Sunday, February 7, 2010

மகாருஷ்யர்களின் தேசிய இனப் பெருமிதம் பற்றி - லெனின்

மகாருஷ்யர்களின் தேசிய இனப் பெருமிதம் பற்றி - லெனின்


தேசிய இனத்தைப் பற்றியும் தாய்நாட்டைப் பற்றியும் எவ்வளவு பேச்சும் வாதமும் கூச்சலும் இன்று காணப்படுகின்றன! இங்கிலாந்தில் மிதவாத மந்திரிகளும் தீவிரவாத மந்திரிகளும், பிரான்சில் "முற்போக்கான" பத்திரிகை எழுத்தாளர்கள் பலரும் "இவர்கள் பிற்போக்கான பத்திரிகை எழுத்தாளர்கள் சொல்வதை எல்லாம் பூர்ணமாக ஏற்றுக் கொள்கிறார்கள்", ருஷ்யாவின் அதிகார பூர்வமனா, காடேட்டு, முற்போக்கான [சில நரோத்னிக்குகளும் "மார்க்சியவாதிகளும்" சேர்ந்த] பேனா ஓட்டிகளின் கும்பல் - எல்லோருமே தங்களது "தாய் நாட்டின்" விடுதலையையும் சுதந்திரத்தையும், தேசிய இன சுதந்திரக் கோட்பாட்டின் சிறப்பையும் ஆயிரம் ஆயிரம் விதமான சுருதிகளில் போற்றிப் புகழ்கிறார்கள். இவர்களில் கொலைகார நிக்கோலஸ் ரொமாபனவையும், நீக்ரோக்கள், இந்தியர்கள் கியோரைச் சித்திரவதை செய்பவர்களையும் கூலிக்காகத்துதிபாடுபவர்கள் எங்கே முடிகிளார்கள், தமது முட்டாள்தனத்தினாலும் மனவுறுதியின்மையினாலும் "வெள்ளப் போக்கில்" தம் வசமின்றி அடித்துச் செல்லப்படும் சாதாரண பிலிஸ்டைன்கள் எங்கே துவங்குகின்றார்கள் என்பதை நம்மால் வேறுபடுத்திக் கண்டுபிடிக்க இயலாது. இந்த வேறுபாடு முக்கியமானதுமல்ல. ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனங்களின் நிலப்பிரபுக்கள், முதலாளிகளின் நலன்களுடன் உறுதியாக இணந்திருக்கும் மிக பரவலானதும் மிக ஆழப்பதிந்ததுமான ஒரு சித்தாந்தப் போக்கை நாம் காண்கிறோம். இவ்வர்க்கங்களுக்குச் சாதகமான கருத்துகளைப் பரிசாரம் செய்வதற்குக் கோடி, பத்துக்கோடிக் கணக்கிலும் பணம் ஒவ்வொரு ஆண்டும்
செலவிடப்படுகிறது, மேன்ஷிக்கவ் போன்ற திடமான தேசியவெறியர்களிலிருந்து தங்களது சர்தர்ப்பவாதத்தினால் அல்லது மனவுறுதியின்மையினால் தேசியவெறியர்களாகிவிட்ட பிளெஹானவ், மாஸ்லவ், ருபனோவிச், ஸ்மிர்னோவ், கிரொபோட்கின், பூர்த்ஸெவ் போன்றவர்கள் வரை எல்லா ஊற்றுக்கண்களிலிருந்தும் நீரைப் பெற்றுக்கொள்ளும் பெரிய அரைவை மில் இது.

இந்தச் சித்தாதந்தப் போக்கைப் பற்றி மகாருஷ்ய சமூக - ஜனநாயகவாதிகளாகிய நாமும் நமது கொள்கையை விளக்குவோம். ஐரோப்பாவின் கிழக்குக் கோடியிலும் ஆசியாவின் ஒரு பெரும் பரப்பிலும் ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனத்தின் பிரதிநிதிகளாகிய நாம் தேசிய இனப் பிரச்சினையின் மாபெரும் முக்கியத்துவத்தை மறப்பது அழகல்ல, - அதுவும் "மக்களினங்களின் சிறைச் சாலை" என்று மிகப் பொருத்தமாக அழைக்கப்படும் ஒருநாட்டில், - ஐரோப்பாவின் கிழக்குக் கோடியிலும் ஆசியாவிலும் முதலாளித்துவமானது பல "புதிய" பெரிய, சிறிய தேசிய இனங்களுக்கு உயிரும் உணர்வும் ஊட்டி எழுப்பிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், -ஐய்கியப் பிரபுக்களின்கவுன்சிலின் நலன்களுக்கும், குச்கோவ்கள், கிரேஸ்தோவ்னிக்கவ்கள், தல்கரூக்கவ்கள், குத்லெர்கள், ரோதிச்செவ்கள் ஆகியோரது நலன்களுக்கும் உகந்த வகையில் பல தேசிய இனப் பிரச்சினைகளைத் "தீர்ப்பதற்கு வேண்டி" லட்சக்கணக்கான மாகாருஷ்யர்களையும் "வேற்று இனத்தவர்களையும்" ஜாரிஸ முடியாட்சியானது ஆயுதம் தந்து தயாராக வைத்திருக்கையில் அதை நாம் மறப்பது அழகல்ல.

