Saturday, February 6, 2010

5. தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வடிவங்களும் அது அரசியல் அதிகாரத்தை வெல்வதற்கான வன்முறைகளும்

சோஷலிசப் புரட்சி பற்றி

மார்க்ஸ் - எங்கெல்ஸ் - லெனின்

5. தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வடிவங்களும் அது அரசியல் அதிகாரத்தை வெல்வதற்கான வன்முறைகளும்

"தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கை பற்றிய உரை"
என்பதிலிருந்து

கா.மார்க்ஸ்

1871 செப்டம்பர் 21-ல் நடந்த சர்வதேசத் தொழிலாளர்சங்கத்தின் லண்டன் மாநாட்டில் பேசியது.

நாம் அரசாங்கங்களுக்கு அறிவித்துத் தீர வேண்டியதாவது, நீங்கள் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பிவிடப்பட்டுள்ள ஓர் ஆயுதமேந்திய சக்தி என்பதை நாங்கள் அறிவோம். எங்கெல்லாம் எங்களுக்குச் சாத்தியம் என்று தெரிகிறதோ அங்கெல்லாம் சமாதான பூர்வமான வழியில் உங்களுக்கு எதிராகச் செயல் படுவோம், அவசியம் ஏற்படும் போதெல்லாம் ஆயுதங்கள் எடுத்துச் செயல் படுவோம்.




--------------------------------------------------------------------------------

"சோஷலிஸ்டுகளுக்கு எதிரான சட்டத்தின் மீது நடந்த நாடாளுமன்ற விவாதம்"
[கட்டுரையின் நகல்]
என்பதிலிருந்து

கா.மார்க்ஸ்

வரலாற்று வளர்ச்சியைத் தடுப்பதற்காக ஒரு குறிப்பிட்ட கமுதாயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் பலாத்காரத்தைக் கையாள்கிற தருணம் வரைதான் அவ்வளர்ச்சி "சமாதான பூர்வமானதாக" இருக்க முடியும். எடுத்துக்காட்டாக, இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ தொழிலாளி வர்க்கம் பிரிட்டிஷ் பார்லிமெண்டிலோ அமெரிக்க காங்கிரசிலோ பெரும்பான்மை பெறுமேயானால் தனக்குக் குறுக்கே நிற்கும் சட்டங்களையும் நிறுவனங்களையும் சட்ட ரீதியான வழிகளில் அதனால் நீக்கிவிட முடியும், சமுதாய வளர்ச்சி அவசியமாக்குகிற அளவுக்குத்தான் அப்படி நீக்கி விட முடியும். ஆனால் இந்த "சமாதான பூர்வமான" வளர்ச்சியானது பழைய அமைப்பு முறையை பேணிக் காப்பதில் அக்கறையுள்ளவர்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி நேரிட்டால், பின் சொல்லப்பட்டவர்கள் பலவந்தத்தால் தோற்கடிக்கப்பட்டதைக் கண்டு..."சட்ட நியாயமுள்ள" அதிகாரத்தை எதிர்த்துக் கலகம் செய்ய நேரிட்டால் அந்த வளர்ச்சி "பலாத்காரமானதாக" ஆகிவிடும்.

ஆனால், ஒரு "சமாதான பூர்வமான கட்டத்தை" தாண்டி வந்து கொண்டிருக்கும் வளர்ச்சிக்கு எதிராக ஆட்சியில் உள்ளவர்கள் பலாத்காரமான எதிர்வினை புரிவதைத்தான் இயூலென்புர்க் பிரசாரம் செய்கிறார், இந்த எதிர்வினையின் நோக்கம் எதிர்காலத்தில் "பலாத்காரமான" மோதல்களைத் தடுப்பதாம்: இது "சமாதான பூர்வமான" வளர்ச்சியை எதிர்க்கும் எதிர்ப் புரட்சியின போர் முழக்கமாகும். உண்மையாகப் பார்த்தால்,தனக்குப் பிடிக்காமலிருக்கிற, ஆனால் சட்டத்தின் நிலையிலிருந்து பார்க்கும் போது தாக்கவொண்ணாததாயிருக்கிற, வளர்ச்சியை பலாத்காரத்தின் மூலமாக நசுக்கி விட அரசாங்கம் முற்பட்டிருக்கிறது. இதுதான் பலாத்காரத்தைப் பயன்படுத்த வேண்டியதாயிருக்கும் புரட்சிக்கு அவசியமாயுள்ள பீடிகை ஆகும். "இதுஒரு பழைய கதை, மிகவும் பழைய கதை, இப்படித்தான் எப்போதும் நடந்து வந்திருக்கிறது".
1878 செப்டம்பர்

--------------------------------------------------------------------------------

'சிகாகோ டிரிப்யூன்' நிருபருக்கு அளித்த ஒரு பேட்டி
என்பதிலிருந்து

கா.மார்க்ஸ்

டிசம்பர் 1878
"பெருப்பான்மையினர் புரட்சிகள் செய்வார்கள். ஒரு கட்சியால் புரட்சியைச் செய்யமுடியாது. மக்களால் மட்டுமே செய்ய முடியும்......."


--------------------------------------------------------------------------------

அகுஸ்த் பெபெலுக்கு எழுதிய கடிதத்திலிருந்து

பி.எங்கெஸ்

லண்டன், அக்டோபர் 28, 1882

......இரண்டாவது கடிதத்தை சற்று அவசரமாகப் படித்தேன், நெடுகிலும் இரண்டு மூன்று பேர் என்னோடு பேச்சுக் கொடுத்து குறுக்கிட்டுக் கொண்டே இருந்தார்கள். மற்றபடி அவர் பிரெஞ்சுப் புரட்சியைப் புரிந்து கொண்டுள்ள விதத்திலிருந்து பிரெஞ்சுச் செல்வாக்கையும் அத்துடன் நம் வோல்மரின் செல்வாக்கையும் நான் கண்டு கொண்டிருக்க முடியும், சந்தேகமே இல்லை. அம்சத்தை நீங்கள் மிகச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். "ஒரே பிற்போக்குப் பிண்டம்" என்கிற சொற்றொடரைப் பற்றி கனவு கொண்டிருந்ததின் நடைமுறையாக்கம கடைசியாக இதுதான். எல்லா அதிகார பூர்வமாக ஒரே பிண்டமாக ஒன்றுபட்டிருக்கிறபடி இங்கே, சோஷலிஸ்டுகளாகிய நாம் ஒர் அணியில் அங்கே - மாபெரும் நிர்ணயமான போர், ஒரே அடியில் போர் முனை நெடுகிலும் வெற்றியாம். எதார்த்த வாழ்க்கையில் விஷயங்கள் இவ்வளவு எளிதாக நிகழ்கிறதில்லை. நீங்களும் குறிப்பிடுகிறபடி, எதார்த்த வாழ்க்கையில் புரட்சியானது இதற்கு நேர் எதிரான வழியில் துவங்குகிறது. மிகப் பெரும்பான்மையான மக்களும், பெரும்பான்மையான அதிகார பூர்வமான கட்சிகளும் கூட அரசாங்கத்துக்கு எதிராக அணி திரள்கிறார்கள், அதனால் அரசாங்கம் தனிமைப்படுத்தப் படகிறது, அதைத் தூக்கியெறிகிறார்கள், மற்றும், அதிகார பூர்வமான கட்சிகளில் இன்னமும் மிஞ்சி இருப்பவையும் பரஸ்பரமாகவும், கூட்டாகவும், ஒன்றன்பின் ஒன்றாகவும் ஒன்றையொன்று அழியச் செய்த பின்புதான் வோல்மரின் மாபெரும் பிரிவினை நிகழ்கிறது, நம் ஆட்சிக்கான வாய்ப்பையும் அத்துடன் கொண்டு வருகிறது. வோல்மரைப்போல் புரட்சியின் கடைசிக் காட்சியோடு நாம் சடேரென்று தொடங்க விரும்பினால் நம் நிலைமை மிக மிக மோசமானதாக இருக்கும்.....

கடிதத்திரட்டு பக்கம் 333

--------------------------------------------------------------------------------

வெரா இவனோவ்னா ஜாசுலிச்சுக்கு
எழுதிய ஒரு கடிதத்திலிருந்து

பி.எங்கெல்ஸ்

லண்டன், ஏப்ரல் 23, 1885

.....எனக்கு மார்க்சின் வரலாற்றுத் தத்துவந்தான் எல்லா உள்ளிணைப்புள்ள, முரணற்ற புரட்சிகரமான போர்த் தந்திரங்களுக்கும் அடிப்படையான நிபன்தனை, இந்தப் போர்த் தந்திரங்களைக் கண்டு கொள்வதற்கு பிரச்சினையிலிருந்து நாட்டின் பொருளாதார, அரசியல் நிலைமைகளுக்கு அந்தத் தத்துவத்தைப் பொருத்திச் செயல்படுத்தினால் போதும்.

கடிதத்திரட்டு, 361 - 362

--------------------------------------------------------------------------------

பாவுல் லபார்க்குக்கு
எழுதிய ஒரு கடிதத்திலிருந்து

பி.எங்கெல்ஸ்

லண்டன், நவம்பர் 12, 1892

......எல்லோருக்கும் வாக்குரிமை என்கிற எவ்வளவு நேர்த்தியான ஆயுதம் பிரான்சைச் சேர்ந்த உங்களிடம் நாற்பது ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறதா? அதை எப்படிப் பயன்படுத்துவது என்று மட்டும் மக்களுக்கு தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! புரட்சிக்கு விடுவிற அறைகூவலை விட அது மெதுவானது, சலிப்பூட்டுவது என்றாலும் அது பத்து மடங்கு உறுதியானது, அதை விட நல்ல விஷயம் என்னவென்றால், ஆயுதமேந்திய புரட்சிக்கு அறைகூவல் விடவேண்டிய நாளை மிகவும் சரி நுட்பமாக அது சுட்டிக் காட்டுகிறது, எல்லோருக்கும் வாக்குரிமை என்பதைத் தொழிலாளிகள் அறிவோடு பயன் படுத்துவார்களேயானால் அது ஆட்சியாளர்களைச் சட்ட முறையில் தூக்கியெறிவதில் தள்ளிவிடும், அதாவது புரட்சி செய்வதற்கு நமக்கு மிகவும் சாதகமான நிலைமையை செய்து கொடுப்பதில் தள்ளிவிடும் என்பது அநேகமாக நிச்சயம்.

கடிதத் தொகுப்பு, தொகுதி 3, பக்கம் 211

--------------------------------------------------------------------------------

கார்ல் மார்க்ஸ் எழுதிய "பிரான்சில் வர்க்கப் பேராட்டங்கள், 1848-லிருந்து 1850-வரை"
என்கிற நூலுக்கு எழுதிய முகவுரை என்பதிலிருந்து

பி.எங்கெல்ஸ்

.....எல்லோருக்கும் வோட்டுரிமை என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நம் எண்ணிக்கைக் கணக்கெடுக்க வாய்ப்பளிக்கிறது என்பது தவிர வேறெந்த அனுகூலத்தையும் தரவில்லையென்றால், ஒழுங்கு முறையாக நிலை நிறுத்தப் பெற்றும், எதிர்பாராத வகையில் வேகமாகவும் நம் வோட்டுக்ள உயர்ந்துள்ளதின் மூலமாக அதே அளவுக்கு அது வெற்றிமீது தொழிலாளிகளுக்குள்ள உறுதியையும் அவர்களுடைய எதிர்ப்பாளர்களின் கலகத்தையும் அதிகப்படுத்துகிறது, அதன் வழியே நம் பிரசாரத்திற்கு மிகச் சிறந்த சாதனமாகிறதென்றால், நம் பலத்தைப்பற்றியும் அது நமக்குச் சரியான தகவல் கொடுக்கிறது, அதன் வழியாக யாருக்கும் சளைக்காதபடியுள்ள நம் நடவடிக்கைகளுக்கு ஒரு தகவான அளவைக் கொடுத்து காலப் பக்குவமற்ற பயங்கொள்ளித்தனத்தினின்றும் காலப்பக்குவமற்ற குருட்டுத் துணிச்சலினின்றும் பாதுகாக்கிறதென்றால், இந்த ஒரு அனுகூலத்தைத்தான் எல்லோருக்கும் வோட்டுரிமை என்கிற உரிமையிலிருந்து நாம் பெற்றோம் என்றால் அப்போதும் அதுவே எவ்வளவோ மேலாகத்தான் இருக்கும். ஆனால் அது அதைவிட எவ்வளவோ செய்திருக்கிறது. தேர்தல் பிரசார இயக்கத்தில் நம்மை விட்டு இன்னமும் விலகி நிற்கும் மக்கள் திரளுடன் நாம் தொடர்பு கொள்வதற்கு அது மற்றெதற்கும் குறைந்து போகாத ஒரு சாதனத்தைக் கொடுத்தது, மக்கள் அனைவரின் முன்னிலையில் நம் தாக்குதல்களின் எதிரே தங்களுடைய கருத்துக்களையும் செய்கைகளையும் தற்காத்துக் கொள்ளும்படி எல்லாக் கட்சிகளையும் கட்டாயப் படுத்து வதற்கான சாதனத்தைக் கொடுத்தது, மற்றும் பத்திரிகையிலோ கூட்டங்களிலோ இல்லாத முற்றிலும் வேறான அதிகாரத்துடன் சுரந்திரத்துடனும் நாடாளு மன்றத்தில் உள்ள தங்கள் எதிர்ப்பாளர்களுடளும் வெளியேயுள்ள மக்களுடனும் பேச முடிகிற ஒரு மேடையை நம் நாடாளுமன்ற [ரைக்ஷ்டாக்] பிரதிநிதிகளுக்குக் கொடுத்தது. தேர்தல் பிரசார இயக்கமும் நாடாளு மன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகளும் தொடர்ந்து சோஷலிஸ்டு எதிர்ப்புச் சட்டத்தைத் துளைத்து வந்தனவே, அந்தச் சட்டத்ததால் அரசாங்கத்துக்கோ முதலாளி வர்க்த்தினருக்கோ என்ன பயன் இருந்தது?

ஆனால் சர்வஜன வாக்குரிமையை இப்படி வெற்றிகரமாகப் பயன்படுத்தியதினால் முற்றிலும் புதிதான தொழிலாளி வர்க்கப் போராட்ட வழிமுறை செயல்பட்டது, அவ்வழி வேகமாக மேலும் வளர்ந்தது. முதலாளி வர்க்கத்தினரின் ஆட்சிக்கு அமைப்பாக இருக்கும் அரசு நிறுவனங்கள், தொழிலாளி வர்க்கத்துக்கு இதே அரசு நிறுவனங்களை எதிர்த்துப் போராடுவதற்கு மேலும் வாய்ப்புகள் அளிப்பது புலனாயிற்று. குறிப்பிட்ட மாநிலச் சட்ட மன்றங்களுக்கும் நகராட்சி மன்றங்களுக்கும் தொழில் கோர்ட்டுகளுக்குமான தேர்தல்களில் தொழிலாளிகள் கலந்து கொண்டார்கள். தொழிலாளி வர்க்கத்தில் போதுமான பகுதியினர் பாட்டியிடத்தக்க ஒவ்வொரு பதவிக்கும் அவர்கள் முதலாளி வர்க்கத்தினருடன் போட்டி போட்டனர். ஆக, தொழிலாளர் கட்சியின் சட்ட பூர்வமான நடவடிக்கையைப் பற்றி, புரட்சிக் கலகத்தின் விளைவுகளை விட தேர்தல் முடிவுகளைப் பற்றி, முதலாளி வர்க்கத்தினரும் அரசாங்கமும் பீதியடையும் நிலைமை ஏற்பட்டது...

