போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதத்தின் முக்கியத்துவம் குறித்து - லெனின்
"பத் ஸ்னாமினெம் மார்க்சிஸ்மா" சஞ்சிகையின் பொது நோக்கங்கள் குறித்துச் சொல்ல வேண்டியவை யாவற்றையும் தோழர் திரோத்ஸ்கி இதழ் 1-2ல் ஏற்னெவே சொல்லியிருக்கிறார், நன்றாகவே சொல்லியிருக்கிறார். சஞ்சிகையின் ஆசிரியர்கள் இதழ் 1-2ன் அறிமுக உரையில் குறிப்பிட்டிருக்கும் பணியின் உள்ளடக்கத்தையும் திட்டத்தையும் மேலும் துல்லியமாய் வரையறுக்கும் சில பிரச்சினைகள் குறித்து நான் பரிசீலிக்க விரும்புகின்றன்.
"பத் ஸ்னாமினெம் மார்க்சிஸ்மா" சஞ்சிகையை மையமாய்க் கொண்டு ஒன்று சேர்ந்துள்ளவர்கள் எல்லோருமே கம்யூனிஸ்டுகளல்ல, ஆனால் எல்லோருமே முரணற்ற பொருள்முதல்வாதிகள் என்று இந்த அறிமுக உரை கூறுகிறது. கம்யூனிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளல்லாதோருமாகிய இந்தக் கூட்டணி முற்றிலும் அத்தியாவசியமானது என்றும், இந்த சஞ்சிகையின் நோக்கங்களைச் சரிவர வரையறுப்பதாயுள்ளது என்றும் நினைக்கிறேன். கம்யூனிஸ்டுகள் செய்யக்கூடிய மிகப் பெருய, மிகவும் அபாயகரமான தவறுகளில் ஒன்று என்னவெனில் [மாபெரும் ஒரு புரட்சியின் துவக்கத்தை வெற்றிகரமாய் நடத்தி முடிக்கும் புரட்சியாளர்கள் பொதுவாகச் செய்யும் தவறு இது], ஒரு புரட்சியாளர்கள் மட்டும் சேர்ந்து ஒரு புரட்சியை நடத்திவிட முடியுமெனக் கருதுவது தான். இதற்கு மாறாய், புரட்சிகரமான எந்த முக்கிய பணியும் வெற்றி பெற வேண்டுமாயின், மெய்யாகவே உயிர்ச் சக்தி கொண்ட முன்னேறிய வர்க்கத்தின் முன்னணிப் படைக்குரிய பங்கை மட்டுமே புரட்சியாளர்களால் ஆற்ற முடியுமென்ற கருத்து புரிந்து கொள்ளப்பட்டு, செயல்படுத்தப்படுவது அவசியமாகும். முன்னணிப் படையானது தான் தலைமை தாங்கிச் செல்லும் திரளான மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதை தவிர்த்துக் கொள்ளவும், இந்த முழுத் திரளினருக்கும் மெய்யாகவே தலைமை தாங்கி இவர்களை முன்னே அழைத்துச் செல்லவும் கூடியதாய் இருக்கையில்தான் அது முன்னணிப் படைக்குரிய பணிகளைச் செய்து முடிக்கிறது. மிகப் பல்வேறுபட்ட செயல் துறைகளிலும், கம்யூனிஸ்டுகளல்லாதோருடன் கூட்டணி கொள்ளாமல் கம்யூனிசக் கட்டுமானப் பணி எதுவும் வெற்றிகரமாய் நடந்தேறுவது சாத்தியமன்று.
பொருள் முதல்வாதத்தையும் மார்க்சியத்தையும் பேணிப் பாதுகாப்பதென்று "பத் ஸ்னாமினெம் மார்க்சிஸ்மா" மேற்கொண்டிருக்கும் பணிக்கும் இது பொருந்துவதாகும். அதிர்ஷ்டவசமாய் ருஷ்யாவில் முன்னேறிய சமூகச் சிந்தனையின் பிரதான போக்குகள் உறுதியான பொருள்முதல்வாத மரபினை அடிப்படையாய்க் கொண்டுள்ளவை. கி.வ.பிளெஹானவை அன்னியில் செர்னிஷேவ்ஸ்கி ஒருவரை மட்டும் குறிப்பிட்டாலே போதும். நவீன கால நரோதியவாதிகள் [மக்கள் - சோஷலிஸ்டுகளும் சோஷலிஸ்டு - புரட்சியாளர்களும் ஏனையோரும்] அடிக்கடி செர்னிஷேவ்ஸ்கியிடமிருந்து பின்வாங்கிச் சென்றுள்ளனர், இவர்கள் ஐரோப்பிய விஞ்ஞானத்தின் "இறுதி முடிவாய்ச் சொல்லப்படுகின்ற" பகட்டான மினுக்கைக் கண்டு மயக்குண்டு, முதலாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவத் தப்பெண்ணங்களுக்கும் முதலாளித்துவப் பிற்போக்கிற்கும் ஏதேனும் ஒரு வகையிலான அடிவருடித்தனம் இந்த மினுக்கின் மறைவில் பதுங்கியிருப்பதைக் கண்டு கொள்ளும் திறனற்றோராய், புதிய பாணியிலாகிய பிற்போக்குத் தத்துவஞானப் போதனைகளைத் தேடிப் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.
ஆயினும் எப்படியும் ருஷ்யாவில் கம்யூனிஸ்டுகல்லாதோரின் முகாமைச் சேர்ந்த பொருள்முதல்வாதிகள் இன்னமும் இருந்து வருகின்றனர், ஓரளவு நீண்ட காலத்துக்கு இனியும் நிச்சயம் இருந்தே வருவர். தத்துவஞானப் பிற்போக்கையும் "படித்த சமூகத்தார்" என்பதாய்ச் சொல்லப்படுவோரின் தத்துவஞானத் தப்பெண்ணங்களையும் எதிர்த்துப் போராடும் கூட்டுப் பணியிலே, முரணற்றதும் போர்க்குணம் கொண்டதும் ஆகிய பொருள்முதல்வாதத்தின் ஆதரவாளர் எல்லோரையும் படைதிரட்டிக் கொள்வது நமது முழுமுதற் கடமையாகும். முதலாளித்துவ நாடுகளில் வெகுவாய் மலிந்து, இந்நாடுகளின் விஞ்ஞானிகள், கருத்துரை எழுத்தாளர்களின் மதிப்புக்குரியனவாய் இருந்து வரும் தத்துவஞானப் போக்குகளைப் பற்றிய அடிப்படை மார்க்சியக் கருத்தோட்டத்தை டித்ஸ்கென் முதியவர் - அவருடைய எழுத்தாளர் மகனுடன், எவ்வளவுக்கு எவ்வளவு அகம்பாவம் கொண்டிருந்தாரோ அவ்வளவுக்கு அவ்வளவு தோல்வியும் கண்டவரான அந்த மகனுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது - பிழையின்றியும் மிகப் பொருத்தமாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தார், நவீன காலச் சமுதாயத்தில் மிகப் பெரும்பாலும் தத்துவஞானப் பேராசிரியர்கள் நடைமுறையில் "சமய சித்தாந்தத்தின் பட்டம் பெற அடிவருடிகளே" ஆவரெனக் கூறினார்.
