மார்க்சியமும் சீர்திருத்தவாதமும் - லெனின்
அராஜகவாதிகளைப் போலல்லாது மார்க்சியவாதிகள் சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தை, அதாவது ஆளும் வர்க்கத்தின் ஆட்சியதிகாரத்தை அழிக்காமலே உழைப்பாளி மக்களுடைய நிலைமைகளை மேம்படச் செய்வதற்கான போராட்டத்தை அங்கீகரிக்கின்றனர். ஆனால் அதே போதில் மார்க்சியவாதிகள் சீர்திருத்தவாதிகளை எதிர்த்து மிகவும் வைராக்கியமீரன ஒரு போராட்டத்தை நடத்துகின்றனர். சீர்திருத்தவாதிகள் தொழிலாளி வர்க்கத்தின் குறிக்கோள்களையும் செயற்பாடுகளையும் கீர்திருத்தங்களைப் பெற்றுக் கொள்வதுடன் நின்றுவிடும்படி நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படத்திவிடுகிறவர்கள். மூலதனத்தின் ஆதிக்கம் இருக்கிற வரை, தனிப்பட்ட மேம்பாடுகள் ஏற்படினும், எப்பொழுதும் கூலி அடிமைகளாகவே இருந்து வருவோரான தொழிலாளர்களை முதலாளித்துவ வழியில் ஏமாற்றுவதுதான் சீர்திருத்தவாதம்.
மிதவாத முதலாளித்துவ வர்க்த்தார் ஒரு கையால் சீர்திருத்தங்களை வழங்கிவிட்டு மறுகையால் எப்பொழுதும் அவற்றைத் திருப்பி எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள், அவற்றைப பயனற்றனவாக்கிவிடுகிறார்கள், தொழிலாளர் அவற்றைப் பயனற்றனவாக்கிவிடுகிறார்கள், தொழிலாளர்களை அடிமைப்படுத்தவும் தனித் தனிக் கோஷ்டிகளாய் அவர்களைப் பிளவுறச் செய்யவும் கூலி அடிமை முறையை நிரந்தரமாய் நீடிக்கச் செய்யவும் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் காரணத்தால் சீர்திருத்தவாதமானது - முற்றிலும் அது நேர்மையுள்ளம் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களிலுங்கூட - தொழிலாளர்களை முதலாளித்துவ வர்க்கம் சீர்கெடுப்பதற்கும் பலவீனப்படுத்துவதற்குமான ஓர் ஆயுதமாய் நடைமுறையில் ஆகிவிடுகிறது. சீர்திருத்தவாதிகளை நம்பும் தொழிலாளர்கள் எப்பொழுதும் ஏய்க்கவேபடுகிறார்கள் என்பதை எல்லா நாடுகளின் அனுபவமும் தெளிவாய்க் காட்டுகிறது.
இதற்கு மாறாய், மார்க்சின் தத்துவத்தைக் கிரகித்துக் கொள்ளும் தொழிலாளர்கள், அதாவது மூலதனத்தின் ஆதிக்கம் நீடிக்கும் வரை கூலியமை முறை தவிர்க்க முடியாததாகும் என்பதை உணர்ந்து கொள்ளும் தொழிலாளர்கள், முதலாளித்துவச் சீர்திருத்தம் எதனாலும் ஏய்க்கப்பட்டுவிடமாட்டார்கள். எங்கே முதலாளித்துவம் தொடர்ந்து நீடிக்கிறதோ அங்கே சீர்திருத்தங்கள் நீடித்து நிலைக்கவோ அதிக பயனளிப்பனவாகவோ இருக்க முடியாதென்பதை உணர்ந்து கொள்ளும் இத்தொழிலாளர்கள், மேம்பாடான நிலைமைகளுக்காகப் போராடி, கூலியடிமை முறைக்கு எதிரான போராட்டத்தை மும்முரமாக்குவதற்காக இம்மேம்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அற்பச் சலுகைகளின் மூலம் சீர்திருத்தவாதிகள் தொழிலாளர்களைப் பிளவுபடுத்தவும் ஏமாற்றவும் ஏமாற்றவும் முயலுகிறார்கள், அவர்களை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசைதிருப்பிவிட முயலுகிறார்கள். ஆனால் தொழிலாளர்கள் சீர்திருத்தவாதத்தின் கள்ளத்தனத்தைக் கண்டு கொண்டதும் அவர்கள் தமது வர்க்கப் போராட்டத்தை வளர்த்துச் செல்லவும் விரிவாக்கவும் சீர்திருத்தங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
தொழிலாளர்களிடையே சீர்திருத்தவாதிகளின் செல்வாக்கு எவ்வளவுக்கு எவ்வளவு பலமாய் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு தொழிலாளர்கள் பலமிழந்தவர்களாகி விடுகிறார்கள், முதலாளித்துவ வர்க்கத்தை அண்டி வாழ வேண்டிய அவர்களது சார்பு நிலை அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாகிவிடுகிறது, முதலாளித்துவ வர்க்கம் பல்வேறு தக்கடி வித்தைகளைக் கையாண்டுச் சீர்திருத்தங்களைத் தள்ளுபடி செய்வது அவ்வளவுக்கு அவ்வளவு எளிதாகிவிடுகிறது. தொழிலாளி வர்க்க இயக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு சுயேச்சையாய் இருக்கிறதோ, அதன் குறிக்கோள்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் உள்ளனவோ, சீர்திருத்தவாதக் குறுநோக்கிலிருந்து எவ்வளவுக்கு எவ்வளவு விடுபடடிருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு தொழிலாளர்கள் மேம்பாடுகளை விடாது இருத்திக் கொள்வதும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதும் எளிதாகிவிடுகிறது.
