Saturday, February 6, 2010

மார்க்சியமும் திருத்தல்வாதமும் - லெனின்

மார்க்சியமும் திருத்தல்வாதமும் - லெனின்


வடிவகணித வெளிப்படை உண்மைகள் மனித நலன்களைப் பாதிக்குமாயின் அவற்றை மறுக்க நிச்யம் முயற்சி செய்வார்களெனக் கூறும் பிரபல முதுமொழி ஒன்று உண்டு. இறையியலின் பழங் காலத் தப்பெண்ணங்ககுக்கு முரணான இயற்கை-வரலாற்றுத் தத்துவங்களுக்கு வெறித்தனமான எதிர்ப்பு காட்டப்பட்டது, இனியும் காட்டப்பட்டு வருகிறது. ஆகவே மாக்சியத் தத்துவம்- தற்காலச் சமுதாயத்தின் மிகவும் முன்னேறிய வர்க்கத்துக்கு அறிவொறி ஊட்டி அதை ஒழுங்கமைக்க நேரடியாய் உதவுவதும், இந்த வர்க்கத்தின் முன்னுள்ள கடமைகளைச் சுட்டிக்காட்டுவதும், தற்போதுள்ள அமைப்பு [பொருளாதார வளர்ச்சி காரணமாய்] தவிர்க்க முடியாதபடி வீழ்த்தப்பட்டு அதனிடத்தில் ஒரு புதிய அமைப்பு தோன்றுமென்பதை நிரூபிப்பதுமான இந்த மாக்சியத் தத்துவம்- அதன் வாழ்வு மழுதும் பாராடியே ஒவ்வொரு அடியாய் முன்னேற வேண்டியிருந்துள்ளது என்பதில் வியப்பு ஏதுமில்லை.

மாக்சியமானது முதலாளித்துவ விஞ்ஞானத்துக்கும் தத்துவவியலுfகும் எதிரானது என்பதைக் கூறத் தேவவையில்லை. சொத்துடைத்த வர்க்கங்களின் வளரும் தலைமுறையை மழுங்கடிக்கவும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பகைவர்களுக்கு எதிராய் அதைப் "பயிற்றுவிக்கவும்"அதிகார பூர்வமான பேராசிரியர்களால் அதிகாரபூர்வமாய் இவை போதிக்கப்படுகிறவை. இந்த விஞ்ஞானம் மார்க்சியம் என்பதாய் ஒன்று இருப்பதைக் கேட்பதற்குக்கூட மறுக்கிறது, மார்க்சியம் ஏற்கெனவே பொய்யென நிரூபிக்கப்பட்டு அழிjதொழிக்கப்பட்டுவீட்டதனக் கூறகிறது. சோஷலிசத்தை மறுத்தும் பிழைப்பு தேடிக் கொள்ளம் இளம் அறிவியலாளர்களும், காலவதியாகிவிட்ட எல்லா வித"அமைப்புகளின்" மரபுகளையும் பாதுகாத்து நிற்கும் தள்ளாத கிழவர்களும் ஒருங்கே துடித்தெழுந்து மார்க்சைத் தாக்குகின்றனர். மார்க்சியத்தின் முன்னேற்றமானது, தொழிலாளி வர்க்கத்தினரிடையே அதன் கருத்துக்கள் பரவி வேரூன்றி உறுதி பெறுவதானது, மார்க்சியத்தின் மீதான இந்த முதலாளித்துவத் தாக்குதல்களின் வேகத்தையும் கடுமையையும் தவிர்க்க முடியாதபடி அதிகரிக்கச் செய்கிறது. அதிகாரபூர்வமான விஞ்ஞானத்தால் "அழித்ததொழிக்கப்படும்"ஒவ்வொருதரமும் மார்க்சியம் மேலும் மேலும் வலுவும் உறுதயும் சக்்தியும் பெற்ற ஓங்குகிறது.

தொழிலாளி வர்க்கப் போராட்டத்துடன் தொடர்பு கொண்டு பிரதானமாய்ப் பாட்டாளி வர்க்கத்திடம் நிலவும் தத்துவங்களிடையே கூட மார்க்சியம் தனது நிலையை எடுத்தயெடுப்பில உறுதியாய் நாட்டிக் கொண்டுவிடவில்லை. அதன் வாழ்வின் முதல் அரைநூற்றாண்டில் [1840 ஆம் ஆண்டுகளிலிருந்து தொடங்கி] மார்க்சியம் அடிப்படையிலேயே தனக்கு விரோதமான தத்துவங்களுக்கு எதிராய்ப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. நாற்பதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் மார்க்சும் எங்கெல்சும் தத்துவவியல் கருத்துமுதல்வாதக் கண்ணோட்த்தினராய் இருந்த தீவிர இளம் ஹெகலியர்களுடன் கண்ணோட்டத்தினராய் இருந்த தீவிர இளம் ஹெகலியர்களுடன் கணக்குத் தீர்த்துக் கொண்டனர். நாற்பதாம் ஆண்டுகளின் முடிவில் பொருளாதாரத் தத்துவத் துறையில் புருதோதனியத்தை எதிர்த்துப் போராட்டம் ஆரம்பமாயிற்று. கொந்தளிப்பு மிக்க 1848ல் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட கட்சிகளையும் தத்துவங்களையும் பற்றிய விமர்சனத்தின் வாயிலாய் ஐம்பதாம் ஆண்டுகளில் இந்தப் போராட்டம் முடிவடையலாயிற்று. ஆறுபதாம் ஆண்டுகளில் போராட்டம் பொதுத் தத்துவத் துறையிலிருந்து நேரடியான தொழிலாளர் இயக்கத்துக்கு மேலும் நெருங்கிய ஒரு துறைக்கு இடம் பெயர்ந்து சென்றது. அகிலத்திலிருந்து பக்கூனியம் வெளியேற்றப்பட்டதில் இது முடிவுற்றது. எழுபதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சிறிது காலத்துக்குப் புருதோனியர் முல்பெர்கரும், எழுபதாம் ஆண்டுகளின் கடைப் பகுதியில் நேர்காட்சிவாதி டூரிங்கும் ஜெர்மனியில் அரங்கலே ஆடினர். ஆனால் பாட்டாளி வர்க்கத்திடம் இருவருக்கும் ஏற்கனவே மிகச் சொற்ப செல்வாக்கே இருந்தது. தொழிலாளர் இயக்கத்தில் ஏனைய எல்லா சித்தாந்தங்களின் மீதும் இதற்குள்ளாகவே மார்க்சியம் சந்தேகத்துக்கு இடமில்லாதபடி வெற்றி கண்டு வந்தது.

தொண்ணூறாம் ஆண்டுகளுக்கு இந்த வெற்றி பிரதானமாய் நிறைவு எய்திவிட்டது. புரதோனிய மரபுகள் வேறு எங்கையும் விட மிக அதிகக் காலத்துக்கு நிலைத்திருந்த லத்தீனிய நாடுகளிலுங்கூட, தொழிலாளர் கட்சிகள் தமது வேலைத்திட்டங்களையும் போர்த்தந்திரங்களையும் நடைமுறையில் மார்க்சிய அடித்தளங்கள் மீதுதான் வகுத்துக் கொண்டன. தொழிலாளர் இயக்கத்தின் புத்துயிர் பெற்ற சர்வதேச நிறுவனம் - காலத்துக்குக் காலம் கூடிய சர்வதேசக் காங்கிரஸ்களின் வடிவில் அமைந்த இது - தொடக்கத்திலிருந்து அனேகமாய்ப் போராட்டமின்றியே மார்க்சியக் கருத்தோட்டத்தையே முக்கியமான எல்லாக் கூறுகளிலும் ஏற்று வந்தது. இவ்விதம் மார்க்சியம் தனக்கு விரோதமான அதிக அளவுக்கோ குறைந்த அளவுக்கோ ஒருமித்ததாய் அமைந்த தத்துவங்களில் அடங்கிய போக்குகள் பிற வழிகளில் தலைகாட்ட முற்பட்டன. போராட்டத்தின் வடிவங்களும் முகாந்திரங்களும் மாறினவேயன்றி போராட்டம் தொடர்ந்து நடைபெற்றே வந்தது. மார்க்சியத்தின் வாழிவில் இரண்டாவது அரைநூற்றாண்டானது[தொண்ணூறாம் ஆண்டுகளிலிருந்து] மார்க்சியத்துக்கு விரோதமாய் மார்க்சியத்தினுள்ளிருந்தே செயல்பட்ட ஒரு போக்கிற்கு எதிரான போராட்டத்துடன் தொடங்கிற்று.

ஒரு காலத்தில் வைதீக மார்க்சியவாதியாய் இருந்த பெர்ன்ஷ்டைன் மிகுந்த சப்தம் எழுப்பி, மார்க்சுக்குத் திருத்தங்கள் செய்வதன், மார்க்சைத் திருத்துவதன், திருத்தல்வாதத்தின் மிக முளைப்பான வெளிப்பாடாய் முன்வந்ததால், இந்தப் போக்கு பெர்ன்ஷ்டைனின் பெயரில் அழைக்கப்படலாயிற்று. ருஷ்யாவிலுங்கூட, நாட்டின் பொருளாதாப் பிற்பட்ட நிலை காரணமாகவும், பண்ணையடிமை முறையின் மீதமிச்சங்களின் சுமையால் இருத்தப்பட்ட விவசாயிகள் மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையோராய் இருப்பதன் காரணமாகவும் மார்க்சியமல்லாத சோஷலிசம் இயல்பாகவே வேறெங்கையும்விட மிக நெடுங் காலத்துக்கு நிலைத்திருத்துள்ள ருஷ்யாவிலுங்கூட, தெட்டத் தெளிவாய் நம் கண்முன்னே இது திருத்தல்வாதமாய் மாறிக் கொண்டிருக்கிறது. நிலப் பிரச்சினையிலும் [நிலம் அமைத்தையும் ஸ்தல அரசுடைமையாக்கும் திட்டத்திலும்] மற்றும் வேலைத்திட்டம், போர்த்தந்திரம் பற்றிய பொதுப் பிரச்சினைகளிலும் நமது சமூக - நரோத்னிக்குகள் தமது பழைய கருjதமைப்பின் அழுகிப்போன, காலாவதியாகிவிட்ட மீதமிச்சங்களுக்குப் பதிலாய் மார்க்சுக்குத் "திருத்தங்கள்" செய்வதை மேலும் மேலும் கைக்கொண்டு வருகின்றனர். அவர்களுடைய பழைய கருத்தமைப்பு அதற்குரிய வழியில் ஒருமித்ததாய் அமைந்து அடிப்படையிலேயே மார்க்சியத்துக்குப் பகைமையானதாய் இருந்தது.

மார்க்சியத்துக்கு முற்பட்டசோஷலிசம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியே வருகிறது. ஆனால் முன்பு போல தனது சொந்த அடிப்படையிலிருந்து போராடுவதற்குப் பதிலாய், இப்பொழுது அது மார்க்சியத்தின் பொது அடிப்படையிலே நின்று, திருத்தல்வாத்மாய்ப் போராட்டத்தை நடத்தி வருகிறது. ஆகவே திருத்தல்வாதத்தின் சித்தாந்த உள்ளடகத்தைப் பரிசீலனை செய்வோமாக.

தத்துவவியல் அரங்கில் திருத்தல்வாதமானது முதலாளித்துவப் பேராசிரிய"விஞ்ஞானத்தைப்" பின் தொடர்ந்து சென்றது. பேராசிரியர்கள் "கான்டுக்குத் திரும்பிச் சென்றனர்"- திருத்தல்வாதம் உடனே நவீன - கான்டியர்களின் வாலைப் பற்றிக் கொண்டு பின்சென்றது. தத்துவவியல் பொருள்முதல்வாதத்தை எதிர்த்துப் பாதிரிமார்கள் ஆயிரம் தரம் கூறி வந்திருக்கும் வழக்கமான வெற்றுரைகளைப் பேராசிரியர்கள் திருப்பிக் கூறினர் - உடனே திருத்தல்வாதிகளும் இளக்காரமாய் நகைத்துக் கொண்டு பொருள்முதல்வாதம் நெடுங் காலத்துக்கு முன்பே "தவறென நிரூபிக்கப்பட்டு விட்டதே" என்று [கடைசியாய் வெளிவந்த Handbuchகிலிருந்து சொல்லுக்குச் சொல் அப்படியே திருப்பிக் கூறி] ஜப மந்திரத்தை முணுமுணுப்பது போல முணுமுணுத்தனர். பேராசிரியர்கள் ஹெகலைச் "செத்த நாய்" என ஒதுக்கித் தள்ளிவிட்டு, அதேபோதில் ஹெகலினுடையதைவிட ஆயிரம் மடங்கு அற்பமான, படுமட்டமான கருத்துமுதல்வாதத்தை உபதேசம் செய்து, மிக அலட்சியமாய் இயக்கவியலிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டனர் - உடனே திருத்தல்வாதிகள் அவர்கள் பின்னால் ஓடி,"சாதுர்யமான" (மற்றும் அமைதியான) "பரிணாமத்தைக்" கைக்கொண்டு, விஞ்ஞானத்தைக் கொச்சையாக்கி இழிவுபடுத்தும் தத்துவவியல் சகதிக் குழியிலே மூழ்கினர். பேராசிரியர்கள் தமது கருத்துமுதல்வாத, "விமர்சன" அமைப்புகளை ஆதிக்கத்திலிருந்த மத்திய காலத் "தத்துவவியலுக்கு" (அதாவது இறையியலுக்கு) உகந்தவாறு சரிசெய்து அதிகார பூர்வமான தமது சம்பளங்களைச் சம்பாதித்துக் கொண்டனர் - திருத்தல்வாதிகளும் உடனே அவர்களை நெருங்கிச் சென்று மதத்தை, தற்கால அரசு சம்பந்தமாய் மட்டுமின்றி முன்னேறிய வர்க்கத்தின் கட்சி சம்பந்தமாகவுங்கூட, அவரவரது "சொந்த விவகாரமாக்க" முயன்றனர்.

மார்க்சுக்குச் செய்யப்பட்ட இத்தைகைய "திருத்தங்களுக்கு" வர்க்க முறையில் மெய்யான பொருள் என்ன வென்பது கூறாமலே விளங்குகிறது. சர்வதேச சமூக - ஜனநாயக இயக்கத்தில் பிளெஹானவ் ஒருவர்தான் திருத்தல்வாதிகளுடைய படுமோசமான இந்த வெற்றுரைகளை முரணற்ற இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து விமர்சித்துக் கண்டித்த மார்க்சியவாதி என்பதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம். பிளெஹானவின் போர்த்தந்திரச் சந்தர்ப்பவாதத்தைப் பற்றிய விமர்சனமாய் மூடிமறைத்துப் பழைய பிற்போக்குத் தத்துவவியல் குப்பைக் கூளத்தைக் கள்ளத்தனமாய் உள்ளே கொண்டுவர மிகவும் தவறான முயற்சிகள் செய்யப்படும் இத்தருணத்தில் இதை மேலும் அழுத்தம் திருத்தமாய் வலியுறுத்துவது அவசியமாகும்.