நமது ருஷ்யப் படிப்பாளர்களுக்கு, ஏனைய எல்லா நாடுகளிலுமுள்ள இவர்களுடைய சோதரர்கள் ஆசைப்படுவது போலவே முன்னேறியவர்களாய்த் தம்மைக் கருதிக் கொள்ள ஆசைப்படும் இவர்களுக்கு, டித்ஸ்கெனுடைய சொற்கள் வெளியிடும் அபிப்பிராயத்தின் நிலைக்கு இப் பிரச்சினையை எடுத்துச் செல்ல மனம் ஒப்பவில்லை. உண்மையின் நேர் முன்னால் நின்று தலை நிமிர்ந்து அதைப் பார்க்க முடியவில்லை. ஆதிக்கத்திலுள்ள முதலாளித்துவ வர்க்கத்தை நவீன காலப் படித்தச் சமூகத்தார் அரசாங்க வழியிலும், மற்றும் பொதுவாய்ப் பொருளாதார வழியிலும், அன்றாட வாழ்விலும், ஏனைய எல்லா வழிகளிலும் சார்ந்து வாழ வேண்டியிருப்பதைச் சற்றே சிந்தித்துப் பார்த்தால் போதும், சுருக்கெனத் தைக்கும்படி டித்ஸ்கென் கூறிய சொற்கள் முற்றிலும் உண்மையே என்பது தெளிவாய் விளங்கும். ஐரோப்பிய நாடுகளில் இப்படி நாளொரு மேனியாய் உதித்தெழும் புதுப்பாணித் தத்துவஞானப் போக்குகளில், உதாரணமாய் ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டதை ஒட்டி எழுந்தவற்றிலிருந்து தொடங்கி, தற்போது ஐன்ஷ்டைனைப் பற்றிக்கொண்டு தொங்க எத்தனிப்பவை வரையிலான இந்தப் போக்குகளில் மிகப் பெருவாரியானவற்றை நினைவு கூர்ந்தாலே போதும், முதலாளித்துவ வர்க்கத்தின் வர்க்க நலன்கள், அதன் வர்க்க நிலை, மதத்தின் எல்லா வடிவங்களுக்கும் அது அளித்கும் ஆதரவு ஆகிய இவற்றுக்கும், நவநவீன தத்துவஞானப் போக்குகளின் சித்தாந்த உள்ளடக்கத்துக்கும் இடையிலுள்ள இணைப்பைப் புரிந்து கொண்டு விடலாம்.
போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதத்தின் பத்திரிகையாய்ச் செயல்பட முற்படும் ஒரு சஞ்சிகையானது பிரதானமாய்ப் போர்க்குணம் கொண்ட பத்திரிகையாகவே இருக்க வேண்டுமென்பது, அதாவது தற்காலத்திய "சமய சித்தாந்தத்தின் பட்டம் பெற்ற அடிவருடிகள்" எல்லோரையும் - அதிகார பூர்வமான விஞ்ஞானத்தின் பிரதிநிதிகளாய்ச் செயல்படுவோராயினும் சரி, "ஜனநாயக இடதுசாரி, அல்லது சித்தாந்த வழி சோஷலிஸ்டு" பத்திரிகையாளர்களாய்த் தம்மை அழைத்துக் கொள்ளும் அதிகாரபூர்வமல்லாத தன்னிச்சையாளர்களாயினும் சரி இவர்கள் எல்லோரையும் - தயங்காது அம்பலப்படுத்தி இவர்களது உண்மை சொரூபத்தை வெளிப்படுத்திக் காட்ட வேண்டுமென்ற அர்த்தத்தில் போர்க்குணம் கொண்ட பத்திரிகையாகவே இருக்கவேண்டுமென்பது மேற்கூறியதிலிருந்து தெரியவரும்.
