தேசிய இனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள் - லெனின்
1. நம்முடைய செயல்திட்டத்தின் பாரா (தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையைப் பற்றி) அரசியல் சுயநிரிணய உரிமையைத் தவிர, அதாவது பிரிந்து சென்று தனியான அரசை அமைத்துக் கொள்கின்ற உரிமையைத் தவிர வேறு எந்த அர்த்தத்தையும் கொண்டிருப்பதாக விளக்க முடியாது.
2. சமூக - ஜனநாயகச் செயல்திட்டத்திலுள்ள இந்த ஷரத்து சமூக - ஜனநாயக ருஷ்யாவுக்கு முற்றிலும் அவசியமாகும்-
(அ) பொதுவாக ஜனநாகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்னிட்டு;
(ஆ) ருஷ்யாவின் எல்லைகளுக்குள் - இன்னும் முக்கியமானது என்னவென்றால் ருஷ்யாவின் எல்லைப் பிரதேசங்களில் - தீவிரமான தனித்தன்மையான பொருளாதார, சமூக மற்றும் இதர நிலைமைகளையும் கொண்ட பல தேசிய இனங்கள் இருப்பதால், மேலும் இந்தத் தேசிய இனங்கள் (மகா ருஷ்யர்களைத் தவிர ருஷ்யாவிலுள்ள எல்லா இனங்களையும் போல) ஜாரிஸ்ட் முடியாட்சியால் நம்பக் கூட முடியாத அளவுக்கு ஒடுக்கப்பட்டிருப்பதால்;
(இ) கடைசியாக, கிழக்கு ஐரோப்பா (ஆஸ்திரியா மற்றும் பால்கன் பிரதேசம்) மற்றும் ஆசியா முழுவதிலும் - அதாவது, ருஷ்யாவை ஒட்டியுள்ள நாடுகளில் - உலகத்தின் மற்ற எல்லா நாடுகளிலும் இது வெவ்வேறு அளவுகளில், சுதந்திரமான தேசிய அரசுகள் அல்லது மிக அதிகமான அளவுக்கு நெருக்கமான, இடை உறவுகளுள்ள தேசியக் கலவையைக் கொண்ட அரசுகள் ஏற்பட வழி வகுத்திருக்கிறது - இன்னும் முடிவடையவில்லை அல்லது இப்பொழுதுதான் தொடங்கியிருக்கிறது என்ற உண்மையின் காரணமா;
(ஈ) ருஷ்யாவை ஒட்டியிருக்கும் வேறு எந்த நாட்டையும் காட்டிலும் - மேற்கில் ஆஸ்திரியாவிலிருந்து (இந்த நாட்டில் அரசியல் சுதந்திரத்தின் அடிப்டைகளும் அரசியலமைப்புச் சட்ட ஆட்சிமுறையும் 1867 முதல் உறுதியாக்கப்பட்டு விட்டன, வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை தற்பொழுது அமுலாக்கப்பட்டு விட்டது) தொடங்கி கிழக்கில் குடிறரசுச் சீனா முடிய - இந்தத் தருணத்தில் ருஷ்யாவின் அரசு முறை அதிகம் பின்தங்கியுள்ளதாகவும் பிற்போக்கானதாகவும் இருக்கிறது. எனவே எல்லா தேசிய இனங்களும் தனியான அரசுகளை அமைத்துக் கொள்வதற்கும் அல்லது தாங்கள் சேர விரும்புகின்ற அரசைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும் உள்ள உரிமையை ருஷ்யாவின் சமூக - ஜனநாயகவாதிகள் தங்களுடைய பிரச்சாரம் அனைத்திலும் வற்புறுத்த வேண்டும்.
3. சமூக - ஜனநாகக் கட்சி எல்லா தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை அங்கீகர்ப்பதென்றால் சமூக - ஜனநாகவாதிகக் பின்வருவனவற்றை நிறைவேற்ற வேண்டும்:
(அ) ஆதிக்கம் செலுத்துகின்ற தேசிய இனம் (அல்லது மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள தேசிய இனம்) அரசு ரீதியாகப் பிரிந்து செல்ல விரும்புகின்ற தேசிய இனத்தின் மீது எந்த வடிவத்திலாவது பலாத்காரத்தைப் பிரயோகிப்பதை நிபந்தனையற்ற விதத்தில் எதிர்க்க வேண்டும்;
(ஆ) பிரிந்து செல்வதைப் பற்றிய இந்தப் பிரச்சினை அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்தின் மக்கள் தொகையினர் எல்லோரும் நேரடியான, சமமான மதிப்பைக் கொண்ட வாக்குகளின் முலம் இரகசிய வாக்கெடுப்பு முறையில் தங்கள் கருத்தைத் தெரிவிப்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்க்குமாறு கோர வேண்டும்;
(இ) கறுப்பு நூற்றுவர் - அக்டோபரிஸ்டு மற்றும் மிதவாத - முதலாளித்துவ ("முன்னேற்றவாதிகள்", காடேட்டுகள்) கட்சிகள் இரண்டுமே பொதுவாக தேசிய ஒடுக்கு முறையை அல்லது குறிப்பாக தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதை ஆதரிக்கின்ற அல்லது அனுமதிக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவைகளுக்கு எதிராக உறுதியான போராட்டத்தை நடத்த வேண்டும்.
4. சமுக - ஜனநாகவாதிகள் எல்லா தேசிய இனங்களின் சுயநிரிணய உரிமைக்கு அங்கீகாரமளிப்பதால் ஒவ்வொரு தனியான உதாரணத்திலும் அந்தத் தேசிய இனத்தின் அரசுப் பிரிவினை அவசியமானதுதானா என்பதை சுயேச்சையாக மதிப்பிடுவரை சமூக - ஜனநாயகவாதிகள் நிராகரிக்கிறார்கள் என்பது பொருளல்ல என்பது மிகவும் நிச்சயமாகும். இதற்கு மாறாக, சோஷலிசத்துக்காகப் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்துக்காக, முதலாளித்துவ வளர்ச்சி நிலைமைகள் மற்றும் எல்லா தேசிய இனங்களின் தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கத்தினரை ஒடுக்குவரையும் ஜனநாயகத்தின் பொதுவான கடமைகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தன்னுடைய சுயேச்சையான மதிப்பீட்டைச் செய்ய வேண்டும்.
இந்தக் கோணத்தில் பின்வரும் விஷயத்தில் விசேஷமான கவனம் செலுத்த வேண்டும். பலவிதமான வரலாற்று மற்றும் சமூக நிலைமைகளின் காரணமாக ருஷ்யாவில் இரண்டு தேசிய இனங்கள் அதிகமான அளவுக்கு நாகரிகமுடையவையாகவும் தனித்திருப்பவையாவும் இருக்கின்றன, இவை பிரிவினை உரிமையை மிகவும் சுலபமாகவும் மிகவும் "இயற்கையாகவும்" அமுலாக்க முடியும். அவை பின்லாந்து மற்றும் போலந்தின் மக்களினங்களே. இந்த இரண்டு தேசிய இனங்களிலும் கூட ஆளும் வர்க்கத்தினரான நிலவுடைமையாளர்களும் முதலாளிகளும் பின்லாந்து மற்றும் போலந்தின் புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தைப் பற்றிய தங்களுடைய அச்சத்தினால் சுதந்திரத்துக்கான புரட்சிகரமா போராட்டத்தை நிராகரித்து ருஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினரோடும் ஜாரிஸ்ட் முடியாட்சியுடனும் சமரசத்துக்கு முயற்சிக்கிறார்கள் என்பதை 1905ம் வருடப் புரட்சியின் அனுபவம் எடுத்துக் காட்டியிருக்கிறது.
எனவே சமூக - ஜனநாகம் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் மக்களிடம் "தங்களுடைய சொந்த" முதலாளித்துவ வர்க்கத்தினரின் - அவர்கள், மற்ற தேசிய இனங்களின் முதலாளித்துவ வர்க்கத்திரோடும் ஜாராஸ்ட் முடியாட்சியுடனும் பொருளாதார மற்றும் அரசியல் கூட்டணியில் ஈடுபடுகின்ற பொழுது "தாய் நாட்டைப்" பற்றித் தேன்கலந்து அல்லது வீராவேசமான சொற்பொழிவுகளின் மூலம் பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கும் தங்களுடைய முதலாளிகளின் சூழ்ச்சிகளிலிருந்து அதன் கவனத்தைத் திருப்புவதற்கும் முயற்சி செய்கிறார்கள் - தேசியவாதக் கோஷங்களினால் நேரடியாக ஏமாற்றப்படுவதற்கு எதிராக மிகவும் உறுதியாக எச்சரிக்கை செய்ய வேண்டும்.
