Saturday, February 6, 2010

2. தொழிலாளி வாக்கத்தின் உலக வரலாற்றுச் சிறப்புள்ள பணி. புரட்சியின் தலைமைச் சக்தி என்கிற வகையில் தொழிலாளி வர்க்கம். தொழிலாளி வர்க்கத்தின் நேச சக்திகள்.

சோஷலிசப் புரட்சி பற்றி

மார்க்ஸ் - எங்கெல்ஸ் - லெனின்

2. தொழிலாளி வாக்கத்தின் உலக வரலாற்றுச் சிறப்புள்ள பணி. புரட்சியின் தலைமைச் சக்தி என்கிற வகையில் தொழிலாளி வர்க்கம். தொழிலாளி வர்க்கத்தின் நேச சக்திகள்.

"கம்யூனிஸ்டுக் கட்சியின் அறிக்கை"
என்பதிலிருந்து

கா.மார்க்ஸ் - பி.எங்கெல்ஸ்

....முதலாளி வர்க்கம் - அதாவது, மூலதனம் - எந்தத் தகவில் வளர்க்கப்படுகிறதோ அதே தகவில் தொழிலாளி வாக்கமும், நவீன காலத்திய பாட்டாளி வர்க்கமும் வளர்க்கப்படுகிறது - அது உழைப்பாளிகளின் ஒரு வர்க்கம், அவர்கள் வேலை கிடைக்கிற வரைதான் வாழ்கிறார்கள், அவர்களின் உழைப்பு மூலதனத்தை அதிகப்படுத்துகிற வரைதான் அவர்களுக்கு வேலை கிடைக்கும். தங்களைப் பகுதி பகுதியாக விற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் இந்த உழைப்பாளிகள் மற்ற ஒவ்வொரு வர்த்தகப் பொருளைப் போலவே ஒரு பண்டமே, எனவே அவர்கள் போட்டியின் எல்லா கஷ்ட நஷ்டங்களுக்கும் ஆளாக்கப் படுகிறார்கள், சந்தையின் எல்லா ஏற்ற இறக்கங்களுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்...

...ஆனால் தொழில் வளர்ச்சியை யொட்டி பாட்டாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகரிப்பது மட்டுமல்ல, மேலும் பெரியபெரிய திரள்களில் அது குவிக்கப்படுகிறது, அதன் பலம் வளர்கிறது, அந்த பலத்தையும் அது மேன்மேலும் உணர்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் நிலைமைகளும் மேன்மேலும் சமமாக்கப்படுகின்றன - எந்த அளவுக்கு இயந்்திரங்கள் உழைப்பின் எல்லா வேறுபாடுகளையும் ஒழித்து அநேகமாக எங்குமே கூலிகளை ஒரே கீழ் மட்டத்திற்குத் தாழ்த்துகிறதோ அந்த அளவுக்கு. முதலாளி வர்க்கத்தினரிடையே வளர்ந்து வரும் போட்டியும் அதிலிருந்து விளைகிற வர்த்தக நெருக்கடிகளும் தொழிலாளிகளின் கூலிகளை மேன்மேலும் ஏறி இறங்கச் செய்கின்றன. இடையறாமல் இயந்திரங்கள் மேம்பட்டு வருவது, மேன்மேலும் வேகமாக வளர்வது அவர்களின் வாழ்க்கையை மேன்மேலும் நிச்சயமற்றதாகச் செய்கிறது, தன்திதனி தொழிலாளிகளுக்கும் தனித்தனி முதமலாளிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் மேன்மேலும் இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான மோதலின் தன்மையைப் பெறுகின்றன. அதையொட்டி முதலாளி வர்க்கத்தினரை எதிர்த்துத் தொழிலாளிகள் சங்கங்கள் (தொழிற் சங்கங்கள்) அமைக்கத் தொடங்குகின்றனர், கூலி விகிதத்தை திடமாக நீடித்து வைத்திருப்பதற்காக அவர்கள் சங்கத்தில் ஒன்றுபடுகிறார்கள். அவ்வப்பொழுது நடக்கிற இந்தக் கலகங்களுக்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்வதற்காக நிரந்தரமான சங்கங்களை நிறுவுகிறார்கள். இங்குமங்கும் இங்குமங்கும் இந்தப் போராட்டம் கலவரங்களாக வெடிக்கின்றன.