எல்லா நாடுகளிலும் சீர்திருத்தவாதிகள் இருக்கிறார்கள். ஏனெனில் எங்கும் முதலாளித்துவ வர்க்கத்தினர் ஏதேனும் ஒரு வழியில் தொழிலாளர்களைச் சீரழிக்க முயலுகின்றனர், அடிமை முறையை ஒழித்திடுவதென்ற எண்ணத்தையே விட்டொழித்து மனநிறைவு கொண்ட அடிமைகளாய் மாற்ற முயலுகின்றனர். ருஷ்யாவில் கலைப்புவாதிகள் தான் சீர்திருத்தவாதிகள். கலைப்புவாதிகள் நமது கடந்த காலத்தை நிராகரிக்கின்றனர், ஒரு புதிய, பகிரங்கமான, சட்டபூர்வமான கட்சி பற்றிய கனவுகளைக் கொண்டு தொழிலாளர்களை உறங்க வைக்கப் பார்க்கின்றனர். அண்மையில் செயின்ட் பீட்டர்ல் ஸ்பர்க் கலைப்புவாதிகள் சீர்திருத்தவாதமெனும் குற்றச் சாட்டிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளும்படி சேவெர்னா பிராவ்தா இதழால் நிர்ப்பந்திக்கப்பட்டனர். மிக முக்கியப் பிரச்சினை ஒன்றைத் தெளிவுபடுத்தும் பொருட்டு அவர்களது வாதங்களைக் கவனமாய்ப் பகுத்தாய வேண்டும்.
நாங்கள் சீர்திருத்தவாதிகளல்ல, ஏனெனில் சீர்திருத்தங்களே யாவுட், இறுதிக் குறிக்கோள் ஒரு பொருட்டல்ல என்று நாங்கள் சொல்லவில்லை, இறுதிக் குறிக்கோளுக்கான இயக்கத்தைப் பற்றி நாங்கள் பேசியிருக்கிறோம், நாம் வகுத்துக் கொண்ட குறிக்கோளை முழுமையாய் அடைய சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதன் வாயிலாய் முன்னேறிச் செல்வது குறித்து பேசியிருக்கிளோம் என்பதாய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கலைப்புவாதிகள் எழுதினர்.
இந்தத் தற்காப்பு எந்த அளவுக்கு எதார்த்தத்துக்குப் பொருந்துவதாய் இருக்கிறதென்று பார்ப்போம்.
முதலாவது உண்மை. கலைப்புவாதிகள் எல்லோருடைய வாக்குகளையும் தொகுத்துரைத்த கலைப்புவாதியான செதோவ், மார்ச்சியவாதிகளின் "மூன்று தூண்களில்" இரண்டு இனி நமது கிளர்ச்சிக்கு ஏற்றவையாய் இல்லை என்று எழுதினார். எட்டு மணி நேர வேலைநாள் தத்துவார்த்தக் கண்ணோட்டத்தில் சீர்திருத்தமாய்ப் பெறக் கூடியதே. சீர்திருத்தங்களுக்கு அப்பால் செல்லும் விவகாரங்கள் யாவற்றையும் அவர்அகற்றிவிட்டார், அல்லது பின்னிலைக்குத் தள்ளிவிட்டார். ஆகவே இறுதிக் குறிக்கோள் ஒரு பொருட்டல்ல என்கிற சூத்திரத்தால் குறிக்கப்படும் அதே கொள்கையைப் பின்பற்றி செதோவ் அப்பட்டமான சீர்திருத்தவாதத்துக்குச் சரிந்து விட்டார். "இறுதிக் குறிகோள்" [ஜனநாயகத்தைப் பொருத்தவரை கூட] நமது கிளர்ச்சியிலிருந்து மேலும் மேலும் ஒதுக்கித் தள்ளப்படுமாயின், அது சீர்திருத்தவாதமே ஆகும்.