இரண்டாவதாக, இப்படிப்பட்ட ஒரு சஞ்சிகை போர்க்குணம் கொண்ட நாத்திக ஏடாய் இருத்தல் வேண்டும். இந்தப் பணித்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள இலாகாக்கள், அல்லது குறைந்தது அரசு நிறுவனங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால் இந்தப் பணி அளவு கடந்த அசட்டையோடு, சிறிதும் திருப்தியில்லாதபடி நடைபெற்று வருகிறது, மெய்யான நமது ருஷ்ய [சோவியத்தே ஆயினுங்கூட] அதிகாரவர்க்க முறைகளின் பொது நிலைமைகளால் பீடிக்கப்பட்டிருப்பதாய்த் தெரிகிறது. ஆகவே இந்த அரசு நிலையங்கள் செய்து வரும் பணியுடன் கூடவே, இப்பணியை மேம்படுத்தும் பொருட்டும், இதற்கு உயிர்ச் சக்தி ஊட்டும் பொருட்டும், போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதப் பிரசாரம் புரிய முற்படம் இந்த சஞ்சிகை, அயராத நாத்திகப் பிரசாரமும், அயராத நாத்திகப் போரும் புரிவது மிகவும் அவசியமாகும். இப்பொருள் குறித்து எல்லா மொழிகளிலும் வெளிவரும் இலக்கியங்களைக் கவனமாய்ப் பரிசீலனை செய்து வர வேண்டும், எவ்விதத்திலும் மதிப்புக்குரியவையாய் இருப்பவற்றை மொழிபெயர்த்திட வேண்டும், அல்லது குறைந்தது இவை குறித்து மதிப்புரைகளாவது எழுத வேண்டும்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியினத போர்க்குணம் கொண்ட நாத்திக இலக்கியத்தை மக்களிடையே பெருவீத அளவில் வினியோகித்துப் பரப்புவதற்காக மொழி பெயர்த்திடும்படி நெடுங் காலத்துக்கு முன்பு எங்கெல்ஸ் அக்காலத்தியப் பாட்டாளி வர்க்கத் தலைவர்களுக்கு ஆலோசனை கூறினார். இது நாள்வரை நாம் இதைச் செய்தாகவில்லை, நாம் வெட்கித் தலை குனியும் வண்ணம் இதைச் சொல்லியே ஆக வேண்டும். [புரட்சிகர சகாப்தத்தில் ஆட்சியதிகாரம் கைப்பற்றுவது கடினமல்ல, ஆனால் இந்த ஆட்சியதிகாரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து ெரகள்வது மெத்தக் கடினம் என்பதற்குரிய எண்ணற்ற நிரூபணங்களில் ஒன்றாகும் இது]. நமது அசட்டைக்கும் செயலின்மைக்கும் திறனின்மைக்கும் சால்ஜாப்பு கூறும் பொருட்டு எல்ல்ர வகையான "உன்னத" காரணங்களும் எடுத்துரைக்கப்படுகின்றன, உதாரணமாய், பதினெட்டாம் நூற்றாண்டின் பழைய நாத்திக இலக்கியம் பழமைப்பட்டுவிட்டது, விஞ்ஞானத்துக்கு ஒவ்வாததாகவும் சிறுபிள்ளைத்தனமானதும் ஆகிவிட்டது என்றெல்லாம் காரணம் கூறப்படுகிறது. இத்தகைய போலியான விஞ்ஞானக் குதர்க்கத்தைக் காட்டிலும் மோசமானது எதுவும் இல்லை, பகட்டுப் புலமையை அல்லது மார்க்சியத்தைப் பற்றிய அறவே தவறான உணர்வை மூடிமறைக்கவே இந்தக் குதர்க்கம் பயன்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சியாளர்களுடைய நாத்திக நூல்களில் விஞ்ஞானத்துக்கு ஒவ்வாததும் சிறுபிள்ளைத்தனமானதும் நிறைய இருப்பது மெய்தான். ஆனால் இந்நூல்களின் பதிப்பாளர்கள் இவற்றைச் சுருக்கி வெளியிடுவதையும், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்குப் பிற்பாடுமதங்களைப் பற்றிய விஞ்ஞான விமர்சனத்தில் மனித குலம் கண்டிருக்கும் முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டியும், இப்பொருள் குறித்து அண்மைக் காலத்தில் வெளிவந்துள்ள புத்தகங்களைக் குறிப்பிட்டும், இன்ன பிற விவரங்களைக் கூறியும் சுருக்கமாகன பின்னுரைகளை இந்நூல்களுக்கு அளிப்பதையும் யாரும் தடுத்தது நிற்கவில்லை. கோடிக் கணக்கான மக்கள் [முக்கியமாய் விவசாயிகளும் கைத்தொழிலாளர்களும்] நவீன காலச் சமுதாயம் அனைத்தாலும் இருளிலும் அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் வதையும்படி இருத்தப்பட்டிருக்கும் இவர்கள் கலப்பற்ற தூய மார்க்சியப் போதமெனும் நேரான பாதையிலேதான் இந்த இருளிலிருந்து விடுபட்டு வெளியே வர முடியுமென நினைப்பது, மார்க்சியவாதி ஒருவர் புரியக்கூடிய மிகப் பெரிய, மிக்கடுந் தவறாகிவிடும். இந்த வெகுஜனங்களை நாட்டங் கொள்ளும்படிச் செய்வதற்காகவும், மதத்தால் மயக்குண்ட நிலையிலிருந்து இவர்களை விழித்தெழச் செய்வதற்காகவும் மிகப் பலவேறுபட்ட கோணங்களிலிருந்தும் மிகப் பல்வேறுபட்ட வழிகளிலும் இவர்களை உசுப்பிவிடுவதற்காகவும், இன்ன பிறவற்றுக்காகவும் இவர்களுக்கு நாம் மிகப் பல்வேறுபட்ட நாத்திகப் பிரசார வெளியீடுகளும் கிடைக்கச் செய்ய வேண்டும், வாழ்க்கையின் மிகப் பல்வேறுபட்ட துறைகளிலிருந்துமான உண்மைகளை மிகப் பல்வேறுபட்ட துறைகளிலிருந்துமான உண்மைகளை இவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும், வாழ்க்கையின் மிகப் பல்வேறுபட்ட துறைகளிலிருந்துமான உண்மைகளை இவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும், சாத்தியமாமன எல்லா வழிகளிலும் இவர்களை அணுகியாக வேண்டும்.
பழைய, பதினெட்டாம் நூற்றாண்டு நாத்திகர்களது தீட்சண்யமான, உயிர்த்துடிப்புள்ள, அறிவாற்றல் மிகுந்த இலக்கியங்கள், ஆதிக்கத்திலிருந்த சமய சித்தாந்தத்தைக் கிண்டலும் கேலியுமாகவும், மற்றும் பகிரங்கமாகவும் தாக்கின. மதத்தால் மயக்குண்ட நிலையிலிருந்து மக்களைத் தட்டியெழுப்புவதற்கு மிகப் பல சந்தர்ப்பங்களிலும் இவை, மார்க்சியத்தின் உப்புச்சப்பில்லாத, சலிப்பூட்டும் பொழிப்புரைகளைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கூடுதலாய் ஏற்றவையாய் இருக்கும். திறம்படத் தெரிந்தெடுக்கப்பட்ட உண்மைகளைக் கொண்டமைந்த எடுjதுக்ரட்டுகள் வாயிலான விளக்கங்கள் அனேகமாய் எவையுமில்லாத இப்படிப்பட்ட பொழிப்புரைகள்தான் நமது வெளியீடுகளில் மிகவும் மலிந்திருக்கின்றன, இவையும் [இவ்வுண்மையை மறைத்துப் பயனில்லை] அடிக்கடி மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டுவனவாகவே இருக்கின்றன. மார்க்ஸ், எங்கெல்சின் பிரதான நூல்கள் யாவற்றின் மொழிபெயர்ப்புகளும் நம்மிடம் இருக்கின்றன, ஆகவே பழைய [நாத்திகமும், பழைய பொருள்முதல்வாதமும், மார்க்சும் எங்கெல்சும் அவற்றில் புகுத்திய திருத்தங்களால் சரிசெய்யப்பட்டுச் செம்மையாக்கப்படாமல் இருந்து விடுமென்று அஞ்சக் காரணம் சிறிதும் இல்லை. மிகவும் முக்கியமானது என்னவெனில், இன்னமும் வளர்ச்சியின்றி இருந்து வரும் வழிப்பட்ட போக்கினையிம் கிளர்த்திவிடத் தெரிந்து கொள்வதுதான் - இதைத்தான் நமது கம்யூனிடகளில் மார்க்சியவாதிகளாய்க் கருதப்படுவோர், ஆனால் உண்மையில் மார்க்சியத்தை உருக்குலைப்போராய் இருப்போர் கவனியாது அடிக்கடி புறக்கணித்து விடுகிறார்கள்.