அவ்வப்பொழுது தொழிலாளிகள் வெற்றி பெறுகிறார்கள், ஆனால் கொஞ்ச காலத்திற்குத்தான், அவர்கள் போராட்டத்தின் உண்மையான பலன் உடனடி விளைவில் இல்லை, தொழிலாளிகளின் மேன்மேலும் விரிந்து கொண்டேயிருக்கும் ஒற்றுமையிலே உள்ளது. நவீனகாலத் தொழில்துறை படைக்கிற மேம்பட்ட போக்குவரத்துத் தொடர்புச் சாதனங்கள் இந்த ஒற்றுமைக்க ஊக்கி உதவுகின்றன. அவை பல வட்டங்களிலுள்ள தொழிலாளிகளை ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளும்படி செய்கின்றன. ஒரே தன்மையதாயுள்ள இந்த எண்ணற்ற ஸ்தலப் போராட்டமாக மையப்படுத்துவதற்குத் தேவைப்பட்டது இந்தத் தொடர்புதான். ஆனால் ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமாகும். எந்த ஒற்றுமைமைச் சாதிப்பதற்கு மோசமான சாலைகள் வைத்திருந்த மத்தியகால நகரத்தாருக்கு நூற்றாண்டுகள் பிடித்ததோ அந்த ஒற்றுமையை, இரயில்வேக்களின் காரணமாக, நவீன காலத்திய பாட்டாளிகள் ஒரு சில ஆண்டுகளில் சாதிக்கின்றனர்.

பாட்டாளிகள் ஒரு வர்க்கமாக, அதன் விளைவாக ஓர் அரசியல் கட்சியாக அமையும் இந்த அமைப்பு பாட்டாளிகளுக்குள்ளேயே இருக்கும் போட்டியால் இடையறாது கவிழ்க்கப்படுகிறது. ஆனால் அது எப்போதும் மீண்டும் எழுந்தபடியே இருக்கிறது, மேலும் பலமாகவும் உறுதியாகவும் வலுவாகவும் எழுகின்றது. முதலாளி வர்க்கத்தினரிடையிலேயே இருக்கிற பிரிவுகளைப் பயன்படுத்திக் கொண்டு அது தொழிலாளிகளின் குறிப்பிட்ட நலன்களை சட்டரீதியிலே அங்கீகரிக்கும்படி கட்டாயப்படுத்துகிறது.

மொத்தத்தில் பழைய சமுதாயத்தின் வர்க்கங்களிடையேயுள்ள மோதல்கள் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சிப் போக்கை முன்னேற்றுகின்றன. முதலாளி வர்க்கம் இடையறாத ஒரு போரில் தான் மாட்டிக் கொண்டிருக்கக் காண்கிறது. முதன் முதலில் பிரபு வம்சத்தினருடன் போர், பிறகு, தொழில் துறையின் முன்னேற்றத்திற்குப் பகையானதாகிவிட்ட நலன்களையுடைய முதலாளி வர்க்கப் பகுதியினரோடு போர், எல்லாக் காலங்களிலும் வெளி நாடுகளின் முதலாளி வர்க்கத்தினரோடு போர். இந்தப் போர்களிலெல்லாம் அது தொழிலாளி வர்க்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கவும், ஆதரவை அளிக்கும்படி கோரவும், அதன் வழியே அதை அரசியல் அரங்கில் இழுத்து விடவும் கட்டாயப் படுத்தப் படுவதைப் பார்க்கிறது. எனவே, முதலாளி வர்க்கமே பாட்டாளி வர்க்கத்திற்கு அதற்கான சொந்தமான அரசியல் மற்றும் பொதுவான கல்விக்குரிய கூறுகளை அளிக்கிறது, வேறு விதமாகச் சொல்வதானால், முதலாளி வர்க்கமே பாட்டாளி வர்க்கத்திற்கு அதற்கான சொந்தமான அரசியல் மற்றும் பொதுவான கல்விக்குரிய கூறுகளை அளிக்கிறது, வேறு விதமாகச் சொல்வதானால், முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்குப் பாட்டாளி வர்க்கத்திற்கு முதாலாளி வர்க்கமே ஆயுதங்களைக் கொடுக்கிறது...

