தேசியஇனங்களின் சுயநிர்ணயம் என்றால் என்ன? - லெனின்
சுயநிர்ணயம் என்று அறியப்படும் ஒன்றைக் குறித்து மார்க்சிய முறையில் ஆராய முயலும் போது இயல்பாகவே எழும் முதல் கேள்வி இதுவாகும். அந்தச் சொல்லை எந்தப் பொருளில் புரிந்து கொள்வது? சட்டத்தின் எல்லா வகைப்பட்ட "பொதுவான கருத்துருக்களில்" இருந்தும் பெறப்பட்ட சட்ட வரையறுப்புக்களில் இந்த விடையைத் தேடுவாதா? அல்லது தேசிய இன இயக்கங்கள் பற்றிய வரலாற்று, பொருளாதார ஆய்வில் அதைத் தேடுவதா?
திருவாளர்கள் செம்போவ்ஸ்கிகள், லீப்மன்கள் மற்றும் யுர்க்கேவிச்சுகள் வகையறா இப்பிரச்சினையை எழுப்புவது பற்றிக் கூட எண்ணிப் பார்க்கவில்லை என்பதில் ஆச்சரியம் எதுவும் கிடையாது. மார்க்சிய வேலைத்திட்டத்தின் "தெளிவின்மையை" ஏளனஞ்செய்து இப்பிரச்சினைனையே அவர்கள் அசட்டை செய்து விட்டார்கள். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி, 1903ம் ஆண்டு ருஷ்ய ேலைத்திட்டத்தில் மட்டுமின்றி,1896ல் நடைபெற்ற லண்டன் சர்வதேசக் காங்கிரசின் தீர்மானத்திலேயே [இதைப் பற்றி உரிய இடத்தில் நான் விரிவாக விளக்குவேன்] கூறப்பட்டுள்ளது என்பதை பேதமை காரணமாக அவர்கள் அறிய வில்லை போலும். சம்பந்தப்பட்ட இந்தப் பிரிவின் சூக்குமமான, இயக்கமறுப்பியல் தன்மை குறித்து பெருமளவுக்குத் தாக்கி முழங்கும் ரோஸா லுக்சம்பர்க் தாநே சூக்குமத்தன்மை, இயக்க முறுப்பியல் எனும் பாவத்துக்குச் சரணடைந்துவிட்டாலே என்பதுதான் இதை விட அதிக ஆச்சரியமானது. ரோஸா லுக்சம்பர்க் தாநே சுயநிர்ணயம் பற்றித் தொடர்ந்து பொது நிலையில் நின்று பேசுகிறார் [ஒரு தேசிய இனத்தின் சித்தத்தை எவ்வாறு கண்டறிவது என்ற பிரச்சினை மீது வேடிக்கையாக தத்துவ விசாரணை நடத்துமளவுக்குப் பேசுகிறார்]. ஆனால் அவர் இவ்விஷயத்தின் சாராம்சம் சட்ட வரையறுப்புகளில் காணக்கிடக்கிறதா, அல்லது உலக முழுவதிலுமான தேசிய இனஇயக்கங்களின் அனுபவத்தில் காணக்கிட்க்கிறதா என்று எங்குமே தெளிவாகவும் துல்லியமாகவும் தன்னைத் தானே கேட்டுக் கொள்வதில்லை.
