மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகு முறை - லெனின்
மார்க்சியம் என்பது பொருள்முதல்வாதம். இந்த முறையில் அது பதினெட்டாம் நூற்றாண்டுக் களைக்களஞ்சியவாதிகளின் பொருள்முதல்வாதம் அல்லது ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதத்தைப் போல மதத்துக்குக் கடுமையான விரோதியாகும். இதில் சந்தேகம் ஏற்பட முடியாது. ஆனால் மார்க்ஸ், எங்கெல்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதம் கலைக்களஞ்சியவாதிகள் மற்றும் ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதத்தைக் காட்டிலும் அப்பால் போகிறது, அது பொருள்முதல்வாதத் தத்துவவியலை வரலாறு மற்றும் சமூக விஞ்ஞானங்களின் துறைக்குக் கையாள்கிறது. நாம் மதத்தை எதிர்க்க வேண்டும். இது அமைத்துப் பொருள்முதல்வாதத்தின், ஆகவே மார்க்சியத்தின் அரிச்சுவடியாகும். ஆனால் மார்க்சியம் அரிச்சுவடியோடு நின்றுவிட்ட பொருள்முதல்வாதம் அல்ல. மார்க்சியம் அதற்கும் அப்பால் செல்கிறது. மதத்தை எதிர்ப்பது எப்படியென்று நாம் அறிந்திருக்க வேண்டும், அதற்காகப் பெருந்திரளான மக்களிடையில் நம்பிக்கை மற்றும் மதத்தின் தோற்றுவாயைப் பொருள்முதல்வாத முறையில் நாம் விளக்க வேண்டும் என்று அது கூறுகிறது. மதத்தை எதிர்த்தல் என்பது சூக்குமமான - சித்தாந்த போதனை என்ற அளவில் நின்றுவிடக் கூடாது, அத்தகைய போதனையாக அதைச் சுருக்கி விடவும் கூடாது. மதத்தின் சமூக வேர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க இயக்கத்தின் ஸ்தூலமான நடைமுறையோடு இப்போராட்டம் இணைக்கப்பட வேண்டும். நகரப் பாட்டாளி வர்க்கத்தின் பின்தங்கிய பகுதியினரிடமும் அரை பாட்டாளி வர்க்கத்தின் விரிவான பகதியினரிடமும் பெருந்திரளான விவசாகளிடமும் மதம் தன் பிடிப்பை வைத்திருப்பது ஏன்? அதற்கு காரணம் மக்களின் அறியாமை என்று பதிலளிக்கிறார் முதலாளி வர்க்க முற்போக்காளர், தீவிரவாதி அல்லது முதலாளி வர்க்கப் பொருள்முதல்வாதி. ஆகவே, மதம் ஒழிக, நாத்திகம் நீடூழி வாழ்க, நாத்திகக் கருத்துக்களைப் பரப்புவதே நமது தலையா கடமை. இது உண்மை அல்ல, இக்கருத்து மேலெழுந்தவாரியான, குறுகிய முதலாளித்துவ உயர்த்துவோருடை கருத்து என்று மார்க்சியவாதி கூறுகிறார். இக்கருத்து மததின் வேர்களைப் போதிய அளவுக்கு ஆழமாக விளக்கவில்லி, அவற்றைப் பொருள் முதல்வாத முறையில் அல்ல, கருத்துமுதல்வாத முறையில் விளக்குகிறது. நவீன முதலாளித்துவ நாடுகளில் இந்த வேர்கள் முக்கியமாக சமூகத் தன்மையானவை. இன்று மதத்தின் மிக ஆழமான வேர், பெருந்திரளான உழைக்கும் மக்கள் சமூக ரீதியில் கீழே அழுத்தப்பட்டுக் கிடக்கும் நிலைமையும் முதலாளித்துவத்தின் குருட்டுச் சக்திகளுக்கு முன்பாக வெளித்தோற்றத்தில் அவர்களுடைய முற்றிலும் அனாதரவான நிலைமையும் தான், முதலாளித்துவம் யுத்தங்கள், பூகம்பங்கள், இதரவைகளைப் போன்ற அசாதாரணமான