சோஷலிசப் புரட்சி பற்றி
மார்க்ஸ் - எங்கெல்ஸ் - லெனின்
1. சோஷலிசப் புரட்சியின் புறநிலைத்தேவை. அதன் பொருளாதார சமுதாய அரசியல் முன்தேவைகள்
"கம்யூனிஸ்டுக் கட்சியின் அறிக்கை"
என்பதிலிருந்து
கா. மார்க்ஸ் - பி.எங்கெல்ஸ்
உற்பத்தி, பரிமாற்றம், சொத்து பற்றிய உறவுகளுடன் கூடிய நவீனகால முதலாளித்துவச் சமுதாயம், எவ்வளவோ பூதாகாரமான உற்பத்திச் சாதனங்களையும் பரிமாற்றச் சாதனங்களையும் தோற்றுவித்திருக்கும் இந்தச் சமுதாயம், தன் மந்திரங்களால் கீழ் உலகத்திலிருந்து எழுந்து வரச் செய்த ஆவி கணங்களை அடக்கிக் கட்டுப்படுத்த முடியாமற் போயிருக்கும் மந்திரவாதிபோல் உள்ளது. சென்ற பல பத்தாண்டுகளாக தொழில் துறையின், வாணிபத் துறையின் வரலாறு எனப்பட்டது, நவீனகால உற்பத்தி நிலைமைகளையும் முதலாளி வர்க்கத்தின் அதன் ஆட்சியின் வாழ்நிலைக்குரிய நிலைமைகளாயுள்ள சொத்து உறவுகளையும் எதிர்த்து நவீனகால நவீனகால உற்பத்திச் சக்திகள் செய்யும் கலகத்தின் வரலாறாகவே இருக்கிறது. முதலாளித்துவச் சமுதாயம் முழுவதின் வாழ்நிலையை ஒவ்வொரு தடவையும் மேன் மேலும் பயமுறுத்தும்படியாய் விட்டு விட்டுக் கிரமமாகத் திரும்பத் திரும்ப நிகழ்ந்து அதைச் சோதனைக்குள்ளாக்கும் வணிக நெருக்கடிகளைக் குறிப்பிட்டாலே போதும், இந்த நெருக்கடிகளில் இருப்பிலுள்ள உற்பத்திப் பொருட்களில் பெரும் பகுதி மட்டுமல்லாமல் முந்தி படைக்கப்பட்டிருந்த உற்பத்திச் சக்திகளில் பெரும் பகுதியுங்கூட விட்டு விட்டுக் கிரமமாக அழிக்கப்படுகிறது. இந்த நெருக்கடிகளில் ஒரு கொள்ளை நோய் வெடிக்கிறது, முந்திய சகாப்தங்கள் அமைத்திலும் அது ஒரு அபத்தமாகவே தோன்றியிருக்கும் - அதாவது, மிகை உற்பத்தி என்கிற கொள்ளை நோய் வெடிக்கிறது. சமுதாயம் திடீரென்று தற்காலிகமாக அநாகரிக நிலைக்குப் பின் தள்ளப்பட்டிருப்பதைக் காண்கிறது, ஏதோ ஒரு பஞ்சம், நீக்கமற வியாபித்த ஒரு நாசகாரப்போர் ஒவ்வொரு வாழ்க்கைச் சாதனத்தின் வரத்தையும் அடைத்து விட்டதாகத் தோன்றுகிறது, தொழிலும் வணிகமும் அழிக்கப்பட்டது போல் தோன்றுகிறது. ஏன்? ஏனெனில், நாகரிகம் மிதமிஞ்சி இருக்கிறது, வாழ்க்கைச் சாதனங்கள் மிதமிஞ்சி இருக்கின்றன, தொழில் மிதமிஞ்சி இருக்கிறது, வணிகம் மிதமிஞ்சி இருக்கிறது. சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்திச் சக்திகள் முதலாளித்துவச் சொத்துக்குரிய நிலைமைகளை மேற்கொண்டு வளர்க்கக் கூடியவையாக இல்லை, மாறாக, அந்நிலைமைகளால் விலங்கிடப் பட்டுள்ள அவை அந்நிலைமைகளை மிஞ்சிக் கொண்டு வலுவடைந்து விட்டுள்ளன, அவை அந்த விலங்குகளை ஒடித்துப் போட்டவுடன், முதலாளித்துவச் சமுதாயம் முழுவதிலும் ஒழுங்கீனத்தைக் கொண்டு வருகின்றன, முதலாளித்துவச் சொத்து இருந்து வருவதற்கு அபாயத்தை விளிவிக்கின்றன. உற்பத்திச் சக்திகளால் படைக்கப்பட்ட செல்வத்தை உள்ளடக்கி வைத்திருக்க முடியாதபடி முதலாளித்துவ சமுதாயத்தின் நிலைமைகள் குறுகி விட்டுள்ளன.....
முதலாளி வர்க்கத்தின் வாழ்நிலைக்கும் ஆட்சிக்கும் முக்கியமான நிபந்தனை, மூலதனத்தை உருவாக்குவதும் பெருக்குவதுமாகும், மூலதனத்துக்கு நிபந்தனை கூலியுழைப்பு. கூலியுழைப்பு முற்றிலும் பாட்டாளிகளிடையேயுள்ள போட்டி மீது ஆதாரப்பட்டிருக்கிறது. தொழிலின் முன்னேற்றத்தைத் தன்னையறியாமல் ஊக்கி வளர்ப்பது முதலாளிவர்க்கம். இந்த முன்னேற்றமானது போட்டியின் காரணமாகத் தொழிலாளிகளிடையே இருக்கும் தனித்தனியாகப் பிரிந்திருக்கும் நிலையை விலக்கிச் சங்கத்தின் மூலமாகப் புரட்சிகரமான இணைப்பை ஏற்படுத்துகிறது. எனவே, நவீனத் தொழிற்துறை, எந்த அடித்தளத்தின் மீது உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து தனதாக்கிக் கொள்கிறதோ அந்த அடித்தளத்தையே, தன் காலுக்கடியிலிருந்து வெட்டி விடுகிறது. எனவே, எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளி வர்க்கம் உற்பத்தி செய்வது தனக்குப்புதைகுழி தோண்டுபவர்களைத்தான். அதன் வீழ்ச்சியும் தொழிலாளி வர்க்கத்தின் வெற்றியும் ஒருங்கே தவிர்க்க வியலாதவை.