1847 டிசம்பர் 1848 ஜனவரி



--------------------------------------------------------------------------------
"பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை"
என்பதிலிருந்து

....அவர்களின் (விவசாயிகளின்) சுரண்டல், வடிவத்தில் மட்டுமே தொழில்துறைப் பாட்டாளி வர்க்கத்தின் சுரண்டலிலிருந்து மாறபட்டது. சுரண்டுகிறவன் ஒருவனே தான்: மூலதனம் என்பதே. தனித்தனி முதலாளிகள் தனித்தனி விவசாயிகளை அடமானங்கள் மூலமாகவும் வட்டிக்கடன் மூலமாகவும் சுரண்டுகிறார்கள், முதலாளி வர்க்கம் விவசாயிகளின் சொத்துக்கான பட்டா என்கிற தாயத்தைக் கொண்டு அவனை மூலதனம் தன் மந்திரத்தில் இதுவரை வசியப்படுத்தி வைத்திருந்தது, இந்தச் சாக்கின் பேரில் அவனை தொழில் துறைத் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக நிறுத்தி இருந்தது. மூலதனத்தின் வீழ்ச்சி ஒன்றுதான் விவசாயியை எழுப்பி நிற்கச் செய்யும், முதலாளித்துவத்திற்கு எதிரான ஒர தொழிலாளி வர்க்க அரசாங்கம் ஒன்றினால் தான் அவனுடைய பொருளாதார வறுமைமையம் சமூக இழி நலையையும் உடைத்தெறிய முடியும். அரசியல் சட்ட வகைப்பட்ட குடியரசு அவனுடைய ஒன்றுபட்ட சுரண்டலாளர்களின் சர்வாதிகாரமாகும், சமூக-ஜனநாயகவாத வகைப்பட்ட சர்வாதிகாரமாகும், சமூக- ஜனநாயகவாத வகைப்பட்ட சர்வாதிகராமாகும், சமூக - ஜனநாயகவாத வகைப்பட்ட சிகப்புக் குடியரசு அவனுடைய நேசசக்திகளின் சர்வாதிகாரமாகும்......

1850 ஜனவரி - நவம்பர்

--------------------------------------------------------------------------------

"புரட்சிகரமான தொழிலாளி வர்க்கத்தின் மேதின நடவடிக்கை"
என்பதிலிருந்து

....அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு நிராசையில் தள்ளப்பட்டுள்ள உழைக்கும் மக்களின், சுரண்டப்பட்ட மக்களின் திரள்களைத் தொழிலாளி வர்க்கம் புரட்சிகரமான நடவடிக்கையில் இழுத்து விடுகிறது. தொழிலாளி வர்க்கம் அவர்களுக்குப் புரட்சிகரமான போராட்டத்தைப் பற்றிப் போதிக்கிறது, புரட்சிகரமான நடவடிக்கைக்கு அவர்களுக்குப் பயிற்சி தருகிறது. தீர்வுக்கான வழியை எங்கே தேட வேண்டும், விமோசனம் பெறுவது எப்படி என்று அவர்களுக்குப் போதிக்கிறது, இந்த எடுத்துக்காட்டை தனியே நிற்கும் வீரர்களின் சாகசச் செயல்கள் கொடுப்பதில்லை, அரசியல் கோரிக்கைகளையும் பொருளாதாரக் கோரிக்கைகளையும் இணைத்த வெகுஜன ரீதியான புரட்சிகரமான நடவடிக்கையே கொடுக்கிறது.