மறுபுறத்தில், மதங்களைப் பற்றிய நவீன விஞ்ஞான விமர்சகர்களைச் சற்று உற்று நோக்குங்கள். கல்வியறிவுடைய இந்த முதலாளித்துவ எழுத்தாளர்கள், மத மூட நம்பிக்கைகளைப் பற்றிய தமது மறுப்புரைகளுடன் கூட, தாம் முதலாளி வர்க்கத்தின் சித்தாந்த அடிமைகளே, "சயம சித்தாந்தத்தின் பட்டம் பெற்ற அடிமைகளே" என்பதை உடனே அம்பலமாக்கிக் காட்டும் வாதங்களையும் அனேகமாய் எப்பொழுதும் "அனுபந்தமாய்ச்" சேர்த்தளிக்கின்றனர்.
இரண்டே இரண்டு எடுத்துக்காட்டுகள். பேராசிரியர் ரோ.யூ.வீப்பர் "கிறிஸ்துவத்தின் தோற்றம்" என்னும் தலைப்பில் ["ஃரோல்" பதிப்பம், மாஸ்கோ] 1918ல் ஒரு சிறு புத்தகத்தை வெளியிட்டார். நவீன விஞ்ஞானத்தின் பிரதான விளைவுகளைப் பற்றிய தமது உரையில் இவ்வாசிரியர், மதச் சபையானது ஓர் அரசியல் நிறுவனம் என்ற முறையில் அதற்குரிய ஆயுதங்களாய்க் கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளையும் ஏமாற்றையும் எதிர்த்துப் போராடுவதைத் தவிர்த்துக் கொள்வதோடல்லாமல், இந்தப் பிரச்சினைகளைத் தட்டிக்கழிப்பதோடல்லாமல், கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் ஆகிய இரு "கடைகோடி நிலைகளுக்கும்" தாம் மேம்பட்டவர் என்பதாய் நகைக்கத்தக்கதான, மிகவும் பிற்போக்கான முறையில் உரிமை கொண்டாடுகிறார். உழைப்பாளி மக்களைக் கசக்கிப் பிழிந்து பெறப்பட்ட லாபங்களிலிருந்து மதத்தின் ஆதரவுக்காக உலகெங்கும் கோடானு கோடியான ரூபிள்களைச் செலவிடும் ஆளும் முதலாளி வர்க்கத்துக்குத் தொண்டூழியம் புரிவதே ஆகும் இது.
பெயர் பெற்ற ஜெர்மன் விஞ்ஞானி ஆர்த்தூர் டிரேவ்ஸ் "கிறிஸ்து கற்பனை" என்னும் தமது புத்தகத்தில் மத மூடநம்பிக்கைகளுக்கும் புராணக் கதைகளுக்கும் மறுப்பு கூறுகிறார், கிறிஸ்து இருக்கவே இல்லை என்று விளக்குகிறார், அதேபோதில் இப்புத்தகத்தின் முடிவில் மதத்தை ஆதரித்துப் பேசுகின்றார் - ஆனால் இது புத்துரு கொண்ட, சுத்தமாக்கப்பட்ட, நுண்ணயம் வாய்ந்த மதமாயிருக்கும், "நாளுக்கு நாள் பெருகி வளரும் இயற்கைவாத வெள்ளப் பெருக்கினைச்" சமாளிக்க வல்லதாய் இருக்கும் என்கிறார் [நான்காவது ஜெர்மன் பதிப்பு,1910, பக்கம்238]. ஒளிவு மறைவில்லாத, திட்டமிட்டுச் செயல்படுகிற பிற்போக்காளதை, அழுகலாகிவிட்ட பழைய மத மூடநம்பிக்கைகளுக்குப் பதிலாய்ப் புதிய, மேலும் வெறுக்கத்தக்கதான, இழிவதன மூடநம்பிக்கைகளை விதைப்பதற்குச் சுரண்டலாளர்களுக்குப் பகிரங்கமாகவே துணைபுரிகிறவரை இங்கு நாம் காண்கிறோம்.
டிரேவ்சை மொழிபெயர்க்கக் கூடாது என்பதால்ல இதற்கு அர்த்தம். முதலாளி வர்க்கத்தின் முற்போக்குப் பிரிவினருடன் ஓரளவுக்குக் கூட்டணி கொண்டு செயல்படும் அதேபோதில் கம்யூனிஸ்டுகளும் முரணற்ற பொருள்முதல்வாதிகள் எல்லோரும் அப்பிரிவினர் பிற்போக்கில் ஈடுபடும் குற்றமிழைக்கும் போது சிறிதும் தயங்காமல் அவர்களை அம்பலம் செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். பதினெட்டாம் நூற்றாண்டின், அதாவது முதலாளி வர்க்கம் புரட்சிகரமானதாய் இருந்த அந்தக் காலத்தின் முதலாளி வர்க்கப் பிரதிநிதிகளுடன் கூட்டணி கொள்ளாமல் விலகி ஓடுவது மார்க்சியத்துக்கும் பொருள்முதல்வாதத்துக்கும் துரோகமிழைப்பதாகும் என்பதே இதன் அர்த்தம், ஏனெனில், ஏதேனும் ஒரு வடியில், ஏதேனும் ஓர் அளவுக்கு, டிரேவ்ஸ்களுடன் "கூட்டயி கொள்வது", ஆதிக்கம் புரிந்து வரும் மத மௌடீகவாதிகளுக்கு எதிரான நமது போராட்டத்துக்கு அவசியமாகும்.
போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதத்தின் ஏடாய்ச் செயல்பட முற்படும் "பத் ஸ்னாமினெம் மார்க்சிஸ்மா", நாத்திகப் பிரசாரத்துக்காகவும், இப்பொருள் பற்றிய வெளியீடுகளின் மதிப்புரைக்காகவும், இத்துறையில் நமது அரசாங்கம் ஆற்றி வரும் பணியிலுள்ள மிகப் பெரும் குறைபாடுகளைத் திருத்துவதற்காகவும் தனது பக்கங்களில் ஒரு பெரும் பகுதியை ஒதுக்க வேண்டும். இக்காலத்து முதலாளி வர்க்கத்தின் வர்க்க நலன்களும் வர்க்க நிறுவனங்களும் மத நிறுவனங்களுடனும் மதப் பிரசார நிறுவனங்களுடனும் எப்படி இணைந்திருக்கின்றன என்பதைக் காட்டும் ஸ்தூலமான பல உண்மைகளும் ஒப்பீடுகளும் அடங்கியுள்ள புத்தகங்களையும் பிரசுரங்களையும் பயன்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.
மதத்துக்கும் மூலதனத்துக்கும் அதிகாரபூர்வமான, அரசு வழியிலான இணைப்பு அவ்வளவு வெளிப்படையாய்த் தெரியாத அமெரிக்க ஐக்கிய நாடு பற்றிய எல்லா விவரப் பொருள்களும் மிக மிக முக்கியமானவை. ஆனால் மறுபுறத்தில், "நவீன ஜனநாயகம்" எனப்படுவது [மென்ஷிவிக்குகளும் சோஷலிஸ்டு - புரட்சியாளர்களும், ஓரளவுக்கு அராஜகவாதிகளும், ஏனையோரும் சிறிதும் நியாயமின்றி இதைப் பூசிக்கின்றனர்], முதலாளி வர்க்கத்துக்கு எதெல்லாம் அனுகூலமாய் இருக்கிறதோ அதை, அதாவது மிகவும் பிற்போக்கான கருத்துக்களையும் மதத்தையும் மௌடீகத்தையும் சுரண்டலாளர்களைப் பேணிக் காப்பதையும் பிறவற்றையும் உபதேசிப்பதற்கான சுதந்திரமே ஆகும்.
போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாத ஏடாய்ச் செயல்பட முற்படும் ஒரு சஞ்சிகை நமது வாசகப் பெரு மக்களுக்கு நாத்திக இலக்கியத்தைப் பற்றிய விமர்சன மதிப்புரைகளை வழங்குமென்றும், குறிப்பிட்ட வெளியீடு எந்த வாசகர் குழுவுக்கு ஏற்றது, எவ்விதத்தில் ஏற்றது என்பதைச் சுட்டிக்காட்டுமென்றும், நாம் வெளியிட்டிருக்கும் புத்தகங்கள் எவை [தகுதியுடைத்த மொழிபெயர்ப்புகளை மட்டும்தான் குறிப்பிடப்பட வேண்டும், இவை அதிகமில்லை], இனி வெளியிடப் போகிறவை எவை என்பதைக் குறிப்பிடுமென்றும் நம்புகிறோம்.
-----------------
போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதம் ஆற்ற வேண்டிய பணிக்கு, கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்திராத முரணற்ற பொருள்முதல்வாதிகளுடன் கொள்ள வேண்டிய கூட்டணியோடுகூட, இதற்கு எவ்வகையிலும் குறையாத முக்கியத்துவம் வாய்ந்த, ஏன் இதனினும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததென்றுகூட சொல்லத்தக்க மற்றொரு கூட்டணியும் இருக்கின்றது. நவீன இயற்கை விஞ்ஞானிகளில் பொருள்முதல்வாதத்தின் பக்கம் சாய்ந்தோரும், கருத்துமுதல்வாதத்திலும் ஐயுறவுவாதத்திலுமாகிய புதுப்பாணித் தத்துவஞான சஞ்சாரங்களை எதிர்த்து - "படித்த சமூகத்தார்" என்பதாய்க் கூறப்படுவோரிடையே வெகுவாய் மலிந்திருக்கும் இந்த சஞ்சாரங்களை எதிர்த்து - பொருள்முதல்வாதத்தைக் காக்கவும் பிரசாரம் செய்யவும் அஞ்சாதோரும் ஆகியோருடன் கொள்ளப்படும் கூட்டணி இது.
ஐன்ஷ்டைன் சார்பியல் தத்துவம் குறித்து "பத் ஸ்னாமினெம் மார்க்சிஸ்மா" இதழ் 1-2ல் வெளிவந்துள்ள அ.திமிர்யாஸெவின் கட்டுரையானது இந்த இரண்டாவது கூட்டணியை உருவாக்கிக் கொள்வதிலும் இந்த சஞ்சிகை வெற்றி பெறுமென்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது. இதில் இன்னும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். நவீன இயற்கை விஞ்ஞானத்தில் ஏற்பட்டு வரும் கடும் தகர்வானது பிற்போக்குத் தத்துவஞான மரபுகளையும் சில்லறை மரபுகளையும், போக்குகளையும் சில்லறைப் போக்குகளையும் அடிக்கடி தோற்றுவிக்கிறது. ஆகவே, அண்மைக்காலத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் ஏற்பட்டிருக்கும் புரட்சியால் எழுப்பப்படும் பிரச்சினைகளைக் கூர்ந்து கவனித்துr சென்றாலொழிய, தத்துவஞான சஞ்சிகையாகிய இந்த சஞ்சிகையின் பணித்துறையில் இயற்கை விஞ்ஞானிகளைக் கவர்ந்து இழுத்துக் கொண்டாலொழிய, போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதம் உண்மையில் போர்க்குணமுடையதாகவோ, பொருள்முதல்வாதமாகவோ இருக்க முடியாது. திமிர்யாஸெவின் கருத்துப்படி பொருள்முதல்வாதத்தின் அடிப்படைகள் மீது ஐன்ஷ்டைன் நேரடித் தாக்குதல் நடத்தாமல் இருக்கையில், எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ அறிவுத்துறையினர் மிகப் பலரும் அதற்குள் துள்ளிக் குதித்து ஐன்ஷ்டைன் தத்துவத்தைப் பற்றிக் கொண்டுவிட்டதாய் இந்த சஞ்சிகையின் முதல் இதழில் திமிர்யாஸெவ் குறிப்பிட வேண்டியதாகியுள்ளது. இப்படி நிகழ்ந்திருப்பது ஐன்ஷ்டைன் சம்பந்தமாய் மட்டுமல்ல, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி முதலாய் இயற்கை விஞ்ஞானத்தின் மாபெரும் சீர்திருத்தாளர்களில பெருவாரியானோர் இல்லையேல், எப்படியும் மிகப் பலர் சம்பந்தமாகவும் இப்படித்தான் நிகழ்ந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