இப்பிரச்சினையின் துல்லியமான வரையறுப்பு- இதை எந்த மார்க்சியவாதியும் தட்டிக் கழிக்க முடியாது - ரோஸா லுக்சம்பர்க்கின் வாதங்களில் பத்தில் ஒன்பதை உடனடியாக நிர்மூலமாக்கிவிடும். ருஷ்யாவில் தேசிய இன இயக்கங்கள் தோன்றியிருப்பது இதுதான் முதல் தடவையல்ல, உலகம் பூராவும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவம் அடையும் இறுதி வெற்றியின் காலப் பகுதி தேசிய இன இயக்கங்களுடன் இணைந்துள்ளது. பண்ட உற்பத்தி முழு வெற்றியடைவதற்கு, முதலாளி வர்க்கம் உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்றற வேண்டும், ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசியல் வழியில் ஒற்றுமைப்படுத்தப் பட்ட பிரதேசங்கள் அதற்கு வேண்டும், அந்த மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்று விளங்கவும் குறுக்கே நிற்கும் தடைகள் யாவும் அகற்றப்பட வேண்டும் - இங்குதான் இந்த இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கிறது. மனித இடைத் தொடர்புகளுக்கு மிக முக்கியமான சாதனம் மொழியாகும். நவீன முதலாளித்துவத்துக்குச் சரியான வீதத்தில் மெய்யாகவே தடையற்ற விரிவான வாணிகத்துக்கும், ப்லவறு வர்க்கங்களைச் சார்ந்த மக்கள் சுதந்திரமான, விரிவான பிரிவுகளாக அமைவதற்கும், இறுதியாக சந்தையுடன் ஒவ்வொரு பெரிய, சிறிய உரிமையாளரும், விற்போரும் வாங்குவோரும் பரஸ்பரம் நெருfகமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் மி முக்கியமான நிபந்தனையகளில் மொழியின் ஒற்றுமையும் தங்குதடையற்ற வளர்ச்சியும் அடங்கும்.
எனவே, ஒவ்வொரு தேசிய இன இயக்கத்தின் போக்கும் தேசிய இனஅரசுகளை நிறுவும் திசையிலானதாகும். அவ்வரசுகளின் கீழ் நவீன முதலாளித்துவத்தின் இந்தத் தேவைகள் மிகவும் நன்றாக பூர்த்தி செய்யப்படும். மிகவும் தீர்க்கமான பொருளாதாரக் காரணிகள் இந்த லட்சியத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன. எனவே, மேற்கு ஐரோப்பா முழுவதற்கும் ஏன் நாகரிக உலகம் முழுமைக்குமே முதலாளித்துவ காலப் பகுதியில் தேசிய இன அரசு மாதிரிப் படிவமானது, சகஜமானது.
இதன் விளைவாக, சட்ட வரையறைகளை வைத்துக் கொண்டு ஜாலவித்தை செய்வதன் மூலமோ, சூக்குமமான இலக்கணங்களைப் "புனைவது" மூலமோ அன்றி தேசிய இன இயக்கங்களின் வரலாற்று, பொருளாதார நிலைமைகளை ஆராய்வதன் வாயிலாக தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பதன் பொருளை நாம் புரிந்து கொள்ள விரும்பும் பட்சத்தில், இந்தத் தேசிய இனங்கள் அன்னிய தேசிய இன அமைப்புகளிலிருந்து அரசியல் வழியில் பிரிந்து, சுதந்திரமான தேசிய இன அரசாக உருப்பெறுவதே தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தின் பொருள் என்ற முடிவுக்குத் தவிர்க்க முடியாத வகையில் வந்து சேருவோம்.
சுயநிர்ணய உரிமை என்பதை தனி அரசாக நிலவும் உரிமை என்ற பொருளில் அன்றி வேறுவிதமாக வியாக்கியானம் செய்வது ஏன் தவறானது என்பதற்கான இதர காரணங்களைப் பின்னர் காண்கோம். தேசிய இன அரசு வேண்டும் என்ற அவாவுக்கு அடித்தளமாக இருபபது தீர்க்கமான பொருளாதாரக் காரணிகளே என்ற தவிர்க்க முடிளாத முடிவை "ஒதுக்கித் தள்ளி" விட ரோஸா லுக்சம்பர்க் செய்யும் முயற்சிகளைப் பற்றி இப்போது கவனிக்க வேண்டும்.
