Sunday, February 7, 2010

நமது வேலைத்திட்டம் -லெனின்

நமது வேலைத்திட்டம் -லெனின்


தற்போது சர்வதேச சமூக - ஜனநாயகம் சித்தாந்த ஊசலாட்டத்தால் பீடிக்கப்பட்ட ஒரு நிலையில் இருக்கிறது. இதுகாறும் மார்க்ஸ், எங்கெல்சின் போதனைகள் புரட்சித் தத்துவத்துக்குரிய உறுதி வாய்ந்த அடித்தளமாய்க் கருதப்பட்டு வந்தன, ஆனால் இப்பொழுது இந்தப் போதனைகள் குறை பாடானவை என்றும் பழமைப்பட்டுவிட்டவை என்றும் பறைசாற்றும் குரல்கள் நாற்புறமிருந்தும் எழுப்பப்படுகின்றன. சமூக - ஜனநாகவாதியாய்த் தம்மை அறிவித்துக் கொண்டு, சமூக - ஜனநாயகக் கொள்கை முழுக்க ஏடு ஒன்றை வெளியிட முன்வரும் எவரும், ஜெர்மன் சமூக - ஜனநாகவாதிகளின் கவனத்தையும் அவர்கள் மட்டுமின்றி ஏனைய பலரின் கவனத்தையும் ஆட்கொண்டு வரும் ஒரு பிரச்சினை குறித்துத் தமது போக்கு என்ன என்பதைத் துல்லியமாய் வரையறுத்துக் கூறியாக வேண்டும்.

நாம் முற்றிலும் மார்க்ஸியத் தத்துவார்த்த நிலையையே எமது அடிநிலையாய்க் கொண்டு நிற்கிறோம்: மார்க்ஸியம் தான் முதன்முதல் சோஷலிசத்தைக் கற்பனாவாதத்திலிருந்து விஞ்ஞானமாய் மாற்றியமைத்துத் தந்தது, இந்த விஞ்ஞானத்துக்கு உறுதியான அடித்தளத்தை நிறுவிக் கொடுத்தது, இதை இதன் எல்லாக் கூறுகளிலும் மேலும் வளர்த்தும் விவரமாய் விரித்தமைத்தும் செல்வதற்குப் பின்பற்ற வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டிற்று. தொழிலாளியை வேலைக்கு அமர்த்திக் கொள்வதானது, அதாவது உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதானது, சொத்துடைமையற்ற லட்சோபலட்சக் கணக்கானோரை நிலம்,ஆலைகள், சுரங்கங்கள் முதலானவற்றின் உடைமையாளர்களாகிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில முதலாளிகள் அடிமை செய்து விடுவதை எப்படி மூடிமறைக்கிறது என்பதை விளக்கியதன் மூலம், நவீன கால முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தன்மையை அது வெளிப்படுத்திக் காட்டிற்று நவீன கால முதலாளித்துவ வளர்ச்சி அனைத்துமே, பெருமளவான பொருளுற்பத்தியானது விற்றளவான பெருளுற்பத்தியைக் கழித்துக் கட்டிவிடும் போக்கினைவெளிப்படுத்திச் செல்வதையும், சோஷலிசச் சமுதாய அமைப்பை சாத்தியமும் அத்தியாவசியமும் ஆக்கும் நிலைமைகளைத் தோற்றுவிப்பதையும் அது தெளிவுபடுத்திக் காட்டிற்று. வேர்விட்டு வளர்ந்துள்ள பழக்க வழக்கங்கள், மற்றும் அரவியல் சூழ்ச்சிகள், புரியாப் புதிர்களான சட்டங்கள்,. கடுஞ்சிக்கலான தத்துவங்கள் ஆகியவற்றாலாசிய புகை மூட்டத்தினுள் மறைந்திருக்கும் வர்க்கப்போராட்டத்தை, பல்வேறு வகைப்பட்ட சொத்துடைத்த வர்க்கங்களுக்கும் சொத்துடைமையற்றோர் அமைவரின் தலைமையில் நிற்கும் சொத்தில்லாப் பெருந் திரளாகிய பாட்டாளி பர்க்கத்துக்குமிடையே நடைபெறும் இந்தப் போராட்டத்தை எப்படிக் கண்டறிந்து கொள்வதென்று அது நமக்குக் கற்றுக் கொடுத்தது. புரட்சிகர சோஷலிஸ்டுக் கட்சியின் முன்னுள்ள மெய்யான பணியை அது தெளிவுபடுத்திற்று, சமுதாயத்தைத் திருத்தியமைப்பத்ற்குத் திட்டங்கள் வரைவதல்ல, தொழிலாளர்களுடைய நிலைமையை மேம்படச் செய்வது குறித்து முதலாளிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும்அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவதல்ல இப்பணி, பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வெல்வதையும் சோஷலிசச் சமுதாயம் ஒழுங்கமைக்கப் படுவதையும் இறுதிக் குறிக்கோளாய்க் கொண்ட இந்த வர்க்கப் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதுமே இப்பணி என்று அது தெளிவுபடுத்திற்று.