பாட்டாளி வர்க்கம் அனைத்துத் தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களிலும் உள்ள எல்லா தேசிய இனங்களின் தொழிலாளர்களோடும் விதிவிலக்கில்லாமல் மிக நெருக்கமான, மிக முழுமையான கூட்டணியை ஏற்படுத்தாமல் சோஷலிசத்துக்கான போராட்டத்தைத் தொடர முடியாது, தன்னுடைய அன்றாடப் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க முடியாது.
ஜாரிஸ்ட் முடியாட்சியை ஒழிப்பதற்கும் அதனிடத்தில் ஒரு ஜனநாயகக் குடியரசை ஏற்படுத்துவதற்கும் நடைபெறும் புரட்சிகரமான போராட்டத்தைத தவிர வேறு வழியின் மூலம் பாட்டாளி வர்க்கம் தன் விடுதலையை அடைய முடியாது. ஜாரிஸ்ட் முடியாட்சி தேசிய இனங்களுக்குச் சுதந்திரத்தையும் சமத்துவ உரிமைகளையும் மறுக்கிறது, மேலும் அது ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் காட்டு மிராண்டித்தனம், மிருகத்தனம் மற்றும் பிற்போக்குவாதத்தின் பிராதான கோட்டையாக இருக்கிறது. ருஷ்யாவிலுள்ள எல்லா தேசிய இனங்களின் ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்கத்தினர் - எல்லா தேசிய இனங்களின் உழைக்கும் மக்களைச் சேர்ந்த புரட்சிகரமாகப் போராடக் கூடிய முரணில்லாத ஜனநாகச் சக்திகளுக்கு அவர்கள் தலைமை வகிக்கிறார்கள் - மட்டுமே இந்த முடியாட்சியைத் தூக்கியெறிய முடியும்.
எனவே எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தோடு முழுமையான ஒற்றுமையைக் காட்டிலும் "தங்களுடைய சொந்த" தேசிய இன முதலாளித்துவ வர்க்கத்தோடு அரசியல் ஒற்றுமையை முக்கியமாகக் கருதும் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த நலன்களுக்கு எதிராக, சோஷலிசத்தின் நலன்களுக்கு எதிராக, ஜனநாயகத்தின் நலன்களுக்கு எதிராகப் பாடுபடுகிறார்கள் என்பது பெறப்படும்.
5. சமூக - ஜனநாயகவாதிகள் முரணில்லாத ஜனநாயக அரசு அமைப்புக்காகப் பாடுபடுகின்ற பொழுது தேசிய இனங்களுக்கு நிபந்தனையற்ற சமத்துவத்தைக் கோருகிறார்கள், ஒரு அல்லது சில தேசிய இனங்களுக்கு எல்லா விதமான விசேஷ உரிமைகளையும் எதிர்த்துப் போராடுகிறார்கள்.
குறிப்பாக, சமூக - ஜனநாயகவாதிகள் ஒரு "அரசு" மொழியை நிராகரிக்கிறார்கள். ருஷ்யாவில் இது மிகவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அவசியமில்லாதது, ஏனென்றால் ருஷ்யாவின் மக்கள் தொகையில் பத்தில் ஏழு பங்குக்கும் அதிகமானவர்கள் ஒன்றுக்கொன்று உறவு கொண்டுள்ள ஸ்லாவ் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள், இவர்களுக்குச் சுதந்திரமான கல்விமுறையையும் சுதந்திரமான அரசையும் கொடுத்தால் எந்த ஒரு தனி மொழிக்கும் "அரசு விசேஷ உரிமைகளும்" இல்லாமலேயே பொருளாதார நடவடிக்கைகளின் தேவைகள் காரணமமாக ஒருவரோடொருவர் சுலபமாகப் பேசிப் புரிந்து கொள்ள முடியும்.
நிலப்பிரபுத்துவப் பிரபுக்களாலும் சர்வாதிகார - நிலப்பிரபுத்துவ அரசின் ஊழியர்களாலும் ஏற்படுத்தப்பட்ட பழைய நிர்வாகப் பிரதேசப் பிரிவினைகள் ஒழிக்கப்பட் வேண்டும் என்று சமூக - ஜனநாயகவாதிகள் கோருகிறார்கள், அவற்றுக்குப் பதிலாக இன்றைய பொருளாதார வாழ்க்கையின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட, இயன்றவரை மக்கள் தொகையின் தேசியக் கலவைக்குப் பொருந்தக் கூடிய பிரிவினைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கோருகிறார்கள்.
சமூக ரீதியான பிரத்யேகத் தன்மைகள் அல்லது மக்கள் தொகையின் தேசியக் கலவையினால் தனித்து நிற்கும் அரசின் எல்லாப் பிரதேசங்களுக்கும் சர்வாம்ச, சமத்துவ, இரகசிய வாக்கெடுப்பு முறையின் மூலம் அமைக்கப்ட்ட ஸ்தாபனங்களைக் கொண்ட விரிவான தன்னாட்சியும் சுயாட்சியும் கொடுக்கப்பட வேண்டும்,
6. அரசின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், ஒவ்வொரு தேசியச் சிறுபான்மையினருடைய உரிமைகயையும் பாதுகாக்கின்ற, நாடு முழுவதிலும் அமுலாக்கப்படுகின்ற சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று சமூக - ஜனநாயகவாதிகள் கோருகிறார்கள். பெரும்பான்மையான தேசிய இனம் தனக்கென்று விசேஷமான உரிமைகளை நிறுவிக் கொள்ள முயற்சிக்கின்ற அல்லது (கல்வித் துறையில், குறிப்பிட்ட, ஏதாவதொரு மொழியை உபயோகப்படுத்துவதில், இதரவைகளில்) சிறுபான்மையாக உள்ள தேசிய இனத்தின் உரிமைகளைக் கட்டுப்படுத்துகின்ற எந்த நடவடிக்கையும் செல்லாதென்று இந்தச் சட்டம் அறிவிக்க வேண்டும், அதைத் தண்டிக்கப்படக் கூடிய குற்றமாக்கி அதை அமுல் நடத்துவதைத் தடுக்க வேண்டும்.
7."கலாச்சார - தேசிய" (அல்லது"தேசிய") "சுயாட்சி" என்ற கோஷத்தைப் பற்றி அல்லது அதை அமுல் நடத்துவதற்கான திட்டங்களைப் பற்றி சமூக - ஜனநாயகவாத அணுகுமுறை எதிர்மறையானது, ஏனென்றால் இந்தக் கோஷம் (1) பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தின் சர்வதேசியவாதத் தன்மைக்கு முரணாக இருக்கிறதென்பதில் சந்தேகமில்லை, (2) பாட்டாளி வர்க்கமும் உழைக்கும் மக்களில் பெருந்திரளானவர்க்ளும் முதலாளித்துவத் தேசிய வாதத்தின் செல்வாக்கின் கீழ் இழுக்கப்படுவதைச் சுலபமாக்குகிறது, (3) மொத்தமான முறையில் அரசின் முரணில்லாத ஜனநாயக மாற்றம் என்ற கடமையிலிருந்து கவனத்தைத் திருப்பிவிடக் கூடியது, அத்தகைய மாற்றம் மட்டுமே தேசிய இனங்களுக்கிடையே சமாதானத்தை (பொதுவாக, முதலாளித்துவத்தின் கீழ் இதைச் செய்ய முடிந்த அளவுக்கு) ஏற்படுத்த முடியும்.
சமூக - ஜனநாயகவாதிகளிடம் கலாச்சாரம் - தேசிய சயாட்சிப் பிரச்சனையைப் பற்றி எற்பட்டிருக்கும் விசேஷமான அக்கறை காரணமாக இந்த நிலைமையைப் பற்றி நாம் பின்வரும் விளக்கத்தைத் தருகிறோம்:
(அ) சமூக - ஜனநாயகவாதத்தின் நிலையிலிருந்து தேசியக் கலாச்சாரம் என்ற கோஷத்தை - நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ - வெளியிடுவது அனுமதிக்கப்பட முடியாதது. ஏற்கெனவே முதலாளித்துவத்தின் கீழ் மனித குலத்தின் எல்லா பொருளாதார, அரசியல் மற்றும் ஆன்மிக வாழ்க்கை மென்மேலும் அதிகமாக சர்வதேசத் தன்மையைப் பெற்றுக் கொண்டு வருவதால் இந்தக் கோஷம் தவறானதாகும். சோஷலிசம் அதை முற்றிலும் சர்வதேசியமாக்கிவிடும். எல்லா நாடுகளையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினரால் எற்கெனவே முறைப்படியாகத் தோற்றுவிக்கப்பட்டு வரும் சர்வதேசக் கலாச்சாரம் "தேசியக் கலாச்சாரத்தை" (எந்தத் தேசியத் குழுவினுடையதாக இருந்த போதிலும்) மொத்தமாக உட்கொள்வதில்லை, ஆனால் ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்திலிருந்தும் அதிலிருக்கின்ற முரணில்லாத ஜனநாயக மற்றும் சோஷலிசக் கூறுகளை - மற்றவற்றை விலக்கி - ஏற்றுக் கொள்கிறது.