அரசியல் பொருளாதாரத்துக்கு வருவோமாயின் இத்துறையில் திருத்தல்வாதிகளுடைய "திருத்தங்கள்" மேலும் அதிக விரிவாகவும் நுட்ப விவரங்கள் வழிப்பட்டனவாயும் இருந்ததை முதற்கண் குறிப்பிடுதல் வேண்டும். "பொருளாதார வளர்ச்சி பற்றிய புதிய விவரங்களைக்" கொண்டு பொதுமக்களை வயப்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டன. பெருவீத உற்பத்தி குவிவதும் சிறுவீத உற்பத்தியை அது அகற்றிடுவதும் தொழில் துறையிலும் மிகவும் மெதுவாகவே நடைபெறுகின்றன என்றும் கூறப்பட்டது. நெருக்கடிகள் இப்பொழுது அரிதாகியதோடு பலம் குறைந்துவிட்டதாகவும், இவற்றை அறவே நீக்கிவிடும் ஆற்றலைக் கார்ட்டல்களும் டிரஸ்டுகளும் மூலதனத்துக்கு அளித்திடுமென எதிர்பார்க்கலாம் என்பதாகவும் கூறப்பட்டது. முதலாளித்துவம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் "தகர்வு பற்றிய தத்துவம்", வர்க்கப் பகைமைகள் மேலும் மேலும் கடுமை குறைந்து தணிந்துவிடும் போக்கின் காரணத்தால் ஆதரமற்றதாகுமெனக் கூறப்பட்டது. முடிவில் மார்க்சின் மதிப்புத் தத்துவத்தையும் பேம்-பாவர்க்கின் வழியில் திருத்துவதில் தவறு ஒன்றுமில்லை என்று கூறப்ட்டது.

இந்தப் பிரச்சினைகளில் திருத்தல்வாதிகளை எதிர்த்து நடத்திய போராட்டமானது, இதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு டூரிங்குடன் எங்கெல்ஸ் நடத்திய சர்க்கையைப் போல் அதே அளவுக்குப் பயனுள்ள முறையில் சர்வதேச சோஷலிசத்தில் தத்துவார்த்தச் சிந்தனையை மறுமலர்ச்சி பெறச் செய்தது. உண்மைகள். புள்ளிவிவரங்கள் இவற்றின் துணை கொண்டு திருத்தல்வாதிகளுடைய வாதங்கள் பகுத்தாராயப்பட்டன. தற்காலச் சிறுவீத உற்பத்தி குறித்து திருத்தல்வாதிகள் முனைந்து நின்று பகட்டான சித்திரம் தீட்டினர் என்று நிரூபிக்கப்பட்டது. தொழில் துறையில் மட்டுமின்றி, விவசாயத்திலுங்கூட சிறுவீத உற்பத்தியைவிடப் பெருவீத உற்பத்தியே தொழில்நுட்ப வழியிலும் வர்த்தக வழியிலும் வர்த்தக வழியிலும் மேலானது என்பது மறுக்க முடியாத உண்மைகளால் மெய்ப்பிக்கப்படுகிறது. ஆனால் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தி விவசாயத்தில் குறைந்த அளவு வளர்ச்சியே பெற்றிருக்கிறது, தற்காலப் புள்ளிவிவர இயலாளர்களும் பொருளியலாளர்களும், பொதுவாகப் பேசமிடத்து, உலகப் பொருளாதாரத்தின் பரிவர்த்தனை நிகழ்ச்சிப்போக்கினுள் விவசாயம் மேலும் மேலும் இழுத்துக் கொள்ளப்படுவிதைச் சுட்டிக்காட்டும் தனிக் கிளைகளையும் [சில நேரங்களில் செயற்பாடுகளையுங்கூட] தேர்வாய்வு செய்வதில் அதிகத் தேர்ச்சியுடையோராய் இல்லை. சிறுவீத உற்பத்தியானது இயற்கைப் பொருளாதாரத்தின் இடிபாடுகள் மீது தன்னை நிலைநிறுத்திக் கொள்வது எப்படியெனில், இடையறாது உணவுத் தரத்தை மோசமாக்கியும் நிரந்தரப் பட்டினியாலும் வேலை நேரத்தை அதிகமாக்கிச் சென்றும் கால்நடைகளின் தரத்தையும் பராமரிப்பையும் சீர்கேடுறச் செய்தும் தான் - சுருக்கமாய்க் கூறினால், முதலாளித்துவப் பட்டறை உற்பத்தியை எதிர்த்துக் கைத்தொழில் உற்பத்தி தன்னை நிலை நிறுத்தி வந்த அதே வழிகளில் தான். விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் ஏற்படும் ஒவ்வொரு முன்னேற்றமும் முதலாளித்துவச் சமுதாயத்தில் சிறுவீத உற்பத்தியின் அடித்தளங்களுக்குத் தவிர்க்க முடியாதவாறும் விடாப்பிடியாகவும் குழி பறிக்கிறது. பல சந்தர்பங்களில் குழப்படியாகவும் சிக்கலாகவுமுள்ள இந்த நிகழ்ச்சிப்போக்கை அதன் எல்லா வடிவங்களிலும் ஆராய்வதும், சிறு உற்பத்தியாளரால் முதலாளித்துவத்தில் அழியாது நிலைப்பது முடியாதென்பதையும் முதலாளித்துவத்தில் விவசாயியின் சிறு சாகுடிக்கு விடிமோட்சமில்லை என்பதையும் பாட்டாளியின் கண்ணோட்டத்தை விவசாயி ஏற்பது அவசியம் என்பதையும் தெளிவு படுத்திக் காட்டுவதும் சோஷலிசப் பொருளியலுக்குரிய கடமையாகும். இந்தப் பிரச்சினையில் திருத்தல்வாதிகள் ஒருச்சார்பாகவும் முதலாளித்துவத்தின் முழு அமைப்புடன் தொடர்பின்றியும் தேர்வு செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் மேம்போக்கான பொது முடிவுகளுக்கு வந்து விஞ்ஞானத்தின் கண்ணோட்டத்தில் கேடு புரிந்தனர். புரட்சிகரப் பாட்டாளியின் பார்வை நிலையை ஏற்குமாறு வற்புறுத்துவதற்குப் பதிலாய் சிறு உடைமையாளனின் போக்கை [அதாவது முதலாளித்துவ வர்க்கத்தாரின் போக்கை] ஏற்குமாறு தெரிந்தோ தெரியாமலோ தவிர்க்க முடியாதபடி விவசாயியை அழைத்ததன் மூலம், அல்லது வற்புத்தியதன் மூலம் அவர்கள் அரசியலின் கண்ணோட்டத்தில் கேடு புரிந்தனர்.

நெருக்கடிகளின் தத்துவம் குறித்தும் தகர்வின் தத்துவம் குறித்தும் திருத்தல்வாதத்தின் நிலை மேலும் படுமோசமானதாகவே இருந்தது. மிகச் சொற்ப காலத்துக்கு மட்டுமேதான், அதுவும் மிக மோசமான கிட்டப்பார்வை கொண்டவரால் தான் ஒரு சில ஆண்டுக் காலத் தொழில் துறை ஏற்ற நிலையாலும் சுபிட்சத்தாலும் வயப்படுத்தப்பட்டு, மார்க்சின் தத்துவத்தினுடைய அடிப்படைகளைத் திருத்தியமைக்க மேண்டுமென நினைக்க முடியும். நெருக்கடிகள் கடந்த காலத்துக்குரியனவாகிவிடவில்லை, சுபிட்சத்தைப் பின்தொடர்ந்து எநருக்கடி வருகிறது என்பதை எதார்த்த நிலைமைகள் மிக விரைவாகவே திருத்தல்வாதிகளுக்குத் தெளிவுபடுத்தின. குறிப்பிட்ட நெருக்கடிகளின் வடிவங்களும் வரிசைமுறையும் சித்திரமும் மாறினவேயன்றி, நெருக்கடிகள் முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத ஒர் அங்கமாய்த்தான் நிலைத்திருந்தன. கார்ட்டல்களும் டிரஸ்டுகளும் உற்பத்தியை ஒன்று படுத்திய அதே நேரத்தில், எல்லோருக்கும் கண்கூடாய்த் தெரியும்படியான முறையில் உற்பத்தியின் அராஜகத்தையும் பாட்டாளி வர்க்கத்தினுடைய வாழ்வின் காவந்தின்மையையும் மூலதனத்தின் ஒடுக்குமுறையையும் தீவிரப்படுத்தி, இதன் மூலம் வர்க்கப் பகைமைகளை முன்பின் கண்டிராத அளவுக்குக் கடுமையாக்குகின்றன. முதலாளித்துவமானது அழிவை நோக்கி - தனிப்பட்ட அரசியல், பொருளாதார நெருக்கடிகளைக் குறிக்கும் பொருளிலும் முதுலாளித்துவ அமைப்பு அமைத்தின் முழுநிறைத் தகர்வைக் குறிக்கும் பொருளிலும் விரைந்தோடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பாய் இதே புதிய பகாசுர டிரஸ்டுகளின் மூலம் மிக மிகத் தெளிவாகவும் மிகமிகப் பெரிய அளவிலும் தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது. அண்மையில் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியுட் ஐரோப்பா பூராவிலும் பயங்கரமாய் அதிகரித்திருக்கும் வேலையில்லாத் திண்டாட்டமும் - எக்கணமும் மூண்டுவிடும் நிலையிலுள்ள தொழில் துறை நெருக்கடியைப் பற்றிக் கூறவே வேண்டாம், பல அறிகுறிகள் இதனைச் சுட்டிக்காட்டுகின்றன - திருத்தல்வாதிகளுடைய அண்மைக் காலத்தியத் "தத்துவங்கள்" எல்லோராலும், திருத்தல்வாதிகளிடையேகூட பலரும் அடங்கலாய் எல்லோராலும், மறக்கப்பட்டுவிடும் நிலையை உண்டாக்கியுள்ளன. ஆனால் அறிவுத்துறையினரது இந்த நிலையின்மை தொழிலாளி வர்க்கத்துக்கு அளித்திடும் படிப்பினைகள் ஒரு போதும் மறக்கப்படலாகாது.

மதிப்புத் தத்துவத்தைப் பொறுத்தமட்டில் பேம்பாவர்க்கின் பாணியில் சிறிதும் தெளிவற்ற சூசகங்களையும் பெரு முச்சுகளையும் தவிர்த்து, திருத்தல்வாதிகள் வேறு எதுவுமே அளித்திடவில்லை, ஆகவே விஞ்ஞான சிந்தனையின் வளர்ச்சியில் எவ்விதத் தடமும் விட்டுச் செல்லவில்லை என்பதற்குமேல் ஒன்றும் சொல்லத் தேவையில்லை.

அரசியல் துறையில், திருத்தல்வாதமானது மார்க்சியத்தின் அடித்தளத்தை, அதாவது வர்க்கப் போராட்டத் தத்துவத்தைத் திருத்த மெய்யாகவே பெருமுயற்சி செய்தது. அரசியல் சுதந்திரமும் ஜனநாயகமும் அனைத்து மக்கள் வாக்குரிமையும் வர்க்கப் போராட்டத்துக்கான இடிநிலையை அகற்றிவிடுவதாகவும், தொழிலாளி வர்க்கத்துக்குத் தாய் நாடில்லை என்கிற கம்யூனிஸ்டு அறிக்கையின் பழம்பெரும் நிர்ணயிப்பைப் பொய்யாக்கிவிடுவதாகவும் கூறினார்கள். எனெனில் ஜனநாயகத்தில் "பெரும்பான்மையோரின் சித்தம்" ஆதிக்கம் செலுத்துவதால், அரசை வர்க்க ஆதிக்கத்திற்கான உறுப்பான யாரும் கருதலாகாதென்றும், பிற்போக்காளர்களுக்கு எதிராய் முற்போக்கான, சமுதாய - சீர்திருத்த முதலாளித்துவ வர்க்கத்துடன் கூட்டுகள் நிறுவிக் கொள்வதை நிராகரிக்கலாகாதென்றும் ்்கூறினர்

திருத்தல்வாதிகளுடைய இந்த வாதங்கள் ஒரளவு பாங்குற வகுக்கப்பெற்ற கருத்தமைப்பாகும் என்பதை, அதாவது பிரசித்தமான பழைய மிதவாத - முதலாளித்துவக் கருத்தமைப்பாகும் என்பதை மறுப்பதற்கில்லை. முதலாளித்துவப் பாராளுமன்ற முறையில் வாக்குரிமையையும் அரசாங்க விவகாரங்களில் பங்கு கொள்ளும் உரிமையையும் குடிமக்கள் அனைவரும் பாகுபாடின்றிப் பகிர்ந்து கொள்வதால் இது வர்க்கங்களையும் வர்க்கப் பிரிவினைகளையும் ஒழித்திடுகிறது என்று மிதவாதிகள் எப்பொழுதுமே கூறி வந்துள்ளனர். இத்தகைய கருத்துக்கள் எவ்வளவு அபத்தமானவை என்பதைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஐரோப்பாவின் வரலாறு அனைத்தும், இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் ருஷ்யப் புரட்சியின் வரலாறு அனைத்தும் கண்கூடாய்க் காட்டுகின்றன. "ஜனநாயக" முதலாளித்துவத்தின் சுதந்திரத்தில் பொருளாதாரப் பாகுபாடுகள் மேலும் தீவிரமாகிக் கடுமையாகின்றனவே முதலாளித்துவக் குடியரசுகளிலுங்கூட பாராளுமன்ற முறை இக்குடியரசுகளும் வர்க்க ஒடுக்கமுறை அமைப்புகளே என்ற அவற்றின் உள்ளியல்பான தன்மையை அப்பட்டமாய்த் தெரியப்படுத்துகிறதேயன்றி, அவற்றில் வர்க்க ஒடுக்குமுறையை அகற்றிவிடவில்லை. அரசியல் நிகழ்ச்சிகளில் முன்பு நேரடிப் பங்கு பெற்ற பகுதிகளைக் காட்டிலும் அளவிட முடியாத விரிவான மக்கள் பகுதியோருக்கு அறிவொளியூட்டி அவற்றை ஒழுங்குமைத்திடத் துணை புரிவதன் மூலம் பாராளுமன்ற முறை நெருக்கடிகளையும் அரசியல் புரட்சிகளையும் அகற்றிவிடவில்லை, இப் புரட்சிகளின் போது உள்நாட்டு யுத்தம் அதிகபட்ச அளவுக்கு கடுமையாகும்படியே செய்கிறது. தவிர்க்க முடியாதவடி எப்படி இது கடுமையாகிவிடுகிறது என்பதை 1871 ஆம் ஆண்டு வசந்தத்தில் பாரிஸ் நிகழ்ச்சிகளும் 1905 குளிர்காலத்தில் ருஷ்ய நிகழ்ச்சிகளும் மிக மிகத் தெளிவாய்க் காட்டின. பாட்டாளி வர்க்க இயக்கத்தை நசுக்கும் பொருட்டு பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் ஒரு கணங்கூடத் தயங்காது தேசம் அனைத்துக்கும் எதிரான பகைவனுடன், பிரஞ்சு நாட்டைச் சீரழியச் செய்த அந்நியச் சேனையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. பாராளுமன்ற முறை, முதலாளித்துவ ஜனநாயகம் இவற்றின் தவிர்க்க இயலாத உள்ளார்ந்த இயக்கவியலை - சர்க்சைக்கு வெகுஜனப் பலாத்காரத்தின் மூலம் முன்னிலும் கூர்மையான முடிவு காண வழி வகுக்கும் இதனை - புரிந்து கொள்ளாதவர் எவராலும் இந்தப் பாராளுமன்ற முறையின் அடிப்படையில் கோட்பாட்டு வழியில் முரணின்றியும் தொழிலாளி வர்க்க வெகுஜனங்கள் இந்த "சர்ச்சைகளில்" வெற்றிகரப் பங்கு கொள்ள மெய்யாகவே அவர்களைத் தயார் செய்யும் விதத்திலும் பிரசாரமும் கிளர்ச்சியும் நடத்த ஒருபோதும் முடியாது. மேற்கு நாடுகளில் சமூக - சீர்திருத்த மிதவாதிகளுடனும், ருஷ்யப் புரட்சியில் மிதவாதச் சீர்திருத்தவாதிகளுடனும் [காடேட்டுகள்] செய்து கொள்ளப்பட்ட கூட்டயிகள், ஒப்பந்தங்கள், இணைப்புகள் இவற்றின் அனுபவமானது, வெகுஜனங்களுடைய உணர்வை மழுங்கடிக்கவே இந்த ஒப்பந்தங்கள் உதவுகின்றன, போராடும் வீரர்களை அவை சிறிதும் போராடும் ஆற்றலற்ற, மிகுந்த ஊசலாட்டமும் துரோகத் தன்மையும் கொண்டவர்களுடன் இணையச் செய்து, வெகுஜனங்களுடைய போராட்டத்தின் மெய்யான முக்கியத்துவத்தைப் பலவீனப்படுத்துகின்றனவே அன்றி அதனை உயர்த்தவில்லை என்பதை ஐயந்திரிபற நிரூபித்துக் காட்டியுள்ளது. பிரான்சில் மில்லிரண்டிசம் - விரிவான, மெய்யாகவே தேச அளவில் திருத்தல்வாத அரசியல் போர்ந்தந்திரத்தைக் கையாளுவதில் மிகப் பெரிய முயற்சியான இது - உலகெங்கணும் பாட்டாளி வர்க்கம் எந்நாளும் மறக்க முடியாத வகையில் திருத்தல்வாதம் குறித்து நடைமுறை வாயிலான ஒரு மதிப்பீட்டை அளித்திருக்கிறது.