இப்படிப்பட்ட புலப்பாடு குறித்து நம்முடைய போக்கு அரசியல் உணர்வுடைத்ததாய் இருக்க வேண்டுமாயின், எந்த இயற்கை விஞ்ஞானமும் சரி, எந்தப் பொருள்முதல்வாதமும் சரி, உறுதியான தத்துவஞான அடிநிலையின் மீது காலூன்றி நின்றாலன்றி, முதலாளித்துவக் கருத்துக்களுடைய வெறித்தாக்குதலுக்கும் முதலாளித்துவ உலகக் கண்ணோட்டத்தின் மீட்சிக்கும் எதிரான போராட்டத்தில் அதனால் தனது நிலையைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. இந்தப் போராட்டத்தில் இயற்கை விஞ்ஞானி தமது நிலையைப் பாதுகாத்துக் காள்ளம் பொருட்டும் இந்தப் போராட்டத்தை வெற்றிகர முடிவுக்கு நடத்திச் செல்லும் பொருட்டும் அவர் நவீனப் பொருள்முதல்வாதியாய், மார்க்சைப் பிரதிநிதியாய்க் கொண்ட அந்தப் பொருள்முதல்வாதத்தின் உணர்வுபூர்வமான ஆதரவாளராய் இருந்ததாக வேண்டும், அதாவது, அவர் இயக்கவியல் பொருள்முதல்வாதியாய் இருந்தாக வேண்டும். இந்தக் குறிக்கோள் சித்தி பெறும் பொருட்டு, "பத் ஸ்னாமினெம் மார்க்சிஸ்மா"வில் எழுதும் ஆசிரியர்கள் ஹெகலின் இயக்கவியலைப் பொருள்முதல்வாத நிலையிலிருந்து முறையாய் ஆய்ந்தறிந்து கொள்ள ஏற்பாடு செய்தாக வேண்டும். ஆதாவது, மார்க்ஸ் தமது "மூலதனத்திலும்" வரலாற்றையும் அரசியலையும் பற்றிய தமது நூல்களிலும் செயல்முறையில் கையாண்ட இயக்கவியலை, கிழக்குலகின் [ஐப்பானிலும் இந்தியாவிலும், சீனாவிலும்] புதிய வர்க்கங்கள் - உலக மக்கள் தொகையின் பெரும் பகுதியான, இது காறும் தமது வரலற்றுச் செயலின்மையாலும் வரலாற்று உறக்கத்தாலும் ஐரோப்பாவின் வளர்ச்சி பெற்ற பல நாடுகளின் தேக்கநிலையையும் சீரழிவையும் நெறிமுறையாக்கி வந்த கோடானு கோடியானோர் - விழிப்புற்று உயிர்த்தெழுந்தும் போராடியும் வரும் இக்காலத்தன் ஒவ்வொரு நாளும், புதிய பல நாடுகளது மக்களும் புதிய வர்க்கங்களும் விழிப்புற்று உயிர்த்தெழும் இக்காலத்தின் ஒவ்வொரு நாளும் மார்க்சியத்தை மெய்ப்பித்து உறுதி செய்யும் புதிய நிரூபணமாய் அமையும்படி அவ்வளவு வெற்றிகரமாய் மார்க்ஸ் கையாண்ட இந்த இயக்கவியலை முறையாய் ஆய்ந்தறிந்து கொள்ள ஏற்பாடு செய்தாக வேண்டும்.
ஹெகலின் இயக்கவியலை இப்படி ஆய்ந்தறிவதும் விளக்கம் செய்வதும் பிரசாரம் புரிவதும் மிகமிகக் கடினம்தான். இந்தத் திசையிலான முதலாவது முயற்சிகளுடன் பிழைகளும் நிச்சயம் உடன்வரும் தான். ஆனால் ஏதும் செய்யாமலிருப்போரால்தான் பிழைகள் புரியாதிருக்க முடியும். பொருள்முதல்வாத வழியில் புரிந்து கொள்ளப்படும் ஹெகலின் இயக்கவியலைக் கையாளுவதற்குரிய மார்க்சின் முறையை நமது அடிப்படையாய்க் கொண்டு, எல்லா அம்சங்களிலும் நாம் இந்த இயக்கவியலை விரித்து விளக்க முடியும், விரித்து விளக்கவும் வேண்டும், ஹெகலின் முக்கிய நூல்களிலிருந்து சிறு பகுதிகளை இந்த சஞ்சிகையில் அச்சிட வேண்டும், பொருள்முதல்வாத வழியில் இப்பகுதிகளுக்கு விளக்கம் அளித்து, இயக்கவியலை மார்க்ஸ் கையாண்டது பற்றிய உதாரணங்களின் துணை கொணடும், மற்றும் அண்மைக்கால வரலாறும் முக்கியமாண் ஏகாதிபத்தியப் போரும் புரட்சியும் அசாதரணச் செபமையுடன் இயக்கவியலுக்குப் பொருளாதார, அரசியல் உறவுகளின் துறையில் மிகுதியாய் அளித்திடும் உதாரணங்களின் துணை கொண்டும் இவை குறித்துக் கருத்துரைக்க வேண்டும். என்னுடைய அபிப்பிராயத்தில் "பத் ஸ்னாமினெம் மார்க்சிஸ்மா"வின் ஆசிரியர்களும் கட்டுரையாளர்களும் ஒரு வகையில் "ஹெகலிய இயக்கவியலின் பொருள்முதல்வாத நண்பர்களது கழகமாய்ச்" செயல்பட வேண்டும். பொருள்முதல்வாத வழியில் விளக்கம் செய்யப்பட்ட ஹெகலின் இயக்கவியலில், நவீன கால இயற்கை விஞ்ஞானிகள் [அவர்களுக்குத் தேடிக் கண்டறிந்து கொள்ளத் தெரிந்திருந்து, நாமும் அவர்களுக்குத் துணை புரியக் கற்றுக் கொள்வவோமாயின்] இயற்கை விஞ்ஞானத்தில் நடைபெறும் புரட்சியால் எழுப்பப்படும் தத்துவஞானப் பிரச்சினைகளுக்கு, முதலாளித்துவ மோஸ்தர்களால் மயக்கப்படும் அறிவுத்துறையினரைப் பிற்போக்கினுள் "வழுக்கிவிழுச்" செய்யும் இப்பிரச்சினைகளுக்கு, வரிசையாய் விடைகள் இருக்கக் காண்பார்பகள்.