இப்பொழுது நாம் கேட்கிறோம், இந்தத் தத்துவத்தைப் "புதுப்பிப்பதாய்ப்" பலக்கக் கூறிக் கொள்கிறார்களே, இக்காலத்தில் பெருங் கூச்சல் எழுப்பி வருவோரும் ஜெர்மம் சோஷலிஸ்டு பெர்ன்ஷ்டைனை மையமாய்க் கொண்டு திரண்டிருப்போருமாகிய இவர்கள் புதிதாய் எதையேனும் இத்ததுவத்தில் புகுத்தியிருக்கிறார்களா? எதுவுமே இல்லை. வளர்த்திடுமாறு மார்க்சும் எங்கெல்சும் நம்மைப் பணித்துச் சென்ற இந்த விஞ்ஞானத்தை ஓரடியுங்கூட இவர்கள் முன்னேறச் செய்துவிடவில்லை, புதிய போராட்ட முளைகள் எவற்றையும் இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குக் கற்றுக் கொடுத்துவிடவில்லை. மாறாக, இவர்கள் பிற்பட்ட தத்துவங்களிலிருந்து சிறு கவளங்களைக் கடன்வாங்கி, பாட்டாளி வர்க்கத்துக்குப் போராட்டத் தத்துவத்தையல்ல, விட்டுக் கொடுத்துச் செல்லும் த்த்துவத்தை - பாட்டாளி வர்க்கத்தின் மிகக் கொடும் பகைவர்களுக்கு, சோஷலிஸ்டுகளை வருத்துவதற்காக அயராது புது வழிமுறைகளைத் தேடியலையும் அரசாங்கங்களுக்கும் முதலாளித்துவக் கட்சிகளுக்கும் பிட்டுக் கொடுத்துச் செல்லும் தத்துவத்தை - பிரசாரம் செய்துப் பின்வாங்கியே சென்றிருக்கிறார்கள். ருஷ்ய சமூக - ஜனநாயத்தின் மூலவர்களிலும் தலைவர்களிலும் ஒருவரான பிளெஹானவ், பெர்ன்ஷ்டைனுடைய மிகவும் அண்மையதான "விமர்சனத்தை" ஈவிரக்கமின்றி கண்டன விமர்சனம் செய்தது முற்றிலும் சரியானதே. பெர்ன்ஷ்டைனுடைய கருத்துக்கள் ஜெர்மன் தொழிலாளர்களுடைய பிரதிநிதிகளாலும் இப் பொழுது நிராகரிக்ப்பட்டிருக்கின்றன. [ஹனோவர் காங்கிரசில்]

நாம் இதைச் சொல்வதற்காக மடை திறந்துவிட்டாற் போல குற்றச்சாட்டுகள் பாய்ந்து வருமென எதிர்பார்க்கின்றோம். சோஷலிஸ்க் கட்சியை "மெய்யானபக்திமான்களது" திருச்சபையாய், "சமயக் கோட்காடுகளிலிருந்து" விலகிச் செல்லும் திரிபுகளுக்காகவும் சுயேச்சையான ஒவ்வொரு கருத்துக்காகவும் "மறுத்துப் பேசுவோரைத்" தண்டிக்கும் அமைப்பாய் மாற்ற விரும்புகிறோம் என்றும் மற்றும் பலவாறாகவும் கூச்சல்கள் எழுப்பப்படும். புதிய மோஸ்தராகிவிட்ட இந்தச் சுடுசொற் கணைகள் யாவும் நாம் அறிந்தவையே. ஆனால் சிறு துளியாளவும் உண்மையோ பொருளோ இவற்றில் இல்லை. எல்லா சோஷலிஸ்டுகளையும் ஒரசேர இணைத்திடும் புரட்சிகரத் தத்துவம் இல்லையேல், அவர்கள் தமது பற்றுறுதிக்குரிய திட முடிவுகளுக்கு ஆராரமாய் அமைவதும் வர்கள் தமது போராட்ட முறைகளிலும் செயல் வழிகளிலும் கையாளக் கூடியதுமான புரட்சிகரத் தத்துவம் இல்லையேல், வலிமை வாய்ந்த சோஷலிசக் கட்சியும் இருக்க முடியாது. நீங்கள் அறிந்த வரை மெய்யானதென நீங்கள் கருதும் இத்தகைய ஒரு தத்துவத்தை ஆதாரமற்ற தாக்குதல்களிலிருந்தும், அதைச் சீர்கேடுறச் செய்வதற்கான முயற்சிகளிலிருந்தும், அதைச் சீர்கேடுறச் செய்வதற்கான