தேசிய இனக் கூறும் சர்வதேசியக் கூறும் என்ற காவுஸ்கியின் சிறு பிரசரம் பற்றி ரோஸா லுக்சம்பர்க் நன்றாக அறிவார். அந்தச் சிறு பிரசுரத்தின் 4ம் பிரிவில் காவுத்ஸ்கி தேசிய இன அரசு பற்றிய பிரச்சினையைக் கவனமாக ஆராய்ந்த பிறகு ஓட்டோ பௌவர் "தேசிய இன அரசு நிறுவுவதன் பாலான அவாவின் வலிமையினைக் குறைத்து மதிப்பிடுகிறார்"[சிறு பிரசுரத்தின் 23ம் பக்கம்] என்ற முடிவுக்கு வந்தார் என்பதும் லுக்சம்பர்க்கே காவுத்ஸ்கியின் பின்வரும் வாசகங்களை மேற்கோள் காட்டுகிறார்:"தேசிய இன அரசு இன்றைய நிலைமைகளுக்கு"[அதாவது மத்திய கால, முதலாளித்துவத்துக்கு முந்தியதான நிலைமைகளிலிருந்து வேறுபட்டதான முதலாளித்துவ, நாகரிகமான, பொருளாதார முறையில் முற்போக்கான நிலைமைகளுக்கு] "மிகவும் பொருத்தமான அரசு வடிவமாகம். இந்த வடிவத்தில்தான் அரசு தனது பணிகளை" [அதாவது முதலாறித்துவத்தின் மிகத் தடையற்றதான, மிக விரிவான, மிக விரைவான வளர்ச்சிக்கு வகை செய்யும் பணிகளை] "மிகவும் நன்கு செய்து முடிக்க முடியும்" கலப்பான தேசிய இன இயைபுடைய [தேசிய இன அரசுகளிலிருந்து வேறுபட்ட நிலையில் பல்தேசிய இன அரசகள் என்று அறியப்படும்]
அரசுகள் "ஏதேனும் ஒரு காரணத்தால் எப்போதுமே அசாதாரணமான, வளர்ச்சி
குன்றிய" [பின் தங்கிய] "நிலையைலிரன உள் அமைப்பினைக் கொண்டனவாக" இருக்கும் என்ற காவுத்ஸ்கியின் மேலும் துல்லியமான, முடிவான கருத்தை இதோடு சேர்த்துக் கூற வேண்டும். வளர்ந்து வரும் முதலாளித்துவத்தின் தேவைகளுக்கு நன்கு தகவமைவது எதுவோ அதனுடன் பொருநதாமை என்ற பொருளில் மாத்திரமே அசாதராணம் பற்றி காவுத்ஸ்கி கூறுகிளார் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
கேள்வி இதுவே: காவுத்ஸ்கியின் இந்த வரலாற்று - பொருள்ரதா ரீதியான முடிவுகளை ரோஸா லுக்சம்பர்க் எப்படிக் கையாள்கிறார்? அவை சரியா அல்லது தவறா? வரலாற்று பொருளாதார ரீதியான தத்துவத்தைக் கூறும் காவுத்ஸ்கியின் நிலை சரியா? அல்லது அடிப்படையில் உளவியலான தத்துவத்தைக் கூறும் பௌவரின் நிலை சரியா? பௌவரின் ஐயத்திற்கிடமற்ற "தேசிய இன சந்தர்ப்பவாதம்", கலாசார-தேசிய இனத் தன்னாட்சியை அவர் தாங்கி ஆதரிப்பது, அவரது தேசியவாத மோக [காவுத்ஸ்கி கூறுவது போன்று "தேசிய இன அம்சத்தின் மீது அவ்வப்போதான வலியுறுத்தல்"], "தேசிய இன அம்சம் பற்றி அவர் மிகப் பெருமளவில் மிகைப்படுத்துவது, மற்றும் சர்வதேசிய அம்சத்தை அறவே புறக்கணிப்பது" [காவுத்ஸ்கி] ஆகியவற்றுக்கும், ஒரு தேசிய இன அரசைப் படைப்பதற்கான அவாவின் வலிமையை அவர் குறைத்து மதிப்பிடுவதற்குமிடையேயுள்ள் தொடர்பு என்ன?