இரண்டாவது உண்மை. கலைப்புவாதிகளின் பிரசித்தி பெற்ற ஆகஸ்டு [கடந்த ஆண்டு்] மாநாடு இதேபோல, சீர்திருத்தவாதமல்லாத கோரிக்கைகளை நமது கிளர்ச்சியின் நடுநாயகமாய் நெருங்கக் கொண்டு வருவதற்குப் பதில் மேலும் மேலும் தூர ஒதுக்கித் தள்ளிற்று.
மூன்றாவது அண்மை, "பழயதை" மறுத்தும் இழித்துப் பழித்தும் அதனிடமிருந்து தம்மை விலக்கிக் கொண்டும் வருவதன் மூலம், கலைப்புவாதிகள் தம்மைச் சீர்திருத்தவாதத்தில் இருத்திக் கொண்டுவிடுகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் சீர்திருத்தவாதத்துக்கும் "பழமையை" நிராகரிப்பதற்கம் இடையிலுள்ள தொடர்பு தெளிவாய்த் தெரியும் ஒன்று.
நான்காவது உண்மை. தொழிலாளர்களுடைய பொருளாதார இயக்கம் சீர்திருத்தவாதத்துக்கு அப்பால் செல்லும் கோஷங்களை ஏற்றதும் கலைப்புவாதிகள் உடனே சீற்றமுற்றுத் தாக்குதல்கள் தொடுக்கின்றனர் ["வெறிக் கூச்சல்" "கோபாவேசம்" இத்தியாதி வழிகளில் செல்கிறார்கள்].
முடிவு என்ன? கலைப்புவாதிகள் சொல்லளவில் கோட்பாட்டு அளவில் சீர்திருத்தவாதத்தை மறுத்துவிட்டு, நடைமுறையில் நெடுகிலும் அதைப் பின்பற்றுகின்றனர். ஒரு புறத்தில் அவர்கள் தமக்குச் சீர்திருத்தங்கள் முற்றாகவும் முடிவாகும் இருக்கவில்லை என்று நமக்கு உறுதி கூறுகின்றனர், ஆனால் மறுபுறத்தில், சீர்திருத்தவாதத்துக்கு அப்பால் மார்க்சியவாதிகள் செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கலைப்புவாதிகள் அவர்களைத் தாக்குகின்றனர் அல்லது பழித்துப் பேசுகின்றனர்.
ஆனால், சீர்திருத்தங்களை நடைமுறையில் பயன்படுத்திக் கொள்வதிலும், சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதிலும் மார்க்சியவாதிகள் பின்னிலையில் தங்கிவிடவில்லை, மாறாக நிச்சயமாய் முன்னிலையில் தான் இருக்கின்றனர் என்பதைத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒவ்வொரு அரங்கிலும் நிகழ்ச்சிகள் தெளிவுபடுத்துகின்றன. தொழிலாளர் தொகுதிகளில் டூமாத் தேர்தல்களை எடுத்துக் கொள்ளுங்கள். டூமாவின் உள்ளேயும் வெளியேயும் நமது பிரதிநிதிகளின் சொற்பொழிவுகள், தொழிலாளர் பத்திரிகைகளையும் இன்ஷீரன்ஸ் சீர்திருத்தத்தையும் பயன்படுத்திக் கொள்ளுதல், யாவற்றிலும் பெரிய சங்கமான உலோகத் தொழிலாளர் சங்கம், இன்னபலவற்றிலும் - எங்கும் கிளர்ச்சி புரிதல், நிறுவன ஒழுங்கமைப்பு செய்தல், சீர்திருத்தங்களுக்காகவும் போராடுதல் ஆகிய நேரடியான, உடனடியான, அன்றாடச் செயற்பாட்டில் மார்க்சியவாதிகளான தொழிலாளர்கள் கலைப்புவாதிகளை முந்திக் கொண்டு முன்னிலையிலே இருக்கிறார்கள்.