...உணர்வு பெறாமலிருக்கும் மக்கள் திரளுக்குத் தலைமை தாங்கிய நிலையில் உணர்வுள்ள சிறிய சிறுபான்மையினர் திடீர் தாக்குதல்களையும் புரட்சிகளையும் செய்யும் காலம் மலையேறிவிட்டது. சமுதாய அமைப்பை முற்றாக உருமாற்றுவது பிரச்சினையான இருக்கிற இடத்தில் மக்களுங்கூட அதில் ஈடுபட்டிருக்கவேண்டும், எதற்காகப் போராடுகிறோம் என்பதை ஏற்கனவே புரிந்து கொண்டிருக்க வேண்டும், எதற்கு ஈடுகொடுப்பதற்காக முற்றாக அர்ப்பணித்துக் கொண்டு இறங்குகிறோம் என்று புரிந்து கொண்டிருக்க வேண்டும். சென்ற ஐம்பதாண்டுக் காலத்திய வரலாறு இதை நமக்குப் போதித்திருக்கிறது. ஆனால், என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் புரிந்து கொள்ளச் செய்வதற்க நீண்ட, விடாமுயற்சியுள்ள பணி அவசியமாகிறது, இந்தப் பணியைத்தான் நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம், எதிரியை நிராசையில் தள்ளும் அளவுக்கு வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்குறோம்...

...ஜெர்மன் சமூக ஜனநாயகவாதம் ஒரு தனிச் சிறப்பான இடம் வகிக்கிறது, அதையொட்டி, குறைந்தபட்சம் உடனடி எதிர் காலத்திலாவது, அதற்குத் தனிச்சிறப்பான ஒரு பணியும் உண்டு. அதற்கு வோட்டுப் போடும் இரண்டு கோடி வாக்காளர்களும் வோட்டு இல்லாமல் அவர்கள் பின்னே நிற்கும் இளைஞர்களும் மகளிரும் சேர்ந்து சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் எண்ணிறந்த, கட்டுள்ள திரளாகும், நிர்ணயமான "அதிரடிப் படை" ஆகும். பதிவாகும் மொத்த வோட்டுகளில் கால்வாசிக்குமேல் ஏற்கனவே இத்திரள் போடுகிறது. மேலும், நாடாளுமன்றத்திற்கான இடைத் தேர்தல்களும் தனித்தனி மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களும் நகராட்சி மன்றத் தேர்தல்களும் தொழில் கோர்ட்டு தேர்தல்களும் காட்டுகிறபடி இது இடையறாது அதிகரித்து வருகிறது. ஓர் இயல்பான நிகழ்வுப்போக்கு போல் இதன் வளர்ச்சி தன்னியல்பாகவும் திடமாகவும் தடுக்க முடியாததாகவும் போய்க் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் குறுக்கீடு அனைத்தும் அதன் முன் ஒன்றும் செய்யமுடியவில்லை. இன்றுகூட நாம் இருபத்தைந்து லட்சம் வாக்காளர்களைப் பெற்றிருக்கிறோம். அது இதே மாதிரி தொடர்ந்தால் இந்நூற்றாண்டின் இறுதிவாக்கில் நாம் சமுதாயத்தின் மத்தியத்தரப் பகுதியினரின், சிறு பூர்ஷுவா மற்றும் சிறு விவசாயிகளில் பெரும் பகுதியை வென்று கொண்டு நாட்டில் நிர்ணயமான சக்தியாக வளருவோம், விரும்பினாலும் விரும்பா விட்டாலும் மற்ற எல்லா சக்திகளும் அதன்முன் மண்டியிட வேண்டியிருக்கும், அது தானாகவே நடப்பிலுள்ள அரசாங்க அமைப்பு முறையின் கட்டுப்பாட்டைத் தாண்டிச் செல்லும்வரை இடையறாது இவ்வளர்ச்சி நடக்கும்படி செய்வது, நாள்தோறும் அதிகரித்து வரும் இந்த அதிரடிப் படையை மன்னணிக் கைகலப்புகளில் சிதறடிக்காமல் நிர்ணயமான நாள் வரும்வரை கட்டுக்குலையாமல் வைத்திருப்பது, அதுவே நம் முக்கியமான பணியாகும். ஜெர்மனியிலுள்ள சோஷலிஸ்டுப் போராட்ட சக்திகளின் திடமான எழுச்சியைத் தற்காலிகமாகத் தடுக்க முடிவதற்கு, கொஞ்ச காலத்துக்குப் பின்னுக்கு தள்ளுவதறகுங்கூட ஒரேயொரு வழிதான் உண்டு, இராணுவத்தோடு பெரிய அளவில் மோதல், பாரிஸ் நகரில் 1871 ல் நடந்த மாதிரியான இரத்தக்களறி நீண்டகாலப் போக்கில் அதுவும் முறியடிக்கப்பட்டுவிடும். இலட்சக்கணக்கிலே இருக்கும் ஒரு கட்சியைச் சுட்டுத்தள்ளுவது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் அத்தனைத் துப்பாக்கிகளுக்கும் கூட ஆகாதகாரியமாகும், ஆனால் சகஜமான வளர்ச்சி தடைப்படும், ஒருகால் நிர்ணமான தருணத்தில் அந்த அதிரடிப்படை கைவசம் இல்லாமற் போகலாம், நிர்ணமான போர் தாமதப்பட்டுப் போகலாம், நீடிக்கலாம், மேலும் அதிகமான தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கலாம்.

உலக வரலாற்றின் நையாண்டி, அனைத்தையும் தலைகீழாக்கி விடுகிறது. "புரட்சிவாதிகள்", "தூக்கியெறிகிறவர்கள்" ஆகிய நாம் சட்ட விரோதமான வழிமுறைகள் தூக்கியெறிதல் ஆகியவற்றைவிட சட்ட பூர்வமான வழி முறைகளால் வளர்ந்து செழித்து வருகிறோம். ஒழுங்குக்காக நிற்கும் கட்சிகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் கட்சிகள் தாங்களே படைத்துள்ள சட்ட பூர்வமான நிலைமைகளின் கீழ் நசித்து வருகின்றன. La ligalita nous tue, சட்ட பூர்வமான நிலைமை நமக்கு எமனாக வந்திருக்கிறதே என்று ஒதிலோன் பாரோவுடன் சேர்ந்து கொண்டு நம்பிக்கை வறட்சியுடன் அவை கதறுகின்றன, ஆனால் நாம் இந்தச் சட்டபூர்வமான நிலைமையின் கீழ் உறுதியான தசைகளும் சிவந்த கன்னங்களும் கொண்டு சாகாவரம் பெற்றவனாகக் காட்சியளிக்கிறோம். அவற்றைத் திருப்திப் படுத்துவதற்காகத் தெருச்சண்டையில்நம்மைத் தள்ளிவிட இடங்கொடுக்கும் அளவுக்கு நாம் பைத்தியக்காரர்களாக இல்லாமலிருந்தால் அவை தாமாகவே இந்த மரணாபத்தான கட்டவூர்வ முறையை உடைத்துக் கொண்டு வெளியேறுவதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை.......

6, மார்ச், 1895.

--------------------------------------------------------------------------------

"ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும்"
என்பதிலிருந்து

பி.எங்கெல்ஸ்

.....யுத்தம் போலவே புரட்சியிலும் ஒரு வலுவான முன்னணியைக் காட்ட வேண்டியது எப்போதும் அவசியம், ஏறித்தாக்குகிறவனின் பக்கம் தான் அனுகூலமிருக்கும், யுத்தம் போலவே புரட்சியிலும்எதிர்ப்பு எவ்வகைத்தாய் இருந்த போதிலும் நிர்ணமான தருணத்தின் மீது அனைத்தையும் பணயம் வைத்துச் செயல்படுவது உச்ச அவசியமாகும். இந்த முதுமொழிகளின் உண்மையை நிரூபிக்காத வெற்றிகரமான புரட்சி ஒன்றுகூட வரலாற்றில் கிடையாயது.... சுளுவாகப் பெற்ற வெற்றிக்கு இருக்கிற புரட்சிகரமான முக்கியத்துவம் நன்கு போரிட்ட பின் வந்த தோல்வி என்கிற உண்மைக்கும் உண்டு. 1848 ஜுனில் கண்ட பாரிஸ் தோல்விகள் ,1848 அக்டோபரில் கண்ட வியன்னா தோல்விகன் அதே ஆண்டில் பிப்ரவரியிலும் மார்ச்சிலும் கண்ட வெற்றிகளை விட இந்நகரங்களின் மக்களின் மனத்தைப் புரட்சிகரமாக்குவதில் எவ்வளவோ அதிகமாகச் செயல்பட்டன. அசெம்பிளிக்கும் பெர்லின் மக்களுக்கும் பெரும்பாலும் மேற்சொன்ன இரு நகரங்களுக்கும் ஏற்பட்ட அதே கதிதான் ஏற்பட்டிருக்கக் கூடும். எனினும் அவர்களின் வீழ்ச்சி மேன்மை மிக்கதாயிருந்திருக்கும், உயிர்தப்பியவர்களின் மனத்தில் வஞ்சம் தீர்க்கும் விருப்பத்தை அவர்கள்விட்டுச் சென்றிருப்பார்கள், இந்த வஞ்சம் தீர்க்கும் விருப்பம் புரட்சிகரமான காலங்களில் சக்திமிக்க, ஆவேசமிக்க நடவடிக்கைக்குரிய உச்சநிலை ஊக்கிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு போராட்டத்திலும் சவாலை ஏற்றுச் சண்டை போடுகிறவன் தோற்காடிக்கப்படும் அபாயமும் உண்டு, அது சகஜம். எனினும் அதற்காக ஒருவன் சண்டை போடாமலே தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும், நுகத்தடிக்குக் கழுத்தை நீட்டிப் பணிய வேண்டும் என்று அதுவே காரணமாகுமா?

ஒரு புரட்சியில் நிர்ணயமான ஸ்தானத்தில் இருக்கிறவன் எதிரியைத் தாக்கிப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தாமல் அந்த ஸ்தானத்தை விட்டுக் கொடுத்தால் அதன் துரோகியாக நடத்தப்படுவது என்றைக்கும் தகும்.

.....போர் அல்லது மற்றெந்த விவகாரமும் போலவே புரட்சிக் கலகமும் ஒரு கலை, ஆதுவும் சில செயல்பாடு விதிகளுக்கு உட்பட்டதே. அவற்றைப் புறக்ணிக்கும் போது அப்படிப்பட்ட வழக்கில் கவனிக்கப்பட வேண்டியிருக்கிற கட்சிகளின், சூழ்நிலைமைகளின் இயல்பிலிருந்து பெறப்படும் தர்க்கரீதியான முடிவுகளான இந்த விதிகள் எவ்வளவோ பட்டவர்த்தனமாகவும் சாதாரணமானதாகவும் இருப்பதால், 1848-ல் குறுகியகால அனுபவத்தைக் கொண்டே அவற்றை ஜெர்மானியர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டார்கள். முதலாவதாக, உங்கள் விளையாட்டின் பின்விளைவுகளைச் சந்திக்க நீங்கள் முழுத்தயாரிப்பில் இல்லாவிட்டால் புரட்சிக் கலகத்தோடு என்றைக்கும் விளையாடாதீர்கள். புரட்சிக்கலகம் திட்டமாகச் சொல்ல முடியாத அளவைகளைக் கொண்ட - ஒவ்வொரு நாளும் அவற்றின் மதிப்பு மாறிக் கொண்டிருக்கக் கூடும் - ஒரு நுண்கணிதமாகும். உங்களுக்கு எதிரான சக்திகளிடம் அமைப்பு, கட்டுப்பாடு, பழக்கப்பட்டுப்போன அதிகாரப்பிடிப்பு ஆகியவற்றின் அனுகூலமுண்டு, அவற்றிற்கு எதிராக நீங்கள் வலுவான எதிர் சக்திகளைக் கொணர்ந்து நிறுத்தாவிட்டால் தோற்று நாசமாகி விடுவீர்கள். இரண்டாவதாக, புரட்சிக் கலகத்தில் இறங்கியாயிற்று என்றாகிவட்டால் மிகுந்த மன உறுதியுடன் செயலாற்றுங்கள், ஏறித் தாக்குங்கள். தற்காப்பில் நிற்பது ஒவ்வொரு ஆயுதமேந்திய எழுச்சிக்கும் மரணமேயாகும், எதிரியுடன் பலப்பரீட்சை நடத்து முன்பே அது தோற்றுப்போகும். எதிரிகளின் சக்திகள் சிதறிக் கொண்டிருக்கும் போது அவர்கள் எதிர்பாராத வகையில் தாக்கிக் கொண்டிருங்கள், புதிய புதிய வெற்றிகளுக்குத் தயார் செய்யுங்கள், அவை எவ்வளவு சிறியதாயிருந்தாலும் சரி, தினசரி தயாரித்துக் கொண்டிருங்கள், வெற்றிகரமான முதல் கலக எழுச்சி உங்களுக்குக் கொடுத்திருக்கும் தார்மிக மேனிலையை நீடித்து வைத்துக் கொண்டிருங்கள், அதன் வழியாக, கைவலுத்தவனையே எப்போதும் பின்பற்றுகிற, பத்திரமாயிருக்கத் தக்க தரப்பையே எப்போதும் தேடிப் பார்த்துக் கொண்டிரக்கிற, ஊசலாடும் பகுதியினரை உங்கள் பக்கம் திரட்டிக் கொள்ளுங்கள், உங்களுக்கு எதிராக உங்கள் பகைவர்கள் தம்முடைய பலத்தைத் திரட்டிச் சேர்க்கு முன்பே அவர்களைப் பின்வாங்கும்படி கட்டாயப் படுத்துங்கள், இதுவரை நாம் அறிந்துள்ளதில புரட்சிகரமான கொள்கையில் நிபுணரான டான்டன் கூறிய சொற்களின் படி: துணிச்சல், மேலும் துணிச்சல், மேன்மேலும் துணிச்சல் வேண்டும்!

1851 ஆகஸ்டு - 1852 செப்படம்பர்

--------------------------------------------------------------------------------

கார்ல் மார்க்சுடன் "வொர்ல்ட்" பத்திரிகை நிருபர் நடத்திய பேட்டி
என்பதிலிருந்து

லண்டன், ஜுலை 3, 1871

....ஆர். புரட்சியின் பலாத்காரமான வழி இன்றியே எதிர்பார்த்து நிற்கும் தீர்வு - அது எதுவாக இருந்தாலும் சரி - சாதிக்கப்படும் போல் தோன்றுகிறது. சிறுபான்மையினர் பெரும்பான்மையினரலக மாறும்வரை மேடைகளிலிருந்தும் பத்திரிகைகள் மூலமாகவும் கிளர்ச்சிப் பிரசாரம் செய்யும் ஆங்கிலேய முறை நம்பிக்கைக்குரிய அறிகுறியாகும்.

டாக்டர் மார்க்ஸ்: அவ்விஷயத்தில் உங்களைப் போல் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஆங்கிலேய முதலாளி வர்க்கத்தினர் வோட்டு பலத்தில் ஏகபோகம் அனுபவித்துவரும் வரை பெரும் பான்மையினரின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள விரும்பித் தயாராயிருப்பதாக எப்போதும் காட்டிக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால் நான் சொல்வதைக் கவனியுங்கள், ஜீவாதாரமான பிரச்சினைகள் என்று தான் கருதுகிறவற்றின் மீது அது தேர்தலில் தோற்கப் போவதாகத் தெரிந்தவுடனே இங்கே ஒரு புதிய அடிமைச் சொந்தக் காரர்களின் யுத்தத்தைக் காண்போம்....