வர்க்க உணர்வு கொண்ட மகாருஷ்யப் பாட்டாளிகளாகிய நடக்குத் தேசிய இனப்பெருமிதம் அப்பாற் பட்டதா? இல்லை , நிச்சயமாக இல்லை! நாம் நமது மொழியையும் தாய்நாட்டையும் நேசிக்கிறோம், அதன் உழைக்கும் மக்களை [அதன் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் பத்தில் ஒன்பது பங்கு] ஜனநாயகவாதிகள், சோஷலிஸ்டுகளின் உணர்வு பூர்வமான வாழ்க்கைத் தரத்துக்கு உயர்த்துவதற்கு நம்மால் இயன்றதனைத்தையும் செய்கிறோம். ஜாரிஸக் கொலையாளிகளும் பிரவுக்களும் முதலாளிகளும் நமது அருமையான தாய்நாட்டுக்குச் செய்யும் வன்முறைச் செயல்களையும் கொடுமைகளையும் அவமதிப்பிகளையும் கண்டு உணரும் பொழுது மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக நாம் வேதனைப்படுகிறோம். மகாருஷ்யர்களாகிய நமது மத்தியில் இச்கொடுமைகளை எதிர்த்துப் போராடுபவர்கள் இருக்கத்தான் வய்கிறார்கள் என்பதும், அதே நம்மிடையிலிருந்துதான் ரடிஷ்செவ், டிசம்பரிஸ்டுகள், 1870 க்களைச் சேர்ந்த புரட்சிகர ராஸ்னச்சீன்த்ஸிகள் ஆகியோர் தோன்றினார்கள் என்பதும், 1905ல் மகாருஷ்யத் தொழிலாளி வர்க்கம் ஒரு பெரும் வலிமை வாய்ந்த, வெகுஜனப் புரட்சிக் கட்சியை உருவாக்கியது என்பதும், அதே சமயத்தில் மகாருஷ்ய விவசாயி ஜனநாயகவாதியாகத் தொடங்கி, மத குருமார்களையும் நிலப்பிரபுக்களையும் துரத்தியடிக்கக் கிளம்பினான் என்பதும் ஆகிய இவற்றைக் கண்டு நாம் பெருமிதப்படுகிறோம்.

தமது வாழ்நாளைப் புரட்சிக்காகவே அர்ப்பணித்த மகாருஷ்ய ஜனநாயகவாதியான செர்னிஷேவ்ஸ்கி அரை நுற்றாண்டுக்கு முன்பு கூறிய நம் ஞாபகத்துக்கு வருகிறது. "துயரம் நிறைந்த ஒரு தேசிய இனம்,. அடிமைகள் வாழும் ஒரு தேசிய இனம், உச்சியிலிருநு்து அடிவரை எல்லோரும் அடிமைகள்" என்றார் அவர். வெளிப்படையாகவும் மறைவாகவும் அடிமைகளாக [ஜாரிஸ முடியாட்சியின் அடிமைகளாக] இருக்கும் மகாருஷ்யர்களுக்கு இவ்வர்த்தைகளை நினைவுகூர்வது பிடிப்தில்லை. ஆனால் நம்மைப் பொருத்தவரை, நமது நாட்டின் மீதுள்ள உண்மையான அன்பை வெளிப்பத்தும் வார்த்தைகள் இவை, மகாருஷ்யப் பொதுஜனங்களிடையில் புரட்சி உணர்வு இல்லையே என்ற துயரம் தோய்ந்த அன்பு அது. இந்தப் புரட்சி உணர்வு அன்று காணப்படவில்லை. இன்று அது குறைவாகக் காணப்படுகிறது, ஆனால் கட்டாயமாக நிலவுகிறது. நமது மகாருஷ்ய தேசிய இனமும் கூட ஒரு புரட்சிகரமான வர்க்கத்தை உருவாக்கியிருக்கிறது என்பதால், கொலைகாரக் கலகங்களையும், வரிசை வரிசையாகத் தூக்குமரங்களையும், கொடுஞ்சிறைகளையும், பெரும் பஞ்சங்களையும், மதகுருக்களுக்கும் ஜார்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் அடிமை ஊழியம் செய்வதை மட்டுமின்றி, சுதந்திரத்துக்கும் சோஷலிசத்துக்குமான போராட்டத்தையும் பேருதாரணங்களாக மனித இனத்துக்கு நமது தேசிய இனம் கூடத் தர முடியும் என நிரூபித்திருப்பதால் நம்முள்ளத்தில் ஒரு தேசிய இனம் பெருமித உணர்வு ஊற்றெடுக்கிறது.

நம்மை ஒரு தேசிய இனப் பெருமித உணர்வு ஆட்கொள்ளுகிறது. அதே காரணத்தினால் நாம் நமது அடிமைத்தனம் நிறைந்த கடந்த காலத்தைக் குறிப்பாக வெகுவாக வெறுக்கிறோம் [அப்பொழுதுதான் ஹங்கேரி, போலந்து, பாரசீகம், சீனா ஆகியவற்றின் சுதந்திரத்தை நசுக்குவதற்காக நிலப்பிரபுக்கள் விவசாயிகளைப் போக்களத்திற்குத் தள்ளினார்கள்], அதே காரணத்தினால் அடிமைத்தனம் நிறைந்த இக்காலத்தையும் நாம் வெறுக்கிறோம். இப்பொழுது போலந்தையும் உக்ரேனியாவையும் குரல்வளையைப் பிடித்து நெறிப்பதற்காகவம், பாரசீகத்திலும் சீனாவிலும் ஜனநாயக இயக்கத்தை நசுக்குவதற்காகவும், நமது மகாருஷ்ய தேசிய இனக் ககௌரவத்துக்கு இழுக்காக விளங்கும் ரொமானவ்கள், பப்ரீன்ஸ்கிகள், புரிஷ்கேவிச்சுகளின் கும்பலைப் பலப்படுத்துவதற்காகவும் அதே நிலப்பிரபுக்கள், முதலாளிகளின் ஆதரவுடன், நம்மைப் போர்க் களத்திற்குத் தள்ளினார்கள். ஒரு மனிதன் அடிமையாகப் பிறந்தால் அது அவனுடைய குற்றம் அல்ல, ஆனால் தனது விடுதலைக்குப் போராட விருமி்பாதது மட்டுமின்றி, தனது அடிமைத்தனத்தை ஆதரித்து அதை அழகுபட வர்ணிக்கும் [உதாரணமாக, போலந்து, உக்ரேனியா போன்றவற்றின் கழுத்தை நெரிப்பது மகாருஷ்யர்களின் "தாய்நாட்டைக் காப்பதாகும்" என்று கூறும்] ஒரு அடிமை அடிவரடி, கீழ்மகன், அவனைக் கண்டால் நியாயமான சீற்றமும் வெறுப்பும் அருவருப்பும் நம் மனதில் எழுகின்றன.