ரோஸா லுக்சம்பர்க் இந்தக் கேள்வியை எழுப்பக் கூட இல்லை. இந்தத் தொடர்பை அவர் கவனிக்கலில்லை. பௌவரின் தத்துவார்த்தக் கருத்துக்களின் கூட்டு முழுமையை பற்றி அவர் சிந்தித்துப் பார்க்கவில்லை. தேசிய இன்ப பிரச்சினையின் வரலாற்று - பொருளாதார ரீதியான தத்துவம் மற்றும் உளவியல் ரீதியான தத்துவம் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாட்டைக் கூடப் பகுத்துக் காணவில்லை. காவுத்ஸ்கி பற்றிய தமது விமரிசனத்தில் அவர் பின்வரும் குறிப்புகளோடு நிறுத்திக் கொள்கிறார்:
"...இந்த 'மிகச் சிறந்த' தேசிய இன அரசு ஒரு கருத்தாக்கம் மட்டுமேயாகும், இதைத் தத்துவார்த்த முறையில் எளிதில் வளர்க்க முடியும், தாங்கி ஆதரிக்க முடியும், ஆனால் இது எதார்த்தத்துக்குப் பொருந்தாது"
இந்த அழுத்தமான அறிவிப்பை சான்று காட்டி உறுதிப்படுத்தும் வகையில் மேலும் பல வாதங்கள் தொடர்கின்றன. மாபெரும் முதலாளித்துவ அரசுகளின் வளர்ச்சியாலும் ஏகாதிபத்தியத்தினாலும் சிறு தேசிய இனங்களின் "சுயநிர்ணய உரிமை" வெறும் பொய்த்தோற்றமாகிவிடுகிறது என்ற பொருளில் அவை உள்ளன. "பெயரளவில் சுதந்திரமாயிருக்கிற மாண்டிநீக்ரின்கள், பல்கேரியர்கள், ருமேனியர்கள், செர்பியர்கள், கிரேக்கர்கள், ஏன் ஓரளவுக்கு ஸ்விஸ் மக்களின் சுதந்திரமே 'ஐரோப்பிய ஒத்திசைவின்' அரசியல் போராட்டம் மற்றும் அரசுத் துறை விளையாட்டின் விளைவு தானே, இவர்களது 'சுயநிர்ணயத்தைப்' பற்றி எவராவது தீவிரமாகப் பேச முடியுமா?" என்று ஆர்த்துரைக்கிறார் ரோஸா லுக்சம்பர்க்! இந்த நிலைமைகளுக்குச் சிறப்பாகப் பொருந்திய அரசு "காவுத்ஸ்கி கருதுவது போன்ற ஒரு தேசிய இன அரசு அல்ல, மாறாக, ஒரு கொள்ளைக்கார அரசேயாகும்." பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் இதர நாடுகளின் காலனி உடைமைகளின் பரப்பளவு பற்றிய டஜன் கணக்கான புள்ளி விவரங்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன.
இத்தமைகய வாதங்களைப் படித்த பிறகு விஷயங்களின் காரணத்தையும் பழிபகையையும் தவறாகப் புரிந்து கொள்வதில் இதன் ஆசிரியருக்கு இருக்கும் ஆற்றலைக் கண்டு எபரும் அதிசயிக்காமலிருக்க முடியாது! சிறிய அரசுகள் பொருளாதார ிதீயில் பெரிய அரசுகளைச் சார்ந்திருக்கின்றன எனவும், இதர தேசங்களைக் கொள்ளைக்காரத்தனமாக அடகளாளுவதன் பொருட்டு மதலாளித்துவ அரசுகளிடையே போராட்டம் மூண்டுள்ளது எனவும், ஏகாதியத்தியமும் காலனிகளும் நிலவுகின்றன எனவும் ஆழ்ந்த தோரணையில் காவுஸ்கிக்குப் பாடம் சொல்வதானது, சூழ்ச்சி நயத்தைத் தேர்ற்றுவிப்பதற்கான நகைக்கத் தக்கக சிறு பிள்ளைத் தனமான முயற்சியாகும். காரணம், இதற்கும் உரை பொருளகக்கும் கிஞ்சிற்றும் தொடர்பு இல்லை. "செல்வந்த" முதலாளித்துவ நாடுகளின் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் பலத்தையே சிறு அரசுகள் மட்டுமன்றி, உதாரணமாக, ருஷ்யாவுங்கூட பொருளாதார ரீதியில் முற்றிலும் சார்ந்திருக்்னிறன. சின்னஞ்சிறு பால்கன் நாடுகள் மட்டுமல்ல, பத்தோன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவுங்கூட பொருளாதார ரீதியில் ஐரோப்பாவின் காலனியாகேவே இருந்தத என்பது மார்க்ஸ் மூலதனம் நூலில் சுட்டிக் காட்டியுள்ளார். எந்தவொரு மார்க்சியவாயையும் போலவே காவுத்ஸ்கிக்கும் இது நன்றாகத் தெரியும், ஆனால் இதற்கும் தேசிய இன இயக்கங்கள் மற்றும் தேசிய, ஆனால் இதற்கும் தேசிய இன இயககங்கள் மற்றும் தேசிய இன அரசு பற்றிய பிரச்சினைகம் எவ்விதத் தொடர்பும் கிடையாது.