லேபர் மன்த்லி 1872 ஜீன்

--------------------------------------------------------------------------------

"ருஷ்யாவின் சமூக ஜனநாயத் தொழிலாளர் கட்சியின் நகல் வேலைத் திட்டம்"
என்பதிலிருந்து

...7. தொழிலாளர்களின் விடுதலை தொழிலாளி வர்க்கத்தின் செய்கையாகவே இருக்க வேண்டும். தற்காலச் சமுதாயத்தின் மற்றெல்லா வர்க்கங்களும் நடப்பிலுள்ள பொருளாதார அமைப்பு முறையின் அடித்தளங்களைப் பேணிக் காப்பதற்காக நிற்கின்றன. தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான விடுதலைக்கு வளர்ச்சி முழுவதும் இதற்குத் தயாரித்து வருகிறது - அதாவது, உற்பத்திச் சாதனங்கள் மீதுள்ள தனியுடைமையை ஒழிப்பது, அவற்றைப் பொதுவுடைமையாக மாற்றுவது, முதலாளித்துவ முறையிலான பண்ட உற்பத்தியை விலக்கிச் சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் முழுமையான நல்வாழ்வும் சுதந்திரமான முழுவடிவிலான வளர்ச்சியும் உறுதிப் படுத்தும் நோக்குடன் சமுதாயம் முழுவதும் உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான சோஷலிச அமைப்பை வைப்பது.

8. தொழிலாளி வர்க்கப் புரட்சி சமுதாயம் வர்க்கங்களாகப் பிரிந்து இருக்கும் பிரிவை ஒழிக்கும், அதன் விளைவாக அந்தப் பிரிவிலிருந்து எழும் எல்லாச் சமுதாய, அரசியல் சமமின்மையையும் ஒழிக்கும்.

9. இந்தச் சமுதாயப் புரட்சியைச் செய்வதற்குத் தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்று தீர வேண்டும், அதுவே அதை நிலைமையின் மீது ஆதிக்கம் கொள்ளச் செய்து தனது மகத்தான குளிக்கோளை நோக்கிச் செல்லும் பாதையின் குறுக்கேயுள்ள எல்லாத் தடைகளையும் அகற்றச் செய்யவல்லது. இந்த அர்த்தத்தில் தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் சமுதாயப் புரட்சிக்கு ஒரு முக்கியமான அரசியல் நிபந்தனையாகும்.

1902 பிப்ரவரி

--------------------------------------------------------------------------------

"கொலில்லாப் போர்"
என்பதிலிருந்து

....போராட்டத்தின் வடிவங்கள் பற்றிய பிரச்சினையின் பரிசீலனை விஷயமாக மார்க்சிய வாதிகள் கோர வேண்டிய அடிப்படையான கோரிக்கைகள் என்ன? முதலாவதாக, மார்க்சியம் எந்த ஒரு குறிப்பிட்ட போராட்ட வடிவத்துடனும் இயக்கத்தைக் கட்டிப் போடுவதில்லை, இதுவே மார்க்சியத்துக்கும் சோஷலிசத்தின் எல்லா ஆதி நிலை வடிவங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு. அது மிக மிக வேறுபட்டவையாயுள்ள போராட்ட வடிவங்களைப் பொதுமைப் படுத்துவது, திரட்டியமைப்பது, உணர்வு பூர்வமான வெளியீடு தருவது மட்டுமே செய்கிறது. கருத்தியலான எல்லாச் சூத்திரங்களுக்கும் வறட்டுக் கோட்பாடான எல்லாப் பரிகாரங்களுக்கும் மார்க்சியம் முற்றிலும் பகையானது, நடந்து கொண்டிருக்கும் வெகுஜனப் போராட்டத்திடம் கவனிப்புள்ள கண்ணோட்டம் காட்டப் பட வேண்டும் என்று மார்க்சியம் கோருகிறது, இயக்கம் வளர வளர, மக்களின் வர்க்க உண்ர்வு வளர வளர, பொருளாதார அரசியல் நெருக்கடி தீவிரமாக ஆக, அந்தப் போராட்டம் தற்காப்புக்கும் தாக்குதலுக்கும் உரிய புதிது புதிதான, மேன் மேலும் வேறுபட்ட வழி முறைகளை தொடர்ச்சியாக உண்டு பண்ணிக் கொண்டேயிருக்கிறது. எனவே மார்க்சியம் நிச்சயமாக எந்தப் போராட்ட வடிவத்தையும் நிராகரிப்பது கிடையாது. எந்தச் சூழ்நிலைமைகளிலும் மார்க்சியம் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சாத்தியமாயிருக்கிற அல்லது நடப்பிலிருக்கிற போராட்ட வடிவங்களோடு தன்னைக் கட்டிப் பகுதிகளில் கலந்து கொள்கிறவர்களுக்குத் தெரியாமலே புதிய போராட்ட வடிவங்கள் குறிப்பிட்ட சமுதாய நிலைமை மாறுகையில் தவிர்க்க முடியாத வகையில் எழுகின்றன என்பதை மார்க்சியம் அங்கீகரிக்கிறது. இவ் விஷயத்தில் மார்க்சியம் வெகுஜன நடை முறையிலிருந்து கற்றுக் கொள்கிறது என்று சொல்லலாம்,"அமைப்பு முறைப் படுத்துகிறவர்கள்" தங்களை அறைகளின் தனிமையிலே இருந்து கொண்டு புனைந்துருவாக்கிய போராட்ட வடிவங்களை மக்களுக்குப் போதிக்கும் உரிமை எதையும் கொண்டாடுவதில்லை......

இரண்டாவதாக, போராட்ட வடிவங்கள் பற்றிய பிரச்சினையைக் குறித்து முற்றிலும் வரலாற்று ரீதியான பரிசீலனை இருக்க வேண்டும் என்று மார்க்சியம் கோருகிறது. ஸ்தூலமான வரலாற்று ரீதியான நிலைமையை விட்டு அப்பால் நின்று இந்தப் பிரச்சினையை எடுத்துப் பரிசீலிப்பது இயக்க இயல் பொருள் முதல்வாதத்தின் அரிச்சுவடியைப் புரிந்து கொள்ளத் தவறுகின்றதைக் காட்டுகிறது. பொருளாதாரப் பரிணாமத்தின் வெவ்வேறு கட்டங்களில், அரசியல், தேசிய கலாசார, வாழ்க்கை மற்றும் இதர நிலைமைகளை அனுசரித்து, வெவ்வேறு போராட்ட வடிவங்கள் முன்னுக்கு வந்து முதன்மையான போராட்ட வடிவங்களாக ஆகின்றன, மற்றும், இதன் தொடர்பாக இரண்டாம் பட்சமான, துணையான போராட்ட வடிவங்கள் தம் முறைக்கு மாற்ற மடைகின்றன. ஒரு குறிப்பிட்ட தரணத்தின் ஸ்தூலமான நிலைமையைப் பற்றி, அதன் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில், ஒரு விவரமான பரிசீலனை செய்யாமல் ஏதாவது ஒரு குறிப்பிட்ட போராட்ட வடிவத்தை போராட்ட வழியைப் பயன்படுத்த வேண்டாம் என்று விடையளிக்க முயல்வது மார்க்சிய நிலையை முற்றாகக் கைவிடுவதாகத்தான் அர்த்தம்......

கொரில்லாப் போர் வர்க்க உணர்வுள்ள தொழிலாளிகளை இழிந்த நிலையிலிருக்கும் குடிகாரப் பொறுக்கிகளுடன் நெருங்கிச் சேரும்படி செய்கிறது என்று சொல்லப்படுகிறது. அது உண்மையே. ஆனால் அதற்கு அர்த்தம் தொழிலாளி வர்க்கக் கட்சி கொரில்லாப் போர் ஒன்றுதான் போராட்ட வழிமுறை, அல்லது அது ஒன்றுதான் முக்கியமான போராட்ட வழிமுறை என்று என்றைக்கும் கருத முடியாது என்பது மட்டுமே, இந்த வழிமுறை மற்ற வழிமுறைகளுக்குக் கீழ்ப்படுத்தப்பட வேண்டும், அது முக்கியமான போர் வழி முறைகளுக்கச் சம அளவாக இருக்க வேண்டும், அது சோஷலிசத்தின் அளிவொளி தரும், அமைப்புக்குள்ளாக்கும் செல்வாக்கினால் மேன்மைப் படுத்தப்பட வேண்டும் என்று அர்த்தம். பின் சொன்ன இந்த நிபந்தனை இல்லாமல் பூர்ஷ்வா சமுதாயத்தில் எல்லா, நிச்சமயாக எல்லாப் போராட்ட வழி முறைகளும் தொழிலாளி வர்க்கத்தைத் தனக்கு மேலும் கீழும் உள்ள தொழிலாளி வர்க்கத் தன்ைமையற்ற பல்வேறு பகுதியினருடன் நெருங்கிச் சேரும்படி செய்கின்றன, மற்றும், நிகழ்ச்சிகளின் தன்னியல்பான போக்கிலே விட்டால் இந்தப் போராட்ட வடிவங்கள் அமைத்தும் தேய்ந்து இற்றுப் போகும்படியாக, கெட்டுப் போகும்படியாக, துஷ்பிரயோகம் செய்யப்படும்படியாக ஆகிவிடுகின்றன. நிகழ்ச்சிகளின் தன்னியல்பா போக்கிலே விட்டால் வேலை நிறுத்தங்கள் "கூட்டணிகளாக"- பொருட்களை உபயோகிப்போருக்கு எதிராகத் தொழிலாளர்களுக்கும் எஜமானர்களுக்கும் இடையேயுள்ள உடன்படிக்கைகளாக- கெடுக்கப் படுகின்றன. நாடாளுமன்றம் ஒரு விபச்சார விடுதியாகக் கெடுக்கப்பட்டு விடுகிறது. அங்கே ஒரு பூர்ஷ்வா அரசியல் வாதிகளின் கும்பல் கிராகயாக உள்ள "தேசிய சுதன்திரம்", "மிதவாதம்","ஜனநாயகம்", குடியரசு வாதம், மத ஆதிக்க எதிர்ப்பு வாதம், சோஷலிசம் இன்னோரன்ன பிற சரக்குகள் அனைத்தையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விலை பேசிக் கைமாற்றிக் கொள்கிறார்கள். ஒரு செய்தித்தாள் பகிரங்கமான கூட்டிக் கொடுக்கும் தரகனாக, மக்களைக் கெடுப்பதற்கான சாதனமாக, ஜனக்கும்பலின் கீழ்த்தரமான இயல்பு உணர்ச்சிகளைத் திருப்திப் படுத்துகிறவனாகக் கெடுக்கப் படுகிறது. இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். தொழிலாளி வர்க்கத்தைத் தனக்குச் சற்று மேலும் கீழும் உள்ள பகுதியினரிடமிருந்து ஒரு சீனத்துச் சுவர் மூலமாக விலக்கி ஒதுக்கி வைக்கும் படியான எங்கும் செல்லத்தக்க போராட்ட வடிவங்கள் இருப்பதாகச் சமூக ஜனநாயக வாதத்துக்குத் தெரியவில்லை. சமூக ஜனநாயகவாதம் வெவ்வேறு காலப் பகுதிகளில் வெவ்வேறு வழிமுறைகளைக் செயல் படுத்துகிறது, எப்பொழுதும் கறாராக வரையறுக்கப்பட்ட தத்துவார்த்த மற்றும் நிறுவனரீதியான நிபந்தனைகளைக் கொண்டு அவற்றைத் தேர்ந்து கொள்வதைக் குணரீதியாக நிர்ணயித்துச் செயல்படுத்துகிறது......

1906, செப்டம்பர் 30

--------------------------------------------------------------------------------

"நாடு தழுவிய புரட்சி பற்றிய பிரச்சினையைக் குறித்து"
என்பதிலிருந்து

இந்தச் சொல்லின் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், நாடு தழுவிய புரட்சி ஒன்றுதான் வெற்றி பெறமுடியும். வெற்றி சம்பாதிப்பதற்கு அந்தப் புரட்சியின் கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் அறுதிப் பெரும்பான்மையான மக்களின் ஒற்றுமை அவசியம் என்கிற அர்த்தத்தில் இது உண்மை. இந்த அறுதிப் பெரும்பான்மையாக முழுமையாக ஒரு வர்க்கமோ அல்லது பொதுவில் சில குறிக்கோள்கள் உள்ள வெவ்வேறு வர்க்கங்களின் அறிதிப் பெரும்பான்மையாகவோ இருக்கவேண்டும்....

.....சில குறிப்பிட்ட திட்டவட்டமான வரம்புக் குறுக்கமுள்ள பொதுவான குறிக்கோள்களில் சங்கமிக்கும் வெவ்வேறு வர்க்கங்களின் வேறுபட்ட நலன்களைப் பற்றிச் சரிநுட்பமான பகுப்பாய்வு தேவை என்பதை "நாடு தழுவிய புரட்சி" பற்றிய கருத்துருவம் மார்க்சியவாதிகளுக்குச் சொல்லவேண்டும். எந்த நிைலைமைகளிலாயினும் சரி, இந்தக் கருத்துருவம் எந்தப் புரட்சியின் போக்கிலேயும் வர்க்கப் போராட்டத்தைப்பற்றி ஆய்ந்து பயில்வதை மறைக்கவோ நிழலடிப்புச் செய்யவோ பயன்படக்கூடாது. "நாடு தழுவிய புரட்சி" பற்றிய கருத்துருவத்தை அவ்வாறு பயன் படுத்துவது மார்க்சியத்தை முற்றாக நிராகரிப்பதாகும். சிறு பூர்ஷுவா ஜனநாயக வாதிகளனி அல்லது சிறு பூர்ஷுவா சோஷலிஸ்டுகளின் விஞ்ஞானக் கேடான சொற்பிரயோகத்துக்குத் திரும்பச் செல்வதாகும்.

நம் சமூக ஜனநாயக வாத வலதுசாரிப் பிரிவினர் இந்த உண்மையை அடிக்கடி மறக்கின்றனர். அதைவிட அடிக்கடி அவர்கள் ஒரு புரட்சியிலுள்ள வர்க்க உறவுகள் அந்தப் புரட்சியின் முன்னேற்றத்தையொட்டி மாறுகின்றன என்பதை மறக்கிறார்கள். எல்லா உண்மையான புரட்சிகரமான முன்னேற்த்திற்கும் அர்த்தம் மேன்மேலும் விரிவான மக்கள்திரளை இயக்கத்தில் ஈடுபடச் செய்வதேயாகும், எனவே - வர்க்க நலன்களைப்பற்றி மேலும் அதிகமான உயர்வு, எனவே- மேலும் தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியல், கட்சி குழு அணிகள், பல்வேறு கட்சிகளின் வர்க்க உருத்தோற்றத்தைப் பற்றி மேலும் சரி நுட்பமான உருவரைகள், எனவே - பொதுவான, கருத்தியலான, தெளிவற்ற, கருத்தியலான தன்மையின் காரணமாக மங்கலமாக இருக்கிற அரசியல் மற்றும் பொருளாதாரக் கோரிக்கைகளை மேன்மேலும் விலக்கிவிட்டு வெவ்வேறான வர்க்கங்களின் வேறுபட்டுவரும் தூலமான, தெளிவாக வரையறுக்கப்பட்ட கோரிக்கைகளை வைப்பது, தேவை.

எடுத்துக்காட்டாக, வேறெஙநம பூர்ஷுவா புரட்சியைப் போலவே ருஷ்ய பூர்ஷுவா புரட்சியும் தவிர்க்க முடியாதபடி "அரசியல் சுதந்திரம்" "மக்கள் நலன்கள்" என்கிற பொதுவான கோஷங்களின் கீழ் தொடங்குகிறது, போராட்டத்தின் போக்கிலே மட்டுமே இந்தக் கோஷங்களின் தூலமான அர்த்தம் மக்களுக்கும் வெவ்வேறு வர்க்கங்களுக்கும் தெளிவாகிறது, அதுவும் அந்த "சுதந்திரத்தை" அமலாக்குவதற்கும் "ஜனநாயகம்" போன்ற ஒரு வெற்று வேட்டான சொல்லுக்கு ஒரு திட்டவட்டமான உள்ளடக்கத்தைத் தருவதற்கும் நடைமுறை ரீதியான முயற்சி செய்கிற அளவுக்குத்தான் தெளிவாகிறது. பூர்ஷுவா புரட்சிக்கு முன்பும், அது தொடங்கியவுடனும், எல்லோரும் - நகர்ப்புறத்து சிறு பூர்ஷுவா பகுதியினருடன் சேர்ந்து தொழிலாளி வர்க்கமும் விவசாயிகளும், மிதவாத நிலப்பிரபுக்களுடன் சேர்ந்து மிதவாத முதலாளி வர்க்கத்தினரும் - ஜனநாயத்தின் பேரால் பேசுகின்றனர். வர்க்கப் போராட்டத்தின் போக்கில் மட்டுமே, புரட்சியின் ஏறத்தாழ நீண்ட வரலாற்று ரீதியான வளர்ச்சியின் போக்கில் மட்டுமே வெவ்வேறு வர்க்கங்கள் இந்த "ஜனநாயத்தை" பற்றி வெவ்வேறாகப் புரிந்து வைத்திருப்பது வெளிப்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்ல, அந்த ஒரே "ஜனநாயத்தின்" பேரால் வெவ்வேறான வர்க்கங்கள் வெவ்வேறான பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகள் வேண்டும் என்று கோரும் அவற்றின் கோரிக்கைகளிலே அந்த வெவ்வேறான வர்க்கங்களின் நலன்களிடையே இருக்கும் ஆழமான இடைவெளி வெளிப்படுத்தப்படுகிறது.

போராட்த்தின் போக்கில் மட்டுமே, புரட்சி வளர வளரத்தான், ஒரு "ஜனநாயக" வர்க்கம் அல்லது பிரிவு மற்றொன்றைப்போல் அவ்வளவு தூத்துக்குப் போக விரும்பவில்லை அல்லது போக முடியாது என்பதும், "பொதுவான" குறிக்கோள்கள் சாதிக்கப்பட்டு வருகையில் அவற்றை சாதிப்பதற்கான வழிமுறையைச் சூழ்ந்து - எடுத்துக்காட்டாக, மக்களின் சுதந்திரத்தின், அதிகாரத்தின் அளவு, விரிவு அல்லது முரணின்மை பற்றி, அல்லது எவ்வழியில் நிலத்தை விவசாயிகளுக்கு மாற்றிக் கொடுப்பது என்பது பற்றி, முதலியன- கடுமையான சண்டைகள் வளர்கின்றன என்பதும் வெளிப்படுத்தப்படுகிறது.

மே 2, 1907.

--------------------------------------------------------------------------------

"மார்க்சியமும் திருத்தல்வாதமும்"
என்பதிலிருந்து

வி.இ.லெனின்

....அரசியல் துறையில் மார்க்சியத்தின் அடித்தளத்தை - அதாவது, வர்க்கப் போராடடம் பற்றிய சித்தாந்தத்தை - திருத்துவதற்குத் திருத்தல்வாதம் உண்மையாகவே முயன்றது. அரசியல் சுதந்திரமும், ஜனநாயகமும், சர்வஜன வோட்டுரிமையும் வர்க்கப் போராட்டத்திற்கான அடித்தளத்தை அகற்றி விடுகின்றன - என்று நம்மிடம் சொல்லப்பட்டது - மற்றும், தொழிலாளிகளுக்கு நாடு எதுவும் கிடையாது என்கிற கம்யூனிஸ்டு அறிக்கையின் பழைய ஆய்வுக் கூற்றைப் பொய்யாக்கி விடுகின்றனவாம். ஏனெனில், ஜனநாயகத்தில் "பெரும்பான்மையினரின் சித்தம்" நிலைபெற்றிருப்பதினால் அரசை வர்க்க ஆட்சிக்கான உறுப்பாகக் கருதக்கூடாது, பிற்போக்காளர்களுக்கு எதிராக முற்போக்கான, சமுதாயச் சீர்திருத்தப் போக்குள்ள முதலாளி வர்க்கத்தினருடன் கூட்டணிகள் வைப்பதை நிராகரிக்கவும் கூடாது என்று சொன்னார்கள்.

திருத்தல்வாதிகளின் இந்த வாதங்கள் பழைய, பிரபலமான மிதவாத பூர்ஷீவா கருத்துக்கள் எனப்பட்ட கருத்துக்களின் ஒரளவுக்கு நன்கு சமனப்படுத்தப்பட்ட அமைப்பு முறையாக இருந்ததை மறுக்க முடியாது. பூர்ஷீவா நாடாளுமன்றவாதம் வர்க்கங்களையும் வர்க்கப் பிரிவினைகளையும் ஒழிக்கிறது, ஏனெனில் வோட்டுரிமையும் நாட்டின் அரசாங்கத்தில் பங்பெடுக்கும் உரிமையும் எந்த வேறுபாடுமின்றி எல்லாக் குடிமக்களுக்கும் உண்டு என்று மிதவாதிகள் எப்போதுமே சொல்லி வந்துள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஐரோப்பாவின் வரலாறு முழுவதும் சரி, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ருஷ்யப் புரட்சியின் வரலாறு முழுவதும் சரி, இக்கருத்துக்கள் எவ்வளவு அபத்தமானவை என்று தெளிவாகக் காட்டுகின்றன. "ஜனநாயக" முதலாளித்துவத்தின் சுதந்திரத்தின் கீழ் பொருளாதார வேறுபாடுகள் தணிக்கப்படுவதற்கு மாறாகத் தீவிரப்படுத்தப் படுகின்றன, கூராக்கப்படுகின்றன. மிகமிக ஜனநாயகப் போக்குள்ள பூர்ஷீவா குடியரசுகளும் கூட வர்க்க ஒடுக்கு முறைக்கான உறுப்புககள் என்று அவற்றின் உள்ளுறையும் தன்மையை நாடாளுமன்றவாதம் ஒழிப்பதற்கு மாறாகத் திறந்து காட்டுகிறது. அரசியல் நிகழ்ச்சிகளில் முன்பு கலந்து கொண்டவர்களை விட அளவிட வொண்ணாத வகையில் மேலும் விரிவான மக்கள் திரளைப் போதித்துத் திரட்டியமைப்பதற்கு உதவுவதின் மூலமாக, நாடாளுமன்ற வாதம் நெருக்கடிகளையும் அரசியல் புரட்சிகளையும் ஒழிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்குப் பதிலாக அப்படிப்பட்ட புரட்சிகளின்போது உள்நாட்டுப்போரை அதிகபட்சமாகத் தீவிரப்படுத்தவே ஏற்பாடு செய்கிறது. 1871 வசந்த காலத்தில் பாரிசில் நடந்த நிகழ்ச்சிகளும் 1905 பனிக்காலத்தில் ருஷ்யாவில் நடந்த நிகழ்ச்சிகளும் தீவிரப்படுத்தப்படுதல் எவ்வளவு தவிர்க்க வியலாதபடி நிகழ்கிறதென்று ஆனமட்டும் தெளிவாக காட்டி விட்டன. பிரெஞ்சு முதலாளி வர்க்கத்தினர் ஒரு கணமேனும் தயங்காமல் நாடு முழுவதின் பகைவனுடன், தன் நாடு முழுவதையும் நாசம் செய்த விட்ட அன்னிய இராணுவத்துடன், பேரம் பேசி முடித்தது - தொழிலாளி வர்க்க இயக்கத்தை நசுக்குவதற்காக. நாடாளுமன்றவாதத்தின் மற்றும் பூர்ஷீவா ஜனநாயகத்தின் தவிர்க்கவியலாத உள்ளுறையும் இயக்கஇயலை - இது வெகுஜன பலாத்காரத்தின் மூலமாக வாதத்திற்கு, முன்னைவிட கூரான முடிவு காண்பதற்கு இட்டுச் செல்கிறது - புரிந்து கொள்ளாதவர்கள் இந்த நாடாளுமன்றவாதத்தின் அடிப்படையில் கோட்பாடு ரீதியிலே முரணின்றியும் இப்படிப்பட்ட "வாதங்களில்" வெற்றிகரமாகப் பங்கெடுத்துக் கொள்வதற்கு தொழிலாளி வர்க்கத் திரள்களை உண்மையாகவே தயார்ப்படுத்துவதற்கும் பிரசாரத்தையும் கிளர்ச்சியையும் நடத்த முடியாமற் போவார்கள்.....

....சிறு உற்பத்தியிலிருந்து முதலாளித்துவம் உதித்தது, இடையறாது உதித்துக் கொண்டே இருக்கிறது. முதலாளித்துவம் பல புதிய "மத்தியதரப் பகுதியினரை" தவிர்க்க முடியாதபடி மீண்டும் மீண்டும் பிறப்பித்துக் கொண்டிருக்கிறது [தொழிற்சாலையைச் சார்ந்துள்ளவை, வீட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பது, சைக்கிள், மோட்டார் கார் தொழில்கள் போன்ற பெரிய தொழில்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நாடெங்கும் சிதறிய நிலையிலுள்ள சிறிய பட்டறைகள், முதலியவை] இந்தப் புதிய சிறு உற்பத்தியாளர்கள் அதே போல் தவிர்க்க முடியாதபடி மீண்டும் தொழிலாளி வர்க்க அணிகளுக்குள் தள்ளப்படுகிறார்கள். விரிவாயுள்ள தொழிலாளர் கட்சிகளின் அணிகளில் சிறு பூர்ஷீவா உலகப்பார்வை மீண்டும் மீண்டும் தலையெடுப்பது முற்றிலும் இயல்பே. அது இப்படி இருப்பது முற்றிலும் இயல்புதான், தொழிலாளி வர்க்கப் புரட்சியில் அதிர்ஷ்டம் மாறி வரும் வரை அப்படி இருப்பது எப்போதும் இயல்பே. ஏனெனில், அப்படிப்பட்ட புரட்சியை உண்டாக்குவதற்கு பெரும்பான்மையான மக்கள் "முழுவதாக" தொழிலாளி வர்க்கமாதல் அவசியம் என்று கருதுவது ஆழ்ந்த தவறாக இருக்கும். தத்துவார்த்தத்துறையில் மட்டும் நாம் இப்போது அடிக்கடி அனுபவித்து வருவது [அதாவது, மார்க்ஸ் போதனையில் தத்துவ வகைப்பட்ட திருத்தங்கள் சம்பந்தமான சர்ச்சைகள்], திருத்தல்வாதிகளோடு போர்த்தந்திர வகைப்பட்ட கருத்து வேற்றுமைகள், அதனடிப்படையில் பிளவுகள் என்று தொழிலாளர் இயக்கத்தின் தன்திதனியான கிளைப்பிரச்சினைகள் மீது மட்டுமே நடை முறையில் இன்று தலைதூக்குவது - சர்ச்சைக் குள்ளாக்கப் பட்ட எல்லாப் பிரச்சினைகளையும் தொழிலாளி வர்க்கப் புரட்சி கூராக்கி வைக்கிறபோது, மக்களின் நடத்தையை நிர்ணயக்கிறதில் மிகவும் உடனடி முக்கியத்துவமுள்ள பிரச்சினைகளின் மீதுள்ள கருத்து வேற்றுமைகளின் மீது கவனத்தை மையப்படுத்தும்போது, போராட்டத்தன் சூட்டிலே நண்பர்களிடமிருந்து எதிரிகளை நிர்ணயமான அடிகொடுப்பதற்கு மோசமான நேச சக்திகளை வெளியே தள்ளி விடுவதையும் அதிக அளவில் தொழிலாளி வர்க்கம் இதை அனுபவித்துத் தீரும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் திருத்தல் வாதத்தை எதிர்த்து புரட்சிகரமான மார்க்சியம் நடத்திய தத்துவார்த்தப் போராட்டம் தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் புரட்சிகரமான போராட்டங்களுக்குரிய பீடிகையேயாகும், சிறு பூர்ஷீவா வர்க்கத்தினரின் ஊசலாட்டங்கள் பலவீனங்கள் அனைத்தையும் மீறிக்கொண்டு தொழிலாளி வர்க்கம் தன் இலட்சியத்தின் முழு வெற்றியை நோக்கி முன்னே நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

1908 மார்ச் - ஏப்ரல்

--------------------------------------------------------------------------------

"ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கத்தில் உள்ள கருத்து வேற்றுமைகள்"
என்பதிலிருந்து

வி.இ.லெனின்

.....போர்தந்திரங்கள் பற்றிய கருத்து வேற்றுமைகளை அவ்வப்பொழுது தோற்றுவிக்கச் செய்யும் காரணங்களில் ஒன்று, தொழிலாளர் இயக்கத்தின் வளச்சியே ஆகும். ஏதாவது ஒரு அதிசயக் கற்பனையின் பாற்பட்ட இலட்சியத்தை அளவு கோலாகக் கொண்டு இந்த இயக்கத்தை அளக்காமல் அதைச் சாதாரண மக்களின் நடைமுறை இயக்கமாகக் கருதினால் மேன்மேலும் அதிக எண்ணிக்கையில் "புத்தாட்கள்" அணி சேர்க்கப்படுவதும் உழைக்கும் மக்களைச் சேர்ந்த புதிய பகுதியினர் ஈர்க்கப்படுவதும் அதைத் தொடர்ந்து தவிர்க்க முடியாதபடி தத்துவத் துறையிலும் போர்த் தந்திரத் துறையிலும் ஊசலாட்டமும் பழைய தவறுகளைத் திரும்பச் செய்வதும் காலங்கடந்த கருத்துக்களுக்கும் காலங்கடந்த வழிமுறைகளுக்கும் பழைய தவறுகளைத் திரும்பச் செய்வதும் காலங்கடந்த கருத்துக்களுக்கும் வலாங்கடந்த வழிமுறைகளுக்கும் தற்காலிகமாகத் திரும்பிச் செல்வதும் மற்றவையும் வரும் என்பது தெளிவாகும். ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர் இயக்கமும் அவ்வப்பொழுது புத்தாட்களுக்குப் "பயிற்சியளிப்பதில்" மாறுபட்ட அளவில் சக்கியையும் கவனத்தையும் நேரத்தையும் செலவழிக்கிறது.

மேலும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி விகிதம் வெவ்வேறு நாடுகளிலும் தேசியப் பொருளாதாரத்தின் வெவ்வேறு துளைகளிலும் வேறுபட்டிருக்கிறது. பெருமளவான தொழில்துறை மிக அதிகமாக வளர்ந்திருக்கும் இடங்களில் தொழிலாளி வர்க்கமும் அதன் தத்துவாசிரியர்களும் மார்க்சியத்தை மிகச் சுளுவாகவும் வேகமாகவும் முழுமையாகவும் நிரந்தரமாகவும் செரித்துக் கொள்கிறார்கள். பிற்பட்ட அல்லது வளர்ச்சியில் பின்னடைந்துள்ள பொருளாதார உறவுகள் மார்க்சியத்தின் சில அம்சங்களை மட்டும், அல்லது தனித்தனியான கோஷங்களையும் கோரிக்கைகளையும் செரித்துக் கொண்டிருக்கும் தொழிலாளர் இயக்க ஆதரவாளர்கள் தோன்றுவதில் இடையறாது கொண்டுபோய் விடுகின்றனர். பொதுவாக பூர்ஷீவா உலகக் கண்ணோட்டத்தின் எல்லா மரபுகளினின்றும், குறிப்பாக பூர்ஷீவா ஜனநாயக உலகக் கண்ணோட்டத்தின் எல்லா மரபுகளினின்றும் திண்ணமாக முறித்துக் கொள்ள இவர்கள் சக்தியற்றிருப்பதே இதற்குக் காரணம்.