"பிற தேசிய இனங்களை ஒடுக்குகிற என்த ஒரு தேசிய இனமும் சுதந்திரமாயிருக்க முடியாது" பத்தொன்பதாம் நூற்றாண்டின் முரண்பாடுகளற்ற ஜனநாயத்தின் மாபெரும் பிரதிநிதிகளாக விளங்கியவர்களும், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின்ஆசான்களுமான மார்க்ஸ், எங்கெலஸ்சின் வாக்கு இது. தேசிய இனப் பெருமித உணர்வு நிறைந்த மகாருஷ்யத் தொழிலாளர்களாகிய நாம், என்ன நேரினும் சரியே, ஒரு கட்டற்ற, சுதந்திரமான, சுயேச்சையான, ஜனநாயக ரீதியான, குடியரசான, பெருமிதம் மிக்க மகாருஷ்யாவை விரும்புகிறோம், சமத்துவம் என்ற மனிதத் தன்மை மிக்க கோட்பாட்டின் அடிப்படையில் - ஒரு பெரும் தேசிய இனத்துக்கு இழுக்கைத் தரும் விசேஷ உரிமைகள் என்ற நிலப்பிரபுத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் அல்லாமல் - அண்டை நாடுகளுடன் தனது உறவுகளை அமைத்துக் கொள்ளும் மகாருஷ்யாவை நாம் பிரும்புகிறோம். இதை நாம் விரும்புகிற காரணத்தினால் நாம் கூறுகிறோம், இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் [ஐரோப்பாவின் கீழ்க் கோயிலும் கூடத்தான்] "தாய்நாட்டைக் காப்பது" என்பது முடியாட்டிசியை, நமது தாய்நாட்டின் நிலப்பிரபுக்களை, முதலாளிகளை - நமது நாட்டின் இப்படுமோசமான எதிரிகளை எதிர்த்து எல்லாவிதமான புரட்சிகரமான முறைகளையும் உபயோகித்துப் போராடுவதன்றி வேறுவிதத்தில் சாத்தியமில்லை- எந்தப் பாரிலும் ஜாரிஸத்தின் தோல்வியை, மகாருஷ்யாவின் பத்தில் ஒன்பது குடிமக்களுக்கு ஆகக் குறைந்த தீமை என்ற வகையில், விரும்பாமல் மகாருஷ்யர்கள் "தாதாய்நாட்டைக் காப்பது" சாத்தியம் அல்ல என்று நாம் கூறுகிறோம். ஏனென்றால் ஜாரிஸம் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் இந்தப் பத்தில் ஒன்பது பேரை ஒடுக்குகிறது என்பது மட்டுமல்ல, மேலும் மற்ற தேசிய இனங்களை ஒடுக்கும்படியும், இந்த அவமானத்தை நயவஞ்சகமான, நாட்டுப்பற்று மிக்கவை போல் தோன்றுகின்ற போலி நாட்டுப்பற்றுச் சொற்களைக் கொண்டு மூடிமறைக்கும்படியும் அவர்களுக்கு ஜாரிஸம் கற்றுக் கொடுத்து அவர்களை ஒழுக்க நெறிபிறழச் செய்கிறது, இழிவு படுத்துகிறது, மானங்கெடுக்கிறது, வேசிகளாக்குகிறது.

ஜாரிஸம் மட்டுமின்றி, அதனுடைய பாதுகாவலின் கீழ் மற்றொரு வரலாற்று பூர்வமான சக்தியும் தோன்றி வலுப் பெற்றுள்ளது என்று சிலர் ஆட்சேபிக்கக் கூடும், அதுதான் மகாருஷ்ய முதலாளித்துவம், அது பரந்த பிரதேசங்களைப் பொருளாதார ரீதியிலி ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவந்து ஒன்றுபடுத்தி ஒருமுற்போக்குச் செயலைச் செய்துவருகிறது. ஆனால் இந்த ஆட்சேபத்தை முன்வைத்து நமது சோஷலிஸ்டு தேசியவெறியர்களின் போக்கிற்கு நியாயம் கற்பித்து விட முடியாது, அதற்கு மாறாக அமலும் பலமாக அவர்களுடைய போக்கு கண்டனத்துக்கே உள்ளாகிறது. இந்த சோஷலிஸ்டு தேசியவெறியர்களை நாம் ஜாரிஸ புரிஷ்கேவிச் சோஷலிஸ்டுகள் என்று அழைக்க வேண்டும்.[லஸ்ஸால் வாதிகளை ராஜவிசுவாசமுள்ள பிரஷ்ய சோஷலிஸ்டுகள் என்று மார்க்ஸ் அழைத்தாரல்லவா, அதைப் போல]. ஆதிக்கம் வகிக்கும் மகாருஷ்ய முதலாளித்துவத்துக்குச் சாதகமாகவும் பற்பல சிறு தேசிய இனங்களுக்குப் பாதகமாகவும் இப் பிரச்சினையை வரலாறு முழுவதும் வன்முறை, கொள்ளை, குருதி, புன்மை ஆகியவற்றின் வரலாறுதான். எப்படி இருந்தாலும் சிறு தேசிய இனங்களை வைத்துக்காக்க வேண்டும் என்ற கொள்கையை நாம் ஆதரிக்கவில்லை, மற்ற நிலைமைகள் சமமாக இருக்குமேயானால் அதிகார மையப்பாட்டையே நாம் நிச்சயம் ஆதிக்கிறோம், கூட்டாட்சி உறவுகள் என்ற அற்பர்களின் லாட்சியத்தை நாம் எதிர்க்கிறோம். ஆயினும் நாம் வைத்துf கொண்டதைப் போல நிலைமை இருந்தாலும் கூட, முதலாவதாக, உக்ரேனியா இத்தியாதிகளின் கழுத்தை நெரிப்பதற்கு ரொமானவ் - பப்ரீன்ஸ்கி - புரிஷ்கேவிச்சுகளுக்கு ஒத்தாசை செய்வது நமது வேலையல்ல, ஜனநாகவாதிகளின் வேலையல்ல [சோஷலிஸ்டுகளைப் பற்றிப் பேசவே வேண்டாம்]. பிஸ்மார்க் தனக்கே உரிய ஜங்கர் முறையில் ஒரு முற்போக்கான வரலாற்றுப் பணியை ஆற்றி விட்டான். ஆனால் இதைக் காரணமாகக் கொண்டு பிஸ்மார்க்கை சோஷலிஸ்டுகள் ஆதரிப்பது சரி என்று ஒருவர் வாதிப்பாரேயானால் அவர் அருமையான "மார்க்சியவாதிதான்"! மேலும், பிற தேசிய இனங்களால் ஒடுக்கப்பட்டுச் சிதறுண்டு கிடந்த ஜெர்மானியர்களை ஐக்கியப்படுத்தி, பொருளாதார வளர்ச்சிக்கு வகை செய்தான் பிஸ்மார்க். ஆனால், மகாருஷ்யாவின் பொருளாதாச் செழிப்புக்கும் வேகமான வளர்ச்சிக்கும் தேவையானது மற்ற தேசிய இனங்களை மகாருஷ்யர்கள் அடக்கி ஒடுக்கி வன்முறையாக நடத்துவதிலிருந்து இந்நாடு விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான். பிஸ்மார்க் மனப்பான்மை கொண்ட உண்மை ருஷ்யர்களைக் கண்டு நம்மவர்கள் இந்த வேற்றுமையை மறந்துவிடுகிறார்கள்.