முயற்சிகளிலிருந்தும் பாதுகாக்கிறீர்கள் என்றால், எல்லா விமர்சனத்துக்கும் நீங்கள் பகையாகிவிட்டதாய் அர்த்தமல்ல. மாக்சின் தத்துவத்தை நாங்கள் முற்றும் முடிவான ஒன்றாய், மீறவொண்ணாத ஒன்றாக் கருதவில்லை. மாறாக, அது சோஷலிஸ்டுகளுக்குரிய விஞ்ஞானத்தின் அடிக்கல்லை மட்டுமே அமைத்துக் கொடுத்திருக்கிறது, சோஷலிஸ்டுகள் வாழ்க்கையுடன் சேர்ந்து நடைபோட விரும்பினால் இந்த விஞ்ஞானத்தை எல்லாத் திசைகளிலும் வளர்துச் செல்வது அவசியம் என்பதை நாம் ஐயமற அறிவோம். மார்க்ஸின் தத்துவத்தை தன்னிச்சையான முறையில் விரிவுபட வளர்த்திடுவது முக்கியமாய் ருஷ்ய சோஷலிஸ்டுகளுக்கு மிக்கதொரு தேவையாகுமெனக் கருதுகிறோம். ஏனெனில் இந்தத் தத்துவம் பொதுவான வழிகாட்டும் கோட்காடுகளையே அளித்திடுகிறது, தனிப்பட்ட முறையில் அவை பிரான்சிலிருந்து வேறுவிதமாய் இங்கிலாந்திலும், ஜெர்மனியிலிருந்து வேறு விதமாய் பிரான்சிலும், ருஷ்யாவிலிருந்து வேறு விதமாய் ஜெர்மனியிலும் கையாளப்படுகிறவை. ஆகவே தத்துவார்த்தப் பிரச்சினைகள் பற்றிய கட்டுரைகளுக்கு எமது பத்திரிகையில் மகிழ்ச்சியுடன் நாம் இடம் அளிப்போம், சர்ச்சைக்குரிய விவரங்களைப் பகிரங்கமாய் விவாதிக்குமாறு எல்லாத் தோழர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

எல்லா சமூக - ஜனநாயவாதிகளுக்கும் பொதுவான வேலைத்திட்டத்தை ருஷ்யாவில் கையாளுகையில் எழும் முக்கியமான பிரச்சினைகள் யாவை? பாட்டாளி வர்க்த்தினுடைய வர்க்கப் போராட்டத்துக்கு நிறுவன ஒழுங்கமைப்பு செய்வதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வெல்வதையும் சோஷலிச சமுதாயம ்ஒழுங்கமைக்கப்படுவதையும் இறுதிக் குறிக்கோளாய்க் கொண்ட இந்த வர்க்கப் போராட்டத்குக்குத் தலைமை தாங்குவதுமே இந்த வேலைத் திட்டத்தின் வர்க்த்தின் என்று நாம் கூறுயிருக்கிறோம். பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமானது, பொருளாதாரப் போராட்டமும் [தொழிலாளர்களுடைய நிலைமை மேம்பாடு அடைவதற்காகத் தனிப்பட்ட முதலாளிகளையோ, முதராளிகளது தனிப்பட்ட குழுக்களையோ எதிர்த்து நடை பெறும் போராட்டம்], அரசியல் போராட்டமும் [மக்களுடைய உரிமைகள் பிரிவடைவதற்காகவும், அதாவது ஜனநாயகத்துக்காகவும், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரம் பிரிவடைவதற்காகவும் அரசாங்கத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம்] உள்ளடங்கியதாகும். ருஷ்ய சமூக - ஜனநாயகவாதிகள் சிலர் [ரபோச்சயா மீசில் ஏட்டை நடத்துவோரும் இவர்களிடையே இருப்பது வெளிப்படை] பொருளாதாரப் போராட்டமானகது ஒப்பிட முடியாத அளவுக்கு மிகவும் முக்கியமானதென்று கருதுகின்றனர், அரசியல் போராட்டத்தை இவர்கள் அதிகமாகவோ, குறைவாகவோ நெடுந்தொலைவிலுள்ள எதிர்காலத்துக்கே உரியதாய் ஒதுக்கிவிடும் அளவுக்கு ஏறத்தாழ போய்விடுகின்றனர். இந்தக் கண்ணோட்டம் முற்றிலும் தவறானது. தொழிலாளி வர்க்கத்தின் பொருளாதாரப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வது அவசியமென்பதை எல்லா சமூக - ஜனநாயகவாதிகளும் ஏற்றுக் கொள்கிறார்கள், இந்த அடிப்டையில் தொழிலாளர்களிடையே கிளர்ச்சி நடத்துவது, அதாவது முதலாளிகளுக்கு எதிரான தொழிலாளர்களது அன்றாட போராட்டத்தில் அவர்களுக்கு உதவுவதும், ஒடுக்கு முறையின் ஒவ்வொருவடிவத்தையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவர்களுடைய கவனத்துக்குச் கொண்டுவருவதும், ஒன்றுபட வேண்டியதன் தேவையை இவ்வழியில் அவர்களுக்குத் தெளிவு படுத்துவதும் இன்ளியமையாதது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பொருளாதாரப் போராட்டத்துக்காக அரசியல் போராட்டத்தை மறப்பதானது சர்வதேச சமூக - ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டை விட்டு விலகுவதாகிவிடும், தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு அனைத்தும் நமக்குப் போதிப்பதை மறப்பதாகிவிடும். முதலாளித்துவவர்க்கத்தையும் அதற்குச் சேவை புரியும் அரசாங்கத்தையும் ஐயந்திரிபறப் பின்பற்றுவோர் தொழிலாளர்களது முழுக்க முழுக்க பொருளாதாரச் சங்கங்களை அமைக்கவும், இவ்விதம் அவர்களை "அரசியலிலிருந்து", சோஷலிசத்திலிருந்து திசை திருப்பிடவும் மீண்டும் மீண்டும் முயற்சிகள் செய்தும் இருக்கிறார்கள். ருஷ்ய அரசாங்கமும் கூட இதுபோன்ற ஒரு முயற்சியை மேற்கொள்வது மற்றிலும் சாத்தியமே, மக்களுக்குச் சில அற்ப கவளங்களை, இன்னும் சரியாய்ச் சொல்வதெனில் போலியான கவளங்களை விட்டெறிய எப்பொழுதுமே து முயன்றிருக்கிறத, ஒடுக்கப்படுகிறோமே, உரிமைகளிலலாதோராய் இருக்கிறோம் என்ற உண்மையிலிருந்து மக்களுடைய சிந்தனைகளைத் திருப்பலாம் என்பதற்காவது இவ்வாறு அது மயன்றிருக்கிறது. தொழிலாளர்கள் தடையின்றி சுதந்திரமாய்க் கூட்டங்கள் நடத்தவும் சங்கங்கள் அமைக்கவும் தமனது சொந்த செய்தியேடுகளைப் பெற்றிருக்கவும் தேசியச் சட்டமன்றங்களுக்குத் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பவும் உரிமையுடையோராய் இருந்தாலன்றி, ஜெர்மனியிலும் ஏனைய எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் [துருக்கியையும் ருஷ்யாவையும் தவிர்த்து] தொழிலாளர்களுக்கு இருந்து வரும் இந்த உரிமைகளை உடையோராய் இருந்தாலன்றி, எந்தப் பொருளாதராப் போராட்டமும் தொழிலாளர்களுக்கு நீடித்த மேம்பாட்டைக் கிடைக்கச் செய்யவும் முடிளாயது, பெரிய அளவில் நடத்தப்படவுங்கூட முடியாது. ஆனால் இந்த உரிமைகளை வென்று கொள்ள வண்டும்ரயின் அரசியல்பாராட்டம் நடத்துவது