மேலும், கருத்து வேற்றுமைகளுக்கு ஒரு நிரந்தரமான ஊற்றுக்கண்ணாக இருப்பது சமுதாய இயக்கத்தின் இயக்கவியல் வகைப்பட்ட தன்மையே, அது முரண்பாடுகளிலும் முரண்பாடுகளின் மூலமாகவும் முன்செல்கிறது. முதலாளித்துவம் பழைய உற்பத்தி வழி முறைகளை ஒழித்து உற்பத்திச் சக்திகளை வளர்க்கிற காரணத்தால் அது முற்போக்கானது, ஆனால், அதே காலத்தில், வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. அது தொழிலாளர்களை வளர்க்கிறது, திரட்டியமைக்கிறது, கட்டுப்பாடு செய்கிறது - ஆனால் அது நசுக்கவும் செய்கிறது, ஒடுக்கவும் செய்கிறது, சீரழிவு வறுமை முதலியவற்றிற்கும் கொண்டு செல்கிறது. முதலாளித்துவம் தனக்குச் சவக்குழி வெட்டுபவனைத் தானே படைக்கிறது, ஆனால் அதே சமத்தில், ஒரு "பாய்ச்சல்" இல்லாமல் இந்தத் தனித்தனி கூறுகள் பொதுவான நிலைவரங்களில் எதையும் மாற்றுவதில்லை, மூலதனத்தின் ஆதிக்கத்தைப் பாதிப்பதில்லை. மார்க்சியந்தான் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் தத்துவம் என்கிற வகையில் உயிர்ப்புள்ள எதார்த்தத்தின் இந்த முரண்பாடுகளை முற்றாக உட்படுத்திப் புரிந்து கொள்ள வல்லது. ஆனால் மக்கள் வாழ்க்கையிலிருந்து தான் கற்கிறார்கள், புத்தகங்களிலிருந்து அல்ல, என்று சொல்லத் தேவையில்லை. எனவே, சில நபர்கள் அல்லது குழுக்கள் முதலாளித்துவ வளர்ச்சியின் ஏதாவது ஒரு குணாம்சத்தை இன்றைக்கு ஒன்றாகவும் நாளைக்கு மற்றொன்றாகவும் எடுத்துக் கொண்டு, இவ்வளர்ச்சியின் "பாடத்தில்" இன்றைக்கு ஒன்றையும் நாளைக்கு மற்றொன்றையும் எடுத்துக் கொண்டு ஒரு தலைப்பட்சமான தத்துவமாகவும் ஒரு சார்பான போர்த்தந்திரத் தொகுப்பு முறையாகவும் எப்பொழுதும் மிகைப்படுத்துகிறார்கள், உயர்த்தி வைக்கிறார்கள்.


பூர்ஷீவாத் தத்துவாசிரிகயர்களும் மிதவாதிகளும் ஜனநாயகவாதிகளும் மார்க்சியத்தைப் பரிந்து கொள்ளாமல், நவீன காலத் தொழிலாளர் இயக்கத்தையும் புரிந்து கொள்ளாமல் ஒரு கோடியிலிருந்து மறகோடிக்குப் பயன்ற்று இடையறாது தாண்டிக் குதித்தவாறிருக்கிறார்கள். ஒரு சமயம், அவர்கள் கெட்ட எண்ணம் உள்ள நபர்கள் வர்க்கத்துக்கு எதிராக வர்க்கத்தைத் "தூண்டி விடுகிறார்கள்" என்று சாதித்து விவகாரம் முழுவதையும் விளக்கி விடுகிறார்கள் - மற்றொரு சமயம், தொழிலாளர் கட்சி "சமாதானப் போக்குள்ள சீர்திருத்தக் கட்சியே" என்கிற கருத்தைக் கொண்டு தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்கிறார்கள். அராஜகவாத - சிண்டிகலிசம், சீர்திருத்தவாதம் இரண்டுமே இந்த பூர்ஷீவா உலகக் கண்ணோட்டத்தின், அதன் செல்வாக்கின். நேரடியான விளைபொருளாகத்தான் கருதப்பட வேண்டும். அவை தொழிலாளர் இயக்கத்தின் ஒர் அம்சத்தைக் கௌவிப் பிடித்துக் கொள்கின்றன, ஒருசார்பான நிலையை ஒரு தத்துவமாக உயர்த்தி வைக்கின்றன, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியின், தொழிலாளி வர்க்க நடவடிக்கைகளின் குறிப்பிட்ட நிலைனைகளின், தனிச்சிறப்பான அம்சமாக இருக்கும் போக்குகளோ குணாம்சங்களோ ஒன்றோடொன்று தொடர் பற்றவை என்று பிரகடனப்படுத்துகின்றன. ஆனால் வாழ்க்கையும் இயற்கையிலுள்ள வளர்ச்சியும் ஒருங்கே மெதுவான பரிணாமத்தையும் துரிதமான பாய்ச்சல்கள், தொடர்ச்சியில் முறிவுகள் ஆகியவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு இருப்பது போலவே நிஜ வாழ்க்கையும் நிஜ வரலாறும் இந்த வெவ்வேறான போக்குகளை உள்ளடங்கிக் கொண்டுள்ளன.

பாய்ச்சல்கள் பற்றியும் தொழிலாளி வர்க்க இயக்கம் பழைய சமுதாயம் முழுவதற்கும் போட்பாடு ரீதியிலே பகையாக இருப்பது பற்றியும் உள்ள எல்லா வாதங்களும் வாய்ச் சொல்வீச்சு என்றே திருத்தல்வாதிகள் கருதுகிறார்கள். சீர்திருத்தங்கள் என்பவை சோஷலிசத்தின் அரைகுறையான நடைமுறையாக்கம் என்று கருதுகின்றார்கள். அராஜகவா - சிண்டிகலிஸ்டுகள் "அற்புதமான வேலையை" நிராகரிக்கிறார்கள், குறிப்பாக நாடாளுமன்ற மேடையைப் பயன்படுத்துவதை நிராகரிக்கிறார்கள். நடைமுறையில் பார்த்தால், பின் சொன்ன போர்த்தந்திரங்கள் "மாபெரும் நாட்களுக்காக" எதிர்பார்த்துக் கிடப்பதாகத்தான், அத்துடன் மாபெரும் நிகழ்ச்சிளைப் படைக்கிற சக்திகளைத் திரட்டத் திறனற்றிருப்பதாகத்தான் ஆகின்றன. எது மிகவும் முக்கியமானதோ எது அவசரமானதோ அதை - அதாவது, செவ்வனே செயல்பட்டு வரும், எல்லா நிலைமைகளிலும் செயல்பட்டு வரத்தக்க, தெளிவாகத் தம்முடைய குறிக்கோள்களைப் புரிந்து கொண்டும் உண்மையான மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தில் பயிற்சி பெற்றும் வர்க்கப் போராட்ட உணர்வு
ஊட்டப்பெற்றும் இருக்கிற பெரிய, பலம் வாய்ந்த நிறுவனங்களில் தொழிலாளிகளை ஒன்றுபடுத்துவது என்கிற வஷயத்தை - தடங்கல் செய்கின்றன...

கடைசியாக, தொழிலாளர் இயக்த்தில் பங்கு கொள்கிறவர்களிடையே கருத்து வேற்றுமைகள் எழுவதற்கு ஒரு முக்கியமான காரணம் பொதுவாக ஆளும் வர்க்கங்களின், குறிப்பாக முதலாளி வர்க்கத்தின், போர்த் தந்திரங்களிலே உள்ள மாற்றங்களிலே அடங்கியுள்ளது. முதலாளி வர்க்கத்தின் போர்த் தந்திரங்கள் எப்போதும் சீராக இருக்குமேயானால் அல்லது கொஞ்சத்துக்குக் கொஞ்சமேனும், ஒரேவகைப் பட்டதாக இருக்குமேயானால் தொழிலாளி வர்க்கமும் அதே சீரான அல்லது அமே வகையான போர்த் தந்திரங்களைக் கொண்டு பதில் கொடுக்க வேகமாகக் கற்றுக் கொள்ளும். ஆனால், உண்மையாகப் பார்த்தால், ஒவ்வொரு நாட்டிலும் முதலாளி வர்க்கம் தன் நலன்களுக்காகப் போராடவும் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும் இரண்டு ஆட்சி முறைகளை, இரண்டு வழி முளைகளைத் தவிர்க்க முடியாதபடி புனைந்து கொள்கிறது, இந்த முறைகள் சில சமயம் ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்றாகவருகின்றன. சில சமயம் பல்வேறு கூட்டுகளாக அவை ஒன்றோடொன்று சேர்த்துப் பின்னிவிடப் படுகின்றன. இவற்றில் முதலாவது பலாத்கார முறை, தொழிலாளர் இயக்கத்துக்கு எல்லாச் சலுகைகளையும் மறுக்கும் முறை, காலாவதியாகி விட்ட பழைய நிறுவனங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் முறை, சமரசத்திற்கு இடமற்ற வகையில் சீர்திருத்தங்களை மறுக்கும் முறை. இந்த பழைமைப் பிடிப்புள்ள கொள்கையின் இயல்பு இதுதான், மேற்க ஐரோப்பாவில் இது நிலவுடைமை வர்க்கத்தாரின் கொள்கையாக இருப்பது வர வரக் குறைந்து பொதுவாக பூர்ஷீவா கொள்கையின் பல வகைகளில் ஒன்றாக மேன்மேலும் ஆகி வருகிறது. இரண்டாவது, "மிதவாதத்தின்" வழிமுறை, அரசியல் உரிமைகளின் வளர்ச்சியை நோக்கி, சீர்திருத்தங்களையும் சலுகைகளையும் மற்றவற்றையும் நோக்கி அடி எடுத்து வைக்கும் முறை.

முதலாளி வர்க்கம் ஒரு வழி முறையிலிருந்து மற்றொரு வழி முறைக்குப் போவதற்குக் காரணம் தனி நபர்களின் கெடு நோக்கு அல்ல, தற்செயலும் அல்ல, அதன் நிலையில் அடிப்படையாகவே உள்ள முரண்பாடாம தன்மையேயாகும். உறுதியாக நிலை நாட்டப்பட்ட பிரதிநிதித்துவ அமைப்பு இல்லாமல், சார்பு நோக்கில் உயர்வான "பண்பாடு வகைப்பட்ட" தேவைகளால் தனிச் சிறந்து தீர வெண்டியிருக்கும் மக்களுக்குச் சில அரசியல் உரிமைகள் இல்லாமல் சகஜமான முதலாளித்துவச் சமுதாயம் வெற்றிகரமாக வளர முடியாது, உயர்தரமான தொழில் நுணுக்கம், பல்வகைத் தன்மை, நெளிவுசுளிவு, இயங்குந் தன்மை, உலகப் போட்டியின் வேகமான வளர்ச்சி முதலியவற்றோடு கூடிய முதலாளித்துவ உற்பத்தி முறையின் நிலைமைகளே ஒரளவுக்குக் குறைந்த பட்சப் பண்பாட்டுக்குரிய தேவைகளைப் படைக்கின்றன. இதன் விளைவாக, பூர்ஷீவா வர்க்கத்தின் போர்த் தந்திரங்களில் ஊசலாட்டங்கள், பலாத்கார முறையிலிருந்து மேம்போக்கான சலுகைகள் அளிக்கும் முறைக்கு மாறும் மாற்றங்கள் சென்ற அரை நூற்றாண்டுக் காலத்தில் எல்லா ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றிற்கும் குணக்குறியாக இருந்து வந்துள்ளன.......

டிசம்பர் 16, 1910

--------------------------------------------------------------------------------

"இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சி"
என்பதிலிருந்து

வி.இ.லெனின்

ஒரு புரட்சிகரமான நிலைமைக இல்லாமல் புரட்சி சாத்தியமல்ல என்பது ஒரு மார்க்சியவாதிக்கு சர்ச்சைக் கிடமற்ற விஷயம், மேலும், ஒவ்வொரு புரட்சிகரமான நிலைமையும் புரட்சிக்கு இட்டுச் செல்கிறது என்பதும் இல்லை. பொதுவாகச் சொன்னால், புரட்சிகரமான நிலைமையின் அறிகுறிகள் என்ன? பின்வரும் மூன்று முக்கியமான அறிகுறிகளைக் குறிப்பிட்டால் தவறாயிராது என்பது உறுதி:- [1] எந்த மாற்றமும் இல்லாமல் ஆளும் வர்க்கங்கள் தமது ஆட்சியை நீடித்திருக்கச் செய்வது சாத்தியமற்றுப் போகும்போது; "மேல் தட்டு வர்க்கங்கள்" இடையே ஏதாவது ஒரு வடிவத்தில் நெருக்கடி, ஒடுக்கப்ட்ட வர்க்கங்களின் அதிருப்தியும் கோபாவேசமும் பெருகிப் பாய்வதற்தற்கான உடைப்பு உண்டாக்கும் வகையில் ஆளும் வர்க்கத்தின் கொள்கையில் ஒரு நெருக்கடி இருக்கும்போது, புரட்சி நிகழ்வதற்கு பழைய வழியில் ்"கீழ்த்தட்டு மக்கள் வாழ விரும்பாதது" மட்டும் வழக்கமாகப் போதாது, பழைய வழியில் ்"மேல்தட்டு வர்க்கங்களும் வாழ முடியாமற் போவதும் ்" அவசியமாகிறது. [2] ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் துன்பதுயரங்களும் வறுமையும் வழக்கத்திற்கு மேல் கூராக வளர்ந்திருக்கும் போது, [3] மேலே சொன்ன காரணங்களின் விளைவாக, மக்களின் நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்திருக்கும் போது, அவர்கள் ்"சமாதான காலதில்" முறையீடு முணுமுணுப்பு ஏதுமின்றி தங்களைத் கொள்ளையடிக்க அனுமதிக்கிறார்கள், ஆனால் கொந்தளிப்பான காலங்யடிக்க அனுமதிக்கிறார்கள், ஆனால் கொந்தளிப்பான காலங்களில் ஒருங்கே நெருக்கடியின் எல்லாச் சூழ்நிலைகளாலும் ்"மேல் தட்டு வர்க்கங்களாலேயே" கூட சுதந்திரமான வரலாற்று ரீதியான நடவடிக்கையில் இழுக்கப்படுகிறார்கள்.


இந்தப் புறநிலை மாற்றங்கள் இல்லாமல் - இவை தனித் தனி குழுக்களின், கட்சிகளின் சித்தத்திற்கு அப்பாற்பட்டுச் சுதந்திரமாக இருப்பவை - பொதுவாகவே புரட்சி சாத்தியமல்ல, இந்தப் புறநிலை மாற்றங்களின் மொத்தமே புரட்சிகரமான நிலைமை என்று அழைக்கப்படுகிறது.

....ஒவ்வொரு புரட்சிகரமான நிலைமையும் புரட்சியைத் தோற்றுவிக்கிறது என்பதும் இல்லை, மேற் சொன்ன புறநிலை மாற்றங்களோடு கூடவே ஒரு அகநிலை மாற்றமும் - அதாவது, பழைய அரசாங்கத்தை உடைத்தெறிய [அல்லது கழன்று விழச் செய்ய] போதுமான வலுவுள்ள புரட்சிகரமான வெகுஜன நடவடிக்கை எடுப்பதற்குப் புரட்சிகரமான வர்க்கத்திற்குள்ள ஆற்றல், பழைய அரசாங்கத்தைக் குழியில் தள்ளாவிட்டால் அது என்றைக்கும் தானாகவே, நெருக்கடி நிலவும் காலத்திலுங் கூட "விழுவது" கிடையாது - வருகிற மாதிரியுள்ள ஒரு நிலைமையிருந்துதான் புரட்சி தோன்றுகிறது.

புரட்சியைப் பற்றிய மார்க்சிய கருத்துக்கள் இவையே.....

1915 மே - ஜீன்

--------------------------------------------------------------------------------

"சமரசங்கள் பற்றி"
என்பதிலிருந்து

வி.இ.லெனின்

அரசியலில் சமரசம் எனும் சொல் வேறொரு கட்சியுடன் உடன்பாடு செய்து கொள்வதின் மூலமாமகச் சில கோரிக்கைகளை விட்டுக்கொடுப்பது, தன் கோரிக்கைகளில் ஒரு பகுதியைக் கைவிடுவது என்பதை உட்கிடையாகக் குறிக்கிறது.

போல்ஷிவிக்குகளைப் பற்றிச் சாதாரண மனிதனிடம் வழக்கமாயிருக்கிற கருத்து - இது அவர்களை அவதூறு செய்யும் பத்திரிகைகள் ஊக்கி வளர்த்துவிட்டிருக்கும் கருத்தாகும் - என்னவென்றால் போல்ஷிவிக்குகள் யாருடனும் சமரசம் செய்ய என்றைய்கும் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள் என்பதே.