சம்பவங்களால் ஏற்படுவதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமான கடுமையைக் கொண்ட மிகவும் அதிகமான அளவுக்கு மோசமான துன்பம், மிகவும் அதிகமான அளவுக்குக் காட்டு மிராண்டித் தனமான சித்திரவதையைச் சாதாரணமான உழைக்கின்ற மக்கள் மீது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் ஏற்படுத்துகிறது. "அச்சம் கடவுள்களைப் படைத்தது." மூலதனத்தின் குருட்டுச் சக்தியை - பெருந்திரளான மக்கள் அதை முன்னறிய முடியாது என்பதால் அது குருட்டுத் தனமானது - பற்றிய அச்சம் பாட்டாளி மற்றும் சிறிய உடைமையாளரின் வாழ்க்கையின் ஒவ்வொரு காலடியிலும் "திடீரென்ற", "எதிர்பாராதவிதமான", "தற்செயலான" அழிவை, நாசத்தை, ஏழையாகவும் பாப்பராகவும் விபச்சாரியாகவும் மாற்றுவதை, பட்டினிச் சாவை ஏற்படுத்தப் போவதாகப் பயமுறுத்துகிறது, அப்படியே ஏற்படுத்துகிறது - இதுதான் நவீன மதத்தின் வேர், ஒரு பொருள்முதல்வாதி அரிச்சுவடிப் பள்ளிப் பொருள்முதல்வாதியாக இல்லாதிருக்க வேண்டுமென்றால் அவர் முதலாவதாகவும் முதன்மையாகவும் இதை மனதிலிறுத்த வேண்டும். முதலாளித்துவக் கடும் உழைப்பினால் நசுக்கப்படுகின்ற, முதலாளித்துவத்தின் குருட்டுத் தனமான அழிவுச் சக்திகளின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருந்திரளான மக்கள் மதத்தின் இந்த வேரையும் மூலதனத்தின் ஆதிக்கத்தின் எல்லா வடிவங்களையும எதிர்த்து ஒற்றுமையான, அமைப்பு ரீதியான, திட்டமிட்ட மற்றும் உணர்வு பூர்வமான வழியில் தாங்களே போராடக் கற்றுக் கொள்கின்ற வரை எந்தக் கல்வி புகட்டும் புத்தகமும் அவர்களுடைய மனங்ளிலிருந்து மதத்தை ஒழித்துவிட முடியாது.
அப்படியானால் மதத்துக்கு எதிராகக் கல்வி புகட்டும் புத்தகங்கள் தீங்கானவை அல்லது அவசியமற்றவை என்று அர்த்தமா? இல்லை. இதற்கு முற்றிலும் இப்படி அர்த்தமாகாது. சமூக - ஜனநாயகத்தின் நாத்திகப் பிரச்சாரம் அதன் அடிப்படையான கடமைக்கு - சுரண்டல்காரர்களுக்கு எதிராகச் சுரண்டப்படுகின்ற பெருந்திரளான மக்களின் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்குக் - கீழ்ப்படுத்தப்பட வேண்டும் என்பது அதன் அர்த்தமாகும்.
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின், அதாவது மார்க்ஸ், எங்கெல்சின் தத்துவஞானத்தின் அடிப்படையான கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியாது[அல்லது குறைந்த பட்சம் உடனடியாகப் புரிந்து கொள்ள முடியாது]. அது எப்படி என்று அவர் கேட்பார். சித்தாந்தப் பிரச்சாரம், திட்டவட்டமான கருத்துக்களைப் போதித்தல், ஆயிரக்கணக்கான வருடங்களாக நீடித்திருந்திருக்கின்ற கலாச்சாரம் மற்றும் முன்னேற்றத்தின் எதிரிக்கு [அதாவது, மதத்துக்கு] எதிரான போராட்டம் வர்க்கப் போராட்டத்துக்கு, அதாவது பொருளாதார மற்றும் அரசியல் துறையில் திட்டவட்டமான செய்முறை நோக்கங்களுக்கான போராட்டத்துக்குக் கீழ்ப்படுத்தப்பட வேண்டுமா?
