சோஷலிசப் புரட்சி பற்றி
மார்க்ஸ் - எங்கெல்ஸ் – லெனின்
4.சோஷலிசத்திற்கான போராட்டத்தின் ஓர் இணைக்கூறு என்கிற வகையில் ஜனநாயகத்திகான போராட்டம்
லைப்சிக் நகரிலுள்ள அகுஸ்த் பெபெலுக்கு
எழுதிய கடிதத்திலிருந்து
லண்டன், ஜூன் 6, 1884
....நாம் 1848-ல் இருந்தது போலவே இன்னமும் எதிர்காலத்தைச் சேர்ந்த எதிர்க் கட்சியாகவே இருக்கிறோம், எனவே இன்றைய கட்சிகளில் மிகவும் தீவிரமான கட்சி தலைைமைக்கு வருவது அவசியம், நாம் அதற்கு ஒரு தாற்கால எதிர்க்கட்சியாக ஆக முடிவதற்கு முன்னால், அரசியல் ஸ்தம்பிப்பு - அதாவது, அதிகார பூர்வமான கட்சிகளிடையேயுள்ள குறிக்கோளற்ற, நோக்கமற்ற போராட்டம் - இன்றுள்ள நிலையில் நீண்ட காலப்போக்கில் நமக்குப் பயனுள்ளதாய் இருக்க முடியாது. ஆனால் இடதுசாரியை நோக்கிப் படிப்படியாக மாறிப் போகிறதாய் உள்ள இக்கட்சிகளின் படிப்படியாக மாறிப் போகிறதாய் உள்ள இக்கட்சிகளின் ஒரு மற்போக்கான போராட்டம் நமக்குப் பயனுள்ளதாய் இருக்க முடியும்... ஒவ்வொரு இடதுசாரித் திசையிலான நிலைமாற்றத்திலும் தொழிலாளிகளுக்குச் சலுமைகள் வந்து சேருகின்றன.... அதைவிட முக்கியமானது என்னவென்றால், நிர்ணயமான போருக்காக மேன்மேலும் அதிகரித்த சக்தியோடு போக்களம் துப்புரவாக்கப்பட்டு வருகிறது, கட்சிகளின் நிலைபாடுகளும் மேலும் தெளிவாகி வருகின்றன, மேலும் வேறுபடுத்திக் காட்டிக் கொண்டு வருகின்றன. பிரெஞ்சுக் குடியரசு தன்னுடைய அவசியமகரமான விளைவை நோக்கிப் போகும் இந்த மெதுவான, ஆனால் இடையறாத வளர்ச்சி - தீவிரமான, போலி சோஷலிஸ்டு பூர்ஷுவா வர்க்கத்தினருக்கும் உண்மையிலேயே புரட்சிகரமானவர்களாயுள்ள தொழிலாளிகளுக்கும் இடையேயுள்ள எதிர்மறை - அதிமுக்்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று என்றே நான் கருதுகிறேன், அதில குறக்கீடு இராது என்றும் நம்புகின்றேன்.