புரட்சிகரமான தொழிலாளி வர்க்கத்தின் கட்சி என்கிற வகையில் இந்தக் கருத்து நமக்குப் பெருமையளிப்பதாக இருக்கிறது, ஏனெனில், புரட்சியின் சோஷலிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்பால் நமக்குள்ள விசுவாசத்தை நம் பகைவர்கள் கூட ஒப்புக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்ருக்கிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது, என்ற போதிலும் இக்கருத்து தவறு என்று நாம் சொல்லித் தீரவேண்டும். பிளாங்கீவாதக் கம்யூனிஸ்டுகளின் கொள்கையறிக்கை [1873] பற்றிய தமது விமர்சனத்தில் "சமரசங்கள் கூடாது" என்கிற அவர்களின் பிரகடனத்தை எங்கெல்ஸ் சரியாகத்தான் கேலி செய்தார். இது ஒரு வெற்றுச் சொல் என்றார் அவர். ஏனெனில், தவிர்க்க முடியாதபடி சந்தர்ப்பச் சூழ்நிலைமைகள் ஒரு போராடும் கட்சிமீது சமரசங்களை அடிக்கடி திணிக்கின்றன. மேலும் "கடனைப் பகுதி பகுதியாகப் பெறுவதை" என்றைக்கும் ஏற்கமாட்டோம் என்று மறுப்பது அபத்தமாகும். ஓர் உண்மையான புரட்சிக் கட்சியின் பணி எல்லாச் சமரசங்களையும் கைவிடுவது சாத்தியமல்ல என்று பிரகடனப்படுத்துவதல்ல, அதற்குப் பதிலாக, அவை தவிர்க்க முடியாததாக ஆகிறபோது, எல்லாச் சமரசங்ளினூடேயும் தன் கோட்பாடுகளுக்கும் தன் வர்க்கத்துக்கும் தன் புரட்சி நோக்கத்திற்கம் புரட்சிக்கு வழியைச் செப்பனிட்டு புரட்சியில் வெற்றி பெறுவதற்கு மக்கள் திரளுக்குப் போதனையளிக்கும் தன் பணிக்கும் உண்மையான இருந்துவர ஆற்றல் பெற்றிருப்பதே.

1917 செப்டம்பர்

--------------------------------------------------------------------------------

"புரட்சியின் பணிகள்"
என்பதிலிருந்து

வி.இ.லெனின்

...முழு அதிகாரத்தைக் கைப்பற்றுவதின் மூலமாக சோவியத்துகள் இன்றைக்குங் கூட - இதுவே பெரும்பாலும் அவர்களின் கடைசி வாய்ப்பாகும் - புரட்சியின் சமாதான வழிப்பட்ட வளர்ச்சியை, சமாதான வழியில் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்து கொள்வதற்கான தேர்தல்களை, சோவியத்துகளின் உள்ளே கட்சிகள் சமாதான வழியில் போராட்டம் நடத்துவதை உறுதிப்படுத்த முடியும், அவை பல்வேறு கட்சிகளின் வேலைத்திட்டத்தை நடைமுறையில் சோதிக்க முடியும், ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு சமாதானமான வழியில் அதிகாரம் மாறமுடியும்.

புரட்சியின் வளர்ச்சிப் போக்கு முழுவதும்.... இந்த வாய்ப்பை நழுவவிட்டால் முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே மிகக் கடுமையான உள் நாட்டுப் போர் நடந்து தீரும் என்று காட்டுகிறது. தவிர்க்க முடியாத பெருவிபத்து இந்தப்போரை மேலும் நெருங்கிவரச் செய்யும் மனித அறிவுக்கு எட்டக்கூடிய எல்லா விஷயாதாரங்களும் கருத்துக்களும் நிரூபிப்பது போல், அது தொழிலாளி வர்க்கத்தின் முழு வெற்றியிலே போய் முடியும், அந்த வர்க்கம் ஏழை விவசாயிகளின் ஆதரவோடு மேற்சொன்ன வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதில் போய் முடியும், என்றாலுங்கூட, அது மிகவும் கஷ்டமுள்ளதாகவும், இரத்தம் சிந்தக் கூடியதாகவும் இருக்கக்கூடும், பல்லாயிரக் கணக்கான நிலப்பிரபுக்களின், முதலாளிகளின், அவர்களிடம் அனுதாபம் கொண்டுள்ள அதிகாரிகளின் உயிர் பலியாக வேண்டியதாகவும் இருக்கக்கூடும். புரட்சியைக் காப்பாற்றுவதற்குத் தொழிலாளி வர்க்கம் எந்தத் தியாகம் செய்யவும் தயங்காது, மேற்சொன்ன வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதின் மூலமாக மட்டுமே புரட்சியைக் காப்பாற்ற முடியும். மறுபுறத்தில், புரட்சி சமாதான வழியில் வளர்வதை உறுதிப்படுத்துவதற்கான தமது கடைசி வாய்ப்பை சோவியத்துகள் பயன்படுத்துமேயனால் எல்லா வழிகளிலும் தொழிலாளி வர்க்கம் சோவியத்துகளை ஆதரிக்கும்.

1917 செப்டம்பர்

"மார்க்சியமும் புரட்சிக் கலகமும்"
என்பதிலிருந்து

முக்கியமான "சோஷலிஸ்டுக் கட்சிகள்" கையாளும் மிகவும் கொடிதான, பெரும்பாலும் மிகப் பரவலான மார்க்சிய உருக்குலைவுகளில் ஒன்று, புரட்சிக் கலகத்துக்குத் தயார் செய்வதும் பொதுவாகவே புரட்சிக் கலகத்தை ஒரு கலையாக எடுத்து நடத்துவதும் "பிளாங்குவி வாதம்" என்று சொல்கிற சந்தர்ப்பவாதப் புளுகாகும்.


சந்தர்ப்ப வாதத்தின் தலைவராகிய பெர்ன்ஷ்டைன் மார்க்சியம் பிளாங்குவி வாதமே என்று குற்றஞ்சாட்டுவதின் மூலமாக ஏற்கனவே துரதிர்ஷ்டவசமான புகழ் தேடிக் கொண்டிருக்கிறார், நம் தற்காலச் சந்தர்ப்பவாதிகள் பிளாங்குவி வாதம் என்று கூக்குரலிடும் போது பெர்ந்ஷ்டைனின் அற்பமான "கருத்துக்களை" கடுகளவேனும் மேம்படுத்தவில்லை, "வளப்படுத்தவும்" இல்லை.

புரட்சிக் கலகத்தை ஒரு கலையாக எடுத்து நடததுவதற்காக மார்க்சிய வாதிகள் பிளாங்குவி வாதிகள் என்று குற்றஞ் சாட்டப்படுகிறார்கள்! இது விஷயமாக மிகவும் திண்ணமாகவும் சரி நுட்பமாகவும் ஆணித்தரமாகவும் கருத்தைச் சொன்னவர் மார்க்ஸ் தான் என்பதை எந்த ஒரு மார்க்சிய வாதியும் மறுக்கமாட்டான். அப்படியிருக்கும் போது இதை விட மோசமாக, பச்சையாக உண்மையை உருக்குலைக்க முடியுமா? மார்க்ஸ் புரட்சிக் கலகம் என்பது ஒரு கலை என்று தெளிவுறுதியுடன் குறிப்பிட்டார், அது ஒரு கலையாக எடுத்து நடத்தப்படவேண்டும், நீங்கள் முதல் வெற்றியைச் சம்பாதித்துத் தீர வேண்டும், பிறகு வெற்றி, மேல் வெற்றியாக முன்னேறிக் கொண்டிருக்க வேண்டும், எதிரியின் மீது தொடுத்த தாக்குதலை என்றைக்கும் நிறுத்தக் கூடாது, அவனுடைய குழப்பத்தை உங்களுக்கு உனுகூலமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொன்னார்.

புரட்சிக் கலகம் வெற்றி பெற வேண்டுமானால் அது ஒரு சதியையோ கட்சியையோ ஆதாரமாகக் கொண்டிருக்கக் கூடாது, முன்னணியில் நிற்கும் வர்க்கத்தைத்தான் ஆதாரமாகக் கொண்டிருக்க வேண்டும். இது முதல் விஷயம். புரட்சிக்கலகம் மக்களின் புரட்சிகரமான எழுச்சியை ஆதாரமாகக் கொண்டிருக்க வேண்டும். இது இரண்டாவது விஷயம். முன்னணியில் நிற்கும் மக்களின் அணிகளின் நடவடிக்கை உச்ச நிலையில் இருக்கும்போதும், எதிரியின் அணிகளிலும் புரட்சியின் பலவீனமான, அரைமனதான, நெஞ்சுறுதியற்ற நண்பர்களின் அணிகளிலும் ஊசலாட்டங்கள் மிகப் பலமாக இருக்கும் போதும் வளர்ந்து வரும் புரட்சியின் வரலாற்றில் ஏற்படுகிற திரும்பு முனையைப் புரட்சிக் கலகம் ஆதாரமாகக் கொள்ள வேண்டும். இது புரட்சிக் கலகம் எனும் பிரச்சினையை எழுப்புவதற்குரிய இந்த மூன்று நிலைமைகள், மார்க்சியத்தை பிளாங்குவி வாதத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

ஆனால், இந்த நிலைமைகள் இருக்கின்றன என்றாகிவிட்டால் அப்போது புரட்சிக் கலகத்தை ஒரு கலையாக எடுத்து நடத்த மறுப்பது மார்க்சியத்துக்குத் துரோகம் செய்வதாகும், புரட்சிக்கும் துரோகம் செய்வதாகும்.

1917 செப்படம்பர்

--------------------------------------------------------------------------------

"ஒரு பார்வையாளனின் அறிவுரை"
என்பதிலிருந்து

வி.இ.லெனின்

....ஆயுதமேந்திய கலகம் அரசியல் போராட்டத்தின் ஒரு தனி வடிவம், அது தனி விதிகளுக்கு உட்பட்டது, அந்த விதிகளின்மீது கவனிப்புள்ள சிந்தனை செலுத்தித் தீரவேண்டும். "போர் போலவே புரட்சிக் கலகமும் ஒரு கலையே" என்று மார்க்ஸ் எழுதிய போது இந்த உண்மையை குறிப்பிடத் தக்க தெளிவுடன் வெளியிட்டார்:

1. புரட்சிக் கலகத்துடன் என்றைக்கும் விளையாடாதீர்கள், ஆனால் அதைத் தொடங்கும் போது கடைசி வரைக்கும் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்பதை உறுதியாக உணர்ந்து கொள்ளுங்கள்.

2. நிர்ணயமான முனையில் நிர்ணயமான தருணத்தில் பகைவனை விட பெரிய அளவில் அதிகமா சக்திகளை ஒன்று குவித்து நிறுத்துங்கள், இல்லையேல் உங்களைவிட மேலான தயாரிப்பும் அமைப்பும் பெற்ற அனுகூலத்துடன் கூடிய பகைவன் கலகலக்காரர்களை ஒழித்து விடுவான்.

3. புரட்சிக் கலகம் தொடங்கிவிட்ட தென்றால் நீங்கள் மிகவும் மன உறுதியுடன் செயலாற்ற வேண்டும், தவறாமல் எல்லா வழிகளிலும் தாக்குதலில் இறங்கவேணடும். "தற்காப்பு என்பது ஒவ்வொரு ஆயுதமேந்திய கலகத்துக்கும் எமனாகும்."

4. எதிரி எதிர்பராதிருக்கும் போது நீங்கள் தாக்குவதற்கு முயலவேண்டும், அவனுடைய சக்திகள் சிதறியிருக்கும் தருணம் பார்த்துத் தாக்கவேண்டும்.

5. வெற்றிகள் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு நாளும் [ஒர நகரமாக இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு மணியிலும் என்று சொல்லலாம்] வெற்றிகள் பெறுவதற்கு நீங்கள் முயலவேண்டும், எந்த விலை கொடுத்தேனும் "தர்மாவேச மேனிலையை" நீடித்துக் கையில் வைத்திருக்க வேண்டும்.

இதுவரை தெரிந்துள்ளவர்களின் புரட்சிகரமான கொள்கையின் தலையாய நிபுணரான டாண்டனின் "துணிச்சல் வேண்டும், மீண்டும் துணிச்சல் வேண்டும், மேலும் துணிச்சல் வேண்டும்" என்கிற வார்த்தைகளில் புரட்சிக்கலகம் சம்பந்தமாக எல்லாப் புரட்சிகளின் பாடங்களை மார்க்ஸ் தொகுத்தளித்தார்.


ருஷ்யாவுக்கும் 1917 அக்டோபருக்கும் இதைப் பொருத்தி செயல்படுத்தும்போது இதற்கு அர்த்தம்: பெட்ரோகிராட் மீது ஒரே காலத்தில் தாக்குதல், முடிந்தவரை திடீரென்றும் வேகமாகவும் நடத்தவேண்டும், தவறாமல் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் நடத்த வேண்டும், தொழிலாளி வர்க்க வட்டராங்களிலிருந்தும், பின்ல்ரந்திலிருந்தும், ரெவெலிலிருந்தும், கிரான்ஸ்டட்டிலிருந்தும் நடத்த வேண்டும், கப்பற்படை முழுவதையும் கொண்ட தாக்குதல் வேண்டும், நம் "பூர்ஷீவா படையை" [இராணுவ ஆபீசர்களின் பயிற்சிப் பள்ளிகளைச்] சேர்ந்த, நம் "வெண்டீ துருப்புகளை" [கோஸாக்குப் படைகளின் ஒரு பகுதியைச்] சேர்ந்த 15,000 லிருந்து 20,000 வரையுள்ள [ஒருகால் இதற்கு மேலும் இருக்கலாம்] படைகளை விட பிரம்மாண்டமான அளவில் மிகுதியாகச் சக்திகளை ஒன்று குவிக்க வேண்டும், முதலியவாறு.

நம் முக்கியமான மூன்று சக்திகளும் - கப்பற்படை, தொழிலாளிகள் இராணுவப்படைகள் - [அ]தொலைபேசி நிலையம், [ஆ]தந்தி நிலையம், [இ] இரயில் நிலையங்கள், [ஈ] எல்லாவற்றிற்கும் மேலாக, பாலங்கள், ஆகியவற்றைத் தவறாமல் கைப்பற்றி என்ன விலை கொடுத்தேனும் கைவசம் வைத்திருக்கும் வகையில் இணைக்கப்பட வேண்டும்.

மிகவும் மனத் துணிவுள்ள நபர்கள் [நம் "அதிரடிச் சக்திகள்", இளந் தொழிலாளிகள், மற்றும் மாலுமிகளில் மிகச் சிறந்தவர்கள்] சிறுசிறு படைகளாக அமைக்கப்பட்டு மேலும் முக்கியமான எல்லா முனைகளையும் வசப்படுத்திக் கொள்ள வேண்டும், எல்லா முக்கியமான நடவடிக்கைகளிலும் எங்கும் பங்கு கொள்ள வேண்டும், எடுத்துக் காட்டாக:

பெட்டோகிராடை வளைத்துக் கொண்டு துண்டித்துவிடுவது, மாலுமிகள், தொழிலாளிகள், துருப்புகள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த தாக்குதலைக் கொண்டு அதைக் கைப்பற்றுவது - இந்த பணிக்குக் கலையும் மும்மடங்கான துணிச்சலும் அவசியம்,

பகைவனின் "மையங்களை" [இராணுவ அதிகாரிகளின் பறிற்சிப் பள்ளிகள்,தந்தி நிலையம், தொலைபேசி நிலையம், முதுலியவை] தாக்கி வளைத்துக் கொள்வதற்காகத் துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் ஏந்திய மிகச் சிறந்த தொழிலாளிகளைக் கொண்ட படைகளை அமைக்க வேண்டும். அவர்களின் உஷார்மொழி பகைவனை உள்ளே அனுமதிப்பதை விட கடைசி ஆள் வரை சாவதே மேல்!" என்று இருக்க வேண்டும்.

