தமிழில் ஒரு முழுமையான மார்க்சிய இணையத் தளத்தை, மார்க்சிய நூலக வடிவத்தில் உருவாக்குவதே எமது நோக்கம்.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனினின் ஆகியோர்களின் நூல்கள், கட்டுரைகள், கடிதங்கள் இதில் வெளியிடப்படும்.
மார்க்சியத்தின் அடிப்படைகளை அறிவதற்குப் பயன்படும்படியான பிற மார்க்சிய அறிஞர்களின் படைப்புகளும் இங்கு இடம்பெறும்.
திருத்தல்வாதத்தை எதிர்த்து, மார்க்சிய அடிப்படையைத் தெளிவிப்பதே இத்தளத்தின் முதன்மையான நோக்கம்.
இந்தியா மற்றும் தமிழகத்தின் சமூக வளர்ச்சியை, மார்க்சிய அடிப்படையில் புரிந்து கொள்வது, இந்திய தத்துவத்தை மார்க்சிய கண்ணோட்டத்தில் விவரிப்பது.
அடுத்து, எமது எதிர்கால திட்டமாக, மார்க்சிய ஆசான்களின் படைப்புகளிலிருந்து, மார்க்சியத்தை அறிவதற்கான பாடத்திட்டத்தை தொகுத் தளிப்பது.
மற்றும், மார்க்சியத்தை அறிவதற்கான அடிப்படைக் கேள்விகளைத் தொகுத்து, அதற்கு மார்க்சிய அறிஞர்களின் படைப்புகளைக் கொண்டே விடையளிப்பதும் ஆகும்.

No comments:
Post a Comment