திருத்தல்வாதம் தவிர்க்க முடியாததாய் இருப்பதற்குத் தற்கால சமுதாயத்தில் அதற்குள்ள வர்க்க வேர்கள்தான் காரணம். திருத்தல்வாதம் ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்கு. ஜெர்மனியில் வைதீகவாதிகளுக்கும் பெர்ன்ஷ்டைனியர்களுக்கும், பிரான்சில் கெட்டிஸ்டுகளுக்கும் ழொரேசிஸ்டுகளுக்கும் [தற்போது இன்னும் முக்கியமாய் புருசிஸ்டுகளுக்கும்], கிரேட் பிரிட்டனில் சமூக - ஜனநாயகச் சம்மேளனத்துக்கும் சுயேச்சைத் தொழிற் கடசிக்கும், பெல்ஜியத்தில் புருக்கேருக்கும் வண்டர்வேர்டேக்கும், இத்தாலியில் முழுமையாளர்களுக்கும் சீர்திருதி்தவாதிகளுக்கும், ருஷ்யாவில் போலஷிவிக்குகளுக்கும் மென்ஷிவிக்குகளுக்கும் இடையிலான உறவுநிலை இந்நாடுகள் யாவற்றின் தற்போதைய நிலையில் இருந்துவரும் மிகப் பல்வேறுபட்ட தேசிய நிலைமைகளையும் வரலாற்றுக் கூறுகளையும் மீறி, சாராம்சத்தில் எங்கும் ஒன்றேபோல் இருக்கிறது, சிறிதளவேனும் தகவல் தெரிந்த சிந்தனை ஆற்றல் கொண்ட எந்த சோஷலிஸ்டுக்கும் இது குறித்துக் கடுகளவும் சந்தேகம் இருக்க முடியாது. உண்மையில் இன்றைய சர்வதேச சோஷலிஸ்டு இயக்கத்தினுள் நிலவும் "பிரிவினை" தற்போது உலகின் பல்வேறு நாடுகள் யாவற்றிலும் ஒரேவிதமான வழியில்தான் போய்க் கொண்டிருக்கிறது. முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு நாடுகளிலும் பல்வேறுபட்ட போக்குகள் சர்வதேச சோஷலிஸ்டு இயக்கம் ஒன்றினுள் போராடிக் கொண்டிருந்ததுடன் ஒப்பிடுகையில் இன்றைய நிலைமை பிரம்மாண்டமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதற்குச் சான்று பகர்கிறது. லத்தீனிய நாடுகளில் "புரட்சிகர சிண்டிக்கலிசமாய்" உருவாகியுள்ள அந்த "இடது சாரியிலிருந்தான திருத்தல்வாதமுங்" கூடத் தன்னை மார்க்சியத்துக்குத் தகவமைத்து, மார்க்சியத்தைத் "திருத்தி வருகிறது", இத்தாலியில் லப்ரியோலாவும் பிரான்சில் லாகர்டேலும் தவறாகப் புரிந்து கொள்ளப்ட்ட மார்க்சின் நிலையிலிருந்து சரியாய்ப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்சின் நிலையிலிருந்து சரியாய்ப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்சின் நிலைக்கு அடிக்கடி வேண்டுகோள் விடுக்கின்றனர்.