செயல் புரியத் தீர்மானித்தால் தலைவர்கள் மார்க்ஸ், டாண்டன் ஆகியோரின் மகத்தான அறிவுரைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்துவார்கள் என்று நம்புவோமாக.

ஒருங்கே ருஷ்யப் புரட்சியின், உலகப் புரட்சியின் தலைவிதி இரண்டு மூன்று நாட்களின் சண்டையைப் பொறுத்திருக்கிறது.

1917 அக்டோபர் 8

--------------------------------------------------------------------------------

"தொழிலாளி வர்க்கப் புரட்சியும் கட்சி மாறி காவுட்ஸ்கியும்"
என்பதிலிருந்து

வி.இ.லெனின்

...இராணுவம் "சீர்குலையாத" நிலையில் மாபெரும் புரட்சி ஒன்றுகூட நிகழ்ந்ததில்லை, என்றைக்கும் நிகழவும் முடியாது. ஏனெனில், பழைய ஆட்சியை ஆதரிப்பதற்கு அதுதான் மிகமிக விறைத்து இறுகிப்போன கருவி, பூர்ஷீவா கட்டுப்பாட்டின் மிகவும் கெட்டி தட்டிப்போன அரண், அது மூலதனத்தின் ஆட்சியை முட்டுக் கொடுத்து நிறுத்துகிறது, உழைப்பாளி மக்களிடையே மூலதனத்துக்குக் கீழ்ப்படிந்து அடங்கி ஒடுங்கி வாழும் அடிமை உணர்ச்சியை அது பேணிக் காத்து வளர்க்கிறது. இராணுவத்தோடு அக்கம்பக்கமாக ஆயுதமேந்திய தொழிலாளிகள் இருப்பதை எதிர்ப்புரட்சி என்றைக்கும் சகித்துக் கொண்டதில்லை, என்றைக்கும் சகித்துக் கொள்ளவும் முடியாது. பிரான்சில் ஒவ்வொரு புரட்சியிலிருந்தும் தொழிலாளிகள் ஆயுதமேந்தி வெளிவந்தனர், என்று எங்கெல்ஸ் எழுதினார்: "எனவே அரசின் சுங்கானைக் கையில் பிடித்துக் கொண்டுள்ள முதலாளி வர்க்கத்துக்கு தொழிலாளிகளை நிராயுதபாணியாக்குவதே முதல் புனிதக் கட்டளையாக இருந்தது." ஆயுத மேந்திய தொழிலாளிகள் ஒரு புதிய இராணுவத்தின் கரு, ஒரு புதிய சமுதாய அமைப்பின் திரட்டியமைக்கப்பட்ட மூலக்கரு. இந்த மூலக்கருவை நசுக்குவது, அதை வளரவிடாமல் தடுப்பது முதலாளித்துவத்தின் முதல் புனிதக் கட்டளையாகும். மார்க்ஸ் எங்கெல்ஸ் திரும்பத் திரும்ப வலியுறுத்தியது போல், வெற்றிகரமான ஒவ்வொரு புரட்சியின் முதல் புனிதக் கட்டளை பழைய இராணுவத்தை நொறுக்குவது, கலைத்துவிடுவது, அதற்குப் பதிலாக ஒரு புதிய இராணுவத்தை வைப்பதாகும். ஒரு புதிய சமுதாய வர்க்கம் ஆட்சிக்கு வரும்போது பழைய இராணுவத்தை முற்றாக நொறுக்கிக் கலைப்பதின் மூலமாக அல்லாமல் ["சீர்குலைவு!" என்று இது விஷயமாகப் பிற்கோக்கான அல்லது சுத்த கோழைத்தனமான போலிப் பண்பாளர்கள் ஊளையிடுகிறார்கள்] எந்த ஒரு இராணுவமும் இல்லாமலே ஒரு மிகவும் கஷ்டமமான, துன்பகரமான காலப்பகதியைக் கடப்பதின் மூலமாக அல்லாமல் [மகத்தான் பிரெஞ்சுப் புரட்சி கூட இப்படிப்ட்ட ஒரு துன்பகரமான காலப்பகுதியைக் கடந்தது], கடினமான உள்நாட்டுப் போரின் மத்தியிலே ஒரு புதிய வர்க்கத்தின் ஒரு புதிய இராணுவ அமைப்பைப் படிப்படியாக நிர்மாணிப்பதின் மூலமாக அல்லாமல் என்றைக்கும் அதிகாரத்தை எட்டிப் பிடித்துக் கெட்டிப்படுத்த முடிந்ததில்லை, இன்றைக்கும் முடியாது....

1918 அக்டோபர் - நவம்பர்

--------------------------------------------------------------------------------

"இத்தாலி, பிரெஞசு, ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுக்கு வாழ்த்துக்கள்"
என்பதிலிருந்து

வி.இ.லெனின்

....தங்கள் முன்னணிப்படையான தொழிலாளி வர்க்கத்துக்கு மிகப் பெரும்பான்மையான உழைப்பாளி மக்களின் அனுதாபமும் ஆதரவும் இல்லாமல் தொழிலாளி வர்க்கப் புரட்சி சாத்தியமில்லை. ஆனால் இந்த அனுதாபமும் இந்த ஆதரவும் உடனடியாக வருகிறதில்லை. நீண்ட, கடினமான, கண்டிப்பான வர்க்கப் போராட்டத்தின் போக்கிலே அவை வென்று கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான உழைப்பாளி மக்களின் அனுதாபம் ஆதரவு ஆகியவற்றிற்காகத் தொழிலாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப் போராட்டம் தொழிலாளி வாக்கம் அரசியல் அதிகாரத்தை வென்றுகொள்வதோடு முடிந்து விடுகிறதில்லை. அதிகாரத்தை வென்று கொண்ட பிறகு இந்தப் போராட்டம் தொடருகிறது, ஆனால் வேறு வடிவங்களல். ருஷ்யப் புரட்சியில் சூழ்நிலைமைகள் தொழிலாளி வர்க்கத்திற்கு அசாதாரணமான வகையில் சாதகமாக [தன் சர்வாதிகாரத்திற்காக அது நடத்திய போராட்டத்தில்] இருந்தது. ஏனெனில் மக்கள் அனைவரும் ஆயுதமேந்திய நிலையில் இருந்த காலத்திலும் விவசாயி மக்கள் அனைவரும் சமூக - துரோகிகளின், மென்ஷிவிக்குகளின், சோஷலிசப் புரட்சிவாதிகளின் "காவுட்ஸ்கி வழிபட்ட" கொள்கையில் வெறுப்புற்று நிலவுடைமையாளர்களின் ஆட்சியைத் தூக்கியெறிவதை விரும்பிய காலத்திலும் தொழிலாளி வர்க்கப் புரட்சி நடந்தது.

எனினும், தொழிலாளி வர்க்கப் புரட்சி நடக்கும் தருணத்தில் விவகாரங்கள் அசாதாரணமான வகையில் சாதகமாயிருந்து ருஷ்யாவிலுங்கூட - தொழிலாளி வர்க்கம் முழுவதின், இராணுவம் முழுவதின், விவசாயி மக்கள் முழுவதின் ஒரு மிகவும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை உடனடியாகச் சாதிக்கப்பட்டிருந்த ருஷ்யாவிலுங்கூட - தொழிலாளி வர்க்கம் தன் சர்வாதிகாரத்தைச் செயல்படுத்தி வருகிற நிலையில் பெரும்பான்மையான உழைப்பாளி மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் வென்று கொள்வதற்கு மாதக் கண்க்கில் வருடக்கணக்கில் போராட வேண்டியிருந்தது.

1919 அக்டோபர் 10

--------------------------------------------------------------------------------

"இடதுசாரிக் கம்யூனிசம் - ஒரு இளம் பருவக் கோளாறு"
என்பதிலிருந்து

வி.இ.லெனின்

....இப்பொழுது நமக்கு மிகக் கணிசமான அளவுக்குச் சர்வதேச ரீதியான அனுபவம் கிடைத்திருக்கிறது, நம் புரட்சியின் சில அடிப்படையான குணாம்சங்கள் உள்நாட்டிற்குரியதான, ஒரு தினுசாகத் தேசிய ரீதியான ருஷ்யாவுக்கு மட்டுமே உரித்தான குறிபொருள் கொண்டவை என்று அந்த அனுபவம் மிகவும் திட்டவட்டமாகக் காட்டுகிறது. சர்வதேசரீதியான குறிபொருள் என்கிற சொல்லின் விரிவான அர்த்தத்தில் அதைப் பற்றி நான் இங்கே பேசவில்லை, நம் புரட்சி எல்லா நாடுகள் மீதும் பாதிப்புச் செய்திருக்கிறது என்கிற அர்த்தத்தில் நம் புரட்சியின் முதன்மையான குணாம்சங்களில் பல மட்டுமின்றி அனைத்துமே, அதன் இரண்டாந்தரமான குணாம்சங்களில் பலவும் சர்வதேச ரீதியான குறிபொருள் உள்ளவை. இந்தச் சொல்லின் மிகமிகக் குறுகிய அர்த்தத்தில், சர்வதேச ரீதியான குறிபொருள் என்றால் நம் நாட்டில் நடந்திருப்பது, சர்வதேச அளவில் திரும்பவும் நடப்பதின் சர்வதேச ரீதியான செல்லுபடியாகுந்தன்மை அல்லது வரலாற்று ரீதியான தவிர்க்க வியாலாத்தன்மை என்று அர்த்தம் என்று வைத்துக்கொண்டு அதைப் பற்றிப் பேசுகிறேன். நம் புரட்சியின் சில அடிப்படையான குணாம்சங்களுக்கு அந்தக் குறிபொருள் உண்டு என்பதை ஒப்புக்கொண்டு தீரவேண்டும்...

நீங்கள் "மக்களுக்கு" உதவ வேண்டுமென்றும் "மக்களின்" அனுதாபத்தையும் உதவ வேண்டுமென்றும் விரும்பினால் நீங்கள் கஷ்டங்களைக் கண்டு பயப்படக் கூடாது, அல்லது
"தலைவர்களிடமிருந்து" [அவர்கள் சந்தர்ப்பவாதிகளாகவும் சமூக இனவெறியர்களாகவும் இருப்பதினால் பெரும்பாலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ முதலாளி வர்க்கத்துடனும் போலீசுடனும் இணக்கப்பட்டிருக்கிறார்கள்] வரும் சிறுதொல்லைகளையும் சொற்புரட்டையும் பழிச்சொற்களையும் துன்புறுத்தலையும் கண்டு பயப்படக்கூடாது மக்கள் இருக்கிற இடங்களிலெல்லாம் பணியாற்றித் தீரவேண்டும். தொழிலாளி வர்க்க மக்கள் திரள்களும் அரைத் தொழிலாளிவர்க்க மக்கள் திரள்களும் இருக்கிற நிறுவனங்களிலும் சங்கங்களிலும் மன்றங்களிலும் - மிகமிகப் பிற்போக்கானவற்றிலுங்கூட - முறைமையுடனும் விடாமுயற்சியுடனும் விடாப்பிடியாகவும் பொறுமையாகவும் கிளர்ச்சியும் பரசாரமும் நடத்தி வருவதற்கு எந்தத் தியாகம் செய்வதற்கும் மிகப்பெரிய முட்டுக்கட்டைகளை அகற்றுவதற்கும் உங்களுக்கு ஆற்றல் இருக்க வேண்டும்...

...அரசியல் நிர்ணய சபைக்கான [ருஷ்யாவின் பூர்ஷீவா நாடாளுமன்றம்] தேர்தல்களில் 1917 செப்டம்பர் - நவம்பரில் நாங்கள் கலந்துகொண்டோம். எங்கள் போர்த்தந்திரங்கள் சரியா இல்லையா? இல்லையென்றால் இதைத்தெளிவாகக் கூறி நிரூபிக்கவேண்டும், ஏனெனில் சர்வதேசக் கம்யூனிசத்திற்குச் சரியான போர்த்தந்திரங்களை உருவாக்குவதில் இது அவசியம். அவை சரியென்றால் அப்போது சில முடிவுகளுக்கு வரவேண்டும்....

இதிலிருந்து தொடரும் முடிவு முற்றிலும் மறுக்க வொண்ணாததாகும், ஒரு முதலாளித்துவ ஜனநாயக நாளாளுமன்றத்தில் கலந்து கொள்வது [ஒரு சோவியத் குடியரசு வெற்றிபெறுவதற்குச் சில வாரங்களுக்கு முன்புகூட, அப்படிப்பட்ட வெற்றிக்குப் பிறகு கூட] புரட்சிகரமான தொழிலாளி வர்க்கத்துக்குத் தீங்கு செய்வதற்குப் பதிலாக, அப்படிப்பட்ட நாடாளுமன்றங்கள் ஒழிக்கத்தக்கவை என்று பிற்பட்ட மக்களுக்கு நிரூபிப்பதற்கு அது நடைமுறையில் உதவுகிறது, அவற்றை வெற்றிகரமாகக் கலைப்பதை வசதியாக்கித் தருகிறது. பூர்ஷீவா நாடாளுமன்றவாதம் "அரசியல் ரீதியிலே காலாவதியாகிவிட்டதாக" செய்வதற்கு அது உதவுகிறது. தன் போர்த்தந்திரங்களை சர்வதேச ரீதியாக [குறுகிய அல்லது முற்றிலும் தேசியப் போர்த் தந்திரங்களாக] வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கோருகிற அதே நேரத்தில் இந்த அனுபவத்தைப் புறக்கணிப்பது ஒரு மோசமான தவறு செய்கிறதாக அர்த்தம், சர்வ தேசியத்தைச் சொல்லளவில் ஏற்றுக்கொண்டு செயலளவில் நடைமுறையில் கைவிடுவதாக அர்த்தம்...

....மக்களிடையே புரட்சிகரமான ஒரு மனோநிலை இல்லாமலும் இந்த மனோநிலை வளர்வதற்கு வசதி செய்கிற நிலைமைகள் இல்லாமலும் புரட்சிகரமான போர்த்தந்திரங்கள் என்றைக்கும் செயலாக வளராது. ஆனால், ஒரு புரட்சிகரமான மனோநிலை மீது மட்டும் புரட்சிகரமான போர்த்தந்திரங்களை நிர்மாணிக்க முடியாது என்கிற உண்மையை ருஷ்யாவில் நீண்ட, துன்பகரமான, இரத்தக் களரியான அனுபவம் எங்களுக்குப் போதித்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அரசில் [அதைச் சூழ்ந்துள்ள அரசுகளிலும் உலகெங்கும் உள்ள அரசுகளிலும்] இருக்கிற எல்லா வர்க்கச் சக்திகளைப் பற்றிய நிதானமுள்ள, முற்றிலும் புறநிலையான மதிப்பீட்டின் அடிப்படையிலும் புரட்சிகாமான இயக்கங்களின் அனுபவத்தின் அடிப்படையிலும் போர்த்தந்திரங்கள் இருந்து தீரவேண்டும்.....

...விவர்சனம் - மிகவும் கூரான, ஈவிரக்கமற்ற, சமரசத்திற்கிட மற்ற விமர்சனம் - நாடாளுமன்ற வாதத்தின்மீதோ நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீதோ அல்லாமல் ஒரு புரட்சிகரமான, கம்யூனிஸ்டு முறையில் நாடாளுமன்றத் தேர்தல்களையும் நாடாளுமன்ற மேடையையும் பயன்படுத்துவதற்குத் திறமையற்றிருக்கும் - அதைவிட முக்கியமாக, விருப்பமில்லாதவர்களாக இருக்கும் - தலைவர்களுக்கு எதிராகத் திருப்பப்பட வேண்டும். இப்படிப்பட்ட விமர்சனம் ஒன்றுதான் - திறமையற்ற தலைவர்களை விலக்கி வெளியேற்றி அவர்கள் இடத்தில் திறமையுள்ள தலைவர்களை வைப்பதை இத்துடன் சேர்த்துக் கொள்ளவும் வேண்டும் - உபயோககரமான, பயனுள்ள வேலையாகும், இந்த வேலை ஒரே நேரத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தகுதியுள்ளவர்களாகத் "தலைவர்களை" பயிற்றுவிப்பதோடல்லாமல் அரசியல் நிலைமையையும் அந்த நிலைமையிலிருந்து அடிக்கடி எழும் சிக்கலான, நுட்பமான பணிகளைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு முடிகிற மாதிரி மக்களையும் பயிற்றுவிக்கும்.....