இன்றியமையாததாகும். ருஷ்யாவில் தொழிலாளர்கள் மட்டுமின்றி குடிமக்கள் எல்லோருமே அரசிய்ல உரிமைகள் இல்லாதோராகவே இருக்கின்றனர். ருஷ்யா ஒரு வரம்கில்லாத, எதேச்சாதிகார முடியரசாய் இருந்து வருகிறது. ஜார் மன்னர்தான் சட்டங்கள் பிறப்பிக்கின்றார், அதிகாரிகளை நியமிக்கின்றார், அவர்களைக் கட்டுபாடு செய்கின்றார். இக்காரணத்தின்ரல் ருஷ்யாவில் ஜாரும் அவரது அரசாங்கமும் எந்த வர்க்கத்தையும் சாராமல் இருந்து எல்லோரையும் சரிசமமாய் நடத்துவது போலத் தோன்றுகிறது. ஆனால் எதார்த்த உண்மை என்னவெனில் எல்லா அதிகாரிகளும் சொத்துடைத்த வர்க்கங்களிடம் மட்டுமிருந்தே முழுக்க முகுக்க பொறுக்கியெடுக்கப்படுகின்றனர், எல்லோரும் பெரு முதலாளிகளுடைய செல்வாக்குக்கு உட்பட்டோராய் இருக்கிறார்கள், இந்தப் பெரு முதலாளிகள் அமைச்சர்களைத் தமக்குத் தண்டமிட்டுப் பணி புரியச் செய்கிறார்க், தாம் விரும்புவதை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டுவிடுகிறார்கள். ருஷ்யாவின் தொழிலாளி வர்க்கம் இரட்டை ஆதிககத்துக்கு அடிமைப்பட்டு வதைபடுகின்றது. முதலர்ளிகளாலும் நிலப் பிரபுக்களாலும் அது கொள்ளையிடப்பட்டுச் சூறையாடப்படுகின்றது, இவர்களை எஉதிர்த்துப் போராடாமல் அதைத் தடுப்பதற்காகப் போலீஸ் அதன் கைகால்களைக் கட்டிப் போட்டு வாய்க்கும் பூட்டு போடுகிறது, மக்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சி ஒவ்வொன்றும் அடக்கி ஒடுக்கப் படுகின்றது. முதலாளிக்கு எதிரான ஒவ்வொரு வேலை நிறுத்தமும் இராணுவமும் போலீசும் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுவதில் முடிவுறுகிறது. ஒவ்வொரு பொருளாதாரப் போராட்டமும் தவிர்க்க முடியாதபடி ஓர் அரசியல் போராட்டமாகிவிடுகின்றது. சமூக - ஜனநாயகவாதமானது ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியாதபடி இரண்டையும் பாட்டாளி வர்க்கத்தின் ஒரே வர்க்கப் போராட்டமாய் இணைத்தாக வேண்டும். இத்தகைய ஒரு போராட்டத்தின் முதலாவதும் தலைமையானதுமான நோக்கம் அரசியல் உரிமைகளை வென்று கொள்வதாய், அரசியல் சுதந்திரத்தை வென்று கொளவதாய் இருத்தல் வேண்டும். பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர்கள் தனித்திருந்து, சோஷலிஸ்டுகளிடமிருந்து கிடைத்த சிறிதளவு உதவியைக் கொண்டு, அரசாங்கத்துடன் போராடி அதனிடமிருந்து ஒரு சலுகையைப் பிடுங்கிக் கொள்வதில் - வேலை நேரத்தைக் குறைக்கும் சட்டம் ஏற்கப்படும்படிச் செய்வதில் - விரைவில் வெற்றி பெற்றுள்ளனர் என்றால், ஒட்டுமொத்தமாய் ருஷ்யாவின் தொழிலாளி வர்க்கம் ருஷ்யாவின் ஒருமித்த சமூக - ஜனநாயகத் தொழிலாளர் கட்சியால் தலைமை தாங்கப்பெற்று, விடாப்பியாய்ப் போராடி ஒப்பீடில்லாத அளவுக்கு மிக முக்கிய சலுகைகளை வென்று கொள்ள முடியும்.