பூர்ஷ்வா சமுதாயத்தில் தேசிய இனங்களின் அரசியல் சுயநிர்ணயம், அரசுகள் என்ற முறையில அவற்றின் சுயாதீனம் ஆகிய பிரச்சினைக்குப் பதிலாக அவற்றின் பொருளாதார சுயேச்சை மற்றும் சுதந்திரம் பற்றிய பிரச்சினையை ரோஸா லுக்சம்பர்ச் முன்வைத்
திருக்கிறார். ஒரு பூர்ஷ்வா அரசில் நாடாளுமன்றத்தின், அதாவது மக்கள் பிரதிநிதிகளின் சட்டமன்றத்தின், அதாவது மக்கள் பிரதிநிதிகளின் சட்டமன்றத்தின் மேலாண்மைக்குரிய வேலைத் திட்டக் கோரிக்கையை விவாதிக்கும் போது, ஒரு முதலாறித்துவ நாட்டில் ஆட்சி முறை எதுவாக இருப்பினும் அங்கு பெரும் மூலதனமே ஆதீக்கம் செலுத்துகிறது என்ற முற்றிலும் சரியான துணிபுரையினை ஒருவர் விளக்க முற்படுவாரானால் அது என்துணை விவேகமுள்ளதோ அத்துணை விவேகமுள்ளதே இதுவும்.
மிகவும் நெருக்கமான மக்கள் தொகையைக் கொண்ட மாகண்டமான ஆசியாவின் பெரும் பகுதி "மாவல்லரசுகளின்" காலனி நாடுகளையோ அல்லது தேசிய இன முறையில் ஒடுக்கப்பட்டு படுமோசமாகச் சார்பு நிலையில் கிடக்கும் அரசுகளையோ கொண்டதாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் எல்லோருக்கும் தெரிந்த இந்தச் சூழ் நிலைகளால், ஆசியாவின் உள்ளே ஜப்பானில் மட்டுமே, அதாவது ஒரு சுதந்திரமான தேசிய இன அரசில் மட்டுமே பண்ட உற்பத்தியின் மிகவும் முழுமையான வளர்ச்சிக்கும், மிகத் தங்குதடையற்ற, மிக விரிவான, மிக விரைவான முதலாளித்துவ வளர்ச்சிக்கும் தேவையான நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற உறுதியான உண்மையை எவ்விதத்திலாயினும் அசைக்க முடியுமா? ஜப்பான் ஒரு முதலாறித்துவ அரசு, அந்தக் காரணத்தால் துவே மற்ற தேசங்சகளை ஒடுக்கவும், காலனிகளை அடிமைப்படுத்தவும் தொடங்கிவிட்டது. முதலாளித்துவதின் வீழ்ச்சிக்கு முன்பாக, ஐரோப்பாவைப் போலவே சுதந்திரமான தேசிய இன அரசுகளின் ஓர் அமைப்பாக வளர்வதற்குரிய கால அவகாசம் ஆசியாவுக்கு கிடைக்குமா இல்லையா என்பதை நம்மால் கூற முடியாது. ஆனால் முதலாளித்துவமானது, ஆசியாவைத்தடடி விழிப்புறச் செய்துவிட்டு, அந்த மாகண்டத்திலும் கூட எல்லா இடங்களிலும் தேசிய இன இயக்கங்களை வெளிக் கொணர்ந்துள்ளது என்பதும், இந்த இயக்கங்களின் போக்கு ஆசியாவில் தேசிய இன அரசுகளை உருவாக்கும் திசையிலானது என்பதும், இத்தகைய அரசுகள் தான் முதலாளித்துவத்தின் வளர்தச்சிக்கான மிகச் சிறந்த நிலைமைகளை உத்தரவாதம் செய்யும் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். ஆசியாவின் உதாரணம் காவுத்ஸ்கிக்கு சாதகமாகவும் ரோஸா லுக்சம்பர்க்குக்கு எதிராகவும் இருக்கிறது.
