற்பர்களின் லாட்சியத்தை நாம் எதிர்க்கிறோம். ஆயினும் நாம் வைத்துf கொண்டதைப் போல நிலைமை இருந்தாலும் கூட, முதலாவதாக, உக்ரேனியா இத்தியாதிகளின் கழுத்தை நெரிப்பதற்கு ரொமானவ் - பப்ரீன்ஸ்கி - புரிஷ்கேவிச்சுகளுக்கு ஒத்தாசை செய்வது நமது வேலையல்ல, ஜனநாகவாதிகளின் வேலையல்ல [சோஷலிஸ்டுகளைப் பற்றிப் பேசவே வேண்டாம்]. பிஸ்மார்க் தனக்கே உரிய ஜங்கர் முறையில் ஒரு முற்போக்கான வரலாற்றுப் பணியை ஆற்றி விட்டான். ஆனால் இதைக் காரணமாகக் கொண்டு பிஸ்மார்க்கை சோஷலிஸ்டுகள் ஆதரிப்பது சரி என்று ஒருவர் வாதிப்பாரேயானால் அவர் அருமையான "மார்க்சியவாதிதான்"! மேலும், பிற தேசிய இனங்களால் ஒடுக்கப்பட்டுச் சிதறுண்டு கிடந்த ஜெர்மானியர்களை ஐக்கியப்படுத்தி, பொருளாதார வளர்ச்சிக்கு வகை செய்தான் பிஸ்மார்க். ஆனால், மகாருஷ்யாவின் பொருளாதாச் செழிப்புக்கும் வேகமான வளர்ச்சிக்கும் தேவையானது மற்ற தேசிய இனங்களை மகாருஷ்யர்கள் அடக்கி ஒடுக்கி வன்முறையாக நடத்துவதிலிருந்து இந்நாடு விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான். பிஸ்மார்க் மனப்பான்மை கொண்ட உண்மை ருஷ்யர்களைக் கண்டு நம்மவர்கள் இந்த வேற்றுமையை மறந்துவிடுகிறார்கள்.

இரண்டாவதாக, ஆதிக்கம் வகிக்கும் மகாருஷ்ய முதலாளித்துவத்துக்குச் சாதகமாக இப்பிரச்சினையை வரலாறு தீர்த்துவைக்குமேயானால், முதலாளித்துவம் தோற்றுவிக்கும் கம்யூனிஸ்ட் புரட்சியின் தலையாய இயக்கு சக்தி என்ற வகையில் மகாருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் சோஷலிசப் பணி இன்னும் பெரியதாக இருக்கும் என்பது அதன் அடுத்த விளைவாகும். பூரண தேசிய இனச் சமத்துவம், சகோதரத்துவம் என்ற உணர்வில் தொழிலாளிகளைத் தொடர்ந்து நீண்டநாள் பயிற்றுவித்து வளர்ப்பது பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குத் தேவையானது. எனவே, மகாருஷ்யர்களால் ஒடுக்கப்படும் எல்லாத் தேசிய இனங்களுக்கும் பூரண சமத்துவமும் சுயநிர்ணய உரிமையும் கொடுக்கப்பட வேண்டும் என்று மிகவும் உறுதியாகவும், சிறிதும் விட்டுக் கொடுக்காமலும், தைரியமாகவும் புரட்சிகரமான முறையில் போராட வேண்டும் என்று பொதுமக்களுக்கு முறையாகப் போதிக்க வேண்டும், மகாருஷ்யப் பாட்டாளி வர்க்த்தின் நலன்களுக்கே இது மிகவும் தேவையானது. மகாருஷ்யர்களின் தேசிய இனப் பெருமிதத்தின் நலன்களம் [அடிமைப் பொருளிலல்ல] மகாருஷ்ய [இன்னும் இதர] பாட்டாளிகளின் சோஷலிச நலன்களும் முற்றிலும் பொருந்தியவைதான். எப்பொழுதும் நமக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர் மார்க்ஸ்தான், அவர் இங்கிலாந்தில் பல பத்தாண்டுகள் வாழ்ந்து, பாதி ஆங்கிலேயராக மாறி, ஆங்கிலேயத் தொழிலாளர்களின் சோஷலிச இயக்கத்தின் நல்களுக்காக அயர்லாந்துக்குச் சுதந்திரமுk தேசிய விடுதலையும கோரினார்.

நாம் பரிசீலனை செய்த இரண்டாவது அனுமான வழக்கில் பிளெஹானவ் முதலிய உள்நாட்டு சுதந்திர, ஜனநாயக மகாருஷ்யாவுக்கு மட்டுமின்றி, ருஷ்யாவின் எல்லாத் தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்க சகோதரத்துவத்துக்கும், அதாவது சோஷலிசத்தின் நலன்களுக்கு துரோகம் செய்தவர்களாக இருப்பார்கள்.

சோட்ஸியல் - டெமாகிராட்,
இதழ் 35, 1941, டிசம்பர் 12