.....முடிந்தவரை முயற்சி செலுத்துவதின் மூலமாகத் தான், எதிரிகளிடையேயுள்ள எந்த ஒரு பிளவையும். மிகமிகச் சிறிய பிளவையும் பல்வேறு நாடுகளின் முதலாளி வர்க்கத்தினரிடையேயும் அந்தப் பல்வேறு நாடுகளிலுமுள்ள முதலாளி வர்க்கத்தினரிடையேயுள்ள பல்வேறு குழுக்கள் அல்லது வகைகளிடையேயும் இருக்கிற நலன்கள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு மோதலையும் மிகமிக முழுமையாகவும் கவனமாகவும் திறமையுடனும் கடமைப ்பொறுப்புடனும் பயன்படுத்திக் கொள்வதின் மூலமாகவும், ஒரு வெகுஜன நேசசக்தியை - இந்த நேச சக்தி தற்காலிகமானதாகவும் ஊசலாட்டமுள்ளதாகவும் திடமற்றதாகவும் நம்பவொண்ணாததாகவும் நிபந்தனைக் குட்பட்டதாகவும் இருந்தபோதிலும் சரியே - வென்று கொள்வதற்கான எந்த, மிகச் சிறிய, வாய்ப்பையும் பயன் படுத்திக் கொள்வதின் மூலமாகவும் மட்டுமே நம்மைவிட வலுவுள்ள எதிரியை முறியடிக்க முடியும். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் மார்க்சியத்தை, பொதுவாகவே விஞ்ஞான சோஷலிசத்தைக் கடுகளவேனும் புரிந்து கொள்ளத் தவறுவதைக் காட்டிக் கொள்கிறார்கள். இந்த உண்மையை நடைமுறையில் செயல்படுத்தும் தங்கள் திறமையை நடைமுறையில், ஓரளவுக்கு வெவ்வேறு பட்டதான அரசியல் நிலைமைகளில், நிரூபித்துக் கொள்ளாதவர்கள் சரண்டலாளர்களிடமிருந்து உழைக்கும் மனிதகுலம் முழுவதையும் விடுவிப்பதற்காகப் புரட்சிகரமான வர்க்கம் நடத்தும் போராட்டத்தில் அந்தப் புரட்சிகரமான வர்க்கத்திற்கு இன்னமும் உதவக் கற்றுக்கொள்ளவில்லை. இது தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றதற்கு முன்பும் சரி, பின்பும் சரி பொருந்தும்.

நம் தத்துவம் ஒரு வறட்டுச் சூத்திரமல்ல, அது செயலுக்கு வழிகாட்டி என்று மார்க்சும் எங்கெல்சும் சொன்னார்கள். கார்ல் காவுட்ஸ்கி, ஆட்டோ பாயர் முதலான "சுத்த சுயம்பிரகாசமான" மார்க்சியவாதிகள் செய்யும் மிகப்பெரிய தவறு, மிகப்பெரிய குற்றம் இதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை, தொழிலாளி வர்க்கப் புரட்சியின் முக்கியமான தருணங்களில் அதைச் செயல் படுத்தத் திறமையற்றிருந்தனர்....

தொழிலாளிக்கும் அரைத்தொழிலாளிக்கும் [தன் உழைப்புச் சக்தியின் ஒரு பகுதியை விற்பதின் மூலமாக வாழ்க்கைக்குச் சம்பாதிக்கிறவன்] இடையேயுள்ள, அரைத் தொழிலாளிக்கும் சிறிய விவசாயிக்கும் [பொதுவாக சிறிய கைவினைஞன், கைத்தொழில் செய்கிறவன், சிறிய எஜமானன்] இடையேயுள்ள, சிறிய விவசாயிக்கும் நடுத்தர விவசாயிக்கும் இடையேயும் இதுபோன்று மற்றப் பகுதிகளுக்கும் இடையேயுமுள்ள பெருந்தொகையிலான மிகவும் பல பட்டறையான வகைகளால் தொழிலாளி வர்க்கம் சூழப்பட்டிராவிட்டால், தொழிலாளி வர்க்கமே மேலான வளர்ச்சி பெற்ற பகுதியாகவும் கீழான வளர்ச்சிபெற்ற பகுதியாகவும் பிரிக்கப்பட்டிராவிட்டால், பிரதேசத் தாயகம், தொழில், சில சமயங்களில் மதம், என்றபடியெல்லாம் அது பிரிக்கப் பட்டிராவிட்டால் முதலாளித்துவம் முதலாளித்துவமாக இராது. இதிலிருந்து தொடர்கிறது என்னவென்றால், கம்யூனிஸ்டுக் கட்சி - தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப்படை, அதன் வர்க்க உணர்வுள்ள பகுதி - சிறிதே கொள்கைத் திசையை மாற்றுவதும் தொழிலாளிகளின் பல்வேறு குழுக்களுடன், தொழிலாளிகளின் மற்றும் சிறிய எஜமானர்களின் பல்வேறு கட்சிகளுடன் உடன்பாடுகளும் சமரசங்களும் செய்து கொள்வதும் அவசியமாகிறது. தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வின், புரட்சிகரமான உணர்ச்சியின், போராடி வெல்லும் ஆற்றலின் பொதுவான தரத்தைத் தாழ்த்தாமல் உயர்த்துவதற்காக இந்தப் போர்த்தந்திரங்களைச் செயல் படுத்துவது எப்படி என்று அறிந்து வைத்திருப்பதே விஷயம். இடையே ஒன்று சொல்வோம், மென்ஷிவிக்குகள் மீது போல்ஷிவிக்குகள் வெற்றி பெறுவதற்கு 1917 அக்டோபர் புரட்சிக்கு முன்பு மட்டுமின்றி பின்புங்கூட சிறிதே கொள்கைத் திசையை மாற்றுகிற, உடன்பாடும் சமரசமும் செய்து கொள்கிற போர்த்தந்திரங்கள் அவசியமாயின, என்பதைக் கவனிக்கவேண்டும். ஆனால் இந்தச் சிறிய கொள்கைத்திசை மாற்றமும் சமரசங்களும் மென்ஷிவிக்குகளுக்குப் பாதகமாகப் போல்ஷிவிக்குகளுக்கு உதவியாகவும் போல்ஷிவிக்குகளை ஊக்குவித்துக் கெட்டிப் படுத்துவதாகவுமான வகையில் இருந்தன, என்பது உண்மை சிறு பூர்ஷீவா ஜனநாயகவாதிகள் [மென்ஷிவிக்குகள் உள்பட] முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே, பூர்ஷிவா ஜனநாயகத்துக்கும் சோவியத் அமைப்பு முறைக்கும் இடையே, சீர்திருத்தவாதத்துக்கும் புரட்சிவாதத்துக்கும் இடையே, தொழிலாளிகள் பாலுள்ள அன்புக்கும் தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மீதுள்ள பயத்திற்கும் இடையே [மற்றும் மற்றும்] தவிர்க்க முடியாத படி ஊசலாடுகிறார்கள். கம்யூனிஸ்டுகளின் முறையான சரியான போர்த்தந்திரங்கள் இந்த ஊசலாட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதாக இருக்க வேண்டும், அவற்றைப் புறக்கணிக்கிறதாக இருக்கக் கூடாது, அவற்றைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டுமானால் தொழிலாளி வர்க்கத்தை நோக்கித் திரும்புகிற [எந்த அளவுக்கு எப்போது தொழிலாளி வர்க்கத்தை நோக்கித் திரும்புகிறார்களோ அதற்கு ஏற்ப] நபர்களுக்குச் சலுகைகள் வழங்க வேண்டும், அத்துடன் முதலாளி வர்க்கத்தை நோக்கித் திரும்புகிறவர்களோடும் போராட வேண்டும்....

எல்லாப் புரட்சிகளும், குறிப்பாக இருபதாம் நூற்றாண்டில் நடந்த எல்லா மூன்று ருஷ்யப் புரட்சிகளும் உறுதிப் படுத்தியுள்ள புரட்சியின் அடிப்படையான விதி பின் வருமாறு: புரட்சி நடக்க வேண்டுமானால் சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பழைய வழியில் வாழ்க்கை நடத்துவது அசாத்தியம் என்று உணர்ந்து மாற்றங்களைக் கோருவது மட்டும் போதாது, புரட்சி நடக்க வேண்டுமானால் சுரண்டுகிறவர்கள் பழைய வழியில் வாழ்வதும் ஆட்சி நடத்துவதும் முடியாததாயிருப்பதும் அவசியம். "கீழ்த்தட்டு வர்க்கங்கள்" பழைய வழியில் வாழ விரும்பாமலும் "மேல் தட்டு வர்க்கங்கள்" பழைய வழியில் காரியம் நடத்திக் கொண்டிருக்க முடியாமலும் போகிற போதுதான் புரட்சி வெற்றி பெற முடியும். இந்த உண்மையை வேறு வார்த்தைகளில் சொல்லலாம், ஒரு தேசந் தழுவிய நெருக்கடி [ஒருங்கே சுரண்டப்பட்டவர்களையும் சுரண்டுகிறவர்களையும் பாதிக்கிற நெருக்கடி] இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை. இதிலிருந்து பின் தொடர்வது என்னவெனில், ஒரு புரட்சி நடப்பதற்கு அவசியமானது முதலாவதாக, பெரும்பான்மையான தொழிலாளிகள் [அல்லது குறைந்த பட்சம் வர்க்க உணர்வுள்ள, சிந்தனையுள்ள அரசியல் செயல்பாடுள்ள தொழிலாளிகளில் பெரும்பான்மையினர்] புரட்சி அவசியம், அதற்காகத் தாங்கள் சாகத்தயார் என்று முற்றாக உணர்ந்திருக்க வேண்டும், இரண்டாவதாக, ஆளும் வர்க்கங்கள் ஓர் அரசாங்க நெருக்கடியில் இருந்து வரவேண்டும், அது மிகமிகப் பிற்பட்ட மக்களையுங்கூட அரசியலில் இழுத்து விடுகிறது [அது வரை செயலற்று அசட்டையாக இருந்து வந்து, அரசியல்போராட்டத்தை நடத்தக் கூடியவர்களாயிருக்கிற உழைக்கிற, ஒடுக்கப்பட்ட மக்களின் அளவு, பத்து மடங்காக, நூறு மடங்காக வேகமாக அதிகரிப்பது ஓர் உண்மையான புரட்சிக்கு அறிகுறியாகும்], அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துகிறது, புரட்சிக்காரர்கள் அதை வேகமாகத் தூக்கியெறிவதைச் சாத்தியமாக்குகிறது....
மிகச் சிறந்த கட்சிகளும் மிகவும் முன்னேறியுள்ள வர்க்கங்களின் மிகமிக வர்க்க உணர்வுள்ள முன்னணிப் படைகளும் கற்பனை செய்கிறதைக் காட்டிலும் வரலாறு முழுவதும் குறிப்பாக புரட்சிகளின் வரலாறு முழுவதும் எப்போதும் உள்ளடக்கத்தில் மேலும் வளமுள்ளதாகவும் மேலும் வேறுபட்டதாகவும் மேலும் பல வடிவம் கொண்டதாகவும், மேலும் துடிப்புள்ளதாகவும், சாதுரியமுள்ளதாகவும் இருக்கிறது. இதைப் புரிந்து கொள்வது சுலபம், ஏனெனில், தலைசிறந்த முன்னணிப் படையுங்கூட சில லட்சக்கணக்கான பேர்களின் வர்க்க உணர்வையும் சித்தத்தையும் உணர்ச்சியாகவேசத்தையும் சிந்தனையையும் வெளியிடுகிறது, ஆனால் மாபெரும் எழுச்சியும் எல்லா மனித ஆற்றல்களின் முயற்சியும் உள்ள தருணங்களில் வர்க்கங்களின் மிகக் கூரிய போராட்டங்களினால் தூண்டப்பட்ட பல கோடிக்கணக்கான பேர்களின் வர்க்க உணர்ச்சியாலும் சித்தத்தாலும் உணர்ச்சியாவேசத்தாலும் சிந்தனையாலும் புரட்சிகள் செய்யப்படுகின்றன. இதிலிருந்து இரண்டு மிக முக்கியமான, நடைமுறைக்குரிய முடிவுகள் பின் தொடர்கின்றன, முதலாவதாக, புரட்சிகரமான வர்க்கம் தன் பணியைச் சாதிப்பதற்கு விதி விலக்கு ஏதுமின்றி சமுதாய நடவடிக்கையின் எல்லா வடிவங்களையும் அல்லது அம்சங்களையும் கற்றுத் தன்வயமாக்கிக் கொள்ளமுடிய வேண்டும் [அதிகாரத்தைக் கைப்பற்றுமுன் தான் பூர்த்தி செய்யாததை - சில சமயங்களில் பெரும் இடர் வரவுக்கும் மிகப் பெரிய அபாயத்துக்கும் இடமளிக்கிற வகையில் - அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் பூர்த்தி செய்வது] இரண்டுடாவதாக, புரட்சிகரமான வர்க்கம் மிக வேகமாகவும் சடேரென்று ஒரு வடிவத்தை விட்டு மற்றொரு வடிவத்துக்குப் போகவும் தயாராயிருக்க வேண்டும்.
எதிரியிடமிருக்கிற, அல்லது இருக்கக் கூடிய, எல்லா ஆயுதங்களையும் போர்ச் சாதனங்களையும் வழிமுறைகளையும் பயன்படுத்துவதற்குப் பயிற்சி பெறாத எந்த இராணுவமும் விவேகமற்ற முயையில், குற்றமுள்ள முறையிலே கூட, நடந்துகொள்கிறது என்பதை எல்லோரும் உடனே ஒப்புக் கொள்வார்கள். இது போர்க் கலையை விட மேலாக அரசியலுக்குப் பொருந்தும். சில குறிப்பிட்ட எதிர்கால நிலைமைகளில் எந்தப் போராட்ட வழி முறைகள் செயல் படுத்தத்தக்கவை, நமக்கு அனுகூலமானவை என்று முன் கூட்டியே அறிவது அரசியலில் மேலும் கடினமானதாகும். எல்லாப் போராட்ட வழிமுறைகளையும் நாம் செயல்படுத்தக் கற்றுக் கொள்ளாவிட்டால் கொடிய தோல்வி சில சமயங்களில் நிர்ணயமான தோல்வி - மற்ற வர்க்கங்களின் நிலைபாடுகளில் எந்த நடவடிக்கையின் வடிவத்தில் நாம் குறிப்பாகப் பலவீனமாக இருக்கிறோமோ அந்த வடிவத்தை முன்னணிக்குக் கொணர்ந்து நிறுத்தினால் - நாம் அடையக்கூடும். ஆனால், எல்லாப் போராட்ட வழி முறைகளையும் நாம் பயன்படுத்தக் கற்றுக் கொள்வோமேயானால் வெற்றி உறுதி. ஏனெனில் எதிரிக்கு மிகவும் அபாயகரமானதாக உள்ள ஆயுதங்களை, மிகவும் வேகமாக மரண அடி கொடுக்கிறதாக உள்ள ஆயுதங்களை, நாம் பயன் படுத்துவதற்குச் சூழ்நிலைமைகள் அனுமதிக்காவிட்டாலுங்கூட நாம் உண்மையிலேயே முன்னணியின் முனையிலே உள்ள உண்மையிலேயே புரட்சிகரமான வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறோம்.

1920 ஏப்ரல் - மே

No comments:

Post a Comment