(ஆ) சமூக - ஜனநாயகச் செயல்திட்டங்களில் தேசியக் கலாச்சார கோஷத்தை ஒட்டிவரக் கூடிய ஒரு உதாரணம் - அது பலவீனமான உதாரணம் என்றாலும் கூட - ஆஸ்திரிய சமூக - ஜனநாயகவாதிகளின் புரூன் செயல்திட்டத்தின் மூன்றாவது பாரா ஆகும். இந்த 3வது பாரா பின்வருமாறு அமைந்திருக்கிறது:"ஒரே தேசிய இனத்தின் சயாட்சிப் பிரதேசங்கள் அமைத்தும் அதன் தேசிய விவகாரங்களை முடிவு செய்வதில் முழு சுயாட்சியைக் கொண்ட ஒற்றை - தேசியக் கூட்டணியாக இருக்கும்."
இதில் பிரதேச எல்லைகளுக்கு அப்பாலுள்ள (தனிப்பட்ட) தேசிய சுயாட்சியின் சுவடு கூட இல்லாதிருப்பதால் இது ஒரு சமரசக் கோஷமாகும். ஆனால் இந்தக் கோஷம் கூடத்தவறானது, ஆபத்தானது. ஏனென்றால் லோட்ஸ், ரீகா, பீட்டர்ஸ்பர்க் மற்றும் சராத்தவில் உள்ள ஜெர்மானியர்களை ஒரே தேசிய இனமாக ஒன்றுபடுத்துவது ருஷ்யாவிலுள்ள சமூக - ஜனநாயகவாதிகளின் வேலை அல்ல. முழு ஜனநாயத்துக்கும் தேசிய இனங்களுக்குத் தரப்பட்டிருக்கும் விசேஷ உரிமைகள் அமைத்தையும் ரத்துச் செய்வதற்கும் போராடுவதும் சோஷலிசத்தின் சர்வதேசக் கலாச்சாரத்தை நிறுவுவதிலும் வளர்ப்பதிலும் மற்ற எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களோடும் ருஷ்யாவிலுள்ள ஜெர்மன் தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதுமே நமது வேலையாகும்.
பிரதேச எல்லைகளுக்கு அப்பாலுள்ள (தனிப்பட்ட) தேசிய சுயாட்சி என்ற கோஷமும் (இந்தக் கோஷத்தை முரணில்லாமல் ஆதரிப்பவர்கள் தயாரித்திருக்கும் திட்டத்தின்படி) தேசிய நாடாளுமன்றங்கள் மற்றும் தேசிய அரசுச் செயலாளர்கள் (ஓட்டோ பௌவர் மற்றும் கார்ல் ரென்னர்) ஏற்படுத்துவதென்பதும் இதைக் காட்டிலும் தவறானதாகும். இத்தகைய அமைப்புகள் முதலாளித்துவ நாடுகளின் எல்லா பொருளாதார நிலைமைகளுக்கும் முரண்படுகின்றன, உலகத்திலுள்ள ஜனநாயக அரசுகளில் ஏதாவதொன்றில் கூட இவை பரிசோதிக்கப்படவில்லை, முரணற்ற ஜனநாயக அமைப்புகளை ஏற்படுத்துவதைப் பற்றி அவநம்பிக்கை கொண்டவர்கள், சில("கலாச்சாரப்") பிரச்சனைகளில் ஒவ்வொரு தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கமும் முதலாளிதுவ வர்க்கமும் செயற்கையான முறையில் தனித்து நிற்பதில், முதலாளித்துவ வர்க்கத்தின் தேசிய சச்சரவுகளிலிருந்து பலனடைய நினைப்பவர்களுடைய சந்தர்ப்பவாதக் கனவுகளே அவை.
ஏதாவதொரு வகையான சமரச முடிவுகளைச் சிறிது காலத்துக்கு ஏற்றுக் கொள்ளுமாறு சந்தர்ப்பங்கள் எப்பொழுதாவது சமூக - ஜனநாயகவாதிகளை நிர்ப்பந்திக்கும். ஆனால் நாம் மற்ற நாடுகளிலிருந்து சமரச முடிவுகளை இரவல் பெறக் கூடாது, முரணில்லாத - சமூக - ஜனநாயக முடிவுகளைத்தான் இரவல் பெற வேண்டும். ஆஸ்திரியாவின் சமரச முடிவு அங்கே முழுத் தோல்வியடைந்திருக்கும் பொழுது, செக் சமூக - ஜனநாயவாதிகளின் பிரிவினைக்கும் பிளவுக்கும் வழி வகுத்திருக்கும் பொழுது அந்த துக்ககரமான ஆஸ்திரிய சமரச முடிவை இன்று ஏற்றுக் கொள்வது குறிப்பிடத்தக்க அளவுக்கு அறிவீனமாகும்.
(இ) ருஷ்யாவில் "கலாச்சார - தேசிய சுயாட்சி" கோஷத்தின் வரலாறு, யூதர்களின் எல்லா முதலாளித்துவக் கட்சிகளும் - யூதர்களின் முதாலாளித்துவக் கட்சிகள் மட்டுமே - அதை ஏற்றுக் கொண்டிருக்கின்றன, தேசிய - யூத நாடாளுமன்றம் மற்றும் தேசிய - யூத அரசுச் செயலாளர்கள் ஆகியவற்றை முரணியலான முறையில் நிராகரித்திருக்கும் புந்துக் கட்சியினர் அவைகளை விமர்சனமில்லாமல் பின்பற்றியிருக்கிறார்கள் என்பவற்றை எடுத்துக் காட்டுகிறது. ஆனால் ஐரோப்பிய சமூக - ஜனநாயகவாதிகளில் கலாச்சார - தேசிய சுயாட்சி என்ற சமரசக் கோஷத்தை ஆதரிப்பவர்கள் அல்லது காப்பவர்கள் கூட யூதர்களைப் பொறுத்தவரை அந்தக் கோஷம் முற்றிலும் நிறைவேற முடியாதத என்கிறார்கள் (ஓட்டோ பௌவர் மற்றும் கார்ல் காவுத்ஸ்கி). "கலீத்சியாவிலும் ருஷ்யாவிலும் உள்ள யூதர்கள் ஒரு தேசிய இனம் என்பதைக் காட்டிலும் அதிகமாக அளவுக்கு ஜாதியாகவே இருக்கிறார்கள், யூதர்களை ஒரு தேசிய இனமாக அமைப்பதற்குச் செய்யப்படும் முயற்சிகள் ஒரு ஜாதியைப் பாதுகாப்பதற்குச் செய்யப்படும் முயற்சிகளே"(கார்ல் காவுத்ஸ்கி).
(ஈ) நாகரிகமடைந் நாடுகளில் முதலாளித்துவத்தின் கீழ் அரசின் அமைப்பு மற்றும் நிர்வாகம் முழுவதிலும் மிகவும் அதிகமான அளவுக்கு ஜனநாயகவாதத்தை அமுலாக்கும் நிலைமைகளில் மட்டுமே தேசிய இனங்களுக்கிடையே ஓரளவுக்கு முழுமையான (ஒப்பு நோக்கில்) சமாதானத்தை நாம் பார்க்கிறோம் (ஸ்விட்ஸர்லாந்து). முரணில்லாத ஜனநாயகவாதத்தின் கோஷங்கள் (குடியரசு, மிலீஷியா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஊழியர்கள்,இதரவை) ஒவ்வொரு தேசிய இனத்திலும் உள்ள பாட்டாளி வர்க்கத்தையும் உழைக்கும் மக்களையும் - பொதுவாக, எல்லா முற்போக்குச் சக்திகளையும் - மிகவும் குறைந்த அளவு தேசிய விசேஷ உரிமைகளையும் கூடத் தடுப்பதற்கான போராட்டத்தின் நிலைமைகள் என்ற பெயரால் ஒன்றுபடுத்துகின்றன, ஆனால் "கலாச்சார - தேசிய சுயாட்சி" என்ற கோஷம் கல்வி விவகாரங்களில் (அல்லது பொதுவாககக் "கலாச்சார" விவகாரங்களில்) தேசிய இனங்கள் தனிமைப்பட்டிருப்பதைப் போதிக்கிறது - இத்தகைய தனிமைப்படுதல் எல்லா (தேசிய இனங்களுடைய) விசேஷ உரிமைகளின் காரணங்களை நீடித்துக் கொள்வதோடு முற்றிலும் பொருந்துவதே.