கடிதத் திரட்டு
--------------------------------------------------------------------------------
"1891-ன் நகல் சமூக ஜனநாயகவாத வேலைத் திட்டத்தைப் பற்றிய ஒரு விமர்சனவுரை"
என்பதிலிருந்து
....சோஷலிஸ்டு-எதிர்ப்புச் சட்டம் மீண்டும் புதுப்பிக்கப்படுவது பற்றிப் பயப்பட்டோ, அந்தச் சட்டம் அமலிலிருந்து போது மித மிஞ்சிய அவசரத்துடன் வெளியிடப்பட்ட பிரகடனங்களை நினைவுபடுத்திக் கொண்டோ கட்சியின் எல்லாக் கோரிக்கைகளையும் சமாதான வழியிலே அமலாக்குவதற்கு இன்று ஜெர்மனியில் உள்ள சட்ட பூர்வமான அமைப்பு போதுமானதாயிருப்பதாகக் கட்சி கருத வேண்டும் என்று அவர்கள் இப்போது விரும்புகிறார்கள். "தற்காலச் சமுதாயம் சோஷலிசத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது" என்று தன்னையும் கட்சியையும் நம்பச் செய்வதற்கான முயற்சிகளே இவை. அதன் மூலமாக, தற்காச் சமுதாயம் அதே அவசியத்துடன் பழைய சமுதாய அமைப்பை மீறி வளராதா, நண்டு தன் மேலோட்டை உடைத்தெறிவது போல் அது இந்தப் பழைய மேலோட்டைப் பலவந்தத்தின் மூலமாக உடைத்தெறிய வேண்டியதாயிருக்காதா, ஜெர்மனியில் இன்னமும் இருந்துவரும் அரை எதேச்சாதிகார, முறையிலான, மற்றும் வர்ணிக்க வொண்ணாத வகையில் குழப்பமாயுள்ள அரசியல் அமைப்பின் விலங்குகளை அது உடைத்தெறிய வேண்டியதாயிராதா என்று கேள்வி போட்டுக் கொள்ளாமலேயே அப்படிச் செய்யப்படுகிறது. மக்களின் பெரும்பான்மையின் ஆதரவு இருந்தால் அரசியல் சட்டத்தின் வழியில் உசிதம் போல் ஒருவனுக்குச் செய்ய முடிகிறதாயுள்ள நாடுகளில் - பிரான்சு, அமெரிக்கா போன்ற ஜனநாயகக் குடியசுகளில், பிரிட்டன் போன்ற முடியரசுள்ள நாடுகிளில்- பழைய சமுதாயம் புதிய சமுதாயமாகச் சமாதானமான வழியில் வளரக்கூடும் என்று ஒருவன் எண்ணிப் பார்க்க முடியும்... ஆனால், அரசாங்கம் அநேகமாக சர்வ வல்லமை படைத்ததாகவும் நாடாளுமன்றத்துக்கும் மற்றெல்லாப் பிரதிநிதித்துவ உறுப்புகளுக்கும் உண்மையான அதிகாரம் இல்லாததாயும் இருக்கிற ஜெர்மனியில், இந்த ஜெர்மனியில் இப்படிப்பட்ட விஷயத்தை எடுத்துப் பேசுவது - அதிலும் அப்படிப் பேசுவதற்கு தேவை எதுவும் இல்லாதிருக்கும் போது எடுத்துப் பேசுவதற்கு - எதேச் சாதிகாரத்திடமிருந்து அரை மூடியை நீக்கிவிட்டு அதன் நிர்வாணத்தை மறைப்பதற்குத் தன்னைத்தானே ஒரு திரையாக ஆக்கிக் கொள்வது என்றுதான் பொருள்.
நீண்ட காலப் போக்கில் இப்படிப்பட்ட கொள்கை தன் சொந்தக் கட்்சியைத் தடம் புரளச் செய்வதிலேதான் கொண்டு போய்விட முடியும். அவர்கள் பொதுவான, கருத்தியலான அரசியல் பிரச்சினைகளை முன்னணிக்குத் தள்ளிக் கொண்டு வருகிறார்கள், அதன் வழியே உடனடியான, தூலமான பிரச்சனைகளை மறைக்கிறார்கள், முதன் முதலான பெரும் நிகழ்ச்சிகளும் முதன்முதலான அரசியல் நெருக்கடியும் வந்து சேருகிற தருணத்தில் இந்த உடனடியான, தூலமான பிரச்சினைகள் தாமகவே எதிர்ப்படுகின்றன. நிர்ணயமான தருணத்தில் கட்சி நிர்க்கதியானதாகக் காட்டிக் கொள்வதைத் தவிர, மிகவும் நிர்ணயமான பிரச்சினைகன் என்றைக்கும் விவாதிக்கப்படாலே விடப்பட்டதினால் அந்தப் பிரச்சினைகளைப் பற்றி அக்கட்சியில் நிச்சயமின்மையும் கருத்துச் சச்சரவு நிலவுவதைத் தவிர இதிலிருeது வேறு என்ன விளைய முடியும்? .... அந்தந்த நாளைய தற்காலிக இப்படி மறப்பதும், பின்னால் வரப்போகிற விளைவுகளைப்பற்றி யோசிக்காமல் அந்தந்த தருணத்தின் வெற்றிக்காக இப்படிப் போராடுவதும் முயல்வதும், நிகழ்சாலத்திற்காக இயக்கத்தின் எதிர்காலத்தை இப்படிப் பலியிடுவதும் "நேர்மையின் பாற்பட்டதாக" எண்ணிச் செய்யலாம், ஆனால் அது சந்தர்ப்பவாதமே ஆகும். மற்றும் "நேர்மையான" சந்தர்ப்பவாதம் ஒருகால் எல்லாச் சந்தர்ப்பவாதத்தையும் விட மிகவும் அபாயகரமானதாகும்!
1891 ஜீன்

பாவுல் லபார்க்குக்கு
எழுதிய கடிதத்திலிருந்து
பி.எங்கெல்ஸ்
லண்டன், மார்ச் 6, 1894
....தொழிலாளி வர்க்கத்தைப் பொறுத்த வரையில் குடியரசுக்கும் முடியரசுக்கும் வித்தியாசம் தொழிலாளி வர்க்கத்தின் எதிர்கால ஆட்சிக்குப் பயன்படுவதற்குத் தயார் நிலையில் உள்ள அரசியல் வடிவம் குடியரசாகும் என்பதில் உள்ளது. உங்களுக்கு அது ஏற்கனவே இருக்கிறது, எனவே எங்களோடு ஒப்பிடும் போது உங்களுக்கு அனுகூலம் உண்டு, எங்களைப் பொறுத்தவரை அதற்கு நாங்கள் இருபத்தி நான்கு மணி நேரம் பாடுபட்டாக வேண்டியிருக்கும். ஆனால், மற்ற ஒவ்வொரு அரசாங்க வடிவம் போலவே குடியரசுங்கூட அதன் உள்ளடக்கத்தை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது, அது பூர்ஷுவா ஆட்சியின் ஒரு வடிவமாக இருக்கும்வரை எந்த ஒரு முடியரசு போலவே அதுவும் நமக்குப் பகையாகவே இருக்கிறது. [இந்தப் பகைமையில் வடிவங்கள் வேறுபட்டிருப்பதைத் தவிர]. எனவே அது சாராம்சத்தில் வடிவத்திலே சோஷலிஸ்டாக இருப்பதாகக் கருதுவதோ அதில் முதலாளி வர்க்கம் ஆதிக்கம் வகித்திருக்கும் போது அதனிடம் சோஷலிஸ்டுப் பணிகளை ஒப்படைப்பதோ முற்றிலும் ஆதாரமற்ற ஒரு பிரமையே ஆகும். அதனிடமிருந்து நம்மால் சலுகைகளைப் பறிக்க முடியும், ஆனால், மறுநாளே பெரும்பான்மையாக மாறிவிடும் அளவுக்குப் பலமுள்ள சிறுபான்மையைக் கொண்டு அதை நம்மால் கட்டுப்படுத்த முடிகிறதாயிருக்கிற போதிலுங் கூட நம் சொந்த அக்கறைக்குரிய விஷயங்களை நிறைவேற்றுவதை அதன் பொறுப்பில் விடுவதற்கு நம்மால் என்றைக்கும் முடியாது.....
கடிதத்திரட்டு

"ருஷ்யாவின் சமூக ஜனநாயகவாதிகளின் பணிகள்"
என்பதிலிருந்து
...தொழிலாளி வர்க்கம் ஒன்றுதான் எதேச்சாதிகார முறையின் ஒரு முரணற்ற ஜனநாயக ரீதியான, மனத்திட்பமிக்க எதிரியாக, எந்தச் சலுகைகளையும் கொடுக்கவோ சமரங்களையும் செய்து கொள்ளவோ முடியாத எதிரியாக இருக்க முடியும் - தன் வர்க்க நிலையின் காரணமாக அது அப்படித்தான் இருந்து தீரவேண்டும். தொழிலாளி வர்க்கம் ஒன்றுதான் அரசியல் சுதந்திரத்திற்கும் ஜனநாயக பூர்வமான நிறுவனங்களுக்கும் முன்னணியிலுள்ள போராளியாக இருக்க முடியும். முதலாவதாக, அப்படி இருக்கக் காரணம் அரசியல் கொடுங்கோன்மை தொழிலாளி வர்க்கத்தின் மீது மிகவும் பளுவாக விழுந்து அழுத்திகிறது, அந்தக் கொடுங்கோன்மையைக் கொஞ்சம் திருத்துவதற்கு அதன் நிலை அதற்கு வாய்ப்பு எதுவும் கொடுப்பதில்லை - உயர்தர அதிகாரிகளை அது அணுக இடமில்லை, அலுவலர்களைக்கூட அணுக இடமில்லை, பொது ஜன அபிப்பிராயத்தின் மீதும் அதற்குச் செல்வாக்கு இல்லை. இரண்டாவதாக, தொழிலாளி வர்க்கம் ஒன்றுதான் அரசியல், சமுதாய அமைப்பு முறையை முழுமையாக ஜனநாயக மயமாக்க வல்லது, ஏனெனில் அது இந்த அமைப்பு முறையைத் தொழிலாளிகளின் கையில் வைக்கும். எனவே தான், தொழிலாளி வர்க்கத்தின் ஜனநாயக நடவடிக்கைகளை மற்ற வர்க்கங்களின் குழுக்களின் ஜனநாயக அபிலாஷைகளோடு ஒன்று கலந்து விடுவது ஜனநாய இயக்கத்தை பலவீனப்படுத்தும், அரசியல் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும், அதன் உறுதியைக் குறைக்கும், முரணற்ற தன்மையைக் குறைக்கும், சமரசம் செய்து கொள்ளும் வாய்ப்பைப் பெருக்கும். மறுபக்கத்தில், தொழிலாளி வர்க்கம் ஜனநாயக நிறுவனங்களுக்கான முன்னணிப் போராளியாகத் தலைமையில் நிற்குமேயானால் இது ஜனநாயக இயக்கத்தைப் பலப்படுத்தும், ஏனெனில் தொழிலாளி வர்க்கம் மற்ற எல்லா ஜனநாயக, அரசியல் எதிர்ச் சக்திகள் அமைத்தையும் முன் செல்ல முடுக்கி விடும், மிதவாதிகளை அரசியல் தீவிரவாதிகளின் பக்கமாகத் தள்ளும், அரசியல் தீவிரவாதிகளைத் தற்காலச் சமுதாயத்தின் அரசியல், சமுதமாயக் கட்டுக்கோப்பு முழுவதினின்றும் மாற்றவொண்ணாத வகையில் கத்தரித்துக் கொள்ளும் படியான திசையில் தள்ளும்.
1897 இறுதி

"என்ன செய்ய வேண்டும்?"
என்பதிலிருந்து
....."கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு புரட்சிகரமான இயக்கத்தையும் ஆதரிக்கிறார்கள்", அக்காரணத்திற்காகவே நம் சோஷலிஸ்டு துணிபுகளை ஒரு கணமேனும் மறைக்காமல் மக்கள் முழுவதின் முன்பும் பொதுவான ஜனநாயகப் பணிகளை விளக்கிச் சொல்லவும் வலியுறுத்தவும் நாம் கடமைப் பட்டிருக்கிறோம் என்பதை நடைமுறையில்மறக்கிறவன் ஒரு சமூக - ஜனநாயகவாதியல்ல. ஒவ்வொரு பொதுவான ஜனநாயகப் பிரச்சினையையும் எழுப்புவதிலும் வலியுறுத்துவதிலும் தீர்ப்பதிலும் எல்லோருக்கும் முன்னே தலைமையில் இருப்பது தன் கடமை என்பதை நடைமுறையில் மறக்கிறவன் ஒரு சமூக ஜனநாயவாதி அல்ல.