அதே போன்ற பால்கன் அரசகளின் உதாரணமும் அவரது கூற்றை மறுப்பதாக உள்ளது, ஏனெனில் அந்தத்தீபகற்பத்தில் சுதந்திரமான தேசிய இன அரசுகள் எந்தளவுக்கு உருவாக்கம் பெறுமோ அந்த அளவுக்குத் துல்லியமாக பால்கன் நாடுகளில ்முதலாளித்துவத்தின் வளர்தச்சிக்கான கிச் சிந்த நிலைமைகளும் உருவாக்கப்படுகின்றன என்பதை இப்போது எவரும் காணலாம்.
எனவே, ரோஸா லுக்சம்பர்க் முற்றிலும் மாறுபட்ட போதிலும், முற்போக்கான நாகரிகமுள்ள மனிதகுலம் முழுமையின் உதாரணமும், பால்கன் நாடுகள், ஆசியா ஆகிவற்றின் உதாரணமும், பால்கன் நாடுகள், ஆசியா ஆகியவற்றின் உதாரணமும், தேசிய இன அரசு என்பது முதலாளித்துவத்தின் விதியும் "பொதுவழக்கும்" ஆகும், பலதேசிய இன அரசு என்பது பின்தங்கிய நிலையைக் குறிப்பது அல்லது அது ஒரு விதிவிலக்கு என்னும் காவுஸ்கியின் கருத்து முற்றிலும் சரியானது என்பதைக் காட்டுகின்றன. தேசிய இனஉறவுகளின் நாக்கு நிலையில் இருந்து பார்த்தால் முதலாளிவத்தின் வபளர்ச்சிக்கன மிகச் சிறந்த நிலைமைளளைத் தேசிய இன அரசுதான் உறுதியாக வழங்க முடியும் என்பது தெரியவரும். முதலாளித்துவ உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய அரசு தேசிய இனங்கள் சுரண்டப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் ஒழித்து விட முடியும் என்று இதை அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பது தெளிவு. தேசிய இன அரசுகளை உருவாக்குவதற்கான அவாவினைத் தோற்றுவிக்கும் வலிமை வாய்ந்த பொருளாதாரக் காரணிகளை மாக்சியவாதிகள் காணத் தவறிவிடக் கூடாது என்பதே இதன் பொருளாகும். மார்க்சிய வேலைத்திட்டத்திலுள்ள "தேசிய இனங்களின் சுயநிரிணயம்" என்பதை வரலாற்று - பொருளாதாரக் கருத்துப்படிப் பார்த்தால் அது அரசியல் சுயநிர்ணயம், அரசு சுயாதீனம், தேசிய இன அரசின் உருவாக்கம் என்றே பொருள்படும், அது வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
"தேசிய இன அரசு" வேண்டும் என்ற பூர்ஷ்வா ஜனநாயகக் கோரிக்கையை என்த நிலைைமைகளின் கீழ் ஒரு மார்க்சிய, அதாவது பாட்டாறி வ்ர்க்க் கண்ணோட்டத்திலிருந்து ஆதரிக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பின்னால் விவரமாக ஆராய்வோம். "சுயநிரிணம்" என்ற கருத்துருவுக்கு இலக்கணம் வகுப்பதுடன் இப்போதைக்கு நாம் நிறுத்திக் கொள்வோம். "தேசிய இன அரச" என்ற இக்கருத்துருவின் பொருள் என்ன னெப்து ரோஸா லுக்சம்பர்க்குக்குத் தெரியும், ஆனால் அவரது சந்தர்ப்பவாதக் கூட்டாளிகளாகி லீப்மன்கள், செம்கோவ்ஸ்கிகள், யுர்க்கேவிச்சுகள் வகையறாக்களுக்கு அது கூடத் தெரியாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்வோம்!

No comments:
Post a Comment