இரண்டாவதாக, ஆதிக்கம் வகிக்கும் மகாருஷ்ய முதலாளித்துவத்துக்குச் சாதகமாக இப்பிரச்சினையை வரலாறு தீர்த்துவைக்குமேயானால், முதலாளித்துவம் தோற்றுவிக்கும் கம்யூனிஸ்ட் புரட்சியின் தலையாய இயக்கு சக்தி என்ற வகையில் மகாருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் சோஷலிசப் பணி இன்னும் பெரியதாக இருக்கும் என்பது அதன் அடுத்த விளைவாகும். பூரண தேசிய இனச் சமத்துவம், சகோதரத்துவம் என்ற உணர்வில் தொழிலாளிகளைத் தொடர்ந்து நீண்டநாள் பயிற்றுவித்து வளர்ப்பது பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குத் தேவையானது. எனவே, மகாருஷ்யர்களால் ஒடுக்கப்படும் எல்லாத் தேசிய இனங்களுக்கும் பூரண சமத்துவமும் சுயநிர்ணய உரிமையும் கொடுக்கப்பட வேண்டும் என்று மிகவும் உறுதியாகவும், சிறிதும் விட்டுக் கொடுக்காமலும், தைரியமாகவும் புரட்சிகரமான முறையில் போராட வேண்டும் என்று பொதுமக்களுக்கு முறையாகப் போதிக்க வேண்டும், மகாருஷ்யப் பாட்டாளி வர்க்த்தின் நலன்களுக்கே இது மிகவும் தேவையானது. மகாருஷ்யர்களின் தேசிய இனப் பெருமிதத்தின் நலன்களம் [அடிமைப் பொருளிலல்ல] மகாருஷ்ய [இன்னும் இதர] பாட்டாளிகளின் சோஷலிச நலன்களும் முற்றிலும் பொருந்தியவைதான். எப்பொழுதும் நமக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர் மார்க்ஸ்தான், அவர் இங்கிலாந்தில் பல பத்தாண்டுகள் வாழ்ந்து, பாதி ஆங்கிலேயராக மாறி, ஆங்கிலேயத் தொழிலாளர்களின் சோஷலிச இயக்கத்தின் நல்களுக்காக அயர்லாந்துக்குச் சுதந்திரமுk தேசிய விடுதலையும கோரினார்.

நாம் பரிசீலனை செய்த இரண்டாவது அனுமான வழக்கில் பிளெஹானவ் முதலிய உள்நாட்டு சுதந்திர, ஜனநாயக மகாருஷ்யாவுக்கு மட்டுமின்றி, ருஷ்யாவின் எல்லாத் தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்க சகோதரத்துவத்துக்கும், அதாவது சோஷலிசத்தின் நலன்களுக்கு துரோகம் செய்தவர்களாக இருப்பார்கள்.

சோட்ஸியல் - டெமாகிராட்,
இதழ் 35, 1941, டிசம்பர் 12

No comments:

Post a Comment