தற்பொழுது மார்க்சியத்துக்கு எதிராகச் சொல்லப்படுகின்ற மறுப்புகளில் இதுவும் ஒன்று, மார்க்சிய இயக்கவியல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதை இவை நிரூபிக்கின்றன. இந்த மறுப்பாளாகளைத் திகைப் பூட்டுகின்ற முரண்பாடு உண்மையான வாழ்க்கையில் உள்ள உண்மையான முரண்பாடு, அதாவது ஒர் இயக்கவியல் முரண்பாடு, அது பேச்சளவில் உள்ள முரண்பாடு அல்ல, கற்பனை செய்யப்பட்ட முரண்பாடும் அல்ல. நாத்தகத்தின் தத்துவப் பிரச்சாரம், அதாவது பாட்டாளி வர்க்கத்தின் சில பகுதியினரிடையே மத நம்பிக்கையை ஒழிப்பதற்காகச் செய்யப்படுகின்ற பிரச்சாரத்துக்கும் இந்தப் பகுதியினருடைய வர்க்கப் போராட்டத்தின் நிலைமைகள் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்குமிடையே தனிமுதலான, மீற முடியாத கோடு கிழிப்பது இயக்கவியலுக்கு மாறான முறையில் வாதம் செய்வதாகும், உண்மையான வாழ்க்கையில் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டிருப்பதைப் பலாத்காரமான முறையில் பிரிப்பதாகும். ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில், ஒரு குறிப்பிட்ட தொழில் துறையிலுள்ள பாட்டாளி வர்க்கம் ஒரளவுக்கு நல்ல வர்க்க உணர்வுடைய சமூக - ஜனநாயகவாதிகள் - அவர்கள் நாத்திகர்கள் தானே - என்ற முன்னணிப் பிரிவாகவும் ஓரளவுக்குப் பின் தங்கிய தொழிலாளர்களாகவும் - அவர்கள் இன்னும் நாட்டுப் புறப்பகுதியோடும் விவசாய வர்க்கத்தோடும் தொடர் புடையவர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்கள், மாதா கோவிலுக்குச் செல்பவர்கள் அல்லது ஸ்தல மதகுருவின் நேரடியான ஆதிக்கத்தின் கீழ் கூட [அவர் ஒரு கிறிஸ்தவத் தொழிலாளர்களின் சங்கத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்] இருப்பவர்கள் - என்று பிரிந்திருப்பதாகக் கருதுவோம். இந்த ஸ்தலத்தின் பொருளாதாரப் போராட்டத்தின் விளைவாக ஒரு வேலை நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் மேலும் கருதுவோம். மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் வேலை நிறுத்த இயக்கத்தின் வெற்றிக்கு முக்கியத்துவமளிப்பது, இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களை நாத்திகர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று பிரிப்பதை உறுதியாக மட்டுப்படுத்துவது, அத்தகைய பிரிவினையைச் சுறுசுறுப்பாக எதிர்ப்பது ஒரு மார்க்சியவாதியின் கடமையாகும். இத்தகைய சூழ்நிலையில் நாத்திகப் பிரச்சாரம் செய்வது அவசியமற்றதாகவும் தீமையளிப்பதாகவும் இருக்க முடியும். பின்தங்கிய பகுதியினரை விரட்டி விடலாம், தேர்தல்களில் ஒரு மாண்டேட்டை இழந்து விடலாம் என்ற ஃபிலிஸ்டீனிய அச்சம், இதரவை காரணமாக இப்படிக் கூறவில்லை, மொட்டையான நாத்திகப் பிரச்சாரத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறப்பான முறையில் கிறிஸ்தவத் தொழிலாளர்களைச் சமூக - ஜனநாகத்துக்கும் நாத்திகத்துக்கும் மாற்றக் கூடிய நவீன முதலாளித்துவச் சமூகத்தின் நிலைமைகளில் வர்க்கப் போராட்டத்தின் உண்மையான முன்னேற்றத்தை மனதில் கொண்டு இதைக் கூறுகிறோம். அந்தத் தருணத்தில், அத்தகைய சூழ்நிலையில் நாத்திகத்தைப் போதிப்பது மதகுருவின் கைகளில். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்கள் பிரிக்கப்படுவதற்குப் பதிலாகக் கடவுள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையுமே சிறப்பாக விரும்பாத மதகுருக்களின் கைகளைப் பலப்படுத்த உதவுவதாகும். என்னவானாலும் சரி கடவுளுக்கு எதிராக யுத்தம் என்று போதிக்கின்ற அராஜகவாதி நடைமுறையில் மதகுருக்களுக்கும் முதலாளி வர்க்கத்தினருக்குமே உதவி செய்வார் [நடைமுறையில் அராஜகவாதிகள் முதலாளி வர்க்கத்துக்கு எப்பொழுதுமே உதவி செய்கிறார்கள்]. ஒரு மார்க்சியவாதி பொருள்முதல்வாதி, அதாவது மதத்தின் விரோதியாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு இயக்கவியல் பொருள்முதல்வாதி, அதாவது மதத்துக்கு எதிரான போராட்டத்தை சூக்குமமான முறையில் நெடுந்தொலைவே உள்ள, முற்றிலும் தத்துவ ரீதியான, ஒருபோதும் மாற்றமடையாத போதனையை அடிப்படையாகக் கொள்ளமல் ஸ்தூலமான முறையில் செய்முறையில் நடைபெற்று வருகின்ற மற்றும் பெருந்திரளான மக்களிடம் வேறு எதையும் காட்டிலும் அதிகமாகவும் சிறப்பாகவும் பாடம் புகட்டுகின்ற வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் செய்பவராக இருக்க வேண்டும். ஒரு மார்க்சியவாதி ஸ்தூலமான நிலைமையை முழுமையாகப் பார்க்கக் கூடியவராக இருக்க வேண்டும், அராஜகவாதத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டை [இந்த எல்லைக் கோடு சார்பு நிலையானது, நகரக் கூடியது, மாறக் கூடியது ஆனால் அது இருக்கிறது] எப்பொழுதும் கண்டு பிடிக்கக் கூடியவராக இருக்க வேண்டும். அவர் அராஜகவாதிகள் சூக்குமமான, வார்த்தையளவான ஆனால் யதார்த்தத்தில் ஓட்டையான "புரட்சிவாதத்துக்கோ" அல்லது குட்டி முதலாளி அல்லது மிதவாத அறிவு துறையின் - அவர் மதத்துக்கு எதிரான போராட்டத்தைக் கண்டு தடுமாறுகிறார், அது தன்னுடைய கடமை என்பதை மறந்துவிட்டுக் கடவுள் நம்பிக்கைக்குத் தன்னைச் சமரசப்படுத்திக் கொள்கிறார், அவருக்கு வழிகாட்டுவது வர்க்கப் போராட்ட நலன்கள் அல்ல, யாரையும் புண்படுத்தக் கூடாது, யாரும் வெறுப்படையக் கூடாது, யாரும் பயந்துவிடக் கூடாது, "வாழு, வாழவிடு", இதரவை, இதரவையே - ஃபிலிஸ்டீனிசம், சந்தர்ப்பவாதத்துக்கோ இரையாகிவிடக் கூடாது.
..."மதம் ஒருவருடைய தனிப்பட்ட விவகாரம்" என்ற கருத்துக்குச் சந்தர்ப்பவாத விளக்கத்தை மேற்கு நாடுகளில் தோற்றுவித்த நிலைமைகளை இப்பொழுது ஆராய்வோம். கணநேரப் பலன்களுக்குக்காகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அடிப்படையான நலன்களைத் தியாகம் செய்வதைப் பான்ற மொத்தத்தில் சந்தர்ப்பவாதத்துக்கு இடமளிக்கின்ற பொதுக் காரணிகள் இந்த ஆதிக்கத்தில் பங்கெடுத்தன என்பது உண்மையே. மதம் தனிப்பட்ட விவகாரம் என்று அரசு அறிவிக்க வேண்டுமென்று பாட்டாளி வர்க்கத்தின் கட்சி கோருகிறது, ஆனால் மக்களுடைய அபினுக்கு எதிரான போராட்டம், மதச் சார்பான மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டம், இதரவைகளைத் "தனிப்பட்ட விவகாரம்" என்று அது கருதவதில்லை. சமூக - ஜனநாயகக் கட்சி மதத்தைத் தனிப்பட்ட விவகாரமாகக் கருதுகிறது என்று அர்த்தப்படும்படியாக இந்தப் பிரச்சினையைச் சந்தர்ப்பவாதிகளே திரித்துக் கூறுகிறார்கள்!
ஆனால் வழக்கமான சந்தர்ப்பவாதத் திரித்தலைத் தவிர [மதத்தைப் பற்றிய சொற்பொழிவைப் பற்றி நம்முடைய டூமா கோஷ்டியில் நடைபெற்ற விவாதத்தில் இது முற்றிலும் தெளிவுபடுத்தப்படவில்லை] ஐரோப்பிய சமூக - ஜனநாயகவாதிகளிடம் மதப் பிரச்சினையைப் பற்றி இன்றுள்ள அலட்சியத்தை - அது மிகையானது என்று கூடச் சொல்லலாம் - விசேஷமான வரலாற்று நிலைமைகள் தோற்றுவித்தன. இந்த நிலைமைகள் இரண்டு வகைரயான தன்மையைக் கொண்டவை. முதலாவதாக, மதத்தை எதிர்த்துப் போராடுவது வரலாற்று ரீதியில் புரட்சிகரமான முதலாளி வர்க்கத்தின் கடமை, மேற்கு நாடுகளில் முதலாளித்துவ ஜனநாயகம் அதன் புரட்சிகளின் சகாப்தத்தில் அல்லது நிலப்பிரபுத்துவம் மற்றும் மத்திய காலத்தின் மீது அதன் தாக்குகளின் போது இந்தக் கடமையை மிகவும் பெரிய அளவுக்கு நிறை வேற்றியது [அல்லது எடுத்துக் கொண்டது]. பிரான்சிலும் ஜெர்மனியிலும் மதத்தின் மீது முதலாளி வர்க்க யுத்தத்துக்கு ஒரு மரபு உண்டு, சோஷலிசத்துக்கு நெடுங்காலத்துக்கு முன்பே அது தொடங்கி விட்டது [கலைக்களஞ்சியவாதிகள், ஃபாயர்பாஹ்]. ருஷ்யாவில் நம்முடைய முதலாளித்துவ - ஜனநாயகப் புரட்சியின் நிலைமைகளின் காரணமாக இந்தக் கடமையும் கூட அநேகமாக முற்றிலும் தொழிலாளி வர்க்கத்தின் தோள்களின் மேல் விழுந்திருக்கிறது. நம் நாட்டில் குட்டி முதலாளி வர்க்க [நரோதிய] ஜனநாயகம் இதைப் பொறுத்தவரை அதிகமாகச் செய்து விடவில்லை [புதிதாகப் பிறந்திருக்கும் கறுப்பு நூற்றுவர் கடேட்டுகள் அல்லது வேஹி ["எல்லைக் கல்கள்"]இன் கடேட்டுக் கறுப்பு நூற்றுவர் அப்படி நினைக்கிறார்கள்], ஆனால் ஐரோப்பாவில் செய்யப்பட்டிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது மிகவும் குறைவாகவே செய்திருக்கிறது.