வேறு எந்த வர்க்கமும் அதற்கு உதவ வராவிட்டாலுங்கூட ருஷ்யாவின் தொழிலாளி வர்க்கம் தனித்து நின்று தனது பொருளாதார, அரசியல் போராட்டத்தை நடத்திச் செல்ல முடியும். ஆனால் அரசியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் தனிதது நிற்கவில்லை. மக்கள் அறவே உரிமைகள் இல்லாதோராய் இருத்தப்பட்டிருப்பதும், பஷி - புஜிக் அதிகாரிகளுடைய சட்ட நெறியற்ற காட்டுத்தனமும், சுதந்திரச் சிந்தனை உரிமையும் சுதந்திரப் பேச்சு உரிதையும் அடக்கி ஒடுக்கப்படுவதற்கு மனம் ஒப்ப முடியாதோரான நேர்மை உள்ளமுடைத்த, கல்வியறிவு பெற்ற மக்கள் அனைவரையும் ஆத்திரங்கொள்ளச் செய்கின்றன, அடக்குமுறையால் நசுக்கப்படும், போலிஷ் இனத்தோர், ஃபின் இனத்தோர், யூதர்கள், ருஷ்ய சமயப் பிரிவினர் ஆகியோரையும் இவை ஆத்திரங்கொள்ளச் செய்கின்றன, அதிகாரிகளின், போலீசாரின் அடக்குமுறையிலிருந்து எங்குமே காப்பு பெற முடியாதேர்ராய் இருக்கும் சிறு வணிகர்கள், பட்டறையதிபர்கள், விவசாயிகள் ஆகியோரையும் இவை ஆத்திரங்கொள்ளச் செய்கின்றன. மக்களின் இத்தொகுயோர் எவரும் தனித்து நின்று விடாப்பிடியான அரசியல் போராட்டம் நடத்தும் ஆற்றலுடையோர் அல்லர். ஆனால் தொழிலாளி வர்க்கம் இந்தப் போராட்டத்தின் கொடியை உயர்த்தும் போது எல்லாப் பக்கங்களிலிருந்தும் அதற்கு ஆதரவு கிடைக்கும். ருஷ்யாவின் சமூக - ஜனநாயகவாதம் மக்களது உரிமைகளுக்காகப் போராடுவோர் அனைவரின், ஜனநாயத்துக்காகப் போராடுவோர் அனைவரின் தலைமையிலே நின்று செயல்படும், அது வெல்லற்கரிய பலமுடைத்ததாகிவுடும்!

இவையே எமது அடிப்படைக் கருத்தோட்டங்கள். இவற்றை நாம் எமது பத்திரிகையில் முறையாகவும் எல்லாக் கோணங்களிலிருந்தும் வளர்த்துச் செல்வோம். இவ்விதம் நாம், ருஷ்யவின் சமூக - ஜனநாயகத் தொழிலாளர் கட்சிதான் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் பாதையிலே நடைபோடுவோம் என்பதில் எமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment