Sunday, February 7, 2010

3, சோஷலிச, கம்யூனிச இலக்கியம்

3, சோஷலிச, கம்யூனிச இலக்கியம்
- மார்க்ஸ் - எங்கெல்ஸ்
[கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை]

1, பிற்போக்கு சோஷலிசம்

[அ] பிரபுத்துவ சோஷலிசம்

பிரான்சையும் இங்கிலாந்தையும் சேர்ந்த பிரபுக் குலத்தோருக்கு வரலாற்று வழியில் ஏற்பட்ட நிலையின் காரணமாய், நவீன முதலாளித்துவ சமுதாயத்தை எதிர்த்து, பிரசுரங்கள் எழுதுவது அவர்களது வாழ்க்கை பணியாயிற்று. 1830 ஜுலையில் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியிலும், இங்கிலாந்துப் பாராளுமன்றச் சீர்திருத்தக் கிளர்ச்சியிலும் இந்தப் பிரபுக் குலத்தோர் திடீர் ஏற்றம் கண்டுவிட்ட வெறுக்கத்தக்க புதுப் பணக்கார அற்பர்களால் திரும்பவும் தோற்கடிக்கப்பட்டார்கள். இதற்குப் பிற்பாடு மெய்யான அரசியல் போராட்டத்துக்கு வழி இல்லாமற் போயிற்று. இனி சாத்தியமானது எல்லாம் இலக்கியப் போர் ஒன்றுதான். ஆனால் இலக்கியத் துறையிலுங்கூட முடியாட்சி மீட்சிக் காலத்திய பழைய கூப்பாடுகளை எழுப்பபுவது சாத்திய மற்றதாகிவிட்டது.

பிரபுக் குலத்தோர் தம்மீது அனுதாபம் உண்டாகும்படி செய்யும் பொருட்டு, வெளிப் பார்வைக்குத் தமது சொந்த நலன்களை மறந்து, சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை மட்டுமே கருதுவோராய் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தமது குற்றச்சாட்டை வகுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இவ்விதம் பிரபுக் குலத்தோர் தமது புதிய எஜமானர்கள் மீது வசை பொழிந்தும், நெருங்கிவரும் பெருங்கேடு குறித்து அச்சம்தரும் ஆரூடங்களை அவர்கள் காதுக்குள் முணுமுணுத்தும் வஞ்சம் தீர்த்துக் கொண்டார்கள்.

இவ்வாறுதான் உதயமாயிற்று பிரபுத்துவ சோஷலிசம்: பாதி புலம்பலாகவும், பாதி வசைப் பாட்டாகவும், பாதி கடந்த காலத்தின் எதிரொலியாகவும், பாதி எதிர் காலத்தைப் பற்றிய மிரட்டலாகவும், சில நேரங்களில் அதன் கசப்பான, கிண்டலான, சுருக்கெனத் தைக்கும்படியான விமர்சனத்தின் மூலம் முதலாளித்துவ வர்க்கத்தின் நெஞ்சின் நடுமையத்துள் தாக்குவதாகவும், ஆனால் தற்கால வரலாற்றின் போக்கைப் புரிந்து கொள்ளும் திறன் கொஞ்சமும் இல்லாததால் எப்போதுமே கோமாளித்தனமான விளைவை உண்டாக்குதவதாகவுமே இருந்தது.

மக்களைத் தம் பக்கத்தில் திரளச் செய்யும் பொருட்டு பிரபுக் குலத்தோர் பாட்டாளியின் பிச்சைத் தட்டினைக் கொடிபோல் தமக்கு முன்னால் உயர்த்திக் காட்டினார். ஆனால் மக்கள்அவர்களோடு சேர்ந்த போதெல்லாம் அவர்களது முதுகுப் புறத்தில் பழைய பிரபுத்துவக் குல இலட்சினைகள் இருக்கக் கண்டார்கள், உடனே மரியாதையின்றி வாய் விட்டுச் சிரித்தவாறு அவர்களிடமிருந்து தூர ஓடினார்கள்.

பிரெஞ்சு மரபுவழி முறை முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டல் முறையிலிருந்து மாறுபட்டிருந்ததைச் சுட்டிக் காட்டும் பிரபுத்துவவாதிகள், முற்றிலும் வேறுவகைப்பட்ட சூழலிலும் நிலைமைகளிலும் தாம் சுரண்டியதையும், இவை தற்போது காலங் கடந்தனவாகிவிட்டதையும் மறந்துவிடுகிறார்கள். தங்களுடைய ஆட்சியில் நவீனப் பாட்டாளி வர்க்கம் இருந்ததில்லை என்பதை எடுத்துரைக்கும் இவர்கள், தங்களுடைய சமூக அமைப்பு தவிர்க்க முடியாதபடி பெற்றெடுத்ததே நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

மற்றபடி இவர்கள் தமது விமர்சனத்தின் பிற்போக்குத் தன்மையை மூடிமறைக்க முயற்சி செய்யவில்லை, இவர்களது விமர்சனத்தில் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டாய்க் கூறப்படுவது என்னவெனில், பழைய சமுதாய அமைப்பு முறையினை வேரோடு வெட்டி வீழ்த்துவதற்கென்றே விதிக்கப்பட்ட ஒரு வர்க்கத்தை இந்த முதலாளித்துவ ஆட்சி வளர்ந்துயரச் செய்கிறது என்பது தான்.

பாட்டாளி வர்க்கத்தை உருவாக்குகிறது என்பதுகூட அவ்வளவாய்க் காரணமல்ல, புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தை அல்லவா உருவாக்கிறது என்று முதலாளித்துவ வர்க்கத்தை இவர்கள் நிந்தனை செய்கிறார்கள்.

ஆகவே இவர்கள் அரசியல் நடைமுறையில் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான எல்லா அடக்குமுறை நடவடிக்கைகளிலும் சேர்ந்து கொள்கின்றார்கள். இவர்களுடைய ஆடம்பரமான வாய்ப்பேச்சுகள் எப்படி இருப்பினும், அன்றாட நடைமுறை வாழ்க்கையில் இவர்கள் தயங்காது குனிற்து, தொழில் துறை மரத்திலிருந்து விழும் பொற்கனிகளைப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறார்கள், ஆட்டு ரோமத்திலும் வள்ளிக் கிழங்கு சர்க்கரையிலும் உருளைக் கிழங்கு சாராயத்திலுமான வாணிபத்தில் கிடைக்கும் ஆதாயத்துக்காக வாய்மையையும் அன்பையும் கண்யத்தையும் விலைக்கு விற்கிறார்கள்.

எப்படிச் சமயகுரு எப்போதுமே நிலப்பிரபுவுடன் கை கோத்துச் செயல்பட்டு வந்திருக்கிறரோ, அதே போல் சமயவாத சோஷலிசமும் பிரபுத்துவ சோஷலிசத்துடன் சேர்ந்து நடைபோட்டு வந்திருக்கிறது.

கிறிஸ்தவத் துறவு மனப்பான்மைக்கு சோஷலிசச் சாயமிட்டுக் காட்டுவதைவிட எளியது எதுவும் இல்லை. தனிச் சொத்தையும் திருமணத்தையும் அரசையும் எதிர்த்துக் கிறிஸ்தவம் கண்டன முழக்கமிடவில்லையா? இவற்றுக்குப் பதில் அது பரோபகாரத்தையும் வறுமையையும், பிரம்மசரியத்தையும் ஊன் ஒடுக்கத்தையும், மடாலய வாழ்க்கையையும் புனித மாதாவாகிய சமயச் சபையையும் போற்றி உபன்யாசம் புரியவில்லையா? பிரபுத்துவக் கோமானுடைய மனப் புகைச்சலைப் புனிதம் பெறச் செய்வதற்காக சமயகுரு தெளித்திடும் புனித தீர்த்தமே கிறிஸ்தவ சோஷலிசம்.

[ஆ] குட்டிமுதலாளித்துவ சோஷலிசம்

முதலாளித்துவ வர்க்கத்தால் நாசத்துக்கு உள்ளாக்கப்பட்டது பிரபுத்துவக் கோமான்களது வர்க்கம் மட்டுமலல; நவீன முதலாளிதுவ சமுதாயத்தின் சூழலில் வாட்டமுற்று நசித்தவை இந்தப் பிரபுத்துவ வர்க்கத்தின் வாழ் நிலைமைகள் மட்டும் அல்ல. மத்திய கால நகரத்தாரும் சிறு விவசாய உடைமையாளர்களும் தான் நவீன முதலாளித்துவ வர்க்கத்தின் முன்னோடிகளாவர். தொழில் துறையிலும் வாணிபத் துறையிலும் சொற்ப அளவே வளர்ச பெற்றுள்ள நாடுகளில் இவ்விரு வர்க்கங்களும் உதித்தெழுந்து வரும் முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கத்தில் செயலிழந்த வரும் முதலாளித்துவ வர்க்கங்களும் உதித்தெழுந்து வரும் முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கத்தில் செயலிழந்து நிலையில் இன்னமும் காலமோட்டிக் கொண்டிருக்கின்றன.

நவீன நாகரிகம் முழு அளவுக்கு வளர்ந்துவிட்ட நாடுகளில் குட்டிமுதலாளித்துவப் பகுதியோராலான ஒரு புதிய வர்க்கம் உருவாகியிருக்கிறது. இவ்வர்க்கம் பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது, முதலாளித்துவ சமுதாயத்தின் வால் பகுதியாய் ஓயாமல் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவ்வர்க்கத்தின் தனிப்பட்ட உறுப்பினர்கள் போட்டியினது செயற்பாட்டால் இடையறாது வீழ்த்தப்பட்டுப் பாட்டாளி வர்க்கத்தினுள் தள்ளப்படுடிகின்றனர். நவீனத் தொழில் துறை வளர்வதைத் தொடர்ந்து நவீன சமுதயத்தில் இவர்கள் சுயேச்சையான ஒரு பிரிவாய் நீடிக்க முடியாமல் அறவே மறைந்து போய், வாணிபத்திலும் தொழிலிலும் விவசாயத்திலும் தம்மிடத்தில் மேலாளர்களும் சம்பள அலுவலர்களும் அமர்த்தப்பட்டுவிடும் காலம் நெருங்கி வருவதைப் பார்க்கின்றனர்.

தேச மக்களில் பாதிக்கு மேற்பட்டோர் விவசாயிகளாய் இருக்கும் பிரான்சு போன்ற நாடுகளில், முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராய்ப் பாட்டாளி வர்க்கத்தை ஆதரித்த எழுத்தாளர்கள், முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான தமது விமர்சனத்தில் விவசாயிகளும் குட்டிமுதலாளித்துவப் பகுதியோருமானவர்களது பார்வையைப் பயன்படுத்த நேர்வதும், இந்த இடைத்தட்டு வர்க்கங்களது நோக்குநிலையிலிருந்து தொழிலாளி வர்க்கத்துக்காக வாதாட முற்படுவதும் இயற்கையே. இவ்வாறுததான் எழுந்தது குட்டிமுதலாளித்துவ சோஷலிசம். பிரான்சில் மட்டுமின்றி தலைமை இங்கிலாந்திலும் இவ்வகையினருக்கு சிஸ்மொண்டீ தலைமை தாங்கினார்.

இவ்வகைப்பட்ட சோஷலிசம் நவீனப் பொருளுற்பத்தி உறவுகளிலுள்ள முரண்பாடுகளைக் கண்டு மிகுந்த மதிநுட்பத்துடன் அவற்றை விவரித்தது. பொருளியலாளர்களுடைய கபடமான நியாயவாதங்களை அது அம்பலப்படுத்திற்று. இயந்திரங்களும் உழைப்புப் பிரிவினையும் உண்டாக்கும் நாசகர விளைவுகயும் மூலதனமும் நிலமும் ஒருசிலரின் கைகளில் குவிவதையும் அமித உற்பத்தியையும் நெருக்கடிகளையும் அது மறுக்கமுடியாத வகையில் நிரூபித்துக் காட்டிற்று. குட்டிமுதலாளித்துவப் பகுதியோருக்கும் விவசாயிகளுக்கும் தவிர்க்க முடியாதவாறு ஏற்படும் அழிவையும், பாட்டாளி வர்க்கத்தின் கொடுந் துன்பத்தையும், பொருளுற்பத்தியில் நிலவும் அராஜகத்தையும், செல்வத்தின் வினியோகத்தில் ஏற்படும் படுமோசமான ஏற்றத்தாழ்வுகயையும், தேசங்களிடையிலான படுநாசத் தொழில் துறைப் போரையும், பழைய ஒழுக்கநெறியும் பழைய குடும்ப உறவுகளும் பழைய தேசிய இனங்களும் குலைந்து செல்வதையும் அது எடுத்துரைத்தது.

ஆயினும் இவ்வகைப்பட்ட சோஷலிசம் அதன் நேர்முகக் குறிக்கோள்களைப் பொறுத்தவரை, பழைய உற்பத்தி, பரிவர்த்தனைச் சானங்களையும் அவற்றுடன் கூடவே பழைய சொத்துடைமை உறவுகளையும் பழைய சமுதாயத்தையும் மீட்டமைக்கவே விரும்புகிறது; அல்லது நவீன உற்பத்தி, பரிவர்த்னைச் சாதனைங்களை அவற்றால் தகர்த்தெறியப் பட்டே ஆக வேண்டிய பழைய சொத்துடைமை உறவுகளின் கட்டுக்கோப்பினுள் இருத்திவைத்து அடைத்திடவே விரும்புகிறது. இவை இரண்டில் எது அதன் விருப்பமாயினும், இவ்வகைப்பட்ட சோஷலிசம் ஒருங்கே பிற்போக்கானதும் கற்பனாவாதத் தன்மையதுமே ஆகும்.

தொழில் அரங்கில் ஒருங்கிணைந்த கைவினைச் சங்கங்கள், விவாசாயத்தில் தந்தைவழிச் சமூக உறவுகள் - இவையே அதன் இறுதி முடிவான முழக்கங்கள்.

முடிவில், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள முயலுவதன் மதமயக்கங்களை எல்லாம் முரட்டுப் பிடிவாதம் கொண்ட வரலாற்று உண்மைகள் சிதறியோடச் செய்ததும், இவ்வகைப்பட்ட சோஷலிசம் பரிதாபத்துக்குரிய மனச் சோர்விலும் வேதனையிலும் மூழ்கி முடிவு எய்துகிறது.

[இ] ஜெர்மானிய, அல்லது "மெய்யான" சோஷலிசம்

பிரெஞ்சு நாட்டு சோஷலிச, கம்யூனிச இலக்கியமானது ஆட்சியதிகாரம் செலுத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் ஒடுக்குமுறையின் பலனாய் உருவாகி எழுந்தது, இந்த ஆட்சியதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின் வெளிப்பாடாய் விளங்கிற்று. ஜெர்மனியில் வரைமுறையற்ற பிரபுத்துவ ஆதிக்கத்தை எதிர்த்து முதலாளித்துவ வர்க்கம் தனது போராட்டத்தை அப்போதுதான் ஆரம்பித்திருந்த ஒரு நேரத்தில் இந்த இலக்கியம் இந்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

ஜெர்மன் தத்துவவியலாளர்களும் அரைவேக்காட்டுத் தத்துவவியலாளர்களும் ஆடம்பர அடுக்குமொழிப் பித்தர்களும் இந்த இலக்கியத்தை ஆவலுடன் கட்டித் தழுவிக் கொண்டனர், ஆனால் பிரெஞ்சு நாட்டிலிருந்து இந்த எழுத்துகள் ஜெர்மனிக்குள் இடம்பெயர்ந்து வந்தபோது பிரெஞ்சு நாட்டுச் சமூக நிலைமைகளும் அவற்றுடன் சேர்ந்து இடம் பெர்ந்து வரவில்லை என்பதை அவர்கள் நினையில் கொண்டார்கள் இல்லை. ஜெர்மனியில் நிலவிய சமூக நிலைமைகளில் இந்த பிரெஞ்சு இலக்கியம் அதன் உடனடி நடைமுறை முக்கியத்துவத்தை அறவே இழந்து முழுக்க முழுழுக்க இலக்கியத் தன்மையதான ஒரு போக்காய்த் திரியலாயிற்று. இவ்விதம், பதினெட்டாம் நூற்றாண்டின் ஜெர்மன் தத்துவவியலாளர்களுக்கு, முதலாவது பிரெஞ்சுப் புரட்சியின் கோரிக்கைகள் பொதுவான "நடைமுறை வழியிலான பகுத்தறிவின்" கோரிக்கைகளேயன்றி வேறல்ல என்றாயின, புரட்சிகர பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தினது சித்தத்தின் வெளிப் பாடானது அவர்களுடைய கண்களுக்குத் தூய சித்தத்தின்- எத்தகையதாய் இருந்தாக வேண்டுமோ அத்தகைய சித்தத்தின், பொதுப்படையான உண்மை மனித சித்தத்தின்- விதிகளைக் குறிப்பனவாயின.

ஜெர்மன் இலக்கிய விற்பன்னர்களது பணி, புதிய பிரெஞ்சுக் கருத்துகளைத் தமது கண்டைத் தத்துவவியல் மனச் சான்றுக்கு இசைவாய் வகுத்திடுவதில், அல்லது இன்னும் கறாராய்ச் சொல்தெனில் தமது சொந்தத் தத்துவவியல் கண்ணோட்டத்தைத் துறந்துவிடாமல் பிரெஞ்சுக் கருத்துகளைக் கிரகித்துக் கொள்வதில் அடங்கிவிடுவதாகியது.

இந்தக் கிரகிப்பு அயல் மொழி ஒன்று எப்படி கிரகிக்கப்படுகிறதோ அதே வழியில், அதாவது மொழியெர்ப்பு மூலமாய் நடந்தேறியது.

பண்டைக் காலப் புறச்சமயத்தாரின் முதுபெரும் இலக்கியங்கள் தீட்டப் பெற்றிருந்த எழுத்துச் சுவடிகளில் மேல் மடாலயத் துறவிகள் கத்தோலிக்கப் புனிதர்களது வாழ்க்கை வரலாறு பற்றிய அசட்டுக் குறிப்புகளை எழுதி வைத்ததை நாம் நன்கறிவோம். இதே செயல் முறையைத்தான் ஜெர்மன் இலக்கியத் துறையினர் அனாசார பிரெஞ்சு இலக்கியம் சம்பந்தமாய் நேர் எதிர்த் திசையில் செய்து முடித்தார்கள். பிரெஞ்சு மூலத்துக்கு அடியில் அவர்கள் தமது தத்துவவியல் அபத்த்தை எழுதினால்கள். எடுத்துக்காட்டாய், பணத்தின் பொருளாதாரச் செயற்பாடுகளைப் பற்றிய பிரெஞ்சு விமர்சனத்துக்கு அடியில் அவர்கள் "மனிதத்தன்மை அன்னியமாதல்" என்று எழுதினார்கள், முதலாளித்துவ அரசு பற்றிய பிரெஞ்சு விமர்சனத்துக்கு அடியில் "பொதுமை எனும் கருத்தினம் அரியாசனத்திலிருந்து அகற்றப்படுதல்" என்றும், இன்ன பலவாறாகவும் எழுதினார்கள்.

பிரெஞ்சு வரலாற்றியல் விமர்சனங்களுக்கு அடியில் இப்படி இந்தத் தத்துவவியல் பதங்களைப் புகுத்துவதற்குத்தான் அவர்கள் "செய்ல துஐற தத்துவவியல்", "மெய்யான சோஷலிசம்", "ஜெர்மன் சோஷலிச விஞ்ஞானம்", "சோஷலிசத்தின் தத்துவவியல் அடிப்படை" என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொண்டனர்.

பிரெஞ்சு சோஷலிஸ்டு, கம்யூனிஸ்டு இலக்கியம் இவ்வாறு அறவே ஆண்மையிழக்க நேர்ந்தது. ஜெர்மானியரின்கைக்கு வந்ததும் இப்படி அது ஒரு வர்க்கம் பிறிதொன்றை எதிர்த்து நடத்தும் போராட்டத்தின் வெளிப்பாடாய் இருக்கும் தன்மையை இழந்துவிட்டதால், அவர் "பிரெஞ்சுக்காரருடைய ஒருசாரார்பினைக்" கடந்துமுன்செல்கிறோமென நினைத்துக் கொண்டார், உண்மையான தேவைகளுக்குப் பதிலாய் உண்மையின் தேவைகளை, பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்குப் பதிலாய் மனிதசாரத்தன்மையின் நலன்களை, எந்த வர்க்கத்தையும் சேராமல், எதார்த்தத்தில் இல்லாமல், தத்தவவியல் கற்பனையின் பனிமூட்டத்தில் மட்டும் இருக்கக் கூடிய பொதுப்படையான மனிதனின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறோமென எண்ணிக் கொண்டார்.

இந்த ஜெர்மன் சோஷலிசம், பள்ளிக்கூட மாணவனது பாடத்துக்கு ஒப்பானதை அத்தனை மகத்தான காரியமாய்க் கொண்டு தனது அவலச் சரக்கை அவ்வளவு பிரமாதமாய் விளம்பரப்படுத்தி வந்த அது, பகட்டுப் புலமை வாய்ந்த தனது அப்பாவித்தனத்தை படிப்படியாய் இழக்க வேண்டியதாயிற்று.

பிரபுத்துவக் கோமான்களையும் வரம்பில்லா முயாட்சியையும் எதிர்த்து ஜெர்மன் முதலாளித்துவ வர்க்கமும், குறிப்பாய் பிரஷ்ய முதலாளித்துவ வர்க்கமும் நடத்திய போராட்டம், அதாவது மிதவாத இயக்கம் சூடு பிடித்து மும்முரமாயிற்று.

இதன் மூலம் "மெய்யான" ஜெர்மன் சோஷலிசத்துக்கு நெடுநாளாய் அது விருமிபிக் காத்திருந்த வாய்ப்பு கிட்டிற்று, அரசியல் இயக்கத்துக்கு எதிராக சோஷலிஸ்டுக் கோரிக்கைகளை எழுப்புவதற்கும், மிதவாதத்துfகு எதிராகவும், பிரதிநிதித்துவ அரசாங்கத்துக்கு எதிராவும், முதலாளித்துவப் போட்டிக்கும் முதலாளித்துவப் பத்திரிகை சுதந்திரத்துக்கும் முதலாளித்துவ சட்ட நெறிக்கும் முதலாளித்துவச் சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிராகவும் வழக்கமான சாபங்களைப் பொழிவதற்கும் அதற்கு வாய்ப்பு கிட்டிற்று. மக்கள் திரளினர்இந்த முதலாளித்துவ இயக்கத்தின மூலம் யாவற்றையும் இழக்க வேண்டியிருக்குமே தவிர எந்த ஆதாயமும் பெற முடியாது என்று அவர்களுக்கு உபதேசிப்பதற்கு வாய்ப்பு கிட்டிற்று. ஆனால் சரியான தருணத்தில் ஜெர்மன் சோஷலிசத்துக்கு மறதி ஏற்பட்டுவிட்டது. அது எதனுடைய அசட்டு எதிரொரியாய் இருந்ததோ, அந்தப் பிரெஞ்சு விமர்சனமானது நவீன முதலாளித்துவ சமுதாயம் அதற்குரிய பொருளாதார வாழ் நிலைமைகளோடும் அதற்கு ஏற்றதாகிய அரசியல் அமைப்போடும் ஏற்கனவே நிலவுவதையே, அதாவது ஜெர்மனியில் நடைபெறவிருந்த போராட்டம் எதைச் சாதிக்க நினைத்ததோ அது ஏற்கனவே நிலவுவதையே தனது அடிப்படை முற்கோளாய்க் கொண்டிருந்தது என்பது குறித்து மறதி ஏற்பட்டுவிட்டது.

எதேச்சாதிகார அரசாங்கங்களுக்கும் அவற்றின் பாதிரிமார்களுக்கும் பேராசியர்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும்
அதிகாரிகளுக்கும், தம்மை அச்சுறுத்திய முதலாளித்துவ வர்க்கத்திடம் காட்டி மிரட்டுவதற்கு ஏற்ற கிலியூட்டும் பொம்மையாய் இந்த ஜெர்மன் சோஷலிசம்பயன்பட்டது.

இதே அரசாங்கங்கள் சரியாய் இதே காலத்தில் ஜெர்மன் தொழிலாளி வர்க்க எழுச்சிகளை அடக்குவதற்காக உபயோகித்த கசப்பு மருந்துகளாகிய கசையடிகளுக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் பிற்பாடு இந்த ஜெர்மன் பிலிஸ்தியர்களது நலத்தின் நேரடிப் பிரதிநிதியாகவும் விளங்கிற்று. ஜெர்மனியில் குட்டிமுதலாளித்துவ வர்க்கமானது, பதினாறாம் நூற்றாண்டின் மிச்சச் கூறுகளாய் அமைந்து, அது முதலாய்ப் பல்வேறு வடிவங்களில் இடைவிடாமல் தலைகாட்டி வருகிறது, தற்போதுள்ள நிலைவரங்களுக்கு தலைகாட்டி வருகிறது, தற்போதுள்ள நிலைவரங்களுக்கு இந்த வர்க்கம் தான் மெய்யான சமூக அடித்தளமாய் இருக்கிறது.

இந்த வர்க்கம் அழியாது நீடித்த வேண்டுமாயின் ஜெர்மனியின் தற்போதைய நிலைவரங்கள் அப்படியே நீடித்தாக வேண்டும். முதலாளித்துவ வர்க்கம் தொழில் துறையிலும் அரசியலும் செலுத்தும் மேலாண்மையானது இந்தவர்க்கம் நிச்சயமாய் அழிந்து போகும்படியான அபாயத்தை உண்டாக்குகிறது - ஒரு புறத்தில் மூலதனம் ஒருசிலரிடம் குவிவதன் மூலமும், மறுபுறத்தில் அதற்கு இந்த அபாயம் ஏற்படுகிறது. "மெய்யான" சோஷலிசம் ஒரே கல்லால் இந்த இரண்டையும் அடித்து வீழ்த்தக் கூடியதாய்த் தோன்றிற்று. உடனே கொள்ளை நோய் போல் அது பல்கிப்பரவிற்று.

கற்பிதச் சிலந்தி வலை அங்கி, சொல்லோவியப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது, பிணி கொண்ட பசப்புணர்ச்சிக் கண்ணீரில் தோய்ந்தது - அறிவெல்லைக்கு அப்பாற்பட்ட இந்த அங்கியால் தான ஜெர்மன் சோஷலிஸ்டுகள் எலும்பும் தோலுமாய் அவல உருக் கொண்ட தமது "நிரந்தர உண்மைகளை" மூடிப் போர்த்தியிருந்தனர். இந்த அங்கி அவர்களது சரக்குகளின் விற்பனையை இம்மாதிரியான குட்டிமுதலாளித்துவக் கூறுகளிடத்தே ஏகமாய் பெருகச் செய்வதற்கு உதவியாய் இருந்தது.

ஜெர்மன் சோஷலிசத்தைப் பொறுத்தவரை அது குட்டி முதலாளித்துவ பிலிஸ்தியர்களது படாடோபமான பிரதிநிதியாய் விளங்குவதே தனக்குரிய பணி என்பதை மேலும் மேலும் நன்றாகவே உணர்ந்து கொண்டது.

ஜெர்மன் தேசமே முன்மாதிரியான தேசம், ஜெர்மனியின் பிலிஸ்திய அற்பனே முன்னுதாரணமான மனிதன் என்பதாய் அது பறைசாற்றிற்று. இந்த முன்னுதாரண மனிதனின் இழிகுணம் ஒவ்வொன்றுக்கும் அதன் உண்மைப் பண்புக்கு நேர்விரோதமாய், மறைபொருளான மகோன்னத சோஷலிசத் தன்மையதான விளக்கம் தந்தது. கடைகோடி நிலைக்குச் செல்ல வேண்டுமென்று அது கம்யூனிசத்தின் "முரட்டுத் தனமான நாசப்" போக்கை நேர்நின்று எதிர்த்தது, எல்லா வர்க்கப் போராட்டங்களையும் வெறுத்து ஒதுக்கி யாவற்றுக்கும் மேம்பட்டதான வாரபட்சமற்ற தனது உன்னத நிலையைப் பிரகடனம் செய்தது. சோஷலிஸ்டு, கம்மயூனிஸ்டு வெளியீடுகள் என்பதாய்க் கூறிக் கொண்டு தற்போது [1847] ஜெர்மனியில் வினியோகமாகி வருபவை யாவும் - விதிவிலக்காய்ஒருசிலவற்றை தவிர்த்து - அறவே வலுவிழக்கச் செய்யும் இந்தக் கேடுகெட்ட இலக்கிய வகையினைச் சேர்ந்தவையே.

2. பழமைவாத, அல்லது முதலாளித்துவ சோஷலிசம்

முதலாளித்துவ வர்க்கத்தில் ஒரு பகுதி, முதலாளித்துவ சமுதாயம் தொடர்ந்து நிலவும்படி உறுதி செய்து கொள்ளும் பொருட்டு சமூகக் குறைபாடுகளை அகற்ற விரும்புகிறா.

இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே பொருளியலாளர்களும், கொடைவள்ளல்களும், மனிதாபிமானிகளும், உழைப்பாளி மக்களுடைய நிலைமையை மேம்படுத்துவோரும், தருமப் பணித் துறையாளரும், ஜீவகாருண்ய சங்கத்தாரும், மதுக் குறைப்பு வீரர்களும், எல்லா விதமான துக்கடாச் சீர்திருத்தக்கார்களும். இந்த முதலாளித்துவ சோஷலிசம் முழுநிறைத் தத்துவ அமைப்புகளாகவே உருவாக்கப் பட்டிருகின்றன.

புரூதோனின் "வறுமையின் தத்துவம்" என்ற புத்தகத்தை இவ்வகை சோஷலிசத்துக்கு ஓர் உதாரணமாய்க் குறிப்பிடலாம்.

சோஷலிச நாட்டங் கொண்ட முதலாளிமார்கள் நவீன சமூக நிலைமைகளின் எல்லா உனுகூலங்களும் வேண்டும், ஆனால் இந்நிலைமைகளின் தவிர்க்க முடியாத விளைவுகளாகிய போராட்டங்களும் அபாயங்களும் இருfகக் கூடாது என்று ஆசைப்படுகிறார்கள். தற்போதுள்ள சமூக முறையை அப்படியே வைத்துக் கொண்டு அதன் புரட்சிகரக் கூறுகளையும் சிதைவுக் கூறுகளையும் மட்டும் நீக்க வேண்டுமென்பதே இவர்களது விருப்பம். பாட்டாளி வர்க்கம் இல்லாமல் முதலாளித்துவ வர்க்கம் மட்டும் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். முதலாளித்துவ வர்க்கம்தான் அதிபதியாய் அமைந்திருக்கும் உலகே யாவற்றிலும் சிறந்ததென இயல்பாகவே கருதுகின்றது. இந்த வசதியான கருத்தை முதலாளித்துவ சோஷலிசம் அதிகமாகவோ குறைவாகவோ நிறைவு பெற்ற தத்துவ அமைப்பாய் வளர்த்திடுகிறது. இம்மாதிரியான அமைப்பைப் பாட்டாளி வர்க்கம் செயல்படுத்தி இவ்வழியில் நேரே ஒரு புதிய சமூக ஜெரூசலத்தை நோக்கி நடைபோட வேண்டுமென கோருவதன் மூலம் உண்மையில் அது கேட்பது என்னவெனில், பாட்டாளி வர்க்கம் தற்போதுள்ள சமுதாயத்தின் வரம்புகளுக்கு உட்பட்டதாய்த் தொடர்ந்து இருந்து கொண்டு, அதேபோது முதலாளித்துவ வர்க்த்தைப் பற்றி அதற்குள்ள வெறுக்கத்தக்க கருத்துகளை எல்லாம் விட்டொழித்துவிட வேண்டும் என்பதும்தான்.

இவ்வகை சோஷலிசத்தின் இன்னொரு வடிவம் குறைவாகவே முறைப்படுத்தப்பட்டது, ஆனால் அதிகமாய் நடைமுறைத் தன்மை வாய்ந்தது. தொழிலாளி வர்க்கத்துக்கு அனுகூலமாய்இருக்கக் கூடியது பொருளாயத வாழ் நிலைமைகளில், பொருளாதார உறவுகளில் ஏற்படும் மாறுதல் மட்டுமேதான், வெறும் அரசியல் சீர்திருத்த்தால் பயன் ஏதுமில்லை என்று எடுத்துரைப்பதன் மூலம், தொழிலாளி வர்க்கத்தின் கண்களில் எவ்விதமான புரட்சி இயக்கமும் மதிப்பிழந்துவிடும்படிச் செய்ய முயன்றது இது. ஆனால் பொருளாயத வாழ் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதன் மூலம் இவ்வகைப்பட்ட சோஷலிசம் எவ்வகையிலும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளின் ஒழிப்பை, புரட்சியால் மட்டுமே சாதிக்கப்படக் கூடிய ஈந்த ஒழிப்பைக் குறிக்கவில்லை, நிர்வாகச் சீர்திருத்தங்களையே குறிக்கிறது. இந்த நிர்வாகச் சீர்திருத்தங்கள் முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகள் தொடர்ந்து நீடிப்பதை அடிப்படையாய்க் கொண்டவை, ஆகவே மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான உறவுகளை எவ்விதத்திலும் பாதிக்காதவை, அரசாங்கத்தின் செலவுகளைக் குறைப்பதற்கும் நிர்வாகப் பணியை எளிமையாக்குவதற்கும் மேல் அதிகமாய் ஒன்றும் செய்ய முடியாதவை.

முதலாளித்துவ சோஷலிசம் வெறும் சொல் அலங்காரமாகும் போது மட்டுமே அது தன்னைச் சரியானபடி வெளிப்படுத்திக் கொள்கிறது.

தடையில்லா வாணிபம், தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக. காப்புச் சுங்க வரிகள், தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக. சிறைச் சீர்திருத்தம், தொழிலாளி வர்க்க நலனுக்காக, இதுதான் முதலாளித்துவ சோஷலிசத்தன் இறுதிநிலையைக் குறிக்கும் சொல், விளையாட்டாய் அமையாத ஒரே சொல்.

3. விமர்சன - கற்பனாவாத சோஷலிசமும் கம்யூனிசமும்

பாபெஃபின் எழுத்துகளையும் ஏனையோரது எழுத்துகளையும் போல் நவீன காலத்தின் மாபெரும் புரட்சி ஒவ்வொன்றிலும் பாட்டாளி வர்க்கக் கோரிக்கைகளின் குரலாய் எப்போதும் ஒலித்திருக்கும் இலக்கியத்தை இங்கு நாம் குறிப்பிடவில்லை.

பிரபுத்துவச் சமுதாயம் வீழ்த்தப்படுகையில் எங்கும் ஒரே பரபரப்பு மிகுந்திருந்த காலங்களில் பாட்டாளி வர்க்கம் தனது சொந்த நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வதற்காக முதன்முதலாய் நேரடியாய்மேற்கொண்ட முயற்சிகள் தவிர்க்க முடியாதபடி தோல்வியுற வேண்டியதாயிற்று, ஏனெனில், பாட்டாளி வர்க்கம் அப்போது வளர்ச்சியுறாத நிலையிலே இருந்தது என்பதுடன், அது விடுதலை பெறுவதற்குத் தேவையான பொருளாதார நிலைமைகள் இன்னமும் தோன்றியாகவில்லை. இந்த நிலைமைகள் பிற்பாடுதான் தோன்றியாகவில்லை. இந்த நிலைமைகள் பிற்பாடுதான் தோள்றுவிக்கப்பட விருந்தன, வரவிருந்த முதலாளித்துவச் சகாப்தத்தால் மட்டுமே இந்த நிலைமைகள் தோற்றுவிக்கப் படக்கூடியவை. பாட்டாளி வர்க்கத்தின் இந்த ஆரம்பத் கால இயக்கங்களின் உடன் பிறப்பாய் எழுந்த புரட்சி இலக்கியமானது தவிர்க்க முடியாதவாறு ஒருவித பிற்போக்குத் தன்மை கொண்டதாகவே இருந்தது. அனைவரும் துறவி மனப்பாங்கு கொள்ள வேண்டுமென்றும், கொச்சையான முரட்டு வழியில் சமுதாயம் சமனமாக்கப்பட வேண்டுமென்றும் அது போதித்தது.

சரியானபடி சோஷலிச, கம்யூனிச கருத்தமைப்புகள் என்பதாய்க் கூறத்தக்கவை, செயின்ட்-சிமோனும் ஃபூரியேயும் ஓவனும் ஏனையோரும் எடுத்துரைத்த இவை, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டத்தின் மேலே விவரிக்கப்பட்ட வளர்ச்சியறாத ஆரம்பக்காலக்கூறில் உருவாகி எழுந்தவையே [பிரிவ I, "முதலாளிகளும் பாட்டாளிகளும்" என்பதைப் பார்க்கவும்]

இந்த அமைப்புகளின் மூலவர்கள் அன்றைய சமுதாயத்தினுள் இருக்கும் வர்க்கப் பகைமைகளையும் சிதைவு உண்டாக்கும் கூறுகளின் செயலையும் கண்ணுறுவத மெய்தான். ஆனால் இன்னமும் பிள்ளைப் பருவத்திலேயே இருந்த பாட்டாளி வர்க்கம் வரலாறு படைக்கும் முன்முயற்கியோ, சுயேச்சையான அரசியல் இயக்கப்பாடோ சிறிதும் இல்லாத ஒரு வர்க்கமாகவே அவர்களுக்குத் தோற்றமளிக்கிறது.

வர்க்கப் பமைகையின் வளர்ச்சியானது தொழில் வளர்ச்சியுடன் சேர்ந்து அதே வேகத்தில் நடைபபோடுவதால், அவர்கள் கண்ணுறும் பொருளாதாரச் சூழ்நிலை பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு வேண்டிய பொருளாயத நிலைமைகளை இன்னும் அவர்களுக்குத் தெரியும்படி வெளிப்படுத்தவில்லை. ஆகவே அவர்கள் இந்த நிலைமைகளைத் தோற்றுவிக்கக் கூடிய ஒரு புதிய சமூக விஞ்ஞானத்தை, புதிய சமூக விதிகளை தேடிச் செல்கிறார்கள்.

வரலாற்று வழிப்பட்ட செயல் சொந்த முறையிலான அவர்களது கண்டுபிடிப்புச் செயலுக்கும், விடுதலைக்காக வரலாற்று வழியில் உருவான நிலைமைகள் கற்பனை முறையில் வகுப்பட்ட நிலைமைகளுக்கும், பாட்டாளி வர்க்கத்தின் படிப்படியான, தன்னியல்பான வர்க்க ஒழுங்கமைப்பு இந்தக் கண்டுபிடிப்பாளர்கள் இதற்கென புனைந்தளிக்கும் சமூக ஒழுங்கமைப்புக்கும் அடியணிய வேண்டும்என்றாகியது. இவர்களது கண்களுக்கு, இவர்களுடைய சமூகத் திட்டங்களுக்கான பிரசாரமும், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான பிரசாரமும், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைப் பணியும்தான் வருங்கால வரலாறு என்றாகிவிடுகிறது.

ஏனையவற்றைவிட மிக அதிகமாய்த் துன்புறும் வர்க்கமாய் இருக்கும் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களில் தான் தாலையா கருத்து செலுத்த வேண்டும் என்ற உணர்வோடு இவர்கள் தமது திட்டங்களை வகுத்தமைக்கிறார்கள். இவர்களுக்குப் பாட்டாளி வர்க்கம் என்பதாய் ஒன்று இருக்கிறதெனில், அது மிக அதிகமாய்த் துன்புறும் வர்க்கம் என்ற வகையில் மடடும்தான்.

வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி பெறாத நிலையும், அதோடு சோஷலிஸ்டுகளுடைய சுற்றுச்சாப்புகளும் இவர்களை வர்க்கப் பகைமைகள் யாவற்றுக்கும் தாம் மிகவும் மேலானோராய் இருப்பதாய்க் கருதிக் கொள்ளச் செய்கின்றன. இவர்கள் சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் நிலையையும், மிகவும் சலுகை படைத்தவர்களின் நிலையையுங்கூட மேம்படுத்த விரும்புகிறார்கள். ஆகவே வழக்கமாய் இவர்கள் வர்க்க பேதம் கருதாமலே, ஒட்டுமொத்தமாய் சமுதாயம் முழுமைக்கும் வேண்டுகோள் விடுக்கிறார்கள், அது மட்டுமின்றி, எல்லோருfகும் முதலாய் ஆளும் வர்க்கத்துக்கே வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் எடுத்துரைக்கும் அமைப்பினைப் புரிந்து கொள்ளும் எவரும் சமுதாயத்தின் சாத்தியமான மிகச் சிறந்த நிலைக்குரிய சாத்தியமான மிகச் சிறந்த திட்டமாகும் இந்த அமைப்பு என்பதைக் காணத் தவறவும் முடியுமோ?

எனவே இவர்கள் எல்லா அரசியல் செயற்பாட்டையும், முக்கியமாய் எல்லாப் புரட்சிகரச் செயற்பாட்டையும் நிராக்கிறார்கள். சமாதான வழிகளில் இவர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறார்கள், அற்பமான சோதனைகள் மூலமும் - நிச்சயம் தோல்வியுறவே செய்யும் என்னும்படியான இவற்றின் மூலமும் - முன்னுதாரணத்தின் சக்தி மூலமும் இவர்கள் இந்தப் புதிய சமூக ஷேவதத்துக்குப் பாதையைச் செப்பனிட முயலுகிறார்கள்.

வருங்கால சமுதாயத்தைப் பற்றிய இப்படிப்பட்ட கற்பனைச் சித்திரங்கள், பாட்டாளி வர்க்கம் இன்னமும் வளர்ச்சி பெறாததாய் இருந்து கொண்டு தனக்குரிய நிலை குறித்து கற்பனைப் புனைவான கருத்தோட்டத்தையே பெற்றிருக்கும் ஒருகாலத்தில் தீட்டப் பெற்ற இந்தச் சித்திரங்கள், பொதுவாய் சமுதாயத்தைத் திருத்தியமைக்க வேண்டுமென்று அந்த வர்க்கத்துக்கு உள்ளுணர்வாய் எழும் அந்த ஆரம்பக் கால ஆர்வங்களுக்கு ஏற்பவே அமைந்திருக்கின்றன.

ஆனால் இந்த சோஷஸ்டு, கம்யூனிஸ்டு வெளியீடுகளில் விமர்சனக் கூறும் ஒன்று அடங்கியிருக்கிறது. நடப்பிலுள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு அடிப்படை ஏற்பாட்டையும் இந்த வெளியீடுகள் தாக்குகின்றன. ஆகவே தொழிலாளி வர்க்கம் அறிவொளி பெறுவதற்கு அவற்றில் மதிப்பிடற்கரிய விவரப் பொருள்கள் நிறைந்திருக்கின்றன. ஆகவே தொழிலாளி வர்க்கம் அறிவொளி பெறுவதற்கு அவற்றில் மதிப்பிடற்கதரிய விவரப் பொருள்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் முன்மொழியப்பட்டிருக்கும் நடைமுறைத் திட்டங்கள் யாவும் - நகரத்துக்கும் கிராமப்புறத்துக்குமுள்ள பாகுபாட்டையும், குடும்ப அமைப்பையும், தனியாட்களின் நலனுக்காகத் தொழில்கள் நடத்தப்படுவதையும், கூலியுழைப்பு முறையையும் ஒழித்தல், சமுதாயத்தின் ஒருங்கிசைவைப் பிரபடனம் செய்தல், அரசின் செயற்பாடுகளைப் பொருளுற்பத்தியை மேற்பார்வையிடுதலாய் மட்டும் மாற்றிடுதல் ஆகிய இத்தகைய திட்டங்கள் யாவும் - வர்க்கப் பகைமைகள் மறைந்து போவதை மட்டும் குறிப்பானவாய் இருக்கின்றன. இந்த வர்க்கப் பகைமைகள் அக்காலத்தில் அப்போதுதான் தலை தூக்கிக் கொண்டிருந்தன, இவற்றின் ஆரம்பக்க காலத்துக்குரிய தெளிவற்ற, வரையறை செய்யப்படாத வடிவங்களில் மட்டுமே இந்த வெளியீடுகள் இவற்றைக் குறிப்பிடுகின்றன. எனவே இந்த முன்மொழிவுகள் முற்றிலும் கற்பனாவாதத் தன்மையனவாகவே இருக்கின்றன.

விமர்சன - கற்பனாவாத சோஷலிசம், கம்யூனிசம் ஆகியவற்றின் முக்கியத்துவம் வரலாற்று வளர்ச்சியுடன் எதிர் விகிதச் சார்புறவு கொண்டதாகும். நவீன கால வர்க்கப் போராட்டம் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று திட்டவட்டமான உருவம் பெறுகிறதோ, போராட்டத்திலிருந்து கற்பிதமாய விலகி நிற்பதும், கற்பிதமாய் அதனைத் தாக்குவதும்அந்த அளவுக்கு நடைமுறை மதிப்பையும் தத்துவார்த்த நியாயத்தையும் முற்றும் இழந்துவிடுகின்றன. ஆகவே இந்த அமைப்புகளின் மூலவர்கள் பல விதத்திலும் புரட்சிகரமானோராய் இருந்திருப்பினுங்கூட, இவர்களது சீடர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெறும் பிற்போக்குக் குறுங் குழுக்களாகவே அமைந்திருக்கிறார்கள். பாட்டாளி வர்க்கத்தின் முற்போக்கான வரலாற்று வழி வளர்ச்சிக்கு எதிராய், அவர்தகள் தமது ஆசிரியர்களுடைய மூலக் கருத்துகளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் வர்ககப் போராட்டத்தை மழுக்கடிக்கவும் வர்க்கப் பகைமைகளுக்கு இணக்கம் காணவும் முயலுகின்றனர். அதுவும் முரணின்றி முறையாய் முயலுகின்றனர். தமது கற்பனாவாத சமூகத் திட்டங்களைச் சோதனை முயற்சிகள் மூலம் சித்திபெறச் செய்யலாமென்று, தனிப்பட்ட சில "பலான்ஸ்டேர்களையும்," "உள்நாட்டுக் குடியேற்றங்களையும்", "சிறுஐகேரியாவையும்"- புதிய ஜெரூசலத்தின் இந்தக் குட்டிப் பதிப்புகளை - அமைத்திடலாமென்று இன்னமும் கனவு காண்கிறார்கள். இந்த ஆகாயக் கோட்டைகளை எல்லாம் சித்திபெறச் செய்வதற்காக இவர்களது முதலாளிமார்கள்து பரிவு உணர்ச்சியையும் பணத்தையும் எதிர்பார்த்து வேண்டுகோள் விடுக்கும்படியான நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. படிப்படியாய் இவர்கள் மேலே விவரிக்கப்பட்ட பிற்போக்குப் பழமைவாத சோஷலிஸ்டுகளது பிரிவுக்குத் தாழ்ந்து விடுகிறார்கள். இவர்களது பகட்டுப் புலமை அதிகமாய் முறைப்படுத்தப்பட்டதாய் இருக்கிறது என்பதும், இவர்கள் தமது சமூக விஞ்ஞானத்தின் அதிசய சக்தியில் வெறித்தனமான மூடநம்பிக்கை கொண்டவர்கள் என்பதும்தான் மேலே விவரிக்கப்பட்டோருக்கும் இவர்களுக்குமுள்ள ஒரே வித்தியாசம்.

எனவே இவர்கள் தொழிலாளி வர்க்கம் மேற்கொள்ளும் எந்த அரசியல் நடவடிக்கையையும் கடுமையாய் எதிர்க்கின்றனர். புதிய வேதத்தில் குருட்டுத்தனமாய்க் கொண்டுள்ள அவநம்பிக்கையின் விளைவாகவே இம்மாதிரியான நடவடிக்கை எழுகிறதெனக் கருதுகின்றனர்.

இங்கிலாந்தில் ஓவனியர்களும் பிரான்சில் ஃபூரியேயர்களும் முறையே சார்ட்டிஸ்டிகளையும் La Reforme ஆதரவாளர்களையும் எதிர்க்கின்றனர்.

No comments:

Post a Comment