1847 - 1848 ஜனவரி
"அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு"
எனும் நூலின், முகவரியிலிருந்து
கா. மார்க்ஸ்
...சமுதாயத்தின் பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகள் தம் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நடப்பிலுள்ள உற்பத்தி உறவுகளோடு - அல்லது, அதையே சட்ட மொழி வடிவத்தில் சொல்வதனால், எந்தச் சொத்து உறவுகளுக்குள் இருந்தபடியே அதுவரை செயல்பட்டுக் கொண்டிருந்தனவோ அந்தச் சொத்து உறவுகளோடு - மோதிக் கொள்கின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்குரிய வடிவங்களாக இருந்தது போய் அவற்றிற்கு விலங்குகளாக மாறிவிடுகின்றன. அது முதல் ஒரு சமுதாயப் புரட்சி சகாப்தம் துவங்குகிறது...
....ஒரு சமுதாய அமைப்பு முறையில் இடம் பெறக்கூடிய உற்பத்திச் சக்திகள் அமைத்தும் வளர்ந்து தீருவதற்கு முன்னால் அந்தச் சமுதாய அமைப்பு முறை என்றைக்கும் அழிவதில்லை, மற்றும் பழைய சமுதாயத்தின் கருப்பைக்குள்ளே புதிய, மேலும் உயர்வான உற்பத்தி உறவுகளின் வாழ்நிலைக்குரிய பொருளாயத நிலைமைகள் முதிர்ச்சி பெறுவதற்கு முன்னால் அந்தப் புதிய மேலும் உயர்வான உற்பத்தி உறவுகள் என்றைக்கும் தோன்றுவதில்லை. எனவே மனிதகுலம் எப்போதும் தன்னால் சாதித்துத் தீர்க்க முடிகிறதாயுள்ள பணிகளை மட்டுமே வகுத்து எடுத்துக் கொள்கிறது, ஏனெனில், விஷயத்தை மேலும் நெருங்கிப் பார்ப்போமேயானால், அந்தப் பணியின் தீர்வுக்கான பொருளாயத நிலைமைகள் ஏற்கனவே இருக்கும் பட்சத்திலே தான் அல்லது குறைந்த பட்சம் உருவாக்கும் நிகழ்வுப் போக்கில் இருந்தால் தான் அந்தப் பணியுங்கூட எழுகிறது என்று எப்போதும் கண்டுகொள்ள முடியும். விரிவான வரி வடிவங்களில் ஆசிய வகைப்பட்ட, பண்டைக்கால வகைப்பட்ட, நிலப்பிரபுத்துவ வகைப்பட்ட, நவீன கால முதலாளித்துவ வகைப்பட்ட உற்பத்தி முறைகளைச் சமுதாயத்தின் பொருளாதார உருவாக்கத்தின் முன்னேற்றகரமான சகாப்தங்கள் என்று பெயரிட்டு அழைக்க முடியும். முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் சமுதாய உற்பத்தி நிகழ்வுப் போக்கின் கடைசியாக வந்த பகைமையான வடிவமாகும் - பகைமையானது என்றால் தனிப்ட்ட முறையில் பகைமையானது என்ற அர்த்தத்தில் அல்ல, தனிநபர்களின் சமுதாய வாழ்க்கை நிலைமைகளிலிருந்து எழுகிற பகைமை என்கிற அர்த்தத்தில், அதே நேரத்தில் முதலாளித்துவச் சமுதாயத்தின் கருப்பைக்குள் வளர்ந்து வரும் உற்பத்திச் சக்திகள் அந்த பகைமைக்குத் தீர்வு காண்பதற்கான பொருளாயத நிலைமைகளைப் படைக்கின்றன. எனவே, இந்தச் சமுதாய அமைப்பு முறை மனித சமுதாயத்தின் வரலாற்றுக்கு முந்திய காலத்துக்கு முடிவு கட்டுகிறது.
1859 ஜனவரி
"மூலதனம்"
எனும் நூலிலிருந்து
கா.மார்க்ஸ்
....இந்த உருமாற்ற நிகழ்வுப் போக்கின் அனுகூலங்கள் அனைத்தையும் கைப்பற்றி ஏகபோகமாக்கிக் கொள்ளும் மூலதனப் பிரமுகர்களின் எண்ணிக்கை இடையறாது குறைந்து கொண்டு வருவதோடு கூடவே வறுமைத் துன்பம், ஒடுக்குமுறை, அடிமைத்தனம், இழிவு, சுரண்டல் ஆகியவை திரளாக வளர்கின்றன, ஆனால், அவற்றோடு கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கலகமும் வளர்கிறது. இந்த வர்க்கம் எண்ணிக்கையில் எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, முதலாளித்துவ உற்பத்தி நிகழ்வுப் போக்கின் இயந்திர அமைப்பினாலேயே கட்டுப்பாடு பெறச் செய்யப்படுகிறது, ஒன்றுபடுத்தப்படுகிறது, திரட்டியமைக்கப்படுகிறது. உற்பத்தி முறையோடு கூடவே, அதன் கீழிருந்தபடியே, தோன்றிச் செழித்து வளர்ந்த மூலதனத்தின் ஏகபோகம் அதே உற்பத்தி முறைக்கு விலங்காக ஆகிவிடுகிறது. உற்பத்திச் சாதனங்கள் மையப் படுத்தப்படுதலும் உழைப்பு சமுதாய மயமாக்கப்படுதகூலும் கடைசியில் ஒரு முனையை எட்டுகின்றன. அந்த முனையை எட்டும்போது அவை தம்முடைய முதலாளித்துவ மேலோட்டுடன் பொருத்தமற்றுப் போகின்றன. இந்த மேலோடு உடைத்தெறியப் படுகிறது. முதலாளித்துவத் தனிச் சொத்துடைமைக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது. பறித்துக் கொண்டவர்கள் பறிமுதலுக்கு ஆளாகிறார்கள்.
முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவான முதலாளித்துவக் கைப்பற்றல் முறை முதலாளித்துவத் தனிச் சொத்துடைமையை உண்டாக்குகிறது. உடைமையாளனின் தனிச் சொத்துடைமையின் முதன் முதலான நிலை மறுப்பாகும் இது. ஆனால் முதலாளித்துவ உற்பத்தியானது தவிர்க்க முடியாத ஒரு இயற்கையின் விதியைப்போல் தன் சொந்த நிலை மறுப்பையே உண்டு பண்ணிக் கொள்கிறது. இது நிலைமறுப்பின் நிலை மறுப்பாகும். இது உற்பத்தியாளனுக்கு மீண்டும் தனிச் சொத்துடைமையை ஏற்படுத்திக் கொடுக்கிறதில்லை, ஆனால் முதலாளித்துவச் சகாப்தத்திடமிருந்து பெறப்பட்ட செல்வங்களின் அடிப்படையிலும் பொதுவில் வைத்திருப்பதின் அடிப்படையிலும் அமைந்த தனிப்பட்ட சொத்துடைமையை - அவனுக்குக் கொடுக்கிறது.
தனிப்பட்ட உழைப்பிலிருந்து எழுகிற சிதறிய நிலையிலுள்ள தனிச் சொத்துடைமை முதலாளித்துவ தனிச் சொத்துடைமையாக உருமாற்றம் பெறுவது இயல்பாகவே ஒரு நிகழ்வுப் போக்காகும், சமுதாய மயமாக்கப்பட்ட உற்பத்தியின் மீது ஏற்கனவே ஆதாரப்பட்டிருக்கும் முதலாளித்துவத் தனிச் சொத்துடைமை சமுதாய மயமாக்கப்பட்ட சொத்துடைமையாக உருமாற்றம் பெறுவதைவிட இது நீண்டதாகும், பலாத்காரமானதாகும், கஷ்டமானதாகும். முந்தி சொன்ன வழக்கில், ஒரு சில பற்றாளர்கள் திரளான மக்களிடமிருந்து பறிமுதல் செய்வதைப் பார்க்கிறோம். பிந்தி சொன்ன வழக்கில், ஒரு சில பற்றாளர்களிடமிருந்து திரளான மக்கள் பறிமுதல் செய்வதைப் பார்க்கிறோம்.
1867
மூலதனம், தொகுதி 1
"கற்பனா சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்"
என்பதிலிருந்து
பி.எங்கெல்ஸ்
...டிரஸ்டுகளில் போட்டிக்கான சதந்தரம் அதன் எதிர்மறையான ஏகபோகமாக மாறிவிடுகிறது, முதலாளித்துவச் சமுதாயத்தின் எந்த உருப்படியான திட்டமும் இல்லாத உற்பத்தியானது படையெடுத்துவரும் சோஷலிசப் பாணிணிலான சமுதாயத்தின் ஒரு உருப்படியான திட்டத்தின்படி அமைந்த உற்பத்திக்கு அடிபணிகிறது. இது இன்னமும் முதலாளிகளின் ஆதாயத்துக்காவும் அனுகூலத்துக்காகவும் இருப்பது உண்மையே. ஆனால் இவ் வழக்கில் சுரண்டல் மிகவும் தொட்டறியத்தக்க வகையில் இருக்கிறதினால் அது நொறுங்கித் தீரவேண்டம்...
எப்படியானாலும் சரி, டிரஸ்டுகள் இருந்தாலும் இல்லாமற்போனாலும் பிரதிநிதியாகிய அரசு கடைசியிலே உற்பத்தியை நெறிப் படுத்துவதை மேற்கொண்டு தீர வேண்டும். அரசுடைமையாக ஆக்க வேண்டியதின் அவசியம் போக்குவரத்துக்கான மாபெரும் நிறுவனங்களான தபால் நிலையம், தந்தி நிலையம், இரயில்வேக்கள் விஷயத்தில் முதன் முதலில் உணரப் படுகிறது.
மேற்கொண்டு நவீன காலத்திய உற்பத்திச் சக்திகளை நிர்வகிக்க முதலாளி வர்க்கத்திற்குத் திறமை கிடையாது என்பதை நெருக்கடிகள் நிரூபித்துக் காட்டுகின்றன என்றால் உற்பத்தி வினியோகம் ஆகியவற்றிறிகான மாபெரும் நிறுவனங்கள் கூட்டுப் பங்கு கம்பெனிகளாகவும் டிரஸ்டுகளாகவும் அரசுச் சொத்துடைமையாகவும் உருமாற்றம் பெறுவது இந்தக் காரியத்துக்கு முதலாளி வர்க்கம் எவ்வளவு அவசியமற்றது என்பதைக் காட்டுகிறது. முதலாளியின் எல்லாச் சமுதாய ரீதியான வேலைகளையும் இப்போது சம்பளத்திற்கு உழைக்கும் பணியாளர்கள் செய்கிறார்கள். டிவிடெண்ட் வட்டியை பையில் போட்டுக் கொள்வது, வட்டி கூப்பன்களைக் கிழித்தெடுத்துக் கொள்வது, வெவ்வேறான முதாலாளிகள் தங்கள் மூலதனத்தை ஒருவர்க்கொருவர் நாசப்படுத்திக் கொள்வதற்கான பங்கு மார்க்கெட்டில் சூதாடுவது தவிர மேற்கொண்டு வேறெந்த சமுதாய ரீதியான வேலையும் முதலாளிக்குக் கிடையாது. முதன் முதலில் முதலாளித்துவ உற்பத்தி முறை தொழிலாளிகளைப் பலவந்தமாக வெளியேற்றுகிறது. இப்போது அது முதலாளிகளைப் பலவந்தமாக வெளியேற்றுகிறது, தொழிலாளிகளைச் செய்தைப் போலவே அது முதலாளிகளை தேவைக்கு மீறிய மக்களின் அணிகளிலே தள்ளி விடுகிறது- தொழில்துறைச் சேமப்டையில் உடனடியாகத் தள்ளி விடாது போன போதிலுங்கூட.