1913 ஜுன்

--------------------------------------------------------------------------------

"அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்களும் தொழிலாளி வர்க்க சர்வாதிகாரமும்"
என்பதிலிருந்து

வி.இ.லெனின்

.....8.எந்த ஒரு நாட்டின் தொழிலாளி வர்க்கத்தின் பலமும், மொத்த மக்கள் தொகையில் அதற்கு இருக்கும் விகிதாசாரத்தைவிட எவ்வளவோ பெரியதாகும். ஏனெனில், தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவத்தின் பொருளாதார அமைப்புமுறை முழுவதின் மையத்திம் நரம்பு முனையிலும் பொருளாதார ரீதியிலே மேலோங்கிய நிலையில் நிற்கிறது, மேலும் முதலாளித்துவத்தின் கீழ் மிகமிகப் பெரும்பான்மையான உழைப்பாளி மக்களின் உண்மையான நலன்களைப் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தொழிலாளி வர்க்கம் வெளியிடுகிறது.

எனவே, தொழிலாளி வர்க்கம் மக்கள் தொகையில் சிறுபான்மையாக இருக்கும்போதுகூட (அல்லது வர்க்க உணர்வுள்ள, உண்மையிலே புரட்சிகரமான தொழிலாளி வர்க்க முன்னணிப்படை மக்கள் தொகையில் சிறுபான்மையாக இருக்கும் போதுகூட) முதலாளி வர்க்கத்தைத் தூக்கியெறியவல்லது, அதன் பிறகு அரைப்பாட்டாளிகளின் திரளிலிருந்தும் சிறு முதலாளி வர்க்கத்தினரிடமிருந்தும் எண்ணிறந்த நேச சக்திகளைத் தன் பக்கத்துக்கு இழுத்துக் கொள்ளவும் வல்லது, இந்தப் பகுதிகள் முன் கூட்டியே தொழிலாளி வர்க்க ஆட்சிக்குச் சாதகமாக இருப்பதாக என்றைக்கும் அறிவிப்பதில்லை, அவர்கள் அந்த ஆட்சியின் நிலைமைகளையும் குறிக்கோள்களையும் புரிந்து கொள்வதில்லை, பின்னால் பெறுகிற தங்களுடைய அனுபவத்தின் வாயிலாக மட்டுமே வெர்கள் தொழிலாளி வாக்க சர்வாதிகாரம் தவிர்க்க முடியாதது, முறையானது, நியாயமானது என்று உறதியாக நம்புகிறார்கள்.

9. இறுதியாக, ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையே தவிர்க்க முடியாதபடி ஊசலாடுகிற மிக விரிவான சிறு பூர்ஷுவாப் பகுதிகள் எப்போதும் உள்ளன. தொழிலாளி வர்க்கம் வெற்றி பெறுவதற்கு முதன் மதலில் முதலாளி வர்க்கத்தின் மீது தன்னுடைய நிர்ணயமான தாக்குதலுக்கான சரியான தருணத்தைத் தேர்ந்து கொள்ள வேண்டும், அதற்கு, மற்றவை ஒரு புறமிருக்க, அது முதலாளி வர்ககத்தினருக்கும் அதன் சிறு பூர்ஷுவா நேச சகதகளுக்கும் இடையேயுள்ள வேற்றுமையைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும், அல்லது அவற்றின் கூட்டணியின் திடமின்மை முதலானவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, தொழிலாளி வர்க்கம் வெற்றி பெற்ற வின் சிறு பூர்ஷுவா வாக்த்தினரை நடு நிலைப்படுத்தி வைக்கும் வழியில் அவர்களின் இந்த ஊசலாட்டத்தைப் பயன் படுத்தித் தீர வேண்டும், சுரண்டலாளர்களுடன் அவர்கள் சேர்ந்து விடாதபடி தடுக்க வேண்டும், இந்த ஊசலாட்டம் முதலியவற்றை மீறி அது கொஞ்ச காலத்துக்குத் தாக்குப் பிடிக்க முடிய வேண்டும்.