இப்படிப்பட்ட ஒரு பணியை வகுத்துக் கொண்டு முறையாய் அதை நிறைவேற்றிச் சென்றாலொழிய, பொருள்முதல்வாதம் போக்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதமாய் இருக்க முடியாது. ஷெத்ரீனுடைய சொற்களில் சொல்வதெனில் அது அவ்வளவாய்ப் போராடி வாகை சூடும் ஒன்றாய் இல்லாமல், போராடப்பட்டு வீழ்த்தப்படும் ஒன்றாகவே இருக்கும். இப்படி அது பணியாற்றாதவரை, தலைசிறந்த இயற்கை விஞ்ஞானிகள்தமது தத்துவஞான அனுமானங்களையும் பொதுமையாக்கப்பட்ட முடிவுகளையும் வந்தடைவதில் இதுகாறும் அடிக்கடி இருந்துள்ளது போலவே இனியும் திக்கற்றவர்களாகவே இருப்பார்கள். ஏனெனில் இயற்கை விஞ்ஞானம் அவ்வளவு வேகமாய் முன்னேறிச் செல்கிறது, எல்லாத் துறைகளிலும் அவ்வளவு ஆழ்ந்த புரட்சிகர மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது, அது தத்துவஞான அனுமானங்களின்றி இருக்கலாமென நினைக்க முடியவே முடியாது.
முடிவில் ஓர் உதாரணத்தை எடுத்துரைக்கிறேன். இது தத்துவஞானத்துடன் சம்பந்தப்பட்டதல்ல, ஆனால் எப்படியூம் சமூகப் பிரச்சினைகளைப் பற்றியதுதான். "பத் ஸ்னாமினெம் மார்க்சிமா" சமூகப் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த விரும்புகிறது.
நவீன காலத்திய போலி விஞ்ஞானம் உண்மையில் படுமோசமான, மிகவும் இழிவான பிற்கோக்குக் கருத்தோட்டங்களுக்கான ஒரு சாதனமாய் எப்படிப் பயன்படுகிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
"ருஷ்யத் தொழில் நுட்பத் கழகத்தின்" பதினொராவது இலாகாவினால் வெளியிடப்படும் "எக்கனமீஸ்ட்" முதல் இதரீல் [1922] பிரதி அண்மையில் எனக்கு வரப் பெற்றது. இந்த சஞ்சிகையை எனக்கு அனுப்பி வைத்த இளம் கம்யூனி [அதைப் படித்துப் பார்க்க அவருக்கு நேரம் கிடைக்காமல் இருந்திருக்கலாம்] அவசரப்பட்டு அதனுடன் பெருமளவு தாம் உடன்படுவதாய்க் குறிப்பிட்டார். உண்மையில் இந்த சஞ்சிகை நவீன பிரபுத்துவவாதிகளது ஏடாய்ச் செயல்படுகிறது - எந்த அளவுக்குத் தெரிந்து வேண்டுமென்றே இப்படிச் செய்கிறதோ நான் அறியேன். விஞ்ஞானம், ஜனநாயம் இத்தியாதிகயான வேடங்களின் மறைவில் இவ்வேலையைச் செய்கிறது.
திரு.பி.அ.ஸரோக்கின் என்ற ஒருவர் "போரால் ஏற்பட்ட விளைவு" குறித்து, "சமூகவியல்" பரிசீலனை என்தாய்க் கூறிக் கொண்டு இந்த சஞ்சிகையில் விரிவான ஆய்வுரை வெளியிட்டிருக்கிறார். புலமை வாய்ந்த இந்தக் கட்டுரையில், இந்த ஆசிரியரும் வெளிநாடுகளிலுள்ள இவருடைய எண்ணற்ற போதனாசிரியர்களும் சக ஆய்வாளர்களும் எழுதிய " சமூகவியல்" நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட புலமை வாய்ந்த மேற்கோள்கள் நிறைய இருக்கின்றன. இவருடைய புலமைக்கு இதோ ஓர் உதாரணம்:
பக்கம் 83ல் படிக்கிறேன்:
"பெத்ரொகிராதில் தற்போது நடைபெறும் திருமணங்களில் ஒவ்வொரு 10,000லும் திருமண ரத்துக்களின் எண்ணிக்கை 92.2 - நம்ப முடியாத பெரிய எண்ணிக்கை இது. ரத்து செய்யப்படும் ஒவ்வொரு 100 திருமணங்களிலும் 51.1 ஓராண்டுக்குக் குறைவாய் நீடித்தவை, 11 சதவீதமானவை ஒரு மாதத்துக்குக் குறைவாகவும், 22 சதவீதமானவை இரண்டு மாதங்களுக்குக் குறைவாகவும், 41 சதவீதமானவை மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குக் குறைவாகவும் நீடித்தவை. 26 சதவீதமானவையே ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்தவை. தற்காலத்திய சட்டபூர்வமான திருமணம் நடைமுறையில் தாம்பத்தியத்துக்குப் புறம்பான பாலுறவை மூடி மறைக்கும் ஒரு வடிவமாய் அமைந்து, 'பழம் தேடியலையும்' காதலர்கள் 'கட்டபூர்வமான' வழியில் தம் பசியைத் தீர்த்துக் கொள்ள வகை செய்கிறத என்பதைத்தான் இப்புள்ளிகள் காட்டுகின்றன."
[எக்கமமீஸ்ட், இதழ் 1, பக்கம்83]
இந்த கனவானும் இந்த சஞ்சிகையை வெளியிட்டு இம்மாதிரியான பேச்சுக்களுக்கு இதில் இடம் தரும் ருஷ்யத் தொழில்நுட்பக் கழகத்தாரும் நிச்சயம் தம்மை ஜனநாயகத்தைப் பற்றியொழுகுவோரகவே கருதிக் கொள்வார்கள், உண்மையில் இவர்களுக்கு உரிய பெயரைக் கொண்டு அழைத்தோமாயின், அதாவது பிரபுத்துவவாதிகள், பிற்போக்களர்கள், "சமய சித்தாந்தத்தின் பட்டம் பெற்ற அடிவருடிகள்" என்று கூறுவோமாயின், தாம் பெரிதும் அவமதிக்கப்படுவதாகவே கருதிக் கொள்வார்கள்.