மறு பக்கத்தில், ஐரோப்பாவில் மதத்தின் மீது முதலாளி வர்க்கப் போர் மரபு இந்த யுத்தத்தைப் பற்றிய பிரத்யேகமான அராஜகவாத உருச்சிதைவையும் தோற்றுவித்திருக்கிறது. அராஜகவாதம் முதலாளி வர்க்கத்தை எவ்வளவு "வெறியோடு" தாக்கிய போதிலும் முதலாளி வர்க்க உலகக் கண்ணோட்டத்தைத் தன்னுடைய நிலையாகக் கொண்டிருக்கிறது என்பதை மார்க்சியவாதிகள் பன்னெடுங்காலமாகத் திரும்பத் திரும்ப விளக்கியிருக்கிறார்கள். ரொமான்ஸ் நாடுகளைச் சேர்ந்த அராஜகவாதிகளும் பிளான்கிஸ்டுகளும், ஜெர்மனியில் மோஸ்தும் [அவர் டூரிங்கின் மாணவராக இருந்தார்] அவரைச் சேர்ந்தவர்களும், ஆஸ்திரியாவில் எண்பதுக்களிலிருந்த அராஜகவாதிகளும் மதத்துக்கு எதிரான போராட்டத்தில் புரட்சிகரமான வாய்வீச்சை அதன் மிக உயர்ந்த கட்டத்துக்குக்கும் கொண்டு சென்றார்கள். அராஜகவாதிகளோடு ஒப்பிடுகின்ற பொழுது ஐரோப்பிய சமூக - ஜனநாயகவாதிகள் தற்பொழுது அடுத்த முனைக்கோடிக்குப் போகிறார்கள் என்பது வியப்பளிக்கவில்லை. இது முற்றிலும் புரிந்து கொள்ளப்படக் கூடியதே - ஒரளவுக்கு முறையானதும் கூட, எனினும் ருஷ்ய சமூக - ஜனநாயகவாதிகளாகிய நாம் மேற்கில் ஏற்பட்ட விசேஷமான வரலாற்று நிலைமைகளை மறப்பது தவறாகும்.
இரண்டாவதாக, மேற்கு நாடுகளில் தேசிய முதலாளி வர்க்கப் புரட்சிகள் முடிவடைந்த பிறகு, ஏறக்குறைய முழுமையான மதச் சுதந்திரம் அமுலாக்கப்பட்ட பிறகு மதத்துக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தின் பிரச்சினை வரலாற்று ரீதியில் சோஷலிசத்துக்கு எதிரான முதலாளித்துவ ஜனநாயகத்தின் போராட்டத்தினால் மிகவும் அதிகமான அளவுக்குப் பின்னணிக்குத் தள்ளப்பட்டிருந்தபடியால் முதலாளி வர்க்க அரசாங்கங்கள் திருச்சபைவாதத்துக்கு எதிராக போலி மிதவாதத் "தாக்குதலை" அமைப்பதன் மூலம் பெருந்திரளான மக்களுடைய கவனத்தைச் சோஷலிசத்திலிருந்து வெளியே திருப்புவதற்கு வேண்டுமென்றே முயற்சிகளைச் செய்தன. ஜெர்மனியில் kulturkamf மற்றும் பிரான்சில் திருச்சபைவாதத்துக்கு எதிராக முதலாளி வர்க்கக் குடியரசுவாதிகளின் போராட்டத்தின் தன்மையும் இதுவே. தொழிலாளி வர்க்கப் பெருந்திரளினருடைய கவனத்தை சோஷலிசத்திலிருந்து வெளியே இழுக்கின்ற வழியாக முதலாளி வர்க்கத் திருச்சபைவாத - எதிர்ப்பு - மேற்கில் மதத்துக்கு எதிரான போராட்டத்தில் சமூக - ஜனநாயகவாதிகளிடம் "அலட்சியம்" என்ற நவீன உணர்ச்சி பரவுவதற்கு முன்னால் ஏற்பட்டது இதுவே. சமூக - ஜனநாயகவாதிகள் மதத்துக்கு எதிரான போராட்டத்தைச் சோஷலிசத்துக்கான போராட்டத்துக்குக் கீழ்ப்படுத்துவதன் மூலம் முதலாளி வர்க்க மற்றும் பிஸ்மார்க்வாதத் திருச்சபைவா - எதிர்ப்பை எதிர்க்க வேண்டியிருந்தபடியால் இது மறுபடியும் முற்றிலும் புரிந்து கொள்ளப்படக் கூடியதே, முறைப்படியானதே.
1909 மே 13 [26]

No comments:
Post a Comment