1901 - 1902 பிப்ரவரி

"ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்தந்திரங்கள்"
என்பதிலிருந்து
வி.இ.லெனின்
....அரசியல் ஜனநாயகத்தின் வழியில் அல்லாமல் வேறெந்த வழியிலாயினும் சோஷலிசத்தை அடைய விரும்புகிறவன், ஒருங்கே பொருளாதா ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அபத்தமான, பிற்போக்கமான முடிவுகளுக்கே தவிர்க்க முடியாதபடி வந்து சேருவான்.
...முரணுள்ள பூர்ஷுவா ஜனநாயகத்தை எதிர்க்கும் போராட்டத்தில் தன் கைகள் கட்டுண்டு போகாமல் தவிர்ப் பதற்குத் தொழிலாளி வர்க்கம் விவசாயி மக்களைப் புரட்சிகரமான உணர்வு பெறும்படி தட்டி எழுப்பவும், விவசாயி மக்களின் தாக்குதலை வழி செலுத்தவும், அதன் மூலமாக முரணற்ற தொழிலாளி வர்க்க ஜனநாயகவாதக் கொள்கையைச் சுதந்திரமாகப் பின்பற்றவும் போதுமான வர்க்க உணர்வும் பலமும் பெற்றிருக்க வேண்டும்.
1905 ஜீன் - ஜீலை

"சோஷலிசப் புரட்சியும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையும்"
என்பதிலிருந்து
வி.இ.லெனின்
.....சோஷலிசப் புரட்சி தனி ஒரு செய்கை அல்ல. ஒரே ஒரு முனையில் நடக்கும் ஒரே ஒரு போர் அல்ல, அது கடுமையான வர்க்க மோதல்களைக் கொண்ட முழுமையான ஒரு சகாப்தம், எல்லா முனைகளிலும் - அதாவது, எல்லாப் பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் மீதும் - நடக்கும் நீண்ட போர்களின் தொடராகம், முதலாளி வர்க்கத்தைப் பறிமுதல் செய்வதிலேதான் இந்தப் போர்கள் போய் முற்றுப்புள்ளி பெற முடியும். ஜனநாயகத்திற்கான போராட்டம் தொழிலாளி வர்க்கத்தைச் சோஷலிசப் புரட்சியிலிருந்து திசை திருப்பிவிடவோ, அதை மறைத்து மூடிவிடவோ வல்லது என்று நினைப்பத கொடிய பிழையாகும். அதற்கு மாறாக, முழுமையான ஜனநாயகத்தைச் செயல் படுத்தாத வெற்றிகரமான சோஷலிசம் எப்படி இருக்க முடியாதோ அதே போல் ஜனநாயகத்திற்காக ஒரு முழுவடிவான, முரணற்ற, புரட்சிகரமான போராட்டம் இல்லாமல் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் மீது தான் வெற்றி பெறுவதற்குத் தயார் செய்ய முடியாது...
1916 ஜனவரி - பிப்ரவரி

இனெசா ஆர்மாந்துக்கு
எழுதிய கடிதத்திலிருந்து
டிசம்பர் 25, 1916.
....ஜனநாயகத்திற்கான போராட்டத்தை சோஷலிசப் புரட்சிக்கான போராட்டத்திற்குக் கீழ்ப்படுத்தி அவ்விரண்டையும் எப்படி இணைப்பது என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும், இதிலேதான் கஷ்டம் முழுவதும் இருக்கிறது, இதிலேதான் சாரம் முழுவதும் இருக்கிறது.
தொகுதி 35

No comments:
Post a Comment