முரணில்ல்ரத ஜனநாயகவாதம் என்ற கோஷங்கள் பாட்டாளி வர்க்கத்தினரையும் எல்லா தேசிய இனங்களிலும் உள்ள முற்போக்கு ஜனநாயகவாதிகளையும் (இவர்கள் தனிமைப்பட்டிருப்பதை வற்புறுத்துவதில்லை, கல்வி விவகாரங்கள் உள்பட எல்லாத் துறைகளிலும் தேசிய இனங்களில் உள்ள ஜனநாயகச் சக்திகளை ஒன்றுபடுத்த வேண்டுமென்று கோருகிறார்கள்) தனி மொத்தமாக ஒன்றுபடுத்துகின்றன, ஆனால் கலாச்சார - தேசிய சுயாட்சி வெவ்வேறு தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கதயும் பிரிக்கிறது, தனித்னியாக உள்ள தேசிய இனங்களின் பிற்போக்கு மற்றும் முதலாளித்துவ வர்க்கச் சக்திகளோடு சேர்க்கிறது.
முரணில்லாத ஜனநாயகவாதம் என்ற கோஷம் எல்லா தேசிய இனங்களிலும் உள்ள பிற்போக்காளர்களுக்கும் எதிர்புரட்சி முதலாளித்துவ வர்க்கத்தினருக்கும் விட்டுக் கொடுக்காத வகையில் எதிரானது, ஆனால் கலாச்சார - தேசிய சுயாட்சி என்ற கோஷம் சில தேசிய இனங்களின் பிற்போக்காளர்களுக்கும் எதிர்புரட்சி முதலாளித்துவ வர்க்கத்தினருக்கும் முற்றிலும் உகந்ததே.
8. ஆகவே ருஷ்யாவிலுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளின் ஒட்டுமொத்தம் சமூக - ஜனநாயகவாதம் எல்லா தேசிய இனங்களிலுமுள்ள தொழிலாளர்களை எல்லா பாட்டாளி வர்க்க நிறுவனங்களிலும் விதிவிலக்கில்லாமல் (அரசியல், தொழிற் சங்க, கூட்டுறவு, கல்வித் துறை, இதரவை, இதரவை) நிபந்தனையற்ற முறையில் இணைக்க வேண்டுமென்று கோருகிறது. கட்சியின் அமைப்பில் கூட்டாட்சித் தன்மை இருக்கக் கூடாது, தேசிய சமூக - ஜனநாயகக் குழுக்களை அமைக்கக் கூடாது, குறிப்பிட்ட நிலையிலுள்ள எல்லா தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கத்தின் எல்லா மொழிகளிலும் பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சி நடத்தப்பட வேண்டும், எல்லா விதமான தேசிய விசேஷ உரிமைகளுக்கு எதிராக எல்லா தேசிய இனங்களிலும் உள்ள தொழிலாளர்களின் பொதுப் போராட்டத்தை ஊக்குவிக்க வேண்டும், ஸ்தல மற்றும் பிரதேசக் கட்சி நிறுவனங்களனி சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும்.
9. மேற்கூறிய ஆய்வுரை சரியானது என்பதை ரு.ச.ஜ.தொ. கட்சி பெற்றிருக்கும் பத்து வருடத்துக்கு அதிக அனுபம் நிரூபிக்கிறது. 1898ல் இந்தக் கட்சி "ருஷ்யாவின்" கட்சியாக, அதாவது ருஷ்யாவின் எல்லா தேசிய இனங்களிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் கட்சியாக நிறுவப்பட்டது. யூதப் பாட்டாளி வர்க்கத்தின் ஒரே பிரதிநிதியாகத் தன்னைக் கருத வேண்டும் என்று புந்துக் கட்சி கோரியதைக் காங்கரிஸ் நிராகரித்த பிறகு 1903ல் புந்துக் கட்சி அதை விட்டு வெளியேறியதும் கட்சி"ருஷ்யாவின்" கட்சியாக நீடித்தது. இந்தக் கோரிக்கைக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதை 1906 மற்றும் 1907ம் வருடங்களில் நடைபெற்ற சம்பவங்கள் நம்பும் விதத்தில் எடுத்துக் காட்டின. யூதப் பாட்டாளி வர்க்கத்்தில் பெரும்பகுதியினர் பல ஸ்தல நிறுவனங்களில், பொதுவான சமூக - ஜனநாயகப் பணிகளில் தொடர்ந்து ஒத்துழைத்தார்கள், அதற்குப் பிறகு புந்தினர் கட்சியில் மறுபடியும் சேர்ந்து கொண்டனர். (1906ல் நடை பெற்ற) ஸ்டாக்ஹோம் காங்கிரஸ் போலிஷ் மற்றும் லாத்விய சமூக - ஜனநாயகவாதிகளைக் கட்சிக்குள் கொண்டு வந்தது, இவர்கள் பிரதேச சுயாட்சியை ஆதரித்தார்கள். மேலும் காங்கிரஸ் கூட்டரசுக் கோட்பாட்டை ஆதரிக்க வில்லை, அது ஒவ்வொரு ஸ்தலத்திலும் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த சமூக - ஜனநாயகவாதிகளின் ஒற்றுமையைக் கோரியது. இந்தக் கோட்பாடு காக்கஸசில் பல வருடங்களாகவே அமுலாக்கப்பட்டு வருகிறது, வார்சா (போலிஷ் தொழிலாளர்கள் மற்றும் ருஷ்யப் படை வீரர்கள்), வில்னோ (போலிஷ், லாத்விய, யூத மற்றும் லித்துவேனியத் தொழிலாளர்கள்) மற்றும் ரீகாவில் அமுலாக்கப்பட்டு வருகிறது, மேலே கூறப்பட்ட மூன்று இடங்களிலும் பிரிவினைவாத புந்துக் கட்சிக்கு எதிரா அது அமுல் நடத்தப்பட்டிருக்கிறது. 1908 டிசம்பரில் ரு.ச.ஜ.தொ.கட்சி தன்னுடைய மாநாட்டில் கூட்டரசைத் தவிர வேறு கோட்பாட்டின் மூலம் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களின் ஒற்றுமையைக் கோருவதை ஊர்ஜிதப்படுத்தி விசேஷ தீர்மானத்தை நிறைவேற்றியது. புந்துப் பிரிவினைவாதிகள் கட்சி முடிவுகளை அமுல் நடத்தாமற்செய்த பிளவு நடவடிக்கைகள் "மிகவும் மோசமான ரகத்தைச் சேர்ந்த கூட்டாட்சியின்" சீர்குலைவுக்கு வழி வகுத்தன, புந்து மற்றும் செக் பிரிவினைவாதிகளின் இணக்கத்தையும் அதன் மாறுதலையும் ஏற்படுத்தின, கடைசியாக, 1912 ஆகஸ்டில் நடைபெற்ற கலைப்புவாதிகளின் மாநாட்டில் புந்துப் பிரிவினைவாதிகளும் கலைப்புவாதிகளும் காக்கேசியக் கலைப்புவாதிகளில் சிலரும் "கலாச்சார - தேசிய சுயாட்சியை" - அதன் சாராம்சத்தை எவ்விதத்திலும் வலியுறுத்தாமல்- கட்சியின் செயல்திட்டத்தில் நுழைப்பதற்குத் திரைமறைவில் செய்த முயற்சிக்கு வழி வகுத்தன.
போலந்திலும் லாத்வியப் பிரதேசத்திலும் காக்கஸசிலும் உள்ள புரட்சிகரமான தொழிலாளர் சமூக - ஜனநாயகவாதிகள் பிரதேச சுயாட்சியையும் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்க சமூக - ஜனநாயகவாதிகளின் ஒற்றுமையையும் இன்னும் ஆதரிக்கிறார்கள். புந்து - கலைப்புவாதப் பிரிவினையும் வார்சாவில் சமூக- ஜனநாயகவாதிகள் - அல்லாதவர்களோடு புந்தினர் கூட்டணியும் தேசிய இனப் பிரச்சினை முழுவதையுமே - அதன் தத்துவ ரீதியான அம்சம், கட்சியின் அமைப்புப் பிரச்சனை ஆகிய இரண்டிலும் - இன்றைய உடனடியான பிரச்சினையாக ஆக்கியிருக்கின்றன.
கட்சியின் சித்ததுக்கு விரோதமாக சமரச முடிவுகளைக் கொண்டு வந்த அதே நபர்களே அவற்றை மீறியிருக்கிறார்கள், எல்லா தேசிய இனங்களையும் தேர்ந்த சமூக - ஜனநாயகவாதத் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கான கோக்கை இன்று முன்னைக் காட்டிலும் உரத்த குரலில் முழங்கப்படுகிறது.
10. ஜாரிஸ்ட் முடியாட்சியின் கொச்சைத் தனமான போர்க் குணமுடைய, கறுப்பு நூற்றுவர் ரகத்தைச் சேர்ந்த தேசியவாதமும் முதலாளித்துவ வர்க்கத் தேசியவாதத்தின் அதிகரிப்பும் - மாக ருஷ்ய, உக்ரேனிய, போலிஷ், ஜார்ஜிய மற்றும் அர்மீனிய, இதரவை - இவை அனைத்தும் ருஷ்யாவின் எல்லாப் பகுதிகளிலுமுள்ள சமூக - ஜனநாய நிறுவனங்கள் முன்னெப்போரையும் காட்டிலும் தேசியப் பிரச்சினைக்கு அதிகமான கவனம் செலுத்துவதையும் முரணில்லாத சர்வதேசியவாதம் மற்றும் எல்லா தேசிய இனங்களையும் உணர்ச்சியில் இந்தப் பொருளைப் பற்றி முரணில்லாத மார்க்சிய முடிவுகளை உருவாக்கவதற்கு அதிகமான கவனத்தைச் செலுத்துவதையும் மிகவும் அவசியமாக்குகின்றன.
---------
(அ) தேசியக் கலாச்சாரம் என்ற கோஷம் தவறானது, தேசியப் பிரச்சினையைப் பற்றிக் குறைந்த அளவான, முதலானித்துவ வர்க்கத் தெளிவை மட்டுமே எடுத்துரைக்கிறது சர்வதேசக் கலாச்சாரம்.
(ஆ) தேசியப் பிரிவினைகளை நிரந்தரப்படுத்துவதும் நயமான தேசியவாதத்தை ஊக்குவிப்பதும் - ஒற்றுமைப் படுத்துதல், இணக்கமேற்படுத்துதல், தேசிய இனங்கள் கூடிய கலப்பது மற்றும் வேறுபட்ட, சர்வதேசக் கலாச்சாரத்தின் கோட்பாடுகளை வெளிப்படுத்துதல்.
(இ) குட்டி முதலாளிகளின் மனமுறிவு (தேசியச் சச்சரவுகளை எதிர்த்து நம்பிக்கையற்ற போராட்டம்) மற்றும் தீவிரவாத - ஜனநாயகச் சீர்திருத்தங்களையும் சோஷலிஸ்டு இயக்கத்தையும் பற்றி அச்சம் - தீவிரவாத - ஜனநாயகச் சீர்திருத்தங்கள் மட்டுமே முதலாளித்துவ அரசுகளில் தேசிய அமைதியை நிறுவ முடியும், சோஷலிசம் மட்டுமே தேசியச் சச்சரவுக்கு முடிவு கட்ட முடியும்.
(ஈ) கல்வி விவகாரங்களில் தேசிய அமைப்புகள்.
(உ) யூதர்கள்.
ருஷ்யாவின் சமுக - ஜனநாயக தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம் - லெனின்
மத்தியக் கமிட்டி கூட்டம், அறிவிப்பில் அச்சிடப்பட்டிருந்த தேசிய இனப் பிரச்சினை பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது, தேசிய இனச் செயல் திட்டம் பற்றிய பிரச்சினையைக் காங்கிரசின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளது.
புரட்சி எதிர்ப்பு இயக்கத்தின் கொள்கை முழுவதிலும், பூர்ஷ்வாக்களின் வர்க்க உணர்விலும், பாட்டாளி வர்க்கக் கட்சியாகிய ருஷ்யாவின் சமூக - ஜனநாயக கட்சியிலும் தேசிய இனப் பிரச்சினையானது ஏன், எவ்வாறு தற்சமயத்தில் முதலிடத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது தீர்மானத்திலேயே விவரமாகக் காட்டப்பட்டுள்ளது. நிலைமை தெளிவாக இருக்கின்ற காரணத்தினால் இவ்விஷயத்தைப் பற்றி விளக்கத் தேவையில்லை. அந்நிலைமையும் சமூக - ஜனநாயகவாதிகளின் தேசிய இனச் செயல் திட்டத்தின் அடிப்படைகளும் சமீப காலத்தில் மார்க்சியத் தத்துவார்த்த இலக்கியத்தில் ஆராயப்பட்டுள்ளன [ஸ்தாலினின் கட்டுரை இங்கே மிகவும் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது]. ஆகவே இந்தக் கட்டுரையில் முழுக்க முழுக்கக் கட்சிக் கண்ணோட்டத்திலிருந்து இப்பிரச்சினையை எடுத்துக் கூறுவதோடும், ஸ்தோலீப்பின் - மக்லக்கோவ் ஒடுக்குமுறையின் விளைவாய் பத்திரிகைச் சுந்திரம் நசுக்கப்பட்டுள்ளதால் சட்டபூர்வமான பத்திரிகைகளின் மூலம் வெளியிட முடியாத விளக்கங்களை அளிப்பதோடும் நிறுத்திக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம்.
பழைய நாடுகளின், அதாவது ஐரோப்பிய நாடுகளின் அனுபவத்திலுருந்தும், அந்த அனுபவத்தின் தத்துவார்த்த வடிவமாகிய மாக்சியத்திலிருந்தும் கற்றுக் கொண்டே ருஷ்யாவில் சமூக - ஜனநாயகவாதம் உருப்பெற்று வருகிறது. நமது நாட்டின் விசேஷ அம்சங்களும், நமது நாட்டில் சமூக - ஜனநாயகவாதம் நிறுவப்படுகின்ற வரலாற்றுக் கட்டத்தின் விசேஷ அம்சங்ககும் பின்வருமாறு: முதலாவதாக, ஐரோப்பாவினின்று வேறான வகையில் நமது நாட்டில் சமூக - ஜனநாகவாதமானது பூர்ஷ்வா புரட்சிக்கு முன்னதாகவே உருப்பெற ஆரம்பித்து, அப்புரட்சிக்கு முன்னதாகவே உருப்பெற ஆரம்பித்து, அப்புரட்சியின் போது தொடர்ந்தும் உருப்பெற்று வருகிறது. இரண்டாவதாக, பொதுவான பூர்ஷ்வா, குட்டி பூர்ஷ்வா ஜனநாயத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாகத்தை வேறாகப் பிரிப்பதற்கான தவிர்க்க முடியாத போராட்டம் - பொதுவாக, எல்லா நாடுகளிலும் நிகழ்ந்த போராட்டமே இது - மேற்கு நாடுகளிலும் நமது நாட்டிலும் மார்க்சியம் முழுமையாகத் தத்துவார்த்த வெற்றிபெற்றுவிட்ட சூழ்நிலையில் நம் நாட்டில் நடை பெற்று வருகிறது. எனவே, இப்போராட்டத்தின் வடிவமானது மார்க்சியத்துக்கான போராட்டம்என்று கூறுவதைவிட "கிட்டத்தட்ட மார்க்சியச்" சொற்றொடர்களுக்குப் பின்னால் ஒளித்து வைக்கப்பட்டுள்ள குட்டி பூர்ஷ்வா தத்துவங்களுக்கு ஆதலாவாகவும் எதிராகவும் நடத்தப்படும் போராட்டம் என்று கூறுவது பொருத்தமாகும்.
"பொருளாதாரவாதம்" [1985 - 1901] "கட்ட பூர்வமான மார்க்சியம்" [1895 -1905, 1902] ஆகியவற்றில் ஆரம்பித்து, இவ்வாறு இருக்கிறது விஷயம். ஒருபுறம் இப்போக்குகளுக்கும் மறு புறம் மென்ஷிவிசத்துக்கும் [1903 - 1907] கலைப்புவாதத்துக்கும் [1908 - 1913] இடையிலுள்ள நெருங்கிய அன்னியோன்னியமான தொடர்பையும் உறவையும் வரலாற்று உண்மைகளைக் கண்டு பின் வாக்குபவர்கள் மட்டுமே மறந்துவிட முடியும்.
ருஷ்யாவின் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தத்துவத்திலும் நடைமுறையிலும் மார்க்சியத்தின் முதலாவது, அடிப்படை ஆதாரத்தை நிறுவி, 1901 - 1903ல் ருஷ்யாவின் சமூக - ஜனநாக தொழிலாளர் கட்சிக்காகச் செயல்திடத்தை தீட்டிய, இறுதியில் தீட்டிவிட்ட பழைய இஸ்க்ரா பத்திரிகையானது மற்றப் பிரச்சினைகளின் விஷயங்ளில் செய்ததைப் போலவே, தேசிய இனப் பிரச்சினையிலும் குட்டி பூர்ஷ்வா சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. இந்தச் சந்தர்ப்பவாதமானது புந்து ஸ்தாபனத்தின் தேசியவாதப் போக்குகளிலும் ஊசலாட்டங்களிலும் முதன் முதலாக வெறிப்பட்டது. புந்தின் தேசிய வாதத்தை எதிர்த்து பழைய இஸ்க்ராத ஒர் உறுதியான போராட்டத்தை நட்த்தியது, இதை மறந்துவிடுவது என்பது நம்மை நாமே மறந்து விடுவதற்கு ஒப்பாகும், ருஷ்யாவின் சமூக - ஜனநாக தொழிலாளர் இயக்கம் முழுவதின் வரலாற்று வேர்களினின்றும் சித்தாந்த வேர்களிலிருந்தும் நம்மைத் துண்டித்துக்கொள்வதற்கு ஒப்பாகும்.
மறுப்பத்தில் 1903 ஆகஸ்டு மாதம் நடந்த இரண்டாவது காங்கிரசில் ரு.ச.ஜ.தொ. கட்சியின் செயல்திட்டம் இறுதியாக அங்கீகரிக்கப்பட்ட பொழுது ஒரு போராட்டம் நடந்தது. செயல்திட்டக் கமிஷனில் அது நடைபெற்றதால் அது காங்கிரசின் நிகழ்ச்சிப் பதிவேட்டில் குறிக்கப்படவில்லை. அக்கமிஷனுக்குக் கிட்டத்தட்ட எல்லா காங்கிரஸ் உறுப்பினர்களும் அப்பொழுது போயிருந்தார்கள். போலந்து நாட்டு சமூக - ஜனநாகவாதிகள் சிலர் "தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை" பற்றி சந்தேகங்களை எழுப்புவதற்காகச் செய்த அசட்டுத்தனமான முயற்சியை [முற்றிலும் வேறானதொரு கோணத்திலிருந்து சந்தர்ப்பவாதத்தை நோக்கியும் தேசியவாதத்தை நோக்கியும் வழுவிச் செல்வதற்கான முயற்சி அது] எதிர்த்து நடந்தது அப்போராட்டம்.
இன்று, பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, அதே இரண்டு அடிப்படையான வழிகளில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்துக்கும், ருஷ்யாவில் தேசிய இனப் பிரச்சினையைப் பாதிக்கும் புறநிலைச் சூழ்நிலை முழுமைக்கும் இடையில் ஆழ்ந்து தொடர்பு இருக்கிறது என்பதையும் அது அதே சமயம் காட்டுகிறது.
ஆஸ்திரியாவில் நடந்த புரூன் காங்கிரசில் [1899] "கலாசார - தேசிய இனத் தன்னாட்சிச்" செயல்திட்டம்[இதை கிரிஸ்டன், எல்லென்போகென், மற்றும் பலரும் ஆதரித்துப் பேசினர்; இது தெற்கு ஸ்லாவ்களின் மசோதாவில் கூறப்படுகிறது] நிராகரிக்கப்பட்டது. நிலப்பரப்பின் அடிப்படையில் தேசிய இனத் தன்னாட்சி அங்கீகரிக்ப்பட்டது. எல்லாத் தேசிய இனப் பிரதேசங்களும் கட்டாயமாக ஒன்று சேர்ந்து ஐக்கியம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற சமூக - ஜனநாகவாதிகளின் பிரசாரமானது "காலசார - தேசிய இனத் தன்னாட்சி" என்ற கருத்துக்கு இம் தந்து நிற்கும் ஒரு சமரச முறைதானேயொழிய வேறில்லை. துரதிருஷ்டவசமான இந்தக் கருத்தின் பிரதான தத்துவாசிரியர்களே இக்கருத்தானது யூதர்கள் விஷயத்தில் பொருந்தாததாகும் என்பதை விசேஷமாக வலியுறுதிதினார்கள்.
ஒரு சிறிய சந்தர்ப்பவாதத் தவற்றைப் பெரிதாக வளர்த்து அதை ஒரு சந்தர்ப்பவாதக் கொள்கையாக உருவாக்கும் வேலையையே தங்களது தொழிலாகக் கொண்ட மனிதர்கள் ருஷ்யாவிலும் வழக்கம் போலக் காணப்படுகிறார்கள். ஜெர்மனியில் இருந்த பெர்ன்ஷ்டைன் ருஷ்யாவில் வலதுசாரி காடேட்டுகளை - ஸ்துரூவே, புல்காக்கவ், துகான் முதலியவர்களை - தோற்றுவித்ததைப் போல ஓட்டோபௌவருடைய [அதி ஜாக்கிரதையான காவுத்ஸ்கி சொல்லியதைப் போல!] "சர்வதேசியவாதத்தைப் பற்றிய மறதியானது", ருஷ்யாவில் "கலாசார - தேசிய இனத் தன்னாட்சிக்" கருத்தை எல்லா யூத பூர்ஷ்வாக் கட்சிகளும் குட்டி பூர்ஷ்வாப் போக்குகள் மிகப் பலவும் [புந்தும், 1907ல் நடந்த சோஷலிஸ்டு - புரட்சியாளர்களது தேசிய இனக் கட்சிகளின் மகாநாடும்] முழுமையாக ஏற்றுக்கொள்வதற்குக் காரணமாயிருந்தது. மேற்கு ஐரோப்பிய சந்தர்ப்பவாத விஷக் கிருமிகள் நமது நாகரிகமற்ற பூமியில் உண்மையான கொள்ளை நோய்களை எப்படி உண்டாக்குகின்றன என்பதற்கோர் உதாரணமாகப் பின்தங்கிய ருஷ்யா விளங்குகிறது என்று கூறலாம்.
ஐரோப்பாவில் மக்கள் பெர்ன்ஷ்டைனை "சகித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று சொல்ல ருஷ்யாவில் மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள், ஆனால் "பினிதத்" தாய் நாடான ருஷ்யாவைத் தவிர உலகில் வேறெங்குமே பெர்ன்ஷ்டைனியம் ஸ்துரூவேயிசத்தைத் தோற்றுவித்ததுமில்லை, அல்லது, யூத பூர்ஷ்வாக்களின் துல்லியமாக்கப்பட்ட தேசியவாதம் சரியானது என்று சமூக - ஜனநாயகவாதிகள் சாதிக்கும்படி "பௌவரிசம்" செய்ததுமில்லை என்பதை அத்துடன் சேர்த்துச் சொல்ல அவர்கள் மறந்துவிடுகின்றனர்.
"கலாசார - தேசிய இனத் தன்னாட்சி" என்றால் மிகமிக துல்லியமாக்கப்பட்ட, எனவே மிகவும் தீமையை விளைவிக்கத்தக்க தேசியவாதம் என்று பொருள்படும், தேசிய இனக் கலாசாரம் என்ற கோஷத்தில் மூலம் தொழிலாளர்களின் வர்க்க உணர்வைக் கெடுத்து விடுவது, தேசிய இனப் பாகுபாட்டின்படி பள்ளிகளைப் பிரித்து வேறுபடுத்த வேண்டும் என்ற மிகவும் தீமை தரத்தக்கதும் ஜனநாயகத்துக்கு முரணானதுமான பிரசாரம் என்றே அர்த்தப்படும். சுருங்கக் கூறினால், இச்செயல் திட்டமானது சந்தேகத்துக்கு இடமின்றி பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியவாத்திற்கு முரண்படுகிறது, இது தேசியவாதக் குட்டி பூர்ஷ்வாக்களின் லட்சியங்களுடன் மட்டும் இணைந்ததாக இருக்கிறது.
ஆனால்,மார்க்சியவாதிகள், ஜனநாயகத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் துரோகம் செய்யாமல் இருக்க விரும்பினால், தேசிய இனப் பிரச்சினையில் ஒரு விசேஷக் கோரிக்கையை ஆதரித்துப் போராட வேண்டடிய கடப்பாடு உடையவர்களாக இருக்கும் ஒரு சந்தர்ப்பம் உள்ளது, அதுதான், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை (ரு.ச.ஜ.தொ.கட்சியினது செயல்திட்டத்தின் 9வது பிரிவு), அதாவது, அரசியல் ரீதியில் பிரிந்துபோகும் உரிமை. மகாநாட்டின் தீர்மானம் இக்கோரிக்கையைத் தவறாகப் புரிந்து கொள்ள இடமே இல்லாதபடி மிகவும் விவரமாக விளக்கிக்கூறி காரணம் காட்டுகிறது.
ஆகவே, செயல்திட்டத்தின் இந்தப் பிரிவுக்கு எதிராதக எழுப்பப்படும் ஆட்சேபங்களை - ஆச்சரியமூட்டும் அறியாமையும் சந்தர்ப்பவாதப் போக்கும் கொண்ட அந்த ஆட்சேபங்களை - நாம் சுருக்கமாக விவரிப்பது போதுமானது. இது சம்பந்தமாக ஒன்றை மட்டும் கூறுவோம். இந்தச் செயல்திட்டம் உருவாகி நீடித்து இருந்து வந்துள்ள பத்தாண்டு காலத்தில், ரு.ச.ஜ.தொ. கட்சியின் எந்த ஒரு கிளையும், எந்த ஒரு தேசிய ஒட ஸ்தாபம அமைப்பும், எந்த ஒரு பிரதேச மாகாநாடும், எந்த ஒரு ஸ்தலக் கமிட்டியும், ஒரு காங்கிரசுக்கோ அல்லது மகாநாட்டுக்கோ வந்த ஒரு பிரதிநிதியும் 9ம் பிரிவை மாற்றும் அல்லது நீக்கிவிடும் பிரச்சினையை எழுப்ப முயன்றதில்லை!!
இதைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்தப் பிரிவுக்கு எதிராகக் கிளப்படும் ஆட்சேபணைகளில் கடுகளவாவது பொறுப்புணர்ச்சியோ அல்லது கட்சி உணர்வோ இருக்கிறதா என்பதை இது நமக்கு உடனே எடுத்துக் காட்டுகிறது.
கலைப்புவாதிகளின் செய்தித்தாளைச் சேர்ந்த திரு.செம்போவ்ஸ்கியை எடுத்துக்கொள்வோம். கட்சியைக்கலைத்து விட்டு ஒரு ஆசாமியின் அலட்சிய தோரணையில் அவர் கூறுகிறார்: "செயல் திட்டத்திலிருந்து பிரிவு 9ஐ அறவே நீக்கிவிட வேண்டும் என்ற ரோஸா ருக்சம்பர்கின் பிரேரேபணையை நாம் சில காரணங்களினால் ஏற்றுக் கொள்ளவில்லை"(நோவயா ரபோச்சயா கஸேட்டா, இதழ் 71)
எனவே அந்தக் காரணங்கள் ஒரு இரகசியம்! ஆனால், நமது செயல்திட்டத்தின் வரலாற்றைப் பற்றிய இத்தைகைய அறியாமையில் அவர் மூக்கியிருக்கையில் "இரகசியத்தை" எப்படித் தவிர்க்க முடியும்? அல்லது அதே திரு.செம்கோவ்ஸ்கி ஒப்பற்ற அலட்கியத்துடன் (கட்சியையும் செயல் திட்டத்தையும் பற்றி என்ன கவலை!) பின்லாந்துக்கு மட்டும் ஒரு விதிவிலக்கு அளிக்கும் பொழுது "இரகசியத்தை" எப்படித் தவிர்க்க முடியும்?
"போலந்தின் பாட்டாளி வர்க்கம் ருஷ்யப் பாட்டாளி வர்க்க முழுவதுடனும் ஒரா அரச என்ற கட்டமைப்புக்குள் ஒரு கூட்டுப் போராட்டத்தை நடத்த விரும்பினால், ஆனால் அதற்கு மாறாகப் போலந்தைப் பிரிக்க வேண்டுமென்று விரும்பி, ஒரு பொதுமக்கள் வாக்கெடுப்பு மூலமாக அது தனியே பிரிந்து போதற்கு ஆதரவாகப் பெரும்பான்மை வாக்குகளைச் சேகரித்தால்... நாம் என்ன செய்வது? ருஷ்ய சமூக-ஜனநாயகவாதிகளாகிய நாம் நமது போலந்துத் தோழர்களுடன் ஒன்று சேர்ந்து பிரிந்து போவதை எதிர்த்து ஒரு மத்தியப் பாராளுமன்றத்தில் வாக்களிப்பதா, அல்லது 'சுயநிர்ணய உரிமையை' மீறாமல் இருக்கும் பொருட்டு பிரிந்து போவதற்கு ஆதரவாக வாக்களிப்பதா?"
இத்தகைய குழந்தைத்தனமாக, படுகுழப்பமான கேள்விகளை எழுப்பினால் நாம்தான் என்ன செய்வது?
சுயநிர்ணய உரிமை என்றால், என்ன அன்புமிக்க கலைப்புவாதத் திருவாளரே, ஒரே மத்தியப் பாராளுமன்றத்தில் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அர்த்தம் இல்லை, பிரிந்து போகும் சிறுபான்மையினருடைய பாராளுமன்றத்தில் அல்லது சபையில் அல்லது அவர்களுக்கிடையில் நடத்தப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பில் தீர்வு காண வேண்டும் என்பதுதான் அர்த்தம். ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்து பொழுது (1905ல்) நார்வே மட்டும்தான் அதை முடிவு செய்தது(ஸ்வீடனின் பரப்பளவில் பாதிதான் நார்வே).
திரு.செம்கோவ்ஸ்கி மிக மோசமாகக் குழம்பிப் போயிருக்கிறார் என்பதை ஒரு குழந்தை கூட அறிய முடியும்.
எந்த அமைப்பில் பொதுவாக ஜனநாயகம் நிலவுவது மட்டும் இன்றி, சிறப்பாக பிரிந்து போவது பற்றிய பிரச்சினைக்கு ஜனநாயகம் அற்ற தீர்வு இருக்கவே முடியாதோ அத்தகைய ஜனநாயக அமைப்பையே "சுய நிர்ணய உரிமை" குறிக்கிறது. ஜனநாயகம் என்பது, பொதுவாகச் சொல்லப் போனால், சண்டை போடும் குணமுள்ள, ஓடுக்கும் தன்மையுள்ள தேசியவாதத்துக்கும் இயைந்ததாகும். அரசின் எல்லைகளுக்குள் எந்த ஒரு தேசிய இனத்தையும் பலவந்தமாகப் பிடித்து வைத்திருப்பதை அறவே ஒதுக்கிவிடும் ஒரு ஜனநாயகம் வேண்டுமென்று பாட்டாளி வர்க்கம் கோருகிறது. எனவே, "சுயநிர்ணய உரிமையை மீறாமல் இருக்கும் பொருட்டு", தந்திரக்கார திரு.செம்கோவ்ஸ்கி நினைப்பது போல் "பிரிந்து போவதற்குச் சாதகமாக வாக்களிப்பது" அல்ல, பிரிந்து போகும் பிரதேசமானது தானே அப்பிரச்சினையை முடிவு செய்து கொள்ளும் என்ற உரிமைக்குச் சாதகமாக வாக்களிப்பதே நம்முடைய கடமை.
"விவாகரத்து செய்து கொள்வதற்கு உரிமை" என்றால் அதற்கென விவாகரத்தை ஆதரித்து ஒருவன் வாக்களிக்க வேண்டியதில்லை என்ற விஷயத்தைப் புரிந்து கொள்வது திரு.செம்கோவ்ஸ்கியின் புத்திசாலித்தனத்தால் கூடக் கடினமானதல்ல என்று தோன்றுகிறது! ஆனால் பிரிவு 9ஐத் தாக்கிப் பேசும் மனிதர்களின் கதி இதுதான்- அவர்கள் தர்க்க சாஸ்திரத்தின் அரிச்சுவடியைக் கூட மறந்துவிடுகிறார்கள்.
நார்வே ஸ்வீடனிலிருந்து பிரிந்த சமயத்தில் தேசியவாதக் குட்டி பூர்ஷ்வாக்களைப் பின்பற்ற விரும்பாத ஸ்வீடிஷ் பாட்டாளி வர்க்கமானது, ஸ்வீடிஷ் குருமார்கள், நிலப்பிரபுக்கள் ஆகியோரின் விருப்பங்களுக்கு மாறாக, நார்வேயைப் பலாத்காரமாகத் தம் நாட்டுடன் ஒன்று சேர்த்து வைப்பதை எதிர்த்து வாக்களிக்கவும் பிரசாரம் செய்யவும் கடமைப்பட்டிருந்தது. இது ஏன் என்பது தெளிவாகத் தெரிகிறது, இதைப் புரிந்து கொள்வது அதிகக் கடினமல்ல. சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடானது ஆளுகின்ற, ஒடுக்கிவைக்கும் தேசிய இனங்களைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தை இதற்காக எவ்வகையில் பிரசாரம் செய்யும்படி கோருகிறதோ அத்தகைய பிரசாரத்திலிருந்து ஸ்வீடிஷ் தேசியவாத ஜனநாயகவாதிகள் விலகி நிற்கக் கூடும்.
"பிற்போக்குவாதிகள் பெரும்பான்மையாக இருந்தால் நாம் என்ன செய்வது?" என்று திரு.செம்கோவ்ஸ்கி கேட்கிறார். இது மூன்றாம் வகுப்புப் பையன் கேட்கக் கூடிய கேள்வி. ஜனநாயக முறையிலான வாக்கெடுப்பு பிற்போக்குவாதிகளுக்குப் பெரும்பான்மையை அளித்தால் ருஷ்ய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பற்றி நாம் என்ன செய்வது? நாம் எடுத்துக்கொண்ட விஷயத்திற்குச் சிறிதும் சம்பந்தமில்லாத வீணான, பொருளற்ற கேள்வியைத் திரு.செம்கோவ்ஸ்கி கேட்கிறார். எழுபது புத்திசாலிகள் கூட பதில் கூற முடியாத கேள்விகளை ஏழு முட்டாள்கள் கேட்க முடியும் என்று கூறுகிறோமே, அதைப் போன்ற கேள்வி இது.
ஜனநாயக முறையிலான வாக்கெடுப்பினால் பிற்போக்குவாதிகள் பெரும்பான்மை பெற்றால் கீழ்கண்ட இரண்டில் ஒன்று நடக்கக் கூடும். ஒன்று, பிற்கோக்குவாதிகளின் முடிவு அமுலாக்கப்பட்டு, அதன் தீய விளைவுகளினால் மக்கள், ஜனநாகத்தை நோக்கியும் பிற்போக்குவாதிகளுக்கு எதிராகவும் அநேகமாகச் சென்று விடுவார்கள், அல்லது ஜனநாயகத்துக்கும் பிற்போக்குக்கும் இடையிலான போராட்டம் ஒரு உள்நாட்டுப் போர் அல்லது வேறு ஒரு போரினால் முடிவு கட்டப்படும் - ஜனநாகத்தின் கீழ்க்கூட இது மிகவும் சாத்தியம் (செம்கோவ்ஸ்கி போன்றவர்கள் கூட இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம்).
சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது "மிகக் கடைக் கோடி பூர்ஷவா தேசியவாதத்திற்கே" "உதவுகிறது" என்று நமக்கு திரு.செம்கோவ்ஸ்கி உறுதியாகக் கூறுகிறார். இது சிறுபிள்ளைத்தனமான மடமை. ஏனென்றால், இந்த உரிமையை அங்கீகரிப்பதானது, பிரிவினையை எதிர்த்துப் பிரசாரம், கிளர்ச்சி செய்வதையோ அல்லது பூர்ஷ்வா தேசியவாதத்தை அம்பலப்படுத்துவதையோ சற்றும் விலக்கிவிடாது. மாறாக, பிரிந்து போகும் உரிமையை மறுப்பதுதான் மிகக் கடைக்கோடி மாருஷ்யக் கறுப்பு நுற்றுவர் வகை தேசியவாதத்திற்கு "உதவுவதாகும்" என்பது சிறிதும் மறக்க முடியாத உண்மை!
ரோஸா லுக்சம்பர்க் செய்த நகைக்கத் தக்க தவற்றின் - இதற்காக ஜெர்மானிய, ருஷ்ய (1903, ஆகஸ்டு) சமூக - ஜனநாயகவாதிகளால் அவர் நெடுங்காலத்திற்கு முன்பு ஏளனம் செய்யப்பட்டார் - சாராம்சம் இதுதான். ஒடுக்கப் பட்டுள்ள தேசிய இனங்களின் பூர்ஷ்வா தேசியவாதத்திற்கு உதவி விடுவோமோ என்ற அச்சத்தினால் சில ஆட்கள் ஒடுக்கும் தேசிய இனத்தின் பூர்ஷ்வா தேசியவாதத்திற்கு, அதற்கும் மேலாகக் கறுப்பு நுற்றுவர் வகை தேசியவாதத்திற்கு உதவி விடுகிறார்கள்.
கட்சியின் வரலாறு, கட்சியின் செயல்திட்டம் ஆகிய விஷயங்களில் கன்னித்தன அறிவாமையுடன் இருந்திராவிட்டால் திரு.செம்கோவ்ஸ்கி, 11 ஆண்டுகளுக்கு முன் ஸர்யாவில் ரு.ச.ஜ.தொ.கட்சியின் செயல்திட்ட முன்வரைவை (இது 1903ல் செயல்திட்டமாக அங்கீகரிக்கப்பட்டது) ஆதரித்து பிளெஹானவ் எழுதிய பொழுது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதை விசேஷமான விஷயமாக்கி, அதைப் பற்றி (பக்கம் 38) கீழ்கண்டவாறு எழுதினாரே அதை மறுப்பது தன்னுடைய கடமை என்பதை உணர்ந்திருப்பார்:
"இந்தக் கோரிக்கையானது தத்துவ ரீதியில் கூட பூர்ஷ்வா ஜனநாயகவாதிகளுக்குக் கட்டாயமானதல்ல, ஆனால் சமூக - ஜனநாகவாதிகளாகிய நமக்கு இது கட்டாயமானது. நாம் இதைப் பற்றி மறந்து விடுவோமேயானால், அல்லது மாருஷ்ய இனத்தைச் சேர்ந்த நமது சகதேசத்தவர்களது தேசிய இனக் காழ்ப்புக்களை எங்கே தாக்கித் தூண்டிவிடுவோமோ என்ற பயத்தினால் இக்கோரிக்கையை முன்வைக்க நாம் அஞ்சினால், 'உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்' என்ற உலக சமூக - ஜனநாயகவாதிகளின் போர்க் கோஷம் வெட்கக்கேடான ஒரு பொய்யாக நமது வாயிலிந்து ஒலிக்கும்."
ஸர்யா பத்திரிகை நடந்த அந்த நாட்களிலேயே இந்த அடிப்படையான வாதத்தை முன்வைத்தார் பிளெஹானவ். இது மகாநாட்டுத் தீர்மானத்தில் விவரமாக வளர்த்து விரிவு படுத்தப்பட்டத. பதினொரு ஆண்டுகளாக திருவாளர்கள் செம்கொவ்ஸ்கிகளால் இந்த ஆண்டுகளாக திருவாளர்கள் செம்கோவ்ஸ்கிகளால் இந்த வாதத்தின்பால் மற்றவர் கவனத்தை இழுக்க முயலவில்லை. ருஷ்யாவில் மாருஷ்யர்கள் 43 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். ஆனால் மாருஷ்ய தேசியவாதம் மற்ற 57 சதவிகித ஜனத்தொகை மீது ஆட்சி செய்து, எல்லா தேசிய இனங்களையும் ஒடுக்குகிறது. நமது தேசியவாதப் பிற்போக்குவாதிகளுடன் தேசியவாத மிதவாதிகள் (ஸ்துரூவே, அவரது சகாக்கள், முற்போக்குவாதிகள் மதலியவர்கள்) ஏற்கெனவே கைகோத்துவிட்டார்கள், தேசியவாத ஜனநாகவாதத்தின் "உதயக் கதிர்கள்" தோன்றிவிட்டன (ருஷ்ய விவசாயிகளின் தேசியவாதக் காழ்ப்புக்களைப் பற்றிய நமது கொள்கையில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று 1906 ஆகஸ்டில் திரு.பெஷெகோனவ் வேண்டுகோள் விடுத்திருப்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்).
ருஷ்யாவில் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி முடிந்துவிட்டது என்று கலைப்புவாதிகள் மட்டும் தான் கருதுகிறார்கள். உலகம் முழுவதிலும் அத்தகையதொரு புரட்சியின் உடனடுத்த நிகழ்ச்சியாக இருந்தவையும் இருப்பவையும் தேசிய இன இயக்கங்களே குறிப்பாக ருஷ்யாவில் எல்லைப்புறப் பிரதேசங்கள் பலவற்றில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் வாழ்கின்றன. அத்தகைய தேசிய இனங்கள் அண்டை நாடுகளில் இன்னும் அதிகச் சுதன்திரத்தைப் பெற்றிருக்கின்றன. அண்டை நாடுகளைக் காட்டிலும் ஜாரிசம் அதிகப் பிற்போக்குத்தனமானது. சுதந்திரமான பொருளாதார வளர்ச்சிக்கு அது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய தடையாக விளங்குகிறது, மாருஷ்ய தேசியவாதத்தை ஊட்டி வளர்ப்பதற்கு அது தன்னாலான அனைத்தையும் செய்கிறது. மற்ற எல்லா நிலைமைகளும் சரிசமமாக இருந்தால் சிறிய அரசுகளைவிடப் பெரிய அரசுகளை மார்க்சியவாதிகள் இயல்பாக விரும்புகிறார்கள். ஆனால், ஜாரிச முடியாட்சியின் கீழ் உள்ள நிலைமைகள் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் பெரும்பாலான ஆசிய நாடுகளிலும் உள்ள நிலைமைகளுக்குச் சமமானவைகளாக இருக்கக் கூடும் என்று எண்ணுவது கூடப் பரிகசிக்கத் தக்கது, பிற்போக்குத்தனமானது.
ஆகவே, இன்றைய ருஷ்யாவில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பது சந்தேகத்துக்கிடமில்லாத சந்தர்ப்பவாதமாகும், இன்னும் சகல வல்லமை படைத்ததாக விளங்கும் கறுப்பு நூற்றூவர் வகை மாருஷ்ய தேசியவாதத்தை எதிர்த்துப் போரிட மறுப்பதாகும்.
1913
டிசம்பர் 15 (28)

No comments:
Post a Comment