10. வெற்றிக்காகத் தொழிலாளி வர்க்கத்தைத் தயார் செய்வதற்கு அவசியமான நிலைமைகளில் ஒன்று, சந்தர்ப்ப செய்வதற்கு அவசியமான நிலைமைகளில் ஒன்று, சந்தர்ப்பவாதம் சீர்திருத்தவாதம் சமூக இனவெறி வாதம் மற்றும் இது போன்ற பூர்ஷுவா செல்வாக்குகளையும் போக்குகளையும் எதிர்த்து ஒரு நீண்ட, விடாப்பிடியான, ஈவிரக்கமற்ற போராட்டம் நடத்த வேண்டும், இவை தவிர்க்க முடியாதவை, ஏனெனில் தொழிலாளி வர்க்கம் ஒரு முதலாளித்துவச் சூழலில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட போராட்டம் இல்லையேல், தொழிலாளி வர்க்க இயக்கத்தில் முன்கூட்டியே சந்தர்ப்பவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்படாவிட்டால், தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் இருக்கவே முடியாது. போல்ஷிவிசம் 1903 - 17லேயே மென்ஷிவிக்குகளை - அதாவது, சந்தர்ப்பவாதிகளை சீர்திருத்த வாதிகளை, சமூக இனவெறி வாதிகளை - தோற்கடிக்கவும் தொழிலாளி வர்க்க முன்னணிப்படையின் கட்சியிலிருந்து ஈவிரக்கமின்றி வெளியேற்றவும் கற்றுக் கொள்ளாதிருந்திருந்தால் அது 1917 - 1919 களில் முதலாளி வர்க்கத்தினரை முறியடித்திருக்காது.

1919 டிசம்பர் 16

--------------------------------------------------------------------------------


"கம்யூனிடு அகிலத்தினுடைய இரண்டாவது காங்கிரசின் அடிப்படைப் பணிகளைப் பற்றிய ஆய்வுரைகள்"
என்பதிலிருந்து

....எந்த அளவுக்குத் தொழிலாளி வர்க்கம் தொழில் பிரிவைச் சேர்ந்த நலன்களின் குறுகிய சட்டத்திற்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறதோ, பொது வாழ்க்கையின் எல்லா விவகாரங்களிலும் துறைகளிலும் அது எல்லா உழைக்கும், சுரண்டப்பட்ட மக்களுக்குத் தலைவனாகச் செயலாற்றுகிறதோ அந்த அளவுக்கு மட்டுமே அது புரட்சிகரமானதாக ஆகிறது, முதலாளி வர்க்கத்தின் மீது வெற்றி பெறுவதற்காக மிகப்பெரிய தியாகங்கள் புரியத் தயாராகவும் சக்தியுள்ள தாகவும் இருக்காத வரையில் அது தன் சர்வாதிகாரத்தைச் சாதிக்க முடியாது. இவ்விஷயத்தில், ஒருங்கே கோட்பாடு ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் ருஷ்யாவின் அனுபவம் குறிபொருள் உள்ளது. தொழிலாளி வர்க்கம் மிகப்பெரிய தியாகங்கள் புரிந்திருக்காமலிருந்திருந்தால், அல்லது உலக முதலாளி வர்க்கத்தினர் உண்டாக்கிய தாக்குதலின், யுத்தத்தின், முற்றுகையின் மிக முக்கியமான தருணங்களில் அந்த மக்கள் திரள்களின் மற்ற எந்தப் பகுதியையும் விட பட்டினிகிடக்காமலிருந்திருந்தால் தொழிலாளி வர்க்கம் தன் சர்வாதிகாரத்தைச் சாதித்திருக்க முடிந்திராது, அல்லது எல்லா உழைக்கும் மக்கள் திரள்களின் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பையும் நம்பிக்கையையும் வென்றிருக்க முடிந்திராது.

1920 ஜீன் - ஜீலை

No comments:

Post a Comment