4, தற்போதுள்ள பற்பல எதிர்கட்சிகள் குறித்து கம்யூனிஸ்டுகளின் நிலை
- மார்க்ஸ் - எங்கெல்ஸ்
[கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை]
இங்கிலாந்திலுள்ள சார்ட்டிஸ்டுகளையும் அமெரிக்காவிலுள்ள நிலச் சீர்திருத்தாளர்களையும் போல் தற்போதுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்டுகளுடைய உறவுநிலை இரண்டாவது பிரிவில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
கம்யூனிஸ்டுகள் தொழிலாளி வர்க்கத்தின் உடனடி நோக்கங்கள் சித்தி பெறுவதற்காக, உடனடி நலன்கள் நிறை வேற்றம் பெறுவதற்காகப் போராடுகிறார்கள், ஆனால் தற்காலத்திய இயக்கத்தில் இந்த இயக்கத்தின் எதிர்காலத்தையும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்து பேணிப் பாதுகாக்கின்றனர். பிரான்சில் கம்யூனிஸ்டுகள் பழமைவாத, தீவிரவாத முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு எதிராய் சமூச - ஜனநாயகவாதிகளுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள், ஆனால் மாபெரும் புரட்சியிடமிருந்து மரவு வழியில் வந்துள்ள தொடர்கள் குறித்தும் பிரமைகள் குறித்தும் விமர்சனப் பார்வை கொண்ட ஒரு நிலையை ஏற்பதற்காண உரிமையை விட்டுவிடாமல் தம் கையில் வைத்திருக்கிறார்கள்.
சுவிட்ஸர்லாந்தில் அவர்கள் தீவிரவாதிகளை ஆதரிக்கிறார்கள், அதேபோது தீவிரவாதக் கட்சி பிரெஞ்சு நாட்டு அர்த்தத்தில் ஜனநாயக சோஷலிஸ்டுகளாகிய ஒரு பகுதியும் தீவிரவாத முதலாளித்துவ வர்க்கத்தாராகிய ஒரு பகுதியுமான ஒன்றுக்கொன்று பகைமையான இரு கூறுகளைக் கொண்டிருப்பதை அவர்கள் தவறாமல் கவனத்தில் வைத்திருக்கிறார்கள்.
போலந்தில் சே விடுதலைக்கு விவசாய நிலவுடைமையிலான புரட்சி தலையாய முந்நிபந்தனையென வற்புறுத்தும் கட்சியை, 1846ஆம் ஆண்டு கிராக்கோவ் எழுச்சியை உசுப்பிவிட்ட கட்சியை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.
ஜெர்மனியில் முதலாளித்துவ வர்க்கம் எதேச்சாதிகார முடியாட்சியையும் பிரபுத்துவ நிலவேந்தர் அமைப்பையும் பிற்போக்குவாதக் குட்டிமுதலாளித்துவப் பகுதிகளையும் எதிர்த்துப் புரட்சிகரமாய்ச் செயல்படும் போதெல்லாம், அவர்கள் அதனுடன் சேர்ந்து நின்று போராடுகிறார்கள்.
ஆனால் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலுள்ள தீராப் பகைமை குறித்து கணப்பொழுதும் ஓயாமல் அவர்கள் சாத்தியமான முழு அளவுக்குத் தொழிலாளர்களுக்கு உணர்வூட்டுகிறார்கள், முதலாளித்துவ வர்க்கம் தனது மேலாண்மையுடன் கூடவே தவிர்க்க முடியாதபடி கொண்டு வந்தாக வேண்டியிருக்கும் சமூக, அரசியல் நிலைமைகளை ஜெர்மன் தொழிலாளர்கள் அப்படியே நேரே முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான ஆயுதங்களாய்ப் பயன்படுத்தும் பொருட்டும், ஜெர்மனியில் பிற்போக்கு வர்க்கங்கள் வீழ்ச்சியுற்றதும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான போராட்டம் உடனடியாகவே ஆரம்பமாகிவிடும் பொருட்டும் அவர்கள் இப்படித் தொழிலாளர்களுக்கு உணர்வூட்டுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் பிரதானமாய் ஜெர்மனியிடம் முக்கிய கவனம் செலுத்துகிறார்கள். எனெனில் ஜெர்மனியானது முதலாளித்துவப் புரட்சி நடைபெறும் தறுவாயில் இருக்கிறது, இங்கு இந்த முதலாளித்துவப் புரட்சி ஐரோப்பிய நாகரிகம் அதிகம் முன்னேறியிருக்கும் நிலைமைகளிலும், பதினேழாம் பிரான்சிலும் இருந்ததைக் காட்டிலும் மி அதிக வளர்ச்சி பெற்றுள்ள ஒரு பாட்டாளி வர்க்கம் இருந்து வரும் சூழலிலும் நடைபெறவிருக்கிறது என்பதுடன், ஜெர்மனியில் முதலாளித்துவப் புரட்சியானது அதை உடனடியாகவே பின்தொடரும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான ஒத்திகையே ஆகும்.
சுருங்கக் கூறின், கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் நிலைவரங்களது அமைப்பு முறையை எதிர்த்து நடைபெறும் புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதரிப்பவர்கள் ஆவர்.
இந்த இயக்கங்கள் யாவற்றிலும் அவர்கள் சொத்துடைமைப் பிரச்சினையை, இதுவரை அது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், தலைமையான பிரச்சினையாய் முன்னிலைக்குக் கொண்டுவருகிறார்கள்.
முடிவில், எல்லா நாடுகளையும் சேர்ந்த ஜனநாயகக் கட்சிகளது ஒற்றுமைக்காகவும் அவற்றினிடையிலான உடன்பாட்டுக்காகவும் அவர்கள் பாடுபடுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் தமது கருத்துகளையும் நோக்கங்களையும் மூடிமறைக்க மனம் ஒப்பாதவர்கள். இன்றுள்ள சமுதாயத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலவந்தமாய் வீழ்த்த வேண்டும், அப்போதுதான் தமது இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்டுகள் ஒளிவுமறைவின்றி பறைசாற்றுகிறார்கள், அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள், கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று. பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் வென்று பெறுவதற்கு அனைத்து உலகும் இருக்கிறது.
உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!

No comments:
Post a Comment