சந்தர்ப்பவாதத் திருத்தல்வாதத்தைப் போல அதே அளவுக்கு வளர்ச்சியடையாது இருந்து வரும் இந்தத் திருத்தல்வாதத்தின் சித்தாந்த உள்ளடக்கத்தை இங்கு நாம் பகுத்தாராவ்தற்கில்லை. இந்தத் திருத்தல்வாதம் இன்னமும் சர்வதேச நிகழ்ச்சிப்போக்கு ஆகவில்லை, எந்தவொரு நாட்டிலிம் சோஷலிஸ்டுக் கட்சியுடன் இன்னமும் அது எந்த வொரு பெரிய நடைமுறைப் போராட்டத்தின் சோதனையையும் கண்டதில்லை. ஆகவே மேலே சித்தரிக்கப்ட்ட "வலதுசாரியிலிருந்தான திருத்தல்வாதத்தைப்" பரிசீப்பதுடன் நாம் நிறுத்திக் கொள்கிறோம்.

முதலாளித்துவ சமுதாயத்தில் இது தவிர்க்க முடியாததாய் இருப்பதன் மூலகாரணம் என்ன? தேசியத் தனி இயல்புகளிலும் முதலாளித்துவ வளர்ச்சியின் அளவுகளிலும் இருக்கும் வேறுபாடுகளைக் காட்லும் இது ஆழமுடையதாய் இருப்பது ஏன்? ஏனெனில் ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் பாட்டாளி வர்க்கத்துடன் கூடவே விரிவான குட்டி பூர்ஷீவாப் பகுதியோர், சிறு உடைமையாளர் பகுதியோர் எப்பொழுதுமே இருந்து வருகிறார்கள். முதலாளித்துவம் சிறுவீத உற்பத்தியிலிருந்துதான் தோன்றியது, இடையறாது தோன்றிக்கொணடும் இருக்கிறது. முதலாளித்துவம் தவிர்க்க முடியாதபடி மீண்டும் மீண்டும் பல புதிய "மத்தியதரப் பகுதிகளை" [அலைகளை அண்டிப் பிழைக்கும் தொழிலகங்கள், வீட்டுப் பணித்துறை, சைக்கிள், மோட்டார் தொழில்களைப் போன்ற பெருந் தொழிற்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய நாடெங்கிலும் சிதறிக் கிடக்கும் சிறு தொழிலகங்கள், இன்ன பிற] தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் புதிய சிறு உற்பத்தியாளர்கள் இதே போலத் தவிர்க்க முடியாதபடித் திரும்பவும் பாட்டாளி வர்க்க அணிகளுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறார்கள். விரிவான தொழிலாளர் கட்சிகளின் அணிகளில் குட்டிபூர்ஷீவா உலகக் கண்ணோட்டம் திரும்பத் திரும்பத் தலைதூக்குவது இயற்கையே. பாட்டாளி வர்க்கப் புரட்சியால் கதி மாற்றங்கள் ஏற்படுகின்ற இப்படியே தான் நடைபெறும். ஏனெனில் இத்தகைய ஒரு புரட்சியை உண்டாக்க மக்கள் தொகையில் பெருவாரியானோர் "அவவே" பாட்டாளி வர்க்கத்தவராக்கப்படுவது அவசியமென நினைப்பது மிகப் பெரும் தவறாகும். இப்பொழுது அடிக்கடி நாம் சித்தாந்தத் துறையில் மட்டும் அனுபவித்து வரகின்றவை, அதாவது மார்க்சுக்குத் தத்துவார்த்தத் திருத்தங்கள் செய்வது குறித்த சர்ச்சைகள் - நடைமுறையில் தற்போது தொழிலாளர் இயக்கத்தின் தனிப்பட்ட துணைப் பிரச்சினைகள் குறித்து மட்டும் திருத்தல்வாதிகளுடனான போர்த்தந்திரக் கருத்து வேறுபாடுகளாகவும் அவற்றின் அடிப்படையிலான பிளவுகளாகவும் தலைதூக்குகின்றவை - பாட்டாளி வர்க்கப் புரட்சியானது சர்ச்சைக்குரிய எல்லாப் பிரச்சினைகளையும் கூர்மையாக்கிவிடும் போதும், வெகுஜனங்களின் நடத்தையை நிர்ணயிப்பதில் மிகுந்த உடனடி முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் பற்றிய எல்லாக் கருத்து வேறுபாடுகளையும் ஒன்றுகுவியச் செய்யும் போதும், மும்முரமான போராட்டத்துக்கிடையில் நண்பர்களிடைமிருந்து பகைவர்களை இனங்கண்டு கொள்வதையும் முடிவு கட்டும்படியான விதத்தில் பகைவனுக்கு அடி கொடுக்கும் பொருட்டு மோசமான கூட்டாளிகளை விலக்கிக் தள்ளுவதையும் அவசியமாக்கிவிடும் போதும் ஒப்பிட முடியாத மிகப் பெரிய அளவிலே வருங்காலத்தில் தொழிலாளி வர்க்கம் நிச்சயம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் திருத்தல்வாதத்தை எதிர்த்துப் புரட்சிகர மார்க்சியம் நடத்தும் சித்தாந்தம் போராட்டமானது, குட்டிபூர்ஷீவா அற்பவாதிகளின் எல்லா ஊசலாட்டங்களையும் பலவீனங்களையும் மீறித் தனது இலட்சியத்தின் முழுநிறை வெற்றியை நோக்கி முன்னேறி வீறு நடைபோடும் பாட்டாளி வர்க்கத்தினுடைய மாபெரும் புரட்சிப் போர்களின் பீடிகையே ஆகும்.

1908 மார்ச் - ஏப்ரல்

No comments:

Post a Comment