முதலாளித்துவ நாடுகளில் திருமணம் குறித்தும், திருமண ரத்து குறித்தும், திருமணத்துக்குப் புறத்தே பிறந்த குழந்தைகள் குறித்தும் நடப்பிலுள்ள சட்டங்களையும், இத்துறையில் உண்மையில் அங்குள்ள நிலவரங்களையம், பற்றி சொற்ப அளவு ஞானம் இருந்தாலே போதும், இந்த விவகாரத்தில் கருத்துடைய எவரும் நவீன முதலாளித்துவ ஜனநாயகம், மிகவும் ஜனநாயகமான முதலாளித்துவக் குடியரசுகளில் இருப்பதுங்கூட, இத்துறையிலே பெண்கள் குறித்தும் திருமணத்துக்குப் புறத்தே பிறந்த குழந்தைகள் குறித்தும் மெய்யாகவே பிரபுத்துவ போக்கு கொண்டிருப்பதைக் கண்டு கொண்டவிடலாம்.
இந்த நிலைமை மென்ஷிவிக்குகளையும், சோஷலிஸ்டு - புரட்சியாளர்களையும், அராஜகவாதிகளில் ஒரு பகுதியோரையும், மேலைய நாடுகளில் இவர்களை ஒத்தவையாயுள்ள எல்லா கட்சிகளையும், ஜனநாயகம் என்பதாகவும் போல்ஷிவிக்குகள் இதைக் குலைக்கிறார்கள் என்பதாகவும் கூச்சல் போடாதபடி தடுத்துவிடவில்லைதான். ஆனால் உண்மை என்னவெனில், போல்வஷிவிக் புரட்சி ஒன்று மட்டும்தான் திருமணம், திருமண ரத்து, திருமணத்துக்குப் புறத்தே பிறந்த குழந்தைகளில் நிலை ஆகியவை போன்ற பிரச்சினைகளில் முரணில்லாத ஜனநாயகப் புரட்சியாய் நடந்தேறியிருக்கிறது. எந்த நாட்டிலும் மக்களில் பாதிக்கு மேற்பட்டோரது நலன்களுடன் மிகவும் நேரடியாய்ச்சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை இது. போல்ஷிவிக் புரட்சிக்கு முன்பு மிகப் பல புரட்சிகள் நடைபெற்றிருப்பினும், இவை தம்மை ஜனநாயகப் புரட்சிகளாய் அழைத்துக் கொண்டன என்ற போதிலும், போல்ஷிவிக் புரட்சிதான் இத்துறையில் பிற்போக்கையும் பிரபுத்துவத்தையும் மற்றும் சொத்துடைத்த ஆளும் வர்க்கங்களது வழக்கமான கபடத்தையும் எதிர்த்து உறுதி வர்க்கங்களது வழக்கமான கபடத்தையும் எதிர்த்து உறுதி வாய்ந்த போராட்டம் நடத்தியுள்ள முதலாவது புரட்சியும், ஒரே புரட்சியும் ஆகும்.
10,000 திருமணங்களில் 92 திருமண ரத்துக்கள் என்பது, திரு, ஸரோக்கினுக்கு நம்ப முடியாத பெரிய எண்ணிக்கையாய்த் தோன்றினால், வாழ்க்கையிலிருந்து அறவே துண்டித்து ஒதுக்கி வைக்கப்பட்ட துறவி மடத்தில் - அப்படி ஒரு துறவி மடம் இருக்க முடியுமென யாராலும் நம்ப முடியாதபடி அந்த அளவுக்கு அறவே துண்டித்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஒன்னில் - வளர்ந்து ஆளாகி அங்கேயே வசித்து வருகிறவராகவே இந்த ஆசிரியர் இருக்க வேண்டும், அல்லது பிற்போக்கின் நலத்தையும் முதலாளி வர்க்கத்தின் நலத்தையும் உத்தேசித்து இவர் உண்மையைத்திரித்துப் புரட்டுகிறார் என்றுதான் கொள்ள வேண்டும். முதலாளித்துவ நாடுகளிலுள்ள சமூக நிலைமைகளைச் சிறிதளவேனும் அறிந்தவர் எவரும், இந்நாடுகளில் எல்லாம் உண்மையில் நடைபெறும் திருமண ரத்துக்களின் மெய்யான எண்ணிக்கை [இந்தத் திருமண ரத்துக்கள் மதச் சபையாலும் சட்டத்தாலும் அங்கீகரிக்கப்படாதவை என்பதைக் கூறத் தேவையில்லை] கணக்கின்றி மிகவும் அதிகமாகும் என்பதை நன்கறிவார். இத்துறையில் ருஷ்யாவுக்கும் பிற நாடுகளுக்குமுள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், நமது சட்டங்கள் கபடத்தையும், பெண்ணும் பெண்ணின் குழந்தையும் இழிவு செய்தலின் மீதும் பகிரங்கமாகவும் அரசாட்சியின் பெயரிலும் முறையான போர்ப் பிரகடனம் செய்கின்றன.
மார்க்சிய சஞ்சிகை "படித்தறிந்த" இந்த நவீன பிரபுத்துவவாதிகளையும் எதிர்த்துப் போராடியாக வேண்டும். இவர்களில் பலர் அரசாங்கப் பணம் பெறுகின்றவர்களாகவே இருப்பார்கள், வக்கரித்துப் போனவர்களாய்ப் பெணரெடுத்தவர்கள் வளரும் தலைமுறையினரது கல்வி நிலையங்களுடைய மேலாளர்களாய் இருக்க எப்படித் தகுதியற்றவர்களோ அதே போல சிறிதும் தகுதியற்றோராகிய இவர்கள் நமது இளந் தலைமுறையினருக்குக் கல்வி போதகர்களாய் நமது அரசாங்கத்தால் அமர்த்தப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
ருஷ்யாவின் தொழிலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தை வென்று கொண்டுவிட்டது. ஆனால் இந்த ஆட்சியதைகாரத்தைப் பயன்டுத்த இன்னும் அது கற்றுக் கொள்ளவில்லை. கற்றுக் கொண்டிருந்தால், எநடுங்காலத்துக்கு முன்பே அது இத்தகைய போதனாசிரியர்களையும் புலமை படைத்த கழகங்களது உறுப்பினர்களையும் முதலாளித்துவ "ஜனநாயகத்தைக்" கொண்ட நாடுகளுக்குப் பணிவன்புடன் அனுப்பி வைத்திருக்கும். இப்படிப்பட்ட பிரபுத்துவவாதிகளுக்கு அவையே ஏற்ற இடமாகும்.
ஆயினும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற திடச்சித்தம் இருக்குமாயின் நிச்சயம் அது கற்றுக் கொண்டுவிடும்.
1922 மார்ச் 12

No comments:
Post a Comment