ஆனால் கூட்டுப் பங்குக் கம்பெனிகளாகவும் டிரங்டுகளாகவும் உருமாற்றம் பெற்றாலும் சரி, அரசுடைமை ஆகி உருமாற்றறம் பெற்றாலும் சரி, அது உற்பத்திச் சக்திகளின் முதலாளித்துவத் தன்மையைப் போக்கிவிடவில்லை. கூட்டுப் பங்குக் கம்பெனிகள் டிரஸ்டுகள் விஷயத்தில் இது கண்கூடு. மேலும், தொழிலாளிகளின் அத்துமீறல்களக்கும் எதிராக முதலாளித்துவ உற்பத்தி முறையின் வெளி நிலைமைகளைத் தாங்கி நிறுத்துவதற்காக முதலாளித்துவச் சமுதாயம் ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பே அரசு என்பதாகும். நவீன காலத்திய அரசு எந்த வடிவத்தில் இருந்தாலும் சரி, அது சாராம்சத்தில் ஒரு முதலாளித்துவ இயந்திரமே, முதலாளிகளின் அரசே, மொத்த தேசிய மூலதனத்தின் இலட்சிய நிலையிலான உருவெளித் தோற்றமே ஆகும். அது எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உற்பத்திச் சக்திகளை எடுத்துக் கொள்ளத் துவங்குகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நடை முறையில் தேச ரீதியான முதலாளி ஆகிறது, அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாகக் குடிமக்களைச் சுரண்டுகிறது. தொழிலாளிகள் கூலியுழைப்பாளிகளாகவே, பாட்டாளிகளாகவே நீடித்து இருக்கிறார்கள், முதலாளித்துவ உடைமை முறை நீக்கப்படவில்லை. ஆனால், தீவிரமான முனைக்குக் கொண்டு வரப் பட்டதும் அது கவிழ்ந்து போகிறது. உற்பத்திச் சக்திகளின் அரசு உடைமை முறை மோதலுக்கான ஒரு தீர்வு அல்ல, ஆனால் அந்தத் தீர்வுக்கான தொழில் நுணுக்க நிலைமைகள் அதள்குள்ளே ஒளிந்திருக்கின்றன.
நவீனகால உற்பத்திச் சக்திகளின் சமுதாயத் தன்மையை நடைமுறையில் அங்கீகர்ப்பதிலேதான், எனவே உற்பத்தி, உடைமையாக்கிக் கொள்ளுதல், பரிமாற்றம் ஆகியவற்றின் முறையை உற்பத்திச் சக்திகளின் சமுதாயத் தன்மையுடன் ஒத்திசைவாக்குவதிலேதான் இந்தத் தீர்வு அடங்கியுள்ளது. மற்றும், சமுதாயம் முழுவதின் கட்டுப்பாட்டையல்லாமல் மற்றெல்லாக் கட்டுப்பாட்டையும் மீறி வளர்ந்திருக்கிற உற்பத்திச் சக்திகளைச் சமுதாயம் பகிரங்கமாகவும் நேரடியாகவும் தன் வசமாக்கிக் கொள்வதின் வழியாகத்தான் இது நிகழ முடியும். உற்பத்திச் சக்திகளின் மற்றும் உற்பத்திப் பொருட்களின் சமுதாயத் தன்மை இன்று உற்பத்தியாளர்களுக்கு எதிராக வேலை செய்கிறது, கிரமமாக விட்டு விட்டு உற்பத்தி பரிமாற்றம் அனைத்தையும் சீர்குலைக்கிறது, இயற்கை விதி போல குருட்டுத்தனமாகவும் பலவந்தமாகவும் நாசகரமாகவும் மட்டுமே செயல்படுகிறது. ஆனால் சமுதாயம் உற்பத்திச் சக்திகளை எடுத்துக் கொண்டவுடன் உற்பத்திச் சக்திகளின், உற்பத்திப் பொருட்களின் சமுதாயத் தன்மையை உற்பத்தியாளர்கள் நேர்த்தியாகப் புரிந்து கொண்ட நிலையில் பயன்படுத்துவார்கள், அது சச்சரவுக்கு விட்டு விட்டு நிகழும் வீழ்ச்சிக்கும் தோற்றுவாயாக இருப்பதற்கு மாறாக உற்பத்திக்கே ஆகமி வலுமான நெம்புகோலாக ஆகிவிடும்.