சீர்திருத்தங்களைப் பெறுவதற்கும் பயன்படுத்திக் கொள்வதற்குமான "சாத்தியப்பாடு" ஒன்றையேனும் தவறவிடாமல் மார்க்சியவாதிகள் அயராது வேலை செய்கின்றனர். பிரசாரத்திலும் கிளர்ச்சியிலும் வெகுஜனப் பொருளாதாரப் போராட்டத்திலும் பிறவற்றிலும் சீர்திருத்தவாதத்துக்கு அப்பாற்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்டித்தல்ல, அதற்கு ஆதரவாய், அது முன்னேற்றம் அடைய அரும்பாடுபட்டு மார்க்சியவாதிகள் வேலை செய்கின்றனர். ஆனால் மார்க்சியத்தைத் துறந்துவிட்ட கலைப்புவாதிகள் இதற்கு மாறாய், மார்க்சிய நிறுவன அமைப்பு ஒன்று இருப்பதையே எதிர்த்துத் தாக்குதல்கள் கொடுப்பதன் மூலமும், மார்க்சியக் கட்டுப்பாட்டை அழிப்பதன் மூலமும், சீர்திருத்தவாதத்தையும் மிதவாதத் தொழிலாளர் கொள்கையையும் ஆதரித்து நிற்பதன் மூலமும் தொழிலாளி வர்க்க இயக்கத்தைச் சீர்குலைத்து வருகிறார்கள்.
மேலும் ருஷ்யாவில் சீர்திருத்தவாதமானது ஒரு தனி வழியிலும், இன்னைய ருஷ்யாவின் அடிப்படை அரசியல் நிலைமையை இன்றைய ஐரோப்ப நிலைமைக்கு முற்றிலும் ஒத்த்தாய்க் கொள்வதன் வாயிலாகவும், வெளிப்படுவதைக் கவனியாது விடலாகாது. மிதவாதியின் கண்ணோட்டத்தில் இவை இரண்டையும் முற்றிலும் ஒத்ததாய்க் கொள்வது நியாயமே, ஏனென்றால் மிதவாதி கடவுள் நம்மைக் காப்பாற்றி"யுள்ளார், அரசியலமைப்புச் சட்டம் கிடைத்திருக்கிறது நமக்கு" என்று நம்புகிறவர், இக்கருத்தை ஏற்றொழுகுகிறவர். அக்டோபர் 17க்குப் பிறகு ஜனநாயம் சீர்திருத்தவாதத்துக்கப்பால் சென்று மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் பைத்தியக்காரச் செயலாகும், குற்றமாகும், பாவமாகும் என்றெல்லாம் பறைசாற்றுவதன் மூலம் மிதவாதி முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையே பிரதிபலிக்கிறார்.
இந்த முதலாளித்துவக் கருத்துக்களைத்தான் நமது கலைப்புவாதிகள் நடைமுறையில் அனுசரித்துச் செயல்படுகின்றனர். இவர்கள் "பகிரங்கக் கட்சி", "கட்டபூர்வமாமன கட்சிக்காகப் போராடுதல்", இன்ன பிறவற்றை ருஷ்யாவுக்கு [ஏட்டு அளவில்] "பெயர்த்தெடுத்து வந்து நாட்டுவதில்" இடையறாதும் முறையாகவும் ஈடுபட்டுள்ளனர். வேறு விதமாக் கூறினால், மிதவாதிகளைப் போலவே இவர்களும், மேற்கு நாடுகளில் பல தலைமுறைகளின் காலப்போக்கில், ஏன் சிற்சில சந்தர்ப்பங்களில் சில நூற்றாண்டுகளுங்கூட வேண்டியிருந்த காலப்போக்கில் அரசியலமைப்புச் சட்டங்கள் ஏற்கப்படவும் உறுதியுறவும் இட்டுச் சென்ற பிரத்தியேகப் பாதை இல்லாமலே, ஐரோப்பிய அரசியலமைப்புச் சட்டத்தை ருஷ்யாவுக்குப் பெயர்த்தெடுத்து வந்து நாட்ட வேண்டுமென உபதேசிக்னிறனர். துணியை நீரில் நனைக்காமலே துவைத்தெடு என்பார்களே, அதைத்தான் செய்ய வேண்டும் என்கிறார்கள், இந்தக் கலைப்புவாதிகளும் மிதவாதிகளும்.
ஐரோப்பாவில் சீர்திருத்தவாதம், உண்மையில் மார்க்கியம் துறக்கப்பட்டு அதற்குப் பதிலாய் முதலாளித்துவச் "சமூகக் கொள்கை" கைக் கொள்ளப்படுவதைக் குறிக்கிறது. ருஷ்யாயில் கலைப்புவாதிகளுடைய சீர்திருத்தவாதம் குறிப்பது அது மட்டுமல்ல, மார்க்சிய நிறுவனம் அழிக்கப்படுவதையும் தொழிலாளி வர்க்கத்தின் ஜனநாயக் கடமைகள் துறக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாய் மிதவாதத் தொழிலாளர் கொள்கை கைக்கொள்ளப்படுவதையும் குறிக்கிறது.
1913 செப்டம்பர் 12

No comments:
Post a Comment