1880 ஜனவரி - மார்ச்
"இயற்கையின் இயக்கஇயல்"
என்பதிலிருந்து
பி.எங்கெஸ்
....முதலாளித்துவ உற்பத்தி முறையின்கீழ் உற்பத்தி மிக உயர்வான மட்டத்தை எட்டுகிறதினாலே உற்பத்தியான வாழ்க்கைச் சாதனங்களை, அனுபோகச் சாதனங்களை, வளர்ச்சிக்குரிய சாதனங்களை சமுதாயத்தால் மேற்கொண்டு நுகர முடியாது, ஏனெனில், பெருந்திரளான உற்பத்தியாளர்ளகுக்கு இச்சாதனங்கள் கைக்கு எட்டாதபடி செயற்கையாக, பலவந்தமாகத் தடுக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் வாழ்க்கைச் சாதனங்களையும் அனுபோகச் சாதனங்களையும் வளர்ச்சிக்கான சாதனங்களையும் அழிப்பதோடல்லாமல் மூலமாக நெருக்கடி சமனநிலையை மறுபடியும் நிலைநாட்டுகிறது. எனவே, வாழ்க்கைப் போராட்டம் என்று சொல்லப்படுவது பின் வரும் வடிவத்தை எடுத்துக் கொள்கிறது, சமுதாய ரீதியான உற்பத்தியையும் வினியோகத்தையும் ஆளும் முதலாளி வர்க்கத்தின் கையிலிருந்து (அவர்களால் அதைச் செய்ய முடியாமற்போனதின் காரணமாக) எடுத்துக் கொள்வதின் மூலாமாக இந்த முதாலாளித்துவ அமைப்பு முறையின் நாசகரமான, சீர்குலைவான பாதிப்புக்கு எதிராக முதலாளி வர்க்கத்தினரின் முதலாளித்துவச் சமுதாயத்தால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களையும் உற்பத்திச் சக்திகளையும் பாதுகாப்பது என்ற வடிவத்தை எடுக்கிறது. இதுவே சோஷலிசப் புரட்சியாகும்.
1873-83
"ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்"
என்பதிலிருந்து
வி.இ.லெனின்
....ஏகாதிபத்தியம் என்பது அதன் பொருளாதார சாராம்சத்தில் ஏகபோக முதலாளித்துவமாகும். தன்னளவில் இதுவே வரலாற்றில் இதற்குரியய இடத்தை நிர்ணயிக்கிறது. ஏனெனில் சுதந்திரமான போட்டி எனும் மண்ணிலிருந்து - ஆம், சுதந்திரமான போட்டி எனும் மண்ணிலிருந்து தான்- உதிக்கும் ஏகபோகமானது முதலாளித்துவ அமைப்பு முறையிலிருந்து மேலும் உயர்வான சமுதாய்ப் பொருளாதார அமைப்புக்கு மாறிச் செல்வதாகும். நாம் பரிசீலித்துக் கொண்டிருக்கிற சகாப்தத்தை இனங்குறிக்கிறதாயுள்ள ஏக போகத்தின் நான்கு முதன்மையான மாதிரிகளை, அல்லது ஏகபோக முதலாளித்துவத்தின் முதன்மையான வெளிப்பாடுகளைக் குறிப்பாக நாம் கவனிக்கவேண்டும்.
முதலாவதாக, மிக உயர்வான மட்டத்தை எட்டிவிட்ட உற்பத்தியின் குவிப்பிலிருந்து ஏகபோகம் உதித்தது. இது ஏகபோக முதலாளித்துவச் சங்கங்கள், கார்ட்டல்கள், சிண்டிகேட்டுகள், டிரஸ்டுகள், ஆகியவற்றைக் குறிக்கிறது. இவை தற்காலப் பொருளாதார வாழ்க்கையில் வகிக்கிற முக்கியமான பாத்திரத்தை நாம் பார்த்தோம். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், முன்னேறிய நிலையிலுள்ள நாடுகளில் ஏகபோகங்கள் முழுமையாக மேலாதிக்கம் பெற்று விட்டிருந்தன, மற்றும், உயர்வான காப்பு வரிகளின் பாதுகாப்பை அனுபவித்து வந்த நாடுகளே (ஜெர்மனி, அமெரிக்கா) கார்ட்டல்களை உருவாக்கும் திசையில் முதல் அடிகள் எடுத்து வைத்தன என்ற போதிலும், சுதந்திரமான வணிக அமைப்பு முறையைக் கொண்டிருந்த பிரிட்டனும், கொஞ்சம் காலம் தாழ்த்திய நிலையில், இதே அடிப்படையான தோற்றத்தை வெளிப்படுத்தியது, அதாவது, உற்பத்தியின் குவிப்பிலிருந்து ஏகபோகம் பிறப்பு எடுப்பதை வெளிப்படுத்தியது.
இரண்டாவதாக, கச்சாப் பொருட்களுக்குரிய அதிமுக்கியமான மூலஸ்தானங்களை, குறிப்பாக முதலாளித்துவச் சமுதாயத்தில் அடிப்படையானதாயும் மிகவும் கார்ட்டல் மயமாக்கப்பட்டதாயும் இருக்கும் தொழில்களான நிலக்கரி மற்றும் இரும்புத் தொழில்களுக்கான கச்சாப் பொருட்களுக்குரிய அதிமுக்கியமான மூலஸ்தானங்களைக் கைப்பற்றுவதை ஏகபோகங்கள் ஊக்குவித்துள்ளன. கச்சாப் பொருட்களுக்குரிய அதிமுக்கியமான மூலஸ்தானங்களின் மீதுள்ள ஏகபோகம் பெரும் மூலதனத்தின் சக்தியை பிரம்மாண்டமாக அதிகப்படுத்தியுள்ளது, கார்ட்டல் மயமாக்கப்பட்ட தொழில்துறைக்கும் கார்ட்டல் மயமாக்கப்படாத தொழில் துறைக்கும் கார்ட்டல் மயமாக்கப்படாத தொழில் துறைக்கும் இடையேயுள்ள பகைமையைக் கூராக்கி விட்டுள்ளது.
மூன்றாவதாக, வங்கிகளிலிருந்து ஏகபோகம் உதித்திருக்கிறது. சிறிய இடைத்தரகான நிறுவனங்களிலிருந்து நிதி மூலதன ஏகபோகங்களாக வங்கிகள் வளர்ந்திருக்கின்றன. முன் வரிசையிலுள்ள முதலாளித்துவ நாடுகள் ஒவ்வொன்றிலும் மூன்றிலிருந்து ஐந்து வரையிலும் உள்ள மிகப்பெரிய வங்கிகள் தொழில் மூலதனத்திற்கும் வங்கி மூலதனத்திற்கும் இடையே "நபர் மூலமான இணைப்பை" சாதித்துக் கொண்டிருக்கின்றன, முழுசு முழுசாகப் பல நாடுகளின் மூலதனத்திலும் வருமானத்திலும் பெரும் பகுதியான கோடிக்கணக்கான பணத்தின்மீதுள்ள கட்டுப்பாட்டைத் தம் கையில் குவித்துக் கொண்டுள்ளன. தற்கால முதலாளித்துவச் சமுதாயத்தில் விலக்கின்றி எல்லாப் பொருளாதார, அரசியல் நிறுவனங்கள் மீதும் நெருக்கமான சார்பு உறவு முறைகளின் வலையமைப்பைப் போட்டுள்ள ஒரு நிதிக் குழு ஆட்சிமுறை - இதுதான் இந்த ஏகபோகத்தின் மிகமிக எடுப்பான வெளிப்பாடாகும்.
நான்காவதாக, காலனிமுறைக் கொள்கையிலிருந்து எகபோகம் வளர்ந்திருக்கிறது. காலனி முறையின் எண்ணற்ற "பழைய" நோக்கங்களோடு நிதி மூலதனமானது கச்சாப்பொருட்களின் மூலஸ்தானங்களுக்காகவும் மூலதனத்தின் ஏற்றுமதிக்காகவும் செல்வாக்கு மண்டலங்களுக்காகவம் - அதாவது இலாபகரமா பேரங்கள், சலுகை ஒப்பந்தங்கள், ஏகபோக இலாபங்கள் முதலியவை, பொதுவாகவே பொருளாதார வகைப்பட்ட பிரதேசம் - நடத்தும் போராட்டத்தையும் சேர்த்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய வல்லரசுகளின் காலனிகள் ஆப்பிரிக்காவின் நிலப்பரப்பில் பத்தில் ஒன்று என்கிற அளவில் மட்டுமே இருந்துவந்த போது காலனிமுறைக் கொள்கையானது ஏகபோக வழி முறைகளல்லாத வேறான வழிமுறைகளின் மூலமாக - பிரதேசங்களைச் "சுதந்திரமாகப் பறித்துக்கொள்வது" என்று சொல்லலாம் - வளரமுடிந்தது. ஆனால், ஆப்பிரிக்காவில் பத்தில் ஒன்பது அளவில் நிலப்பரப்பு கைப்பற்றப்பட்ட போது (1900 க்குள்ளாக) உலகம் முழுவதும் பங்கிட்டுக் கொள்ளப்பட்டபோது, காலனிகளை ஏகபோகமாக வசப்படுத்திக் கொண்டிருக்கும் சகாப்தம் தவிர்க்க முடியாதபடி புகுத்தப்பட்டது, அதன் விளைவாக உலகத்தைப் பங்கிட்டுக் கொள்வதற்கும் மறுபங்கீடு செய்து கொள்வதற்கும் குறிப்பாகத் தீவிரமான ஒரு போராட்டம் நடக்கும் சகாப்தமும் புகுத்தப்பட்டது.
எந்த அளவுக்கு ஏகபோக மூலதனம் முதலாளித்துவத்தின் எல்லா முரண்பாடுகளையும் கடுமையானதாக ஆக்கிவட்டுள்ளன என்பது பொதுவாகத் தெரிந்ததே, உயர்வான வாழ்க்கைச் செலவையும் கார்ட்டல்களின் கொடுங்கோன்மையையும் குறிப்பிட்டாலே போதும். இப்படி முரண்பாடுகள் தீவிரம்ரக்கப்பட்டிருப்பது வரலாற்றின் மாறிவரும் காலப்பகுதியின் மிக வலுவான உந்து சக்தியாக இருக்கிறது, இந்தக் காலப் பகுதி உலக நிதி மூலதனம் இறுதி வெற்றி பெற்ற காலத்திலிருந்து தொடங்கியது.
ஏகபோகங்கள், குழு ஆட்சிமுறை, சுதந்திரத்திற்காக அல்லாமல் ஆதிக்கத்திற்காக முயல்வது, மேன் மேலும் அதிக எண்ணிக்கையிலான சிறு நாடுகளை அல்லது பலவீனமான நாடுகளை ஒருசில மிகவும் செல்வம் படைத்த அல்லது மிகவும் வலிமை படைத்த தேசங்கள் சுரண்டுவது - இவையனைத்தும் ஏகாதிபத்தியத்தை வேறுபடுத்திக் காட்டுகிற இனக்குறிப்கான பண்புகளை உண்டாக்கியுள்ளன, அதை புல்லுருவித்தனமான அல்லது நசித்து வருகிற முதலாளித்துவம் என்று வரையறுத்கும்படி அவை நம்மைக் கட்டாயப்படுத்து கின்றன. "வட்டிக்காரர்களின் அரசை" இலேவாதேவிக்காரர்களின் அரசைப் படைப்பது ஏகாதிபத்தியத்தின் போக்குகளில் ஒன்றாக மேல்மேலும் எடுப்பாக வெளிப்படுகிறது, அதில் மேன்மேலும் அதிகரித்த அளவில் முதலாளி வர்க்கத்தினர் மூலதன ஏற்றுமதிகளிலிருந்து கிடைக்கிற ஆதாயங்களைக் கொண்டும் "கூப்பன்களைக் கிழித்துத் தருவதின்" மூலமாகவும் வாழ்கிறார்கள். இந்த நசிவுப் போக்கு முதலாளித்துவம் வேகமாக வளர்வதை விலக்குகிறது என்று நினைப்பது தவறாகும். அது விலக்குகிறதில்லை. ஏகாதிபத்தியச் சகாப்தத்தில் தொழிலின் சில குறிப்பிட்ட கிளைகள் முதலாளிவர்க்கத்தின் சில குறிப்பிட்ட பகுதிகள் சில குறிப்பிட்ட நாடுகள் அதிக அளவிலோ குறைந்த அளவிலோ இந்தப் போக்குகளில் ஏதாவதொன்றை அவ்வப்பொழுது வெளிப்படுத்துகின்றன. மொத்தத்தில் பார்த்தால், முதலாளித்துவம் முன்னைவிட வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் இந்த வளர்ச்சி பொதவாக மேன் மேலும் சமற்றதாகி வருவது மட்டுமல்லாமல், அதன் சமமற்ற நிலைமூலதன விஷயத்தில் செல்வமிக்க நாடுகளின் (பிரிட்டன்) நசிவில் குளிப்பாக வெளிப்படுத்திக் கொள்கிறது.....
தொழிலின் எண்ணிறந்த கிளைகள் எண்ணிறந்த நாடுகள் முதலியவற்றில் முதலாளிகள் உயர்வான ஏகபோக இலாபங்கள் பெறுவதினால் கொஞ்ச காலத்துக்கு தொழிலாளிகளில் சில குறிப்பிட்ட பகுதியினரை, அவர்களில் மிகக் குறைந்த சிறுபான்மையானவர்களை, லஞ்சம் கொடுத்து மற்ற அமைவருக்கும் எதிரிரக ஒரு தொழிலிலோ ஒரு நாட்டிலோ உள்ள முதலாளி வர்க்கத்தினரின் பக்கம் இழுத்துக் கொள்வது பொருளாதார ரீதியில் அவர்களுக்குச் சாத்தியமாகிறது. உலகத்தைப் பங்குபோட்டுக் கொள்வதற்காக ஏகாதிபத்திய தேசங்களிடையே பகைமை தீவிரமடைவது, இந்த விருப்பத்தை அதிகப்படுத்துகிறது. இப்படியாகத் தானே இணைப்பு படைக்கப்படுகிறது, இது பிரிட்டனில் முதன் முதலகவும் மிகத் தெளிவாகவும் வெளிப்படுத்திக் கொண்டது, இதற்குக் காரணம் ஏகாதிபத்திய வளர்ச்சியின் சில குணாம்சங்கள் மற்ற நாடுகளை விட அந்த நாட்டில் மி முன்னாடியே கவனிக்கத் தக்கவையாயின. சில எழுத்தாளர்கள், எடுத்துக்காட்டாக எல்.மார்ட்டோவ், தொழிலாளி வர்க்க இயக்கத்தில் ஏகாதிபத்தியத்துக்கும் சந்தர்ப்ப வாதத்திற்கும் இடையேயுள்ள இணைப்பைப் புறக்கணித்து ஒதுக்கும் போக்கைக் காட்டுகின்றனர். இந்த இணைப்பு தற்சமயம் மிக எடுப்பாகத் தெரிகிற ஒர் உண்மையாகும். இவர்கள் இதற்குப்பின் கூறப்படுவது போன்ற "அதிகார பூர்வமான நம்பிக்கைப் பெருக்கை" (காவுட்ஸ்கி ஹுய்ஸ்மன் பாணியில்) கையாள்கின்றனர்: முற்போக்கான முதலாளித்துவம் சந்தர்ப்பவாதம் அதிகரிப்பதில் கொண்டுபோய் விடுகிறது என்று இருந்தால், அல்லது சந்தர்ப்ப வாத்தின் பக்கம் சாய்வது உச்ச சம்பளம் வாங்கும் தொழிலாளிகளே என்றெல்லாம் இருந்தால் முதாலாளித்துவத்தை எதிர்ப்பவர்களின் இலட்சியம் நம்பிக்கைக்கு இடமற்றதாக இருக்கும். இப்படி பட்ட "நம்பிக்கைப் பெருக்கு" விஷயத்தில் நமக்குப் பிரமைகள் எதுவும் இருக்கக் கூடாது. இது சந்தர்ப்ப வாதத்தின் விஷயத்தில் நம்பிக்கைப் பெருக்கு ஆகும், இது சந்தர்ப்ப வாதத்தை மறைப்பதற்குப் பயன்படுகிற நம்பிக்கைப் பெருக்கு ஆகும். உண்மையாகச் சொன்னால், சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சியின் காண்கிற அசாதாரணமான வேகமும் குறிப்பான வெறுக்கத்தக்க தன்மையும் அதன் வெற்றி திடமாயிருக்கும் என்பதற்கு எவ்வகையிலும் உத்தரவாதமாகாது, ஆரோக்கியமான உடலில் வலி கொடுக்கும் சீழ்ப்புண் வேகமாக வளர்வது அது மேலும் சீக்கிரமாக வெடித்து உடலிலிருந்து வெளியேறும்படிதான் செய்ய முடியும். இவ் விஷயத்தில் மிகவும் அபாயகரமானவர்கள் சந்தர்ப்ப வாதத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்துடன் பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டலொழிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் போராட்டம் என்பது வெறும் போலியும் ஆஷாட பூதித்தனமுமேயாகும் என்பதைப் புரிந்து கொள்ள விரும்பாதவர்களே.
ஏகாதிபத்தியத்தின் பொருளாதார சாராம்சத்தைப் பற்றி இந்நூலில் சொல்லப்பட்வைகளிலிருந்து தொடர்வது என்னவெனில், அதை நாம் மாற்ற நிலையிலுள்ள முதலாளித்துவம், அல்லது மேலும் சாயாகச் சொல்வதானால் நசித்துவரும் முதலாளித்துவம் என்று வரையறுக்க வேண்டும். இவ்விஷயத்தில் முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் நவீனகால முதலாளித்துவத்தை வர்ணிக்கையில் "ஒன்றோடொன்று இணைப்புள்ள", "தனித்திருப்பது இல்லாமை", முதலான கவர்ச்சிச் சொற்களையும் சொற்றொடர்களையும் அடிக்கடி பயன்படுத்துவதைக் கவனிப்பது போதனை அளிப்பதாயுள்ளத...
...ஒரு பெரிய நிறுவனம் பூதாகாரமாக வடிவெடுத்து, திரளான விஷயாதாரங்களைச் சரிநுட்பமாகக் கணக்கிட்டதின் அடிப்படையில் கோடிக்கணக்கான மக்களுக்கு அவசியமான எல்லாவற்றிலும் மூன்றில் இரண்டு பங்கு அளவிலோ அல்லது நான்கில் மூன்று பங்கு அளவிலோ முதனிலையான கச்சாப் பொருட்களைத் திட்டப்படி வினியோகிப்பதைத் திரட்டியமைக்கிற போது, சில சமயங்களில் ஒன்றைவிட்டு ஒன்று நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மைல் தூரத்தில் இருக்கும்படியான மிகவும் வசதியுள்ள உற்பத்தி ஸ்தலங்களுக்கு முறையானவகையில், திரட்டியமைக்கப்பட்ட வகையில் கச்சாப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிற போது, நிறை நேர்த்தியான பொருட்களை எண்ணிறந்த வகைகளில் உற்பத்தி செய்வது வரை கச்சாரப் பொருட்களை நயப்படுத்துவதின் ஒன்றன் பின்ஒன்றாகத் தொடரான கட்டங்களைத் தனியொரு மையம் நெறிப்படுத்துகிறபோது, கோடிக்கணக்கான உபயோகிப்போரிடையே இந்த உற்பத்திப பொருட்கள் தனி ஒரு திட்டத்தின்படி வினியோகிக்கப் படுகிறபோது (அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் எண்ணெயை அமெரிக்க எண்யெ் டிரஸ்ட் விற்பனை செய்கிறது)- அப்போது வெறுமே "ஒன்றோடொன்றுள்ள இணைப்பு" என்பதில்லாமல் உற்பத்தி சமுதாய மயமாதல் என்பது வெளிப்படையாகிறது, தனிப்பட்ட பொருளாதார மற்றும் தனிச் சொத்துடைமை உறவுகள் ஒரு மோலோடாக உள்ளன, மேற்கொண்டு அதன் உள்ளடக்கத்தோடு அது பொருந்துவதாயில்லை, அதை அகற்றுவதைச் செயற்கையாகத் தாமதப்படுத்தினால் அந்த மேலோடு தவரிக்க முடியாதபடி நசிந்தாகவேண்டும், அந்த மேலோடு கொஞ்சம் நீண்ட காலத்திற்கு (மிக மோசமாகப் போனால், சந்தர்ப்பவாதச் சீழ்ப்புண்ணைக் குணப்படுத்துவதை நீடித்தால்) நசிவு நிலையில் இருந்து வரக்கூடும், ஆனால் தவிர்க்கமுடியாதபடி அது அகற்றப்பட்டு விடும் என்பது வெளிப்படையாகிறது.
1916 ஜனவரி -ஜீன்
"அரசும் புரட்சியும்"
எனும் நூலிலிருந்து
...ஏகபோக முதலாளித்துவம் அல்லது அரசு ஏகபோக முதலாளித்துவம் இனிமேல் முதலாளித்துவம் அல்ல, அதை இப்போது "அரசு சோஷயிசம்" என்றெல்லாம் அழைக்க முடியும் என்கிற பிழையான பூர்ஷுவா சீர்திருத்தவாதவன் கூற்று மிகச் சாதாரணமாக உள்ளது. டிரெஸ்டுகள் முழுமையாகத் திட்டமிடுவதை என்றைக்கும் கொடுத்ததில்லை, கொடுக்கவுமில்லை, கொடுக்கப் போவதுமில்லை என்பது உண்மை. ஆனால், அவை எவ்வளவுகுத்தான் திட்டமிட்டாலும் சரி, நாம் தொர்ந்து முதலாளித்துவத்தின் - அதன் புதியகட்டத்தில் என்பது உண்மைதான் என்றாலும் நிச்சயமாக முதலாளித்துவத்தின் - கீழ் இருந்து வருவோம். இப்படிப்பட்ட முதலாளித்துவம் சோஷலிசப் புரட்சி அருகாமையிலிருப்பதையும், அதன் வசதியையும், சாத்தியத் தன்மையையும் அவசர அவசியத்தையும் நிரூபிக்கிறதாயுள்ள ஒரு வாதமாகத்தான் பயன்பட வேண்டுமே தவிர அப்படிப்பட்ட புரட்சியை நிராகரிப்பதையும் எல்லாச் சீர்திருத்தவாதிகளும் செய்ய முயற்சிப்பது போல் முதலாளித்துவத்தை மேலும் கவர்ச்சி கரமாயுள்ளதாகக் காட்டும் முயற்சிகளையும் சகித்துக் கொண்டிருப்பதற்கான வாதமாகப் பயன்படவே கூடாது.
1917 ஆகஸ்ட் - செப்டம்பர்
வி.இ.லெனின்
"நிகழ விருக்கும் பெருவிபத்து, அதை எதிர்த்து எப்படிப் போராடுவது" என்பதிலிருந்து
.....அரசு ஏகபோக முதலாளித்துவம் என்பது சோஷலிசத்திற்கான முழுமையான பொருளாயத ரீதியான தயாரிப்பாகும், சோஷலிசத்திற்கான வாயிற்படியாகும், அது வரலாற்றின் ஏணியில் ஒரு படி, அந்தப் படிக்கும் சோஷலிசம் என்று அழைக்கப்படுகிற படிக்கும் இடையே இடைநிலையான படிகள் எவையும் கிடையாது.
1917 செப்டம்